என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடையும்.
    • முதுகெலும்புப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

    செய்முறை

    'அர்த்த' என்றால் 'பாதி' என்று பொருள். அதாவது பாதி திருகிய நிலை ஆசனம் என்பதாகும். யோகி மச்சேந்திரர் இந்த ஆசனத்தை ஹடயோக மாணவர்களுக்கு முதன்முதலாகக் கற்றுக் கொடுத்தார். அதனால் அவனுடைய பெயர் இந்த ஆசனத்திற்கு வைக்கப்பட்டது.

    கால்களை முதலில் நேராக நீட்டி விரிப்பின் மீது விறைப்பாக நேரே நிமிர்ந்து உட்காரவும். வலது காலை மடக்கிக் கொள்ளவும். வலது கணுக்காலின் மேல் உட்கார்ந்து கொள்ளவும். இடது காலைத் தூக்கி, கீழே வைக்கப்பட்டிருக்கும் வலது காலுக்குக் குறுக்கே அப்புறம் (வலப்புறம்) கொண்டு சென்று வைக்கவும். இடது காலை இன்னமும் தரைப்பக்கம் அமர்த்தி பாதத்தைப் பிறப்பு உறுப்புக்குக் கீழே அமைத்துக் கொள்ளவும். இடது முழங்கால் செங்குத்தாய் நிற்பதுபோல் இருக்கவும்.

    வலது கையின் கை இடுக்கிற்குள் இடது முழங்காலானது போகும் வண்ணம் செய்யவும். பின்னர் வலது உள்ளங்களையினால் வலது கால் மணிக்கட்டைப் பிடித்துக் கொள்ளவும். இடது கையை முதுகுப்பக்கம் கொண்டு வரவும். இடது கையினால் இடது கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும். மூச்சை விட்டுக்கொண்டே இடது பக்கமாக இடுப்பை நன்றாகத் திருப்புங்கள். மார்பை நேராக நிறுத்தி வைக்கவும்.

    தலையை நன்றாகத் திருப்புங்கள். அப்போது உங்களின் கண்பார்வை இடது பக்கமாக அமையக் கூடாது. வலது பக்கம் உள்ள பொருட்கள் மீது நிலைபெற வேண்டும். இயல்பாக மூச்சை உள்ளே இழுத்தவாறு, 20 முதல் 30 நொடிகள் இதே நிலையில் இருக்கலாம். இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்தபின் சிறிது சிறிதாகப் பிடிகளைத் தளர்த்தி கை, கால்களை விடுவித்து யதார்த்த நிலைமைக்குத் திருப்பவும். மறுபக்கம் இதேபோல செய்ய வேண்டும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடையும். ரத்த ஓட்டம் சீராகும். மூளை நரம்புகளின் இறுக்கம் குறையும். கழுத்து, இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் விரிவடையும். செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி செரிமானத்தை தூண்டும். உடல்சோர்வு, முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் குறையும்.

    நரம்புத்தளர்ச்சி அடைந்தவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறது. முதுகெலும்பினை வளைத்து நெகிழுந்தன்மையானதாக்கி, வளமுடன் செயல்படச் செய்கிறது. வயிற்றுத் தசைகளை வளமாக்குகிறது. முதுகெலும்புப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பிடரியில் ஓடக்கூடிய நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.

    நோய்களை உருண்டு திரளச் செய்கிறது. இடுப்புவலி, முதுகு வலிகளைப் பறந்தோடச் செய்யும். வயிற்றுக் கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், பசி மந்தத்தையும் இது நீக்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும். இளமையுடன் இருக்கச் செய்யும் ஆசனம் இது.

    • சளி, இருமல் பிரச்சனைகளுக்கு யோகாசனங்கள் கை கொடுக்கும்.
    • மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம்.

    மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது. குளிர்ச்சியான கால நிலை காரணமாக உண்டாகும் இத்தகைய ஒவ்வாமைகளை தவிர்ப்பதற்கு உடல் நலத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு சில யோகாசனங்கள் கை கொடுக்கும். மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம்.

