என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும். மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
    உடற்பயிற்சியின் நோக்கம் உடலை வலிமைப் படுத்துவது மட்டும்தான் என நினைக்கின்றோம். அது உடலின் இயக்கங்களையும், உள்ளத்தையும் சீரடையச் செய்து நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது, என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. உடற்பயிற்சி என்றதும் "பளு" தூக்குவதும், "தண்டால்" எடுப்பதும்தான் நம் ஞாபகத்திற்கு வருகிறது. அன்றாட வீட்டுச் சாமான்களை நாமே சென்று வாங்கிவருவது, ஐந்து வேளைத் தொழுகைகளை நடந்தே சென்று தொழுவது. சைக்கிள் பயணம், நீச்சல் போன்றவைகள் அனைத்துமே ஒரு வகை உடற்பயிற்சிதான். என்றாலும் இவை முழுப்பலனையும் தராது. வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும்.

    மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

    1)நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
    2)கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது.
    3) நம் உணவின் மூலம் நம் உடலில் தோன்றும் கிடோன், யூரியா, லாக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன், பிராடி ஹிஸ்டோமைன் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற வழி செய்கிறது.
    4) இரத்த ஓட்டம் சீரடைவதுடன் மயிரிழையை விட பத்து மடங்கு நுண்ணிய தந்துகிகள் வரை பாய்ந்து இறந்த செல்களை உயிர்பிக்கின்றது.
    5) மெல்லோட்டத்தின் போது உடலின் அதிக அளவு கொழுப்பு கரைகிறது.
    6) நுரையீரல், சிறுநீரகம், ஜீரண மண்டல உறுப்புக்கள், பித்தப் பை, கணையம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் சீராக இயங்கத் தொடங்குகின்றன.
    7) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் சுரக்கும் Endorphins என்னும் திரவம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

    கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

    1) மெல்லோட்டம் என்பது ஓட்டத்திற்கும், நடைக்கும் இடைப்பட்டதாகும்.
    2) ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மெல்லோட்டம் செல்வது சிறந்து
    3) ஓடும் போது நிதானமாக ஒரே சீரான வேகத்தில் ஓட வேண்டும்.
    4) வேகம் வயது மற்றும் உடல் அமைப்பிற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும்.
    5) மூச்சிரைக்க ஓடக் கூடாது.
    6) குறைந்த வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக நேரத்தைக் கூட்ட வேண்டும்.
    7) கை, கால்களில் விரைப்பாக வைக்காமல் தளர விட வேண்டும்.
    8) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் ஏற்படும் உஷ்ணம் வெளிக் காற்று பட்டு குளிர்ந்து விடாத வாறு உரத்த ஆடைகளை அணிவது நல்லது.
    9) இடைவிடாமல் தொடர்ச்சியாக ஓடினால்தான் உடலில் உஷ்ணம் ஏற்படும். இடையில் நிற்கக் கூடாது.
    10) 30 நிமிட மெல்லோட்டத்திற்குப் பின் தசைகள் மற்றும் உறுப்புக்களை தளர்வடையச் செய்யும் Callisthanic Exercise பத்து நிமிடங்கள் செய்வதன் மூலம் தசை வலிகள் ஏற்படாது.
    11) நாள்தோரும் மெல்லோட்டம் செல்ல வேண்டும்.
    12) மெல்லோட்டம் செல்ல காலை வேளையே சிறந்தது.
    உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை.
    உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது.

    இந்த பயிற்சியின் பெயர் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying Side Leg Raise exercise). இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.

    இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

    பயன்கள்:

    தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.
    வாக்கிங் செல்வதால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் நடைப்பயிற்சி செய்யும் போது செய்யக்கூடாத 8 விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.
    உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துமிக்க உணவு முறை எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும்.

