என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
பாயாசத்தில் பழம் போட்டு செய்தால் சுவையாக இருக்கும். ஆப்பிள் கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் - 2
பால் - 4 கப்,
சர்க்கரை - ஒரு கப்,
கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்),
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
மில்க்மெய்ட் - கால் கப்,
முந்திரி - தேவைக்கு
வெனிலா எசன்ஸ் - ஒரு துளி.
செய்முறை :
* ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
* வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும்.
* பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
* நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
* இனிப்பான ஆப்பிள் பாயாசம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - ஒரு கப்,
கடலை மாவு - ஒரு கப்,
நெய் - 2 (அ) 3 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிது கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
* அதனுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய் ஆகியவற்றை சேர்த்துப் பிசையவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
* சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி.
* சூடு ஆறியவுடன் இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் 65 கேள்விபட்டிருப்பீர்கள் எக் 65 கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி இப்போது எக் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 4
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
சோள மாவு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை :
* முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். (ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்)
* சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.
* இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
* வேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.
* சூப்பரான எக் 65 ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, வித்தியாசமான மட்டன் போண்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
உளுந்துமாவு - 100 கிராம்
அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
* உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து மிருதுவான மாவாக அரைத்து கொள்ளவும்.
* மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
* கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கெட்டியாக அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, அரைத்த கறி, இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து பிசைந்த மட்டன் கலவையை உருண்டையாக எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கிளறி விட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
* ருசியான மட்டன் போண்டாவை தேனீருடனும் உணவுடனும் ரசித்து உண்ணலாம்.
* கொத்துக்கறிக்கு பதிலாக எலும்பில்லாத மட்டனை வாங்கி அதை வேகவைத்து மிக்சியில் அரைத்தும் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாப்கார்ன், சாக்லேட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாப்கார்ன் சோளம் - ஒரு கப்,
குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்,
வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - சிறிதளவு,
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும். உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும்.
* குக்கரில் எண்ணெய் விட்டு, பாப்கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடிவிடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும்.
* பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும்.
* நன்கு குலுக்கி சீராக பரவ விடவும்.
* சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி.
* இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் ஈரல் வறுவல் மிகவும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி (தேவைக்கு)
ப. மிளகாய் - ஒன்று
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
பட்டை - ஒரு சிறிய துண்டு
செய்முறை :
* மட்டன் ஈரலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான அளவில் நறுக்கி எடுத்து வைக்கவும்.
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப. மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி வதங்கியதும் ஈரல் மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் வேகவிடவும்.
* நன்கு வெந்ததும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்:
மினி இட்லி - 16
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - சிறிது
சீரகப் பொடி - சிறிது
சாட் மசாலா - சிறிது
புதினா சட்னி - சிறிது
இனிப்பு சட்னி - சிறிது
ஓமப்பொடி - சிறிது
வெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
கேரட் - 1
உப்பு - தேவையான அளவு
இனிப்பு சட்னிக்கு...
பேரிச்சம் பழம் - 8 (விதை நீக்கியது)
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
இனிப்பு சட்னி செய்முறை :
* பேரிச்சம் பழம் மற்றும் புளியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியில் உள்ள நார் மற்றும் விதையை நீக்கிவிட்டு, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பேரிச்சம் பழம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, அத்துடன் வெல்லம், சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இனிப்பு சட்னி.
இட்லி சாட் செய்முறை :
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் இட்லிகளை வைத்து, மேலே சிறிது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு தட்டில் அந்த மினி இட்லிகளை வைத்து, அதன் மேல் முதலில் தயிர் ஊற்றி, மேலே இனிப்பு சட்னி, புதினா சட்னி, வெங்காயம், துருவிய கேரட், சிறிது சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.
* இப்போது சுவையான இட்லி சாட் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீர் போளி மிகவும் சுவையாக இருக்கும். பன்னீர் வைத்து போளி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - ஒரு கோப்பை
கோதுமை மாவு - ஒரு கோப்பை
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
உப்புத்துள் - ஒரு சிட்டிகை
துருவிய பன்னீர் - முக்கால் கோப்பை
துருவிய தேங்காய் - அரைகோப்பை
வெல்லம் - 1/2 கோப்பை
ஏலக்காய் - நான்கு
பொடித்த முந்திரி - தேவைக்கு
நெய்/எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* மிக்ஸியில் வெல்லத்துடன் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்
* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னீரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும்.
* பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ்சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பன்னீரில் கொட்டி கலக்கவும்.
* பின்பு அதில் பொடித்த வெல்லம் மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும்.
* பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி இலேசாக அழுத்தி மீண்டும் தேய்த்து வைக்கவும்.
* இவ்வாறு அனைத்து மாவையும் போளியாக இட்டு வைக்கவும்.
* தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்து தீயாமல் சுட்டெடுக்கவும்.
* பன்னீர் இனிப்பு போளி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் சமோசாவை கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை எளிய முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் கொத்துக்கறி - 300 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
வெங்காயம் - 250 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
கிராம்பு - 6
மைதா - 350 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர், நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், தக்காளியை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கன் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும்.
* சிக்கன் வெந்ததும் உப்பு, கரம்மசாலா தூள் சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
* பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக பிடித்து வட்டமாக தேய்த்து கொள்ளவும். வட்டங்களை முக்கோண வடிவமாக செய்து சிக்கன் கலவையை வைத்து ஓரங்களில் மூடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
* சுவையான சிக்கன் சமோசா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை வேளையில் டீ, காபியுடன் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - பெரிய பூ 1
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி சூடு நீரில் சிறிது உப்பு போட்டு அதில் காலிஃப்ளவரை போட்டு 15 நிமிடம் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் காலிஃப்ளவரைப் மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் மூளை சாப்பிட சுவையாக இருக்கும். இப்போது மட்டன் மூளை பொரியல் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1 பெரியது
சோம்பு - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.
* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
* 5 நிமிடம் கழித்து நன்றாக சிவந்தவுடன் மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டனில் தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். இப்போது கேரளா மட்டன் ரோஸ்ட் எப்படி செய்து என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு…
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 5
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பெரிய பற்கள்
செய்முறை :
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* கழுவி மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த விழுதை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, அதனை குக்கரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வேக வைக்க வேண்டும். மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்ட வேண்டும்.
* கடைசியாக அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.