என் மலர்
சமையல்
- அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
- மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 4
துருவிய தேங்காய் - கால் கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.
அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.
மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.
இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.
- மதுரையில் பிரபலமான ஜிகர்தண்டா இப்போது அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.
- இதனை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
நன்னாரி சிரப் - 3-4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
பிரஷ் க்ரீம் - 1/2 கப்
பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்
வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி, குறைவான தீயில் 10 நிமிடம் சுண்டும் வரை காய்ச்சவும்.
பின் அதில் சர்க்கரை சேர்த்து, குறைவான தீயில் மீண்டும் பாதியாக சுண்டும் வர கொதிக்க விட வேண்டும். அதன் நிறம் மாறி பாதியானதும், அதில் 1 கப் பாலை எடுத்து தனியாக குளிர வைக்க வேண்டும்.
பிறகு மீதமுள்ள பாலை மீணடும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதில் பால் கோவா சேர்த்து நன்கு கலந்து, பின் அதில் பிரஷ் க்ரீம், வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து, ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் 3-4 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது அது ஐஸ் கட்டி போன்று இருக்கும். அதனை உடைத்துவிட்டு, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்.
பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். இதேப்போன்று 2 முறை ப்ரீசரில் வைத்து உறைய வைத்து எடுத்து அரைத்து, இறுதியில் அதனை ப்ரீசரில் 8 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.
அதற்குள் பாதாம் பிசினை ஒரு பௌலில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பாதாம் பிசின் நன்கு ஊறி ஊதியிருக்கும்.
இறுதியில் ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் நன்னாரி சிரப், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினி, தனியா எடுத்து வைத்துள்ள பால் டம்ளரில் 3/4 அளவு வரும் வரை ஊற்றி, பின் அதில் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறினால், மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா ரெடி!!!
- வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
- இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வெற்றிலை - 10
காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - சிறிதளவு
பூண்டுப் பல் - 3
புளி - கோலிக்குண்டு அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெற்றிலைத் துவையல்
வெற்றிலைத் துவையல்
செய்முறை:
வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.
இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.
- சிக்கனில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.
- தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி - 1 கப்
நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிய பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்தது நெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!
- பிரெட்டில் சுவையான சூப்பரான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சில்லி பிரெட் செய்து உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
பிரெட் ஸ்லைஸ் - 10,
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி,
சிவப்பு கேசரி கலர் - சிறிதளவு,
கொத்தமல்லி இலை - அரை கட்டு,
எலுமிச்சை ஜுஸ் - சிறிதளவு,
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி,
வெங்காயம் - 2
தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 3,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
நெய் - ஒரு தேக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துக் கொள்ளவேண்டும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்னர் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.
இப்போது சுவையான, காரமான குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பிரெட் தயார்.
- பல்வேறு வகையான பிரியாணிகள் உள்ளது.
- இந்த தீபாவளிக்கு நாட்டுக்கோழி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி - முக்கால் கிலோ
சீரகச்சம்பா அரிசி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லித் தழை - அரை கட்டு (2 கைப்பிடி)
புதினா - கால் கட்டு (ஒரு கைப்பிடி)
கெட்டித் தயிர் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
எலுமிச்சை - கால் மூடி
ப்ரிஞ்சி இலை - 3
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடிக்க:
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று
ஜாதிக்காய் - சிறிய துண்டு (மிளகு அளவு)
செய்முறை
சின்ன வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் நாட்டுக்கோழித் துண்டுகளுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தயிருடன் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பிசறி தனியாக வைக்கவும்.
பொடிக்க கொடுத்துள்ளவற்றைப் பொடித்து வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை, பொடித்த மசாலா போட்டு தாளித்த பின்னர் , நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி தழையைச் சேர்த்து வதக்கி, தயிரில் கலந்து வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் பால் சேர்த்து, அரிசியின் அளவைவிட ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் அரிசியையும், முக்கால் பதம் வெந்த நாட்டுக்கோழித் துண்டுகளையும் சேர்க்கவும். உப்பு சரிபார்த்து மெதுவாக கிளறிவிட்டு மூடிவைத்து வேகவிடவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து, மீண்டும் கலந்துவிட்டு குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.
10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து வெந்ததை சரிபார்த்து ஒரு ஃபோர்க் கொண்டு கிளறினால் சாதம் உடையாமல் இருக்கும்.
சுவையான நாட்டுக்கோழி பிரியாணி தயார்.
சாலட் மற்றும் ரைத்தாவுடன் பரிமாறலாம்.
- தந்தூரி சிக்கன் பிரியாணியை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
- இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :
தயிர் - ஒரு கப்
பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது
பச்சைமிளகாய் - 2
லவங்கம் - 4
எலுமிச்சை - பாதி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பிரியாணி செய்ய :
அரிசி - அரை கிலோ
சிக்கன் லெக்பீஸ் - 6
வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
தாளிக்க :
பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா2
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக்கால் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.
அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.
விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.
அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.
- பல்வேறு வகையான பிரியாணிகள் உள்ளது.