    1. சர்வாங்காசனம்: தரைவிரிப்பில் மல்லாந்த நிலையில் படுக்கவும். பின்பு மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி இரு உள்ளங்கைகளால் உடலை தூக்கி உயரே கொண்டு வரவும். அதாவது இரு உள்ளங்கைகளையும் இடுப்பில் வைத்தபடி கால்களை நேராக தூக்க வேண்டும். அப்போது முதுகு, இடுப்பு, கால்களை நேர் நிலையில் மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். எந்த அசைவும் இல்லாமல் சீராக சுவாசிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அதே நிலையில் வைத்திருந்த பிறகு கால்களை மடித்து முதுகு பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை ஆரம்ப நிலைக்கு திருப்ப வேண்டும்.

    2. உஜ்ஜயி பிராணாயாமம்: கால்களை மடக்கி, உடலை நேராக நிமிர்த்தி தியான நிலையில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும். பின்பு இரு நாசி துவாரங்கள் வழியாக நிதானமாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும்.சில விநாடிகள் அதே நிலையில் இருந்துவிட்டு மெதுவாக மூச்சை வெளியே விடவும். அப்படி மூச்சு வெளிப்படும்போது 'ஹா' என்ற சத்தத்தை வெளியிடவும். இந்த மூச்சுப் பயிற்சி நுரையீரலை வலுப்படுத்த உதவும். அதில் தேங்கி இருக்கும் சளியை வெளியேற்ற உதவும்.

    3. அர்த்த மத்ஸ்யேந்திராசனம்: தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் கால்களை நீட்டியபடி அமர வேண்டும். பின்பு இடது காலை வலது பக்கமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வலது காலை இடது காலுக்கு வெளிப்புறமாக கொண்டு வந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். அதே நிலையில் மூச்சை வெளியேற்றியபடி உடலின் மேல்பாகத்தை வலது பக்கமாக திருப்ப வேண்டும். அப்போது முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வலது கால் பாதத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையை பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நிலையில் இயல்பாக மூச்சை உள் இழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

    • மனித உடலில் ஜீரண மண்டலம் மிக முக்கியமானது.
    • நாம் உண்ணும் உணவின் சத்து ரத்தத்துடன் சேர வேண்டும்.

    இன்று நம் நாட்டில் வயிற்றில் கட்டிகள், குடல் புண், குடலில் புற்றுக்கட்டிகள் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிகமாக வருகின்றது. இதற்குரிய காரணங்களை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். பின்பு இதற்குரிய யோகப்பயிற்சிகளையும் காண்போம்.

    மனித உடலில் ஜீரண மண்டலம் மிக முக்கியமானது. நாம் உண்ணும் உணவு அதன் தரம், தன்மையை பொறுத்துதான் ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கி, சத்து, அசத்தை பிரிக்கும். அதற்கு நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல் சரியாக இயங்க வேண்டும். ஒரு மனிதனுடைய உடலில் காலை - மாலை இருவேளையும் கழிவுகள் (மலம்) சரியாக வெளியேற வேண்டும். நாம் உண்ணும் உணவின் சத்து ரத்தத்துடன் சேர வேண்டும். அசத்து தனியாக வெளியேற வேண்டும். அதற்கு நாம் எடுக்கும் உணவு சாத்வீகமாக இருக்க வேண்டும்.

    மைதாவினால் ஆன உணவுகள்,அசைவம் போன்ற உணவுகளை அடிக்கடி உட்கொண்டால் ஜீரண மண்டலம் பாதிக்கும். குடலில் புண்கள் ஏற்படும், குடலில் கழிவுகள் தங்கி அது கட்டிகளாக மாறும். பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும். பசியறிந்து சாப்பிடவேண்டும். பசிக்கும் பொழுது சாப்பிடாததும், பசியில்லாத பொழுது சாப்பிடுவதும் ஜீரண மண்டலத்தை பாதிக்கும்.

