என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
எளிய முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய மாலை நேர ஸ்நாக்ஸ் மினி சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 4,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.
* மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின், நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள் சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
* பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும். பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும்.
* அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதுதான் மினி சமோசா.
* கடாயில் எண்ணெயை சூடானதும், மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
* மினி சமோசா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்ய நினைத்தால், சீப்பு சீடை செய்யுங்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உளுத்தம் மாவு - 1/4 கப்
கடலை மாவு - 1/4 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
சுடுநீர் - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் நன்றாக பிசைய வேண்டும்.
* பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.
* பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் அன்னாசி பழ ஜாம் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
அன்னாசிப் பழம் - 1 (நடுத்தர அளவு)
சர்க்கரை - 2 கப்
மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
அன்னாசி எசன்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை :
* அன்னாசிப் பழத்தின் மேல் மற்றும் கீழ் முனையை வெட்டி விட்டு, தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* அன்னாசி துண்டுகளை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.
* சர்க்கரை கரைந்த உடன் அதில் பின் ஃபுட் கலர், அரைத்து வைத்துள்ள அன்னாசி விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
* சிறிது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அடுத்து அதில் அன்னாசி எசன்ஸ் சேர்க்கவும்.
* சற்று கொட்டியானதும் தீயை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு நன்கு கிளறவும்.
* இதனை சிறிது நேரம் குளிர வைத்து ஆறியதும் அதனை காற்றுப் புகாத டப்பாவில் மூடி வைத்து பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் பன்னீர் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 500 கிராம்
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 7
கறிவேப்பிலை - 2 கொத்து
பூண்டு - 1 ½மேஜைக்கரண்டி
இஞ்சி - 1 ½மேஜைக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
கரமசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 3
பொரிக்க :
சோள மாவு - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பிரட் தூள் - 1½ கப்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டு, இஞ்சியை நன்கு நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் லேசாக பொன்னிறமாளதும் இஞ்சி, பூண்டு கலவையை சேர்க்கவும்.
* அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து துருவிய பன்னீரை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
* அடுத்து அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.
* ஆறிய மசாலாவை நன்றாக கலந்து வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும்.
* ஒரு கப்பில் சோள மாவுடன் சிறிது நீர் சேர்த்து கலக்கவும்.
* ஒரு தட்டில் பிரட் தூளை பரப்பி வைக்கவும்.
* கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* பன்னீர் கட்லெட் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
முட்டை - 4
பூண்டு - 2 பெரிய பற்கள்
நட்சத்திர சோம்பு - 1
பச்சை மிளகாய் - 4
மிளகு தூள் - தேவையான அளவு
வினிகர் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
குடமிளகாய் - 1,
வெங்காயம் - 2,
கேரட் - 1,
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
செய்முறை :
* ப.மிளகாய், பூண்டு, குடமிளகாய், கேரட், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
* பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தனியே வைக்கவும்
* கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் தீயை அதிகரித்து விட்டு அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு நட்சத்திர சோம்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
* பின்பு அதனுடன் குடமிளகாய் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்னர் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்
* காய்கறிகள் வதங்கியவுடன் காய்கறிகளை கடாயின் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு தீயைக் குறைத்து அதில் முட்டையை அடித்து ஊற்றவும். முட்டையை லேசாக கிளறி விடவும்.
* முட்டை வெந்தவுடன் வினிகர், சோயா சாஸ், மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.
* பின்பு தீயை அதிகரித்து லேசாக கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும்.
* சுவையான சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபுவை வைத்து சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
டோஃபு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு…
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* டோஃபுவை துண்டுகளாக்கி அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறிய, பின் அதில் சோள மாவைத் தூவி பிரட்டி விட வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், டோஃபுவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய, பின் சர்க்கரை சேர்த்து கிளறி, சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பிறகு அதில் வறுத்து வைத்துள்ள டோஃபுவை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி இறக்கினால், சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு ரெடி!!!
