
காலி பிளவர் - 100 கிராம்
கேரட் - 1
சிறிய பீட்ரூட் - 1
முள்ளங்கி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
காலி பிளவரை வெந்நீரில் 5 நிமிடம் வைத்து எடுத்து விடவும்.
காலி பிளவர், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
கேரட், பீட்ரூட், முள்ளங்கி மூன்றையும் தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள காலிபிளவர், துருவி வைத்துள்ள கேரட், பீட்ரூட், முள்ளங்கி, மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறவும்.
நன்கு வெந்ததும் மிளகாய் தூள், மிளகுத்தூள் தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறவும்.