search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சென்னா சுண்டல்
    X
    சென்னா சுண்டல்

    சத்தான ஸ்நாக்ஸ் சென்னா சுண்டல்

    குழந்தைகளுக்கு உண்ணக்கொடுக்கும் உணவு சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் சென்னா சுண்டல் தயாரித்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சென்னா - கால் கிலோ
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கடுகு, உளுந்து - 1 டீ ஸ்பூன்
    எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
    துருவிய தேங்காய் - கால் கப்
    உப்பு - தேவையான அளவு

    சென்னா சுண்டல்

    செய்முறை :

    சென்னாவை 6 மணிநேரம் ஊற வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்னவெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் வேகவைத்த சுண்டலை தண்ணீரை வடித்து வாணலியில் போட்டு கிளறவும்.

    அத்துடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி இறக்கவும்.

    சத்தான சென்னா சுண்டல் ரெடி.

    குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×