    ஆனால், நீங்கள் வாக்கிங் செல்வதற்கு யாரையும் கேட்க வேண்டியதில்லை. நீங்களாகவே பயிற்சியைத் தொடங்கலாம். தொடங்கும் நாளிலேயே அதிக தூரம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வாக்கிங் செல்லும் தூரத்தை அதிகரிக்கலாம்.

    வாக்கிங் செல்வதால் உடல் சுறுசுறுப்பு தொடங்கி ஏராளமான பலன்கள் இருக்கின்றன. கால்களை நீட்டி வைத்து, வேகமாக நடப்பதே கலோரிகளை எரிக்க உதவுகிறது என்கிறார்கள். அதனால், நிதானமான அல்லது மெதுவான நடைப்பயிற்சி வேண்டாம். இன்னும் என்னவெல்லாம் செய்யக்கூடாத 8 விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.

    ஒன்று: வாக்கிங் குரூப் தொடங்கிக் கொள்வது நல்லதுதான். நண்பர்களோடு செல்லத் தொடங்கினால் நாம் ஒருநாள் சோம்பல் பட்டாலும் அவர்கள் இழுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், மிக சத்தமாகப் பேசிக்கொண்டு சண்டை வரும் வரையான காரசாரமான விவாதங்களை வாக்கிங் செல்லும்போது செய்யக்கூடாது.

    இரண்டு: சிலருக்கு பாடலை மெதுவான ஒலியில் கேட்டுக்கொண்டே வாக்கிங் செல்ல பிடிக்கும். நல்ல பழக்கம்தான். அதற்காக வெளியே சத்தமாக இருக்கிறது என்று உங்களின் பாடல் ஒலியை அதிகரித்துகொள்ள கூடாது. அப்படிச் செய்யும்பட்சத்தில் மனம் சீக்கிரமே சோர்வாகி விடும். ஹெட் போன் அலர்ஜி தரும் அத்தனையும் நடக்கக்கூடும்.

    மூன்று: வெளியில் சென்று சூரிய ஒளியில் வாக்கிங் செல்வதே நல்லது. சிலருக்கு அப்படிச் செல்ல வாய்ப்பும் இடமும் கிடைக்காது. ஆனால், பலருக்கு வெளியில் இயற்கையை ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல வாய்ப்பு இருக்கும். ஆனால், அதைத் தவிர்த்து வீட்டுக்குள் அல்லது ட்ரம்மில் செல்ல விரும்புவார்கள். அப்படியான சொகுசான வாக்கிங் செல்ல ஆசைப்படக்கூடாது.

    நான்கு: வாக்கிங் செல்வதற்கு என தனியாக சூ வாங்கிகொள்ளுங்கள். அதை வீண் செலவு என நினைக்காதீர்கள். கால்களுக்கு ரொம்ப இறுக்கமான சூ வைத் தவிருங்கள். கால்களுக்கு மென்மையான சூ களையே தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.

    ஐந்து: நீண்ட தூரம் வாக்கிங் செல்லும்போது கடைகள் பலவற்றைப் பார்ப்பீர்கள். உடனே சூடான வடை, பஜ்ஜி, டீ, காபி என்று குடிக்கவும் சாப்பிடம் இறங்கி விடாதீர்கள். அப்படிச் செய்தால் அன்றைக்கு நடந்த நடை வேஸ்ட்தான்.

    ஆறு: எண்ணெய் பலகாரம், டீ, காபி குடிக்க மாட்டேன். ஆனால், அங்கே கீரை விற்கும், காய்கறி விற்கும் அப்படியே வாங்கிக்கொண்டு வருவேன் என்று சிலர் சொல்வார்கள். செல்லும் வழியில் ஏதேனும் கிடைத்தால் வாங்கி வருவது தவறு அல்ல. ஆனால், தினமும் அதைச் செய்துகொண்டிருக்காதீர்கள். நீங்கள் செல்வது வாக்கிங்தான் ஒழிய ஷாப்பிங் அல்ல.

