என் மலர்

  ஆரோக்கியம்

  மாலைநேர ஸ்நாக்ஸ் மட்டன் போண்டா
  X

  மாலைநேர ஸ்நாக்ஸ் மட்டன் போண்டா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, வித்தியாசமான மட்டன் போண்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
  தேவையான பொருட்கள் :
   
  உளுந்துமாவு - 100 கிராம்
  அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
  பச்சை மிளகாய் - 4
  மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
  எண்ணெய் - தேவைக்கேற்ப
  வெங்காயம் - 2
  இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
  கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
  உப்பு - தேவைக்கேற்ப
   
  செய்முறை :
   
  * உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து மிருதுவான மாவாக அரைத்து கொள்ளவும்.
   
  * மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.

  * கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  * கெட்டியாக அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, அரைத்த கறி, இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும்.

  * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து பிசைந்த மட்டன் கலவையை உருண்டையாக எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கிளறி விட்டு பொன்னிறமாக பொரிக்கவும். 
   
  * ருசியான மட்டன் போண்டாவை தேனீருடனும் உணவுடனும் ரசித்து உண்ணலாம்.

  * கொத்துக்கறிக்கு பதிலாக எலும்பில்லாத மட்டனை வாங்கி அதை வேகவைத்து மிக்சியில் அரைத்தும் செய்யலாம். 

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×