என் மலர்

  ஆரோக்கியம்

  குள்ளக்கார் அரிசிக் கஞ்சி
  X
  குள்ளக்கார் அரிசிக் கஞ்சி

  உடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு வலிமையைத் தரும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்

  குள்ளக்கார் அரிசி - கால் கிலோ
  சீரகம் - 50  கிராம்
  கட்டிப் பெருங்காயம் - 1 கிராம்
  இந்துப்பு - தேவையான அளவு

  குள்ளக்கார் அரிசி

  செய்முறை

  முதலில் இரும்பு வாணலியில் குள்ளக்கார் அரிசியைச் சிறுதீயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

  அடுத்து அதில் சீரகத்தை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

  வறுத்து வைத்துள்ள குள்ளக்கார் அரிசி, சீரகம் மற்றும் பெருங்காயம் மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

  ஒரு பாத்திரத்தில் ஒரு கப் குள்ளக்கார் குருணைக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் கொர கொரப்பாக அரிசியை ஒரு கப் எடுத்து போட்டு கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

  நன்கு கொதித்து கஞ்சியாக வெந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்து வைக்கவும்.

  சத்தான சுவையான குள்ளக்கார் அரிசிக் கஞ்சி ரெடி.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×