search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முடக்கத்தான் கீரை ரசம்
    X
    முடக்கத்தான் கீரை ரசம்

    மூட்டுநோய், மூலநோயை குணமாக்கும் முடக்கத்தான் கீரை ரசம்

    முடக்கத்தான் கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
    தேவையான பொருட்கள் :

    முடக்கத்தான் கீரை - 3 கப்,
    புளி - கொட்டைப்பாக்கு அளவு,
    தக்காளி - 3
    பூண்டு விழுது, மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    நெய், கறிவேப்பிலை - சிறிதளவு.

    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும்.

    இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவேண்டும்.

    இப்பொழுது வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு கப் இலைகளை சேர்த்து வதக்கவும்.

    பிறகு புளிக்கரைசல் விட்டு, ஒரு கொதி வந்ததும் மிளகு - சீரகத்தூள், வடிகட்டிய கீரைச்சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவேண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×