    ஏழு: சிலர் வாக்கிங் செல்லும்போது புகை பிடிக்கும் பழக்கம் வைத்துள்ளார்கள். அறவே கூடாது. புகையே கூடாது. வாக்கிங் செல்லும்போது உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். குறிப்பாக நுரையீரல் நன்கு சுத்தமான காற்றைச் சுவாசித்திருக்கும். அந்த நேரத்தில் புகையை அனுப்பி பாழ் படுத்தி விட வேண்டாம்.

    எட்டு: நோ சோஷியல் மீடியா… ஆம்… பலரும் வாட்ஸப்பில் உரையாடிக்கொண்டே, ஃபேஸ்புக் பார்த்துகொண்டே வாக்கிங் செல்கிறார்கள். இது தவறான பழக்கம். மொபைலைக் குனிந்து கொண்டே பார்த்துச்சென்றால் எதிரே இருக்கும் பள்ளம், குழி எதுவும் தெரியாது. சோஷியல் மீடியாவில் படிக்கும் விஷயங்களுக்கு ஏற்ப உங்கள் மனநிலையையும் சிந்தனையும் மாறிவிடும்.
    “பாபா” படத்தில் ரஜினியின் முக்கிய ஸ்டைல்… இதன் பெயர் அபான முத்திரை ஆகும். இது மிகவும் எளிதான முத்திரை என்பதோடு உடலுக்கு பல நன்மைகளும் செய்வதாகும்.
    யோகாவில், ஆசனங்கள், பிரணாயாமம், தியானம், கிரியா மற்றும் முத்திரை ஆகிய ஐந்து பயிற்சிகள் மிக முக்கியமானவை. அவற்றில், ‘முத்திரை’ என்பது கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு பயிற்சிமுறை. இதில் முக்கியமான ஒரு முத்திரை ‘அபான வாயு’ முத்திரை ஆகும்.. உங்கள் மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு லேசாகத் தொடவேண்டும். மற்ற இருவிரல்களும் மேலே நீட்டியபடி இருக்க வேண்டும். இதுதான் அபான முத்திரை. இதனை உட்கார்ந்து கொண்டோ ,நின்று கொண்டோ செய்யலாம்.எவ்வளவு நேரமும் செய்யலாம். எங்கும் செய்யலாம்.

    நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் ஏராளமான வேதியியல் பொருட்கள் கலந்துள்ளன. இதனால் உடலில் தேவையற்ற நச்சுகள் தங்கிவிடுகின்றன. இதனை மாத்திரை, மருந்துகள் இல்லாமல் எளிய வழியில் வெளியேற்ற இந்த அபான வாயு முத்திரை மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலில் தேங்கியுள்ள நச்சுககளால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அபான வாயு முத்திரை, வயிற்றில் உள்ள தேவையில்லாத நச்சுககளை வெளியேற்றி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

    சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில் கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையில் நிலம், நெருப்பு ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

    வயிறு மற்றும் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். மேலும் பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும். முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.

    மூக்கடைப்பு தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.மூலம், சர்க்கரை நோய். இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இது. மனம் தொடர்பான பிரச்னைகளையும் இது சரிசெய்யும். கணையத்தில் உள்ள தேவையற்றக் கழிவுகளை நீக்கி இன்சுலின் உற்பத்திக்கு வழிவகுக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் இதனைச் செய்யக் கூடாது.
    உடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து உங்கள் தசைகளை மீட்கவும் மற்றும் உங்கள் தசைகள் மீண்டும் வளரவும் ஓய்வு என்பது மிகவும் அவசியம்.
    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது பராமரிக்கும் ஓர் உடல் செயல்பாடே உடற்பயிற்சி. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. நீங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம், உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில நோய்கள் உருவாகும் அபாயம் குறைக்கிறது. மேலும் உங்களின் உடலை ஆரோக்கியமான எடையில் வைத்திருக்க உதவும்.

