search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூலிகை ரசம்
    X
    மூலிகை ரசம்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை ரசம்

    இந்த மூலிகை ரசம் இருமல், சளி, அலர்ஜி ஆகிய அனைத்திற்கும் நல்லது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
    துளசி இலை -  10
    கற்பூரவல்லி இலை - 3
    வெற்றிலை - 2
    நார்த்த இலை - 3
    கறிவேப்பில்லை - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை, புதினா - தலா 1 கைப்பிடி
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    ரசப் பொடி (கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    கடுகு - தாளிக்க
    வெந்தயம் - தாளிக்க
    பெருங்காயம் - கால் ஸ்பூன்

     மூலிகை ரசம்

    செய்முறை:

    முதலில் புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து மண் இல்லாத படி நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.

    துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை. கொத்தமல்லி, புதினாவை நன்றாக கழுவி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சிலைகளை (துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை. கொத்தமல்லி, புதினா) கழுவி இரண்டு நிமிடம் வதக்கி அது ஆறியதும் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பச்சிலை கலவையை புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இந்த புளித்தண்ணீருடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ரசப் பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

    இதோ இப்போது சுவையான மூலிகை ரசம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×