என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    நவராத்திரியின் போது தினமும் ஏதாவது ஒரு சுண்டல், பாயசம் போன்றவைகளை செய்வது வழக்கம். இன்று நவரசப்பாயசம் செய்து அசத்தலாம்
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - அரை கப்
    கேரட் துருவல் - அரை கப்
    உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், சாரப்பரப்பு - தேவைக்கு
    சர்க்கரை - முக்கால் கப்
    சுண்ட காய்ச்சிய பால் - 1 கப்
    காய்ச்சிய பால் - 1 கப்
    நெய் - தேவைக்கு
    ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
    தண்ணீர் - 1 1/2 கப்

    செய்முறை :

    * பாதாமை சீவிக் கொள்ளவும்.

    * கடாயில் சிறிது நெய் ஊற்றி அதில் கேரட் துருவலை போட்டு வதக்கிக்கொள்ளவும்.

    * அடுத்து உலர்ந்த திராட்சை, சீவிய பாதாம், முந்திரி, சாரப்பரப்பை தனித்தனியாக நெய்யில் வறுத்துக்கொள்ளவேண்டும்.

    * ஒரு பாத்திரித்தில் ஜவ்வரிசியை போட்டு அதனுடம் தண்ணீர், காய்ச்சிய பால் சேர்த்து வேக விடவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் நெய்யில் வதக்கிய கேரட் துருவலை போட்டு சிறிது பால் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

    * வெந்த ஜவ்வரியில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரைந்தலும் சுண்டக்காய்ச்சிய பால் விட்டு, அதில் கேரட் துருவல், தேங்காய் துருவல், வறுத்த திராட்சை, பாதாம் முந்திரி மற்றும் சாரப்பரப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.

    * வெள்ளை, சிவப்பு, ப்ரவுன், கருப்பு, மஞ்சள் போன்ற பல நிறங்கள் மற்றும் சுவைகள் சேர்த்து நவரசத்தையும் வெளிப்படுத்துவதாக இந்த பாயசம் அமையும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு பிடித்த நூடுல்ஸை வைத்து கட்லெட் செய்வது எப்படி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை பட்டாணி - கால் கப்
    கார்ன் - கால் கப்
    கடலை மாவு - 2 ஸ்பூன்
    நூடுல்ஸ் - 1 1/2 கப்
    சீரக தூள் - அரை ஸ்பூன் ( வறுத்து பொடித்தது)
    உப்பு - சுவைக்கு
    பூண்டு விழுது - அரை ஸ்பூன்
    கரம்மசாலா - கால் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய்  (chilli flakes) - 1 ஸ்பூன்
    துருவிய சீஸ் - அரை கப்
    பால் - 2 ஸ்பூன்
    பிரட் தூள் - தேவைக்கு
    எண்ணெய் - சிறிதளவு

    செய்முறை :

    * பச்சை பட்டாணி, கார்ன் இரண்டையும் வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * நூடுல்ஸை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பச்சை பட்டாணி, கார்ன், கடலை மாவு போட்டு நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதில் சீரகத்தூள், உப்பு, பூண்டு விழுது, கரம்மசாலா, மஞ்சள் தூள், கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் (chilli flakes), நூடுல்ஸ் போட்டு நன்றாக கலக்கவும்.

    * நூடுல்ஸை உடையாமல் கலக்க வேண்டும்.

    * கடைசியாக துருவிய சீஸ், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * கலந்ததை உருண்டையாக பிடித்து வேண்டிய வடிவில் தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டி வைத்துள்ளவைகளை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான நூடுல்ஸ் - கார்ன் கட்லெட் ரெடி.