    உடற்பயிற்சி செய்து வருவது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். ஆனால், விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் அளவுக்கு அதிகமா உடற்பயிற்சி செய்வது உண்டு. நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் உங்கள் முன்னேற்றத்தையும் குறைக்கும். தினசரி உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    நீங்கள் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை; மற்றும் தினசரி செய்ய வேண்டும் என்றும் எந்த அவசியமும் இல்லை. உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு எடுப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏன்னென்றால், உடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து உங்கள் தசைகளை மீட்கவும் மற்றும் உங்கள் தசைகள் மீண்டும் வளரவும் ஓய்வு என்பது மிகவும் அவசியம்.

    நல்ல ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பராமரிப்பதற்கு, ஓய்வு நாட்கள் எவ்வளவு முக்கியம் என்று பல ஆய்வுகள் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது. நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் கூட அது போதுமானது. எனவே, அவரவர் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்வதே நல்லது.
    ஊரடங்கால் ஏற்பட்ட ஐந்து மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யும்போது, அவர் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..? என்று அறிந்து கொள்ளலாம்.
    ஊரடங்கால் ஏற்பட்ட ஐந்து மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யும்போது, தசைப்பிடிப்பு, கைகால்களை நீட்டி மடக்க முடியாத நிலை, உடல் முழுவதும் வலிபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக இளைஞர்கள் பலர் கூறுவதைக் கேட்க முடிகிறது. ஜிம்முக்குச் சென்று வொர்க்அவுட் செய்துகொண்டிருந்த ஒருவர், நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் செல்லும்போது அவர் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..? என்று அறிந்து கொள்ளலாம்.

    சிறிது காலம் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது தளர்வடைந்துள்ள தசைகள் மீண்டும் பழையபடி ஓர் ஒழுங்கு முறையில் கட்டமைக்கப்படும். இதனால் தசைப்பிடிப்பு, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஐந்து மாதங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்கு வந்து வொர்க்அவுட் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் வருவது இயல்புதான். அதனால் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. உடற்பயிற்சி செய்யச் செய்ய மூன்று அல்லது நான்கு நாள்களிலேயே இவை சரியாகிவிடும். ஏற்கெனவே உடற்பயிற்சி செய்து இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்கும்போது எங்கு பயிற்சியை நிறுத்தினீர்களோ அங்கிருந்து தொடங்காமல், பயிற்சியை ஆரம்பத்திலிருந்தே மெதுவாகத் தொடங்க வேண்டும்.

    ஜிம்மில் ஏற்கெனவே யாராவது பயன்படுத்திய உடற்பயிற்சி உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த நேரலாம் என்பதால் கையுறைகள் (gloves) அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வொர்க் அவுட் செய்யும்போது உடலில் சுரக்கும் வியர்வை காரணமாக நீங்கள் அணிந்திருக்கும் உடை நனைந்துவிட்டால் அதை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

    ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வோர் அவர்கள் செய்யும் வொர்க்அவுட்டுக்கு தகுந்தாற்போல தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஜிம்முக்குச் செல்வோர் தினமும் சராசரியாக 4 - 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கடினமாக உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலிலிருந்து அதிகளவில் வியர்வை வெளியேறும் என்பதால் அதைச் சமன் செய்யக்கூடிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில், டீஹைட்ரேஷன்' (Dehydration) எனப்படும் உடல் வறட்சி ஏற்பட்டு மயக்கம், சோர்வு போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்.

    தினமும் வொர்க்அவுட் செய்பவர்கள் தினமும் 6 - 7 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டியது அவசியம். காலை, மாலை இருவேளையும் ஜிம்முக்குச் செல்பவர்கள் 8 மணி நேர உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பகல் பொழுதில் கடுமையான உடற்பயிற்சி செய்வோர், இரவில் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கத் தவறினால் சோர்வு, தலைச்சுற்றல், கவனமின்மை உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் வொர்க்அவுட் செய்வோர் தங்களின் உறக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்று.

