search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி
    X
    குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி

    குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி

    குடைமிளகாயில் ஸ்டப்ஃடு செய்து செய்யும் இட்லி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குடைமிளகாய் - 4
    முட்டை-  4
    வெங்காயம் - 4
    பச்சை மிளகாய் - 4
    கேரட் - 2
    மிளகு தூள் - சிறிதளவு
    சீரகத்தூள் - சிறிதளவு
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி

    செய்முறை :

    குடமிளகாய் மேல்பகுதியை கட் பண்ண வேண்டும். அதில் இருக்கும் விதைகளை எடுக்க வேண்டும்

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    4 முட்டைகளையும் 4 வெவ்வேறு டம்ளர்களில் ஊற்ற வேண்டும்.

    4 டம்ளர்களிலும் மிளகுத்தூள், சீரகத்தூள  ,தேவைக்கேற்ப உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    4 டம்ளர்களிலும்  ஸ்பூனை வைத்து கலந்துகொள்ள வேண்டும்.

    இந்த நான்கு டம்ளர்களில் உள்ள கலவையும் நான்கு குடைமிளகாயில் ஊற்றவேண்டும்.

    அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி இட்லி தட்டின் மேல் இந்த நான்கு குடைமிளகாய் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேக விட வேண்டும்.

    சூடான சுவையான குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி தயார் .

    B. இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×