என் மலர்
ஆரோக்கியம்

இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி?
இஞ்சி வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே எளிய முறையில் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 1 கப்
மிளகாய் தூள் - கால் கப்
மல்லித் தூள் - கால் கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் - அரை கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 10 பற்கள்
தாளிக்க :
எண்ணெய் - ½ கப்
கடுகு - 1 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
வத்தல் மிளகாய் - 5
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கைப்பிடியளவு
செய்முறை :
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெல்லத்தை துருவிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி இஞ்சியை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆற வைக்கவும்.
* ஆறியவுடன் இஞ்சி, புளி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு அதனுடன் உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
* எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
* சுவையான இஞ்சி ஊறுகாய் ரெடி!!!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story