    ஜிம் சென்றுகொண்டிருப்பவர்களுக்குச் சாதாரணமாகவே புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. நோய் எதிர்ப்புத் திறனை புரதச்சத்து அதிகரிப்பதால் 60 கிலோ உடல் எடையுள்ள ஒருவர், ஒருநாளைக்கு 100 - 120 கிராம் அளவிலான புரதத்தை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதை முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவு வழியாகவோ, தானியங்கள் போன்ற சைவ உணவு வழியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

    ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் முறையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னைகளை நீங்கள் பயிற்சிபெறும் ஜிம் மாஸ்டரிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனெனில், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய்போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் பிரச்னைக்குத் தகுந்தாற்போல உடல் எடையை அதிகரிக்க அல்லது குறைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியாளரின் வழிகாட்டுதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளால் தோள்பட்டை, எலும்பு, மூட்டுத் தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.
    தியானம் ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும். தியானத்தை அதற்குரிய உகந்த நேரத்தில் செய்தால் கூடுதல் பலன்களை பெறலாம்.
    பொதுவாக சூரியன் உதயத்திற்கு முன் தியானத்தை முடித்து கொள்ள வேண்டும். இயற்கை சமச்சீராக இருக்கும் தருணம் அதுவே. அந்தி சாயும் மாலை நேரமும் உகந்த தருணம். சூரியன் மறைந்து நிலவு தோன்றும் நேரம் தியானம் செய்ய உகந்த நேரம். நாம் எதையாவது செய்வதற்கு முன் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என மனித மட்டத்தில் ஒரு கேள்வி வரும். தியானம் செய்தால், எனக்கு உடனடியாக என்ன கிடைக்கும் என நண்பர்கள் வேடிக்கையாக கேட்பது உண்டு.

    அமைதியை தரும் தியானம் : தியானம் ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும். இந்த அமைதி அனைத்தையும் மாற்றி அமைக்கும் அற்புதம். நாம் அமைதியாக இருக்கும் போது ஒரு ஆற்றல் பெருக்கெடுக்கும். அந்த ஆற்றல் நம் இதயப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் ரத்தம் சீராக பாயச் செய்கிறது. உடல் முழுவதும் பாயக்கூடியது ரத்தம் ஒன்றே. இந்த ரத்தம் ஓட்டம் அனைத்து ஹார்மோன்களையும் சுரக்க துாண்டுகிறது. இதனால் எலும்பு மஞ்சைகள் சுரந்து உடல் வலி, மூட்டுவலி எலும்பு தேய்மானம் போன்ற அனைத்தையும் சரி செய்கிறது.

    உறக்கம் தரும் தியானம் : மனிதனுக்குள் புதைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி விட உதவுகிறது. இதனால் மனிதன் எந்த நோயிலும் மாட்டிக் கொள்ள மாட்டான். ஆழ்ந்த துாக்கம் இல்லாத மனிதர்கள் 80 சதவீதம் உள்ளனர். தியானம் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். எதை வேண்டுமானாலும் பணத்தால் வாங்கும் சக்தி படைத்த மனிதா, உன்னால் நிம்மதியை வாங்க முடியுமா. அதை தியானம் கொடுக்கும்.

    ஒரு அரசனை போல மகிழ்ச்சியாக வாழ கற்று தருவதும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பிச்சைகாரரை போல இருக்க செய்வதும் தியானம். தியானம் ஆசைகளை குறைத்து ஆனந்தத்தை பெருக்க உதவி செய்யும். உடலில் உள்ள உயர்ந்த சக்திகள் கொண்ட சக்கரங்களை சுழலச்செய்யும் அற்புத ஆற்றல் தியானத்திற்கு உண்டு.குடும்ப வாழ்க்கையைசரியாக வாழ்ந்து கொள்ளவும் பணியினை தொய்வில்லாது செய்யவும் தியானம் உதவி புரியும்.

