search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூங்க்லெட்
    X
    மூங்க்லெட்

    நார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட்

    இந்த ரெசிபியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    பாசிபருப்பு -     200 கிராம்
    பச்சை மிளகாய் - 4
    பேக்கிங் சோடா
    எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    குடைமிளகாய் - 1
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    உப்பு - சுவைக்க

    மூங்க்லெட்

    செய்முறை

    பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைத்து நன்றாக ஊறியதும் தண்ணீர், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அரைத்து வைத்த மாவை ஊற்றி சுற்றி அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தோசை போல் சுடவும்.

    அதன் மேல் கலந்து வைத்த வெங்காயம், தக்காளி கலவையை தோசையின் மேல் தூவவும். தூவிய பின் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.

    இரண்டு பக்கமும் திருப்பி போட்டு 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

    அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

    ஆரோக்கியமான மற்றும் ருசியான மூங்க்லெட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×