- இன்று ஈசியான முறையில் சிக்கன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
பிரியாணி அரிசி - 3 கால் படி
பெரிய வெங்காயம் - 1 / 2
தக்காளி - 1 / 2
பூண்டு - 8 பல்
இஞ்சி - 2 அங்குலம்
புதினா - ஒரு கை நிறைய
கொத்தமல்லித்தழை - ஒரு கை நிறைய
சோம்பு - 1 / 2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் - 50 கிராம்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.
பெரிய வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லித்தழை, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை 1 போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் 2, சேர்த்து வதக்கவும்.
பின்னர் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இதில் அரைத்த விழுதை சேர்த்து 8 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து இதில் மூன்று சொம்பு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசியைப் போட்டு குக்கரை மூடி வைக்கவும்.
வழக்கம் போல் மூன்று விசில் வந்ததும் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி விடவும்.
ஸ்டீம் போனவுடன் குக்கரைத் திறந்து சிறிது நெய் சேர்த்து கிளறி விடவும்.
இப்போது சூப்பரான சிக்கன் பிரியாணி ரெடி.
- தீபாவளி என்றாலே பிரியாணி தான் ஸ்பெஷல்.
- இந்த தீபாவளிக்கு ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்து அசத்தலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் - 1 கிலோ
பாசுமதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 5
தேங்காய்பால் - 1 கப்
தயிர் - 400 கிராம்
எண்ணெய் - 4 ஸ்பூன்
நெய் - கால் கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது - 2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
எலுமிச்சை - 1
குங்குமப்பூ - சிறிது
உப்பு - தேவையான அளவு
புதினா - சிறிது
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு - தலா 3
செய்முறை
* குங்குமப்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
* வெங்காயம், புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீன் துண்டுகளைக் கழுவி 1 ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி லேசாக எண்ணெயில் ஷால்லோ ஃபிரை செய்து எடுக்கவும்.
* மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக முறுவலாக பொரித்து எடுக்கவும்.
* மற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, பொரித்த வெங்காயம், எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
* அத்துடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
* அதில் மீன் துண்டுகளைச் சேர்த்து கலந்து நெய் 2 ஸ்பூன், புதினா சிறிது கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.
* பாத்திரத்தில் நீர் வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சு இலை, புதினா சிறிது, உப்பு சிறிது, எண்ணெய் சிறிது விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து கொதி வந்த பின்னர் 3 நிமிடத்தில் (அரை பாகம் வெந்தால் போதும்) வடிக்கவும்.
* பிரியாணி பாத்திரத்தில் நெய் விட்டு ஊற வைத்த மீன் கலவையை வைக்கவும். தேங்காய்பால் சேர்க்கவும்.
* அதன் மேல் சாதத்தை பரப்பி விடவும். மீதி பொரித்த வெங்காயம், புதினா, கரைத்த குங்குமப்பூ கலவையை லேசாக தெளித்து விட்டு நன்றாக மூடி விடவும். ஓரங்களில் காற்று புகாமல் நன்றாக மூட வேண்டும்.
* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். 10 நிமிடம் முழுத் தீயிலும் அடுத்த 10 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.
* தம் அடங்கியதும் திறக்கவும்.
* சுவையான ஹைதராபாத் மீன் தம் பிரியாணி ரெடி.
- கடையில் வாங்கும் தட்டையை விட வீட்டிலேயே சுவையாக செய்யலாம்.
- இந்த தீபாவளிக்கு கார தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப் அளவு
உளுத்தம் பருப்பு - 1/4 கப் (வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
கடலை பருப்பு - 4 டீஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த பூண்டு - 10
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
2 கப் அளவு பச்சரிசியை, ஒரு கடாயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். ஈரப்பதம் மாவில் இருக்கவே கூடாது. வறுத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.
கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த அரைத்த உளுத்த மாவு, பச்சரிசி மாவை போட்டு நன்றாக கலந்துகொள்ளவும்.
அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, கொரகொரப்பாக பொடித்த பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார்.
இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்த தட்டைகளை போட்டு பொரிக்கவும். இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்து எடுத்தால், சுவையான மற்றும் காரமான தட்டை தயார்.
- வித்தியாசமான சுவையான இந்த தோசை அனைவருக்கும் பிடிக்கும்.
- இதற்கு தொட்டுக்கொள்ள சைடிஷ் தேவையில்லை.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவைக்கேற்ப
நெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாக ஊற்றி சுற்றி நெய் விடவும்.
பின்னர் அதன் மேல் இட்லி பொடியை பரவலாக தூவி தோசை மொறு மொறு என்று வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.
இந்த தோசையை திருப்பி போடக்கூடாது.
இப்போது அருமையான மொறு மொறு நெய் பொடி தோசை ரெடி.
- கேழ்வரகில் அதிகளவு கால்சியம் உள்ளது.
- இந்த தீபாவளிக்கு வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 500 கிராம்
வெல்லம் - 250 கிராம்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க
செய்முறை :
வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளறி வைக்கவும்.
அதை ஒரு நாள் ஊற விட்டு, மறுநாள் மாவை அதிசரமாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த அதிசரங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுககவும்.
இப்போது மிருதுவான, சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்.






