search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோதுமை ரவை - சேமியா வெஜிடபிள் இட்லி
    X
    கோதுமை ரவை - சேமியா வெஜிடபிள் இட்லி

    கோதுமை ரவை - சேமியா வெஜிடபிள் இட்லி

    ரவை, சேமியாவில் எப்போது உப்புமா, கிச்சடி செய்து சலித்து விட்டதா? இன்று இவை இரண்டுடன் வெஜிடபிள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சேமியா - 1/4 கப்,
    கோதுமை ரவை - 1 கப்,
    உப்பு- தேவைக்கு,
    தயிர் - 1 கப்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி கலந்து - 1 கப்,
    நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
    இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 4,
    நெய் - 1 டீஸ்பூன்.

    செய்முறை

    கடாயில் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.

    இத்துடன் கோதுரவை, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

    கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்த பின்னர் இஞ்சி பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கவும்.

    பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பச்சைப்பட்டாணி, பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கோதுமை ரவை கலவையில் கொட்டி நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ரவா - சேமியா வெஜிடபிள் இட்லி ரெடி.

    Next Story
    ×