    உள்ளத்தின் வளர்ச்சி: நாம் மனதின் பெருமையை தான் பேசுகிறோம், தவிர அந்த கலையை வளர்க்க நாம் தவறி விட்டோம். ஒருவர் தன் கைக்குள் இந்த உலகம் இருக்கிறது என கூறுவது அவரது குறுகிய எண்ணத்தை குறிக்கிறது. அதே மனிதன் தன் கையை விரித்து, இந்த உலகம் கைக்கு மேல் இருக்கிறது என கூறும் போது இந்த உலகை ஆளும் வல்லமையை காட்டுகிறது. ஒரு கனிஉள்ளிருந்து தான் பழமாக மாறுமே தவிர வெளியில் இருந்து அல்ல. மனிதன் செல்வ வளர்ச்சி அடைவதை காட்டிலும் உள்ளத்தில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும். ஒரு மயில் தன் தோகையை விரித்தாடும் போது அந்த அழகின் மீது அதற்கு அளவற்ற கர்வம் தோன்றும்.அப்போது காக்கையை கண்ட மயில், உன் கால்கள் காய்ந்த அருவறுக்கத்தக்க கருப்பான குச்சி போல இருக்கிறது என்றதாம். அதுபோல மனிதனும் வெளிப்புற அழகை தான் பெரிதாக நினைத்து கவனம் செலுத்துகிறான்.

    பெற்றோரின் கடமை : தொடர்ந்து தியானம் செய்தால் மனம் விரிவடைகிறது. நம் வாழ்க்கை தர்மம் விரிவடைய வாய்ப்பாக அமைகிறது. இன்றைய வாழ்க்கையில் தியானம், யோகா, மூச்சுபயிற்சி இதில் ஒன்றையாவது நாம் பின்பற்றாவிட்டால் உடல், மன வலிமை குன்றி விடுவோம். தியானம் செய்ய வயது 50 ஐ தாண்ட வேண்டும் என இன்று நினைக்கின்றனர். இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமம். உட்கார்ந்து எழுந்திருக்க முடியாத வயதில் எப்படி தியானம் செய்ய முடியும். சிறு குழந்தை பருவத்திலேயே நல்ல எண்ணங்கள், சிந்தனையை துாண்டக்கூடிய தியான பயிற்சியை கற்றுகொடுப்பது பெற்றோர்களது கடமையாகும்.
    இந்தக் கட்டுரையில் குறிப்பாக உங்கள் தொடை தசைகள் மற்றும் இடுப்பப்பகுதி குறைக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்போகிறோம்.
    உடல் எடை அதிகரிப்பு தான் இன்றைக்கு பலரது தலையாய பிரச்சனையாக இருக்கிறது. பெண்களுக்கு இடுப்பு மற்றும் தசைப்படுதிகளிலும் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதிகளிலும் தான் அதிகப்படியான தசை சேர்ந்திடும். தொடர்ந்து நீங்கள் அதிகப்படியான கலோரி எடுக்கும் பட்சத்தில் அவை உடல் முழுவதும் சேர்ந்திடும். நாளடைவில் இடுப்புப் பகுதி மட்டும் பெரிதாவதற்கு அதுவே காரணமாக அமைந்திடும்.

    மேற்சொன்ன டிப்ஸுடன் சேர்த்து அடுத்து வரப்போகிற உடற்பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கும். இவை எளிதான உடற்பயிற்சி தான் என்பதால் நீங்கள் எளிதாக வீட்டிலேயே செய்திடலாம். ஒன்றிரண்டு நாட்களோ அல்லது ஒரு வாரம் மட்டும் செய்துவிட்டு உடல் எடை குறையவே இல்லை என்று சொல்லி விட்டு விடாதீர்கள். தொடர்ந்து செய்து வாருங்கள்.

    தொடையில் உள்ள சதையை குறைக்க கார்டியோவஸ்குலர் பயிற்சி என்பது மிகவும் சிறந்ததாகும். இது தொடை தசையைத் தவிர முழு உடலை குறைக்கவும் பயன்தரும். இதற்கு ஒரு நாளைக்கு அரைமணி நேரம் செலவழித்தாலே போதும். தொடர்ந்து செய்து வர உடலில் கீழ்பாகம் குறையும்.

