search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கற்றாழை பழ சாலட்-
    X
    கற்றாழை பழ சாலட்-

    கற்றாழை பழ சாலட்- அடுப்பில்லா சமையல்

    அடுப்பில் வைத்து சமைக்காமல் கற்றாழை, பழங்கள் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த சாலட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    கற்றாழை ஜெல் - 1 கப்
    மாதுளை முத்துக்கள் - 1 கப்
    துருவிய கேரட் - 1 கப்
    ஆரஞ்சு பழம் - 1/2 கப்  (பொடியாக நறுக்கியது)
    குடைமிளகாய் - 1 கப்  ( பொடியாக நறுக்கியது)
    கொத்தமல்லி - 1/4 கப்  ( பொடியாக நறுக்கியது)
    புதினா இலை - 1/4 கப்
    உப்பு - தேவையான அளவு
    சாட் மசாலா - தேவையான அளவு

    கற்றாழை ஜெல்

    செய்முறை :

    கற்றாழை ஜெல் பகுதியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கற்றாழை, மாதுளை முத்துக்கள், துருவிய கேரட், ஆரஞ்சு பழம், குடைமிளகாய், கொத்தமல்லி, புதினா, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்தால் கற்றாழை சாலட் தயார்.

    B. இந்துமதி


    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×