
உதிர்த்த ஸ்வீட் கார்ன் - அரை கப்
கோதுமை ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
முந்திரி பருப்பு - 5
ப.மிளகாய் - 1
கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு

செய்முறை:
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் சுவீட்கார்னை கொட்டி கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் கோதுமை ரவையை கொட்டி நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
இந்த கலவையுடன் மிக்சியில் அரைத்துவைத்திருக்கும் சுவீட்கார்ன், தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கிளறி 20 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
ருசியான சுவீட்கார்ன் இட்லி ரெடி.