    * எண்ணெயில் பொரிப்பதற்கு பதில் தோசைக் கல்லில் போட்டும் எடுக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நவராத்திரிக்கு கொலு பார்க்க வருபவர்களுக்கு ஜவ்வரிசி வடை செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி  - 1 கப்
    உருளைக்கிழங்கு 3 நடுத்தர அளவு
    பொடித்த வேர்கடலை 1/2 கப்
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    உப்பு - தேவைக்கு
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஜவ்வரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசி, மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், உப்பு, கொத்தமல்லி, சீரகம், எலுமிச்சை சாறு அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான ஜவ்வரிசி வடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. இப்போது கிராமத்து ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
    நல்லெண்ணெய் - தேவைக்கு
    கடுகு - 1 டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 5
    தக்காளி - 1
    கறிவேப்பிலை - சிறிது
    புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 1 கப் (துருவியது)
    சின்ன வெங்காயம் - 10

    வறுத்து அரைப்பதற்கு...

    வரமிளகாய் - 8-10
    தனியா - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    * மீனை சுத்தம் செய்து வைக்கவும்.

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைத்து சூடு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.

    * பின் அதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடம் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

    * குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நவராத்திரி கொலு பார்க்க வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வித்தியாசமான நெய் அப்பம் செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்
    வெல்லம் - 2 கப்
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    வாழைப்பழம் - 2
    ஏலக்காய் - 4
    சோடா உப்பு - ஒரு சிட்டிகை
    நெய் - அரை கப்

    செய்முறை :

    * அரிசியைச் சுத்தம் செய்து ஊறவைத்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * வெல்லத்தைக் கரைத்து, கெட்டிப் பாகாக உருக்கி, அதை அரிசிமாவில் விட்டுக் கலந்துகொள்ளுங்கள்.

    * இந்தக் கலவையுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, சோடா உப்பு, வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.

    * பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு உருகியதும், பாதி அளவுக்கு மாவு விடுங்கள். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.

    * நவராத்திரியில் அம்மனுக்கு இந்த நெய் அப்பத்தைப் படையலிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பொரி சாட் மசாலா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பொரி - 1 கப்
    ஓமப் பொடி 1 கப்
    வெங்காயம், தக்காளி தலா - 1
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    சாட் மசலா - 1 டீஸ்பூன்

    சாட் மசாலா செய்ய :

    சீரகம், தனியா, மாங்காய்த் தூள் - தலா கால் கப்
    கருப்பு உப்பு, மிளகு - தலா அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 8

    செய்முறை :

    * சாட் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்தெடுத்தால் சாட் மசலா தயார்.

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் சாட் மசாலா, ஓமப் பொடி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    * சூப்பரான பொரி சாட் மசாலா தயார்.

    * இதை சாப்பிடும் போது தான் செய்ய வேண்டும். முதலிலேயே செய்து வைத்து விட்டால் நமத்து விடும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேபி கார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு விருப்பமான பேபி கார்ன் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    பேபி கார்ன் - 2 கப் (நீளமாக வெட்டியது)
    நெய் - 2 மேஜைக்கரண்டி
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பட்டை - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
    பால் - 1 கப்
    தண்ணீர் - ½ கப்

    செய்முறை :

    * வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் சோம்பு, சீரகம், பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய மக்காசோளம் சேர்த்து நன்கு கிளறவும்.

    * தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    * அடுத்து அதில் பால், தண்ணீர் சேர்க்கவும்.

    * நன்றாக கொதி வரும் போது பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கவும்.

    * பிரஷர் போனவுடன் மூடியை திறந்து கொத்தமல்லித்தழை, சிறிது நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

    * பேபி கார்ன் புலாவ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இறாலை குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    இறால் - 1/2 கிலோ
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2
    பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை - 1 மூடி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி

    செய்முறை  :

    * இறாலைத் தோல் நீக்கி, சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும்.

    * சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்துடன், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
    * வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.

    * பின் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும்.

    * மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து கிளறவும்.

    * இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும்.

    * இத்துடன் கழுவி வைத்த இறாலைப் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிடவும். இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * அதிக கிரேவி பதம் வேண்டும் என்பவர்கள் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

    * பத்து நிமிடத்தில் நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் தொக்கு தயார்.

