search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மில்க் பவுடர் தேங்காய் லட்டு
    X
    மில்க் பவுடர் தேங்காய் லட்டு

    மில்க் பவுடர் தேங்காய் லட்டு

    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பால் பவுடர், தேங்காய் சேர்த்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் பவுடர் - 2 கப்,
    பால் - 1/4 கப்,
    சர்க்கரை - 1/4 கப்,
    ட்ரை தேங்காய் பொடி - சிறிதளவு,
    முந்திரி, ஏலக்காய் - விருப்பப்படி,
    நெய் - 2 டீஸ்பூன்.

    மில்க் பவுடர் தேங்காய் லட்டு

    செய்முறை :

    முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

    அதே வாணலியில் 1/4 கப் பால், 1/4 கப் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு 2 கப் பால் பவுடர் சேர்த்து நன்கு கட்டி தட்டாமல் கிளறவும்.

    வறுத்த முந்திரி மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறவும்.

    நன்றாக திரண்டு வரும் வரை கிளறி லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

    மேலும் உருண்டைகளை ட்ரை தேங்காய் பொடியில் உருட்டி எடுத்தால் மேலும் சுவையாக இருக்கும்.

    சுவையான மில்க் பவுடர் தேங்காய் லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×