என் மலர்
ஆரோக்கியம்

சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
முட்டை - 4
பூண்டு - 2 பெரிய பற்கள்
நட்சத்திர சோம்பு - 1
பச்சை மிளகாய் - 4
மிளகு தூள் - தேவையான அளவு
வினிகர் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
குடமிளகாய் - 1,
வெங்காயம் - 2,
கேரட் - 1,
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
செய்முறை :
* ப.மிளகாய், பூண்டு, குடமிளகாய், கேரட், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
* பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தனியே வைக்கவும்
* கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் தீயை அதிகரித்து விட்டு அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு நட்சத்திர சோம்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
* பின்பு அதனுடன் குடமிளகாய் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்னர் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்
* காய்கறிகள் வதங்கியவுடன் காய்கறிகளை கடாயின் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு தீயைக் குறைத்து அதில் முட்டையை அடித்து ஊற்றவும். முட்டையை லேசாக கிளறி விடவும்.
* முட்டை வெந்தவுடன் வினிகர், சோயா சாஸ், மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.
* பின்பு தீயை அதிகரித்து லேசாக கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும்.
* சுவையான சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story