search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கோதுமை ரவை மிளகு பொங்கல்
    X
    கோதுமை ரவை மிளகு பொங்கல்

    நார்ச்சத்து, புரதம் நிறைந்த கோதுமை ரவை மிளகு பொங்கல்

    அதிகளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ள கோதுமை ரவை உடல் எடை குறைப்பிற்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல தேர்வாக விளங்குகிறது.
    தேவையான பொருட்கள் :
     
    கோதுமை ரவை - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/4 கப்
    கறிவேப்பிலை - சிறிது
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    முந்திரி - 2
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    தண்ணீர் - 3 கப்
    உப்பு - தேவையான அளவு
     
    செய்முறை :
     
    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும்.
     
    அடுத்து பாசிப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும்.
     
    குக்கரில் 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக விடவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து நன்கு கிளறவும்.
     
    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் மிளகு, ப.மிளகாய், இஞ்சி, சீரகம் போட்டு தாளித்த, பின் முந்திரி, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.
     
    சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல் ரெடி.
    Next Story
    ×