பள்ளியில் வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க மிகவும் சிறந்தது இந்த ஸ்நாக்ஸ். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்
நீர் - தேவையான அளவு
வெங்காயம் - 100 கிராம்
கேரட் - 200 கிராம்
குடமிளகாய் - 2
முட்டை கோஸ் - 200 கிராம்
சோயா சாஸ் - 1 கரண்டி
தக்காளி சாஸ் - 1 கரண்டி
கரம்மசாலா - தேவைக்கு
மிளகாய் தூள் - தேவைக்கு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் நன்கு பிசைந்து அதனை மூடி 30 நிமிடம் வைக்கவும். 30 நிமிடம் கழித்து மாவை 8 சம துண்டுகளாக வெட்டி அதனை சிறிய உருண்டைகளாக உருட்டவும். பின்பு அதனை சப்பாத்தி உருட்டுக் கட்டையால் மெல்லியதாக தேய்த்து வட்ட வடிவமாகவோ அல்லது சதுரமாகவோ எடுக்கவும். இப்போது ரோல் ஷீட் தயார்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கிய பின்பு துருவிய கேரட், குடமிளகாய், முட்டைகோஸ், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
* பின்பு சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள் சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
* ஒரு கரண்டி மைதா மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து பிசையவும். பின்பு முதலில் செய்து வைத்திருந்த ரேல் ஷீட்டை எடுத்து அதில் ஒரு ஓரத்தில் வதக்கி வைத்துள்ள காய்கறியில் 1 கரண்டி வைக்கவும். அந்த ஓரத்தை பாதி வரை மடிக்கவும். அதன் இரு முனையிலும் பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை எடுத்து ஒட்டி விடவும். பின்பு இரு முனைகளையும் மடித்து அழுத்தவும். பின்பு மறு முனையையும் மடிக்கவும். உள்ளே வைத்திருக்கும் காய்கறிகள் வெளியே வராமல் முனைகளை சரியாக மடிக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் இந்த ரோல்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
* வெஜிடபிள் ரோல் ரெடி.
* பொரித்த ரோலை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு, அரிசி மாவை வைத்து எப்படி சுவையான முறுக்கு செய்வது என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
உருளைக் கிழங்கு - 2 (நடுத்தர அளவு)
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி
பட்டர் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து மிக்சியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்றாக மென்மையான விழுதாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சீரகம், எள், உப்பு, பெருங்காயத்தூள், பட்டர், அரைத்த உருளைக்கிழங்கு விழுது சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (முறுக்கு மாவு பதத்தில்) மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு எண்ணெயில் பிழியவும்.
* முறுக்கு பொன்னிறமாக வந்ததும் எடுத்து அதனை எடுத்து காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தவும்.
* உருளைக்கிழங்கு முறுக்கு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் சூடாகவோ, காரமாகவோ ஏதேனும் சாப்பிட விரும்பினால் வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால் அதை வைத்து பஜ்ஜி செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 3
கடலை மாவு - 1 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை தோலுரித்து, உப்பு கலந்த நீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
* ஒரு பொளலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து, கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து உருளைக்கிழங்கையும் பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இஞ்சி வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே எளிய முறையில் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 1 கப்
மிளகாய் தூள் - கால் கப்
மல்லித் தூள் - கால் கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் - அரை கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 10 பற்கள்
தாளிக்க :
எண்ணெய் - ½ கப்
கடுகு - 1 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
வத்தல் மிளகாய் - 5
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கைப்பிடியளவு
செய்முறை :
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெல்லத்தை துருவிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி இஞ்சியை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆற வைக்கவும்.
* ஆறியவுடன் இஞ்சி, புளி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு அதனுடன் உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
* எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
* சுவையான இஞ்சி ஊறுகாய் ரெடி!!!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குலாப் ஜாமூன் வீட்டில் செய்வது மிகவும் எளிமையானது. உருளைக்கிழங்கை வைத்து குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது)
மைதா - 3 மேஜைக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எண்ணெய்/நெய் - பொரிக்க
சிரப்புக்கு :
சர்க்கரை - 2 கப்
நீர் - 1 கப்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்
குங்குமப் பூ - 1 சிட்டிகை (தேவைப்பட்டால்)
செய்முறை :
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துருவிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, மைதாமாவு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
* பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
* அடி கனமாக ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சர்க்கரையை போட்டு நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் சில துளிகள் ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்து அதனை தனியே வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* பொரித்த உருண்டைகளை சூடான சிரப்பில் போட்டு சில மணிநேரங்கள் ஊற வைத்த பின் பரிமாறவும்.
* சூப்பரான உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு முட்டை சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
வெங்காயம் - 50 கிராம்
ப.மிளகாய் - 5
சீரகம் - 1/2 கரண்டி
நெய் - 2 கரண்டி
எலுமிச்சை பழம் - 1/2 பழம்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம். கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் முட்டைகளை அடித்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
* முட்டை கலவை வெந்து பூ போல உதிரியாக வந்ததும் சாதத்தை போட்டு கிளறவும்.1
* அடுத்து அதில் 1/2 எலுமிச்சை பழம் பிழிந்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான முட்டை சாதம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