    * இதனை இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்து உண்ணலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நவராத்திரிக்கு ஒவ்வொரு நாள் பூஜைக்கும் பிரசாதம் கொடுக்க வேண்டும். இன்றைய பூஜையில் வேர்க்கடலை வெல்ல லட்டு செய்து வைத்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) - ஒரு கப்
    பொடித்த வெல்லம்  – தலா ஒரு கப்.
    பாதாம் - தேவைக்கு
    ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    * வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    * பாதாமை துருவிக்கொள்ளவும்.

    * தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

    * இதனுடன் பொடித்த வெல்லம், துருவிய பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் நைஸாக ஒருசேர அரைத்து ஒரு தட்டில் கொட்டவும்.

    * அரைத்த மாவை லட்டுகளாக விருப்பமான அளவுகளில் பிடிக்கவும்.

    * சுவையான வேர்க்கடலை வெல்ல லட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வஞ்சிரம் மீனில் கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    வஞ்சிரம் மீன் - 500 கிராம்,
    சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி  - தலா 200 கிராம்,
    பெரிய வெங்காயம், பூண்டு, புளி - தலா 100 கிராம்,  
    காய்ந்த மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 100 மி.லி,  
    வெந்தயம் - சிறிதளவு
    மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
    கடுகு, சோம்பு - சிறிதளவு
    மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
    தனியா - 2 ஸ்பூன்
    தேங்காய் துருவல் -  அரை கப்

    செய்முறை :

    * பெரிய வெங்காயத்தை அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும்.

    * வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * புளியை கரைத்து வைக்கவும்.

    * தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தைப் போட்டுப் பொரிக்கவும். வெந்தயம் பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * பிறகு, மிளகாய்த் தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின்னர், அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும்.

    * புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும்.

    * பிறகு, மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறக்கும் முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.

    * வஞ்சிரம் மீன் கிரேவி ரெடி.

    பலன்கள்: எண்ணெயில் பொரிக்காமல், மீன்களை வேகவைத்துச் சாப்பிடுபவர்களுக்கு, மூளை செல்களின் வளர்ச்சி அதிகரித்து, நினைவு ஆற்றல் திறன் மேம்படும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், பால் மற்றும் ரவையைக் கொண்டு கேசரி செய்து கொடுங்கள்.
    தேவையான பொருட்கள்: 

    ரவை - 1/2 கப் 
    சர்க்கரை - 3/4 கப் 
    பால் - 2 கப் 
    நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை 
    குங்குமப்பூ - சிறிது 
    முந்திரி - 10 உலர் 
    திராட்சை - 10

    செய்முறை: 

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

    * அதே வாணலியில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
    * பின்பு 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். 

    * ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். 

    * பின் அதில் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும். 

    * ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கைவிடாமல் கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும். 

    * அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், பால் ரவா கேசரி ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நவராத்திரிக்கு படைக்கும் நைவேத்தியங்களை பற்றி பார்க்கலாம். இன்று தேங்காய் பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்
    வெல்லம் - முக்கால் கப்
    ஏலக்காய் - 2
    நெய், முந்திரி, திராட்சை - சிறிதளவு
    தேங்காய்த் துருவல் - ஒரு கப்

    செய்முறை :

    * கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து வைக்கவும்.

    * வெல்லத்தை துருவி வைக்கவும்.

    * பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவையுங்கள். 

    * ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

    * ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பச்சரிசி தேங்காய் கலவையை அதில் சேர்த்துக் கைவிடாமல் கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 

    * நன்றாக வெந்ததும் வறுத்த வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேருங்கள். 

    * அடுத்து அதில் துருவிய வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் இறக்கிவையுங்கள். 

    * விரும்பினால் ஆறியதும் சிறிதளவு பால் சேர்க்கலாம். 

    * இனிப்பான தேங்காய் பாயாசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×