    இது மிகவும் எளிமையான ஒன்று. இந்த பயிற்சியை தொடர்வதால் தசையை குறைக்க உதவுவதுடன் தொடை ஷேப் பெறவும் பயன்படுகிறது. ட்ரட்மில்லில் ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்வதை விட சமமான தளத்தில் வெளியில் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் மூச்சினையும் சீர் செய்யும்.

    தொடையில் உள்ள தசையை குறைக்க, காலை வலுவூட்ட முக்கியமான ரெஸிஸ்டன்ஸ் ட்ரைனிங் உடற்பயிற்சி இதுவாகும். தசையை வலுவாக்குவதால் தொடைப்பகுதியில் இருக்கிற அதிகப்படியான தசை குறைந்திடும். இவை உரிய பயிற்சியாளர் உதவியுடன் செய்வது சிறந்தது.

    தொடையின் தசையை குறைக்க இது மிகவும் எளிமையான பயிற்சி ஆகும். ஒரு சேரின் பின்புறம் நின்று கொள்ளுங்கள். அந்த சேரை சப்போர்டிவாக பிடித்துக் கொண்டு முதலில் எவ்வளவு தூரம் காலை பின்னோக்கி தூக்க முடியுமோ தூக்க வேண்டும். மெதுவாக தூக்கக்கூடாது. பின்னால் வேகமாக எத்த வேண்டும். இதே போல அடுத்தக்கால் இப்படியே மாறி மாறி செய்திட வேண்டும். குறைந்தது 20 முறை இப்படிச் செய்திடலாம்.

    பயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி இது. இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)என்ற எடை தூக்கும் கருவி தேவை. பார்பெல் பிடியை பின்தோள்பட்டையில் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

    கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்தநிலையில் வைக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள்இழுத்து கீழே உட்காருவது போன்ற நிலைக்குக் கால்முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும்.

    சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.

    தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.
    பத்த கோணாசனம் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க காரணமாகின்றன. ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும்.
    செய்முறை :

    முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை மேலே படத்தில் உள்ளவாறு மடக்குங்கள். இரு கால்களும் மடக்கி சம நிலையில் வைத்திருங்கள். இருபாதங்களும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்கவேண்டும். கைகளால் பாதங்களை பொத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

    முட்டிகள் தரையை தொடக் கூடாது. தொடைகளை மட்டும் சிறிது தரையில் தாழ்த்தினால் முட்டிகள் சம நிலையில் சரியாக இருக்கும்.. அந்த நிலையில் 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் முட்டிகளை உயர்த்தி, கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.

    பலன்கள் :

    மன அழுத்தம், தேவையில்லாத குழப்பங்கள், கருப்பை நீர்கர்ட்டி ஆகியவைகள் வராமல் தடுக்கும். அது போலவே முறையற்ற மாதவிலக்கு சீராகும். முடிஉதிர்தல், முகப்பரு, உடல் பருமன் ஆகியவைகளும் சீராகும். தினமும் இரு வேளைகள் செய்யுங்கள்.
    வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் ருத்ர முத்திரையை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.
    கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.

    தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும். மாணவர்களை அவசியம் செய்யச் சொல்லலாம்.

    பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்னை, சுவாசப் பிரச்னைகளைச் சீர்செய்யும்.

    உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றான, மணிப்பூரகச் சக்கரத்தைத் தூண்டுகிறது. இதனால், உடலில் ஏற்பட்ட சமநிலையின்மை குணமாகும். சிலர், ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பர், வலது பக்கம் மட்டும் நன்றாகக் கை வரும், இடது பக்கம் வராது. இதுபோன்ற  சமநிலைத் தன்மை இல்லாதவர்களுக்கு, இந்த முத்திரை நல்ல பலனைத் தரும்.

    மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.

    ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

    காலில் உள்ள ரத்த நாளங்கள் சுருண்டுகொள்ளும் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆண்களுக்கு விதைப்பையிலும், விரையிலும்  உள்ள வெரிகோஸிட்டி பிரச்னை சரியாகும்.

    வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம் (Parkinson), அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம் காணலாம்.
    கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்வதை தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்தால் வந்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையைப் புரிந்து தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம்.
    பொதுவாக தியானத்தை நாம் இரண்டு வழிகளில் செய்யலாம். முதலாவது கண்களை மூடிக்கொண்டு செய்வது. இரண்டாவது கண்களைத் திறந்து கொண்டு செய்வது. கண்களைத் திறந்து கொண்டும் எளிதாகத் தியானம் செய்யலாம். 

    முதலில் வீட்டில் சத்தம் இல்லாத ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு அகல் விளக்கோ அல்லது ஏதாவது ஒரு விளக்கோ வைத்து பின் அதில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியைத் தொடர்ந்து  பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்மால் எவ்வளவு நேரம் அந்த ஒளியைப் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.

    விளக்கில் இருந்து வரும் ஒளியானது நம்  கண்கள் வழியாக ஊடுருவிச் சென்று  ஆன்மாவைத் தொடும். இப்படிச் செய்வதால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். இதை நாம் தொடர்ந்து செய்து வரலாம். இப்படிச் செய்து வருவதால் நம்முடைய மனது நம் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் வரும். இந்த வகையான தியானத்தை எப்போதெல்லாம் நமக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம் .

    இதைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்தால் வந்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையைப் புரிந்து தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிடுவோம்.
    கடற்கரை, நதி அல்லது ஏரியின் கரைப்பகுதியில் சூழ்ந்திருக்கும் மணல் பரப்பில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
    மன அழுத்தத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் மன நலத்துடன் உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகும். மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகளை செய்வதன் மூலம் அது தொடர்பான அபாயங் களில் இருந்து விடுபடலாம். தினமும் சுமார் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். உடல்ரீதியாக சுறுசுறுப்புடன் இருப் பது மூளையின் செல்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உதவும். மன ஆரோக்கியமும் வலுப்படும்.

    கடற்கரை, நதி அல்லது ஏரியின் கரைப்பகுதியில் சூழ்ந்திருக்கும் மணல் பரப்பில் நடப்பது மன நலனுக்கு சாதகமாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் நிறுவனம் விறுவிறுப்பான நடைப் பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. கடல் போன்ற நீல நிற நீர்நிலைகளின் மணல் பரப்பில் தினமும் சுமார் அரை மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அலைகளின் ஒலி, நீலநிற நீர்பரப்பு, அமைதியான சூழல் போன்ற சுற்றுச்சூழல் அம்சங்கள் தாமாகவே மனநிலையை மேம் படுத்தி நிம்மதியாக உணர வைக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் வெறும் காலுடன் நடப்பது அதிக நன்மைகளை வழங்குவதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

    கடற்கரை நடைப்பயிற்சி மற்றும் நகர்ப்புற நடைப்பயிற்சி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டறியும் பொருட்டு ஆய்வுக்கு உட்பட்டவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை ஆய்வுக்குழுவினர் பரிசோதித்திருக்கிறார்கள். இதுகுறித்து ஆய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மார்க் நியுவென்ஹுய்சென் கூறுகையில், “நகர்ப்புற சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுடன் ஒப்பிடுகையில் நீல நிற நீர்நிலைகளின் மணல் பரப்பில் நடந்து செல்பவர்களின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டு அறிந்தோம். தொடர்ச்சியாகவும், நீண்டகாலமாகவும் இந்த இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நடைப்பயிற்சி விஷயத்தில் மற்ற இடங்களைவிட நீல நிற நீர் கொண்ட மணல் பரப்புகள் சிறந்தவை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்” என்கிறார்.

    உடல் இயக்கம் மற்றும் உளவியல் செயல்பாடுகள் சுற்றுச்சூழலின் தன்மையை பொறுத்து மாறுபடுகின்றன என்பதையும் ஆய்வுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
    ×