    முடிந்த அளவு பழவகைகள், காய்கறிகள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள், பசிக்கும் பொழுது பசியறிந்து சாப்பிடுங்கள். பொதுவாக நிறைய நபர்கள் எனக்கு அதிக காரமாக சமைத்தால்தான் பிடிக்கும் என்பார்கள். தொடர்ந்து அதிக காரமான உணவினை உண்பதால் நாளாக நாளாக சிறுகுடல், பெருங்குடல் இயக்கம் பாதிக்கும். புண்கள் வரும். பின்பு கழிவுகள் சரியாக வெளியேறாமல் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். கட்டிகளாக வயிற்றில் குடல் பகுதி வால்வு பகுதியில் உருவாகும். அதனால் பசி இருக்காது. அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சாப்பிட்டவுடன் வயிறு வலிக்கும். இதற்கெல்லாம் காரணம் அதிக காரம் சாப்பிடுவது. அதிக உப்பு, அதிக புளிப்பு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    சூரிய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    மாதங்கி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களை கோர்த்து நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக சேர்த்து வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக சேர்த்து வைக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    மாதுளம் பழம், கொய்யா பழம் ,உணவில் அடிக்கடி எடுக்கவும். வேப்ப இலை கொழுந்து 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு பிடி சாப்பிடவும். வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • ஏக அர்த்த ஹாலாசனத்தை தினம் காலை- மாலை 5 நிமிடம் மூன்று முறைகள் செய்யுங்கள்.
    • உங்கள் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் நன்றாக இயங்க வேண்டும்.

    மனதில் தேவையற்ற எண்ணங்கள் இருந்தால், மன அழுத்தம் இருந்தால் வெப்ப ஓட்டம் பாதிக்கப்படும். அதனால் மூச்சோட்டமும் பாதிக்கப்படும். இதனால் தோல் சுருக்கும் ஏற்படும். உடல் உள் உறுப்புக்கள் சரியாக இயங்காது.

    உங்கள் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் நன்றாக இயங்க வேண்டும். மேலும் தோல் முழுவதும் நன்கு மிருதுவாக பளபளப்பாக இருக்க வேண்டும். மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு தினமும் ஏக அர்த்த ஹாலாசனத்தை காலை - மாலை இரண்டு வேளையும் 5 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.

    உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம் சிறப்பாக இயங்கும். நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சரியாக உடலில் சுரக்கும். மன அமைதி கிடைக்கும். உடல் முழுவதும் ஆரோக்கியமாக இயங்கும். உடலும், மனமும் ஆரோக்கியமாய் உள்ளதால் உண்மையான இளமை, உண்மையான முக வசியம், கவர்ச்சி உற்சாகம் இருக்கும்.

    ஏக அர்த்த ஹாலாசனம்

    செய்முறை

    • விரிப்பில் நேராக படுக்கவும்.

    • இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும்.

    • கைகளை அமுக்கி வலது காலை மட்டும் மூச்சை இழுத்து கொண்டே நேராக உயர்த்தவும். (படத்தை பார்க்கவும்)

    • பத்து வினாடிகள் இருந்துவிட்டு மூச்சை வெளிவிட்டுக்கொண்டு காலை மெதுவாக தரையில் வைக்கவும்.

    • இதேபோல் காலை மாற்றி இடது காலை மட்டும் நேராக உயர்த்தி பத்து வினாடிகள் பயிற்சி செய்யவும்.

    • ஒவ்வொரு காலிலும் இரண்டு முறைகள் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்

    • வயிறு, மார்பு, கழுத்து, தொடைகள் சரியான தசை கட்டுப்பாட்டுடன் இருக்கும். அதனால் உடல் மிக அழகான தோற்றத்துடன் இருக்கும்.

    • சிறுநீரகம், கணையம் , சிறுகுடல், பெருங்குடல் சுத்தமாக இயங்கும். கழிவுகள் தங்காது

    • இதயம் பலப்படும். இடுப்புவலி நீங்கும். அடி முதுகு வலி நீங்கும். கால் பாதம் வீக்கம் நீங்கும். மூட்டுக்கள் பலம் பெரும். தோல் சுருக்கம் நீங்கும். அதிக உடல் எடை குறையும். உடல் அசதி நீங்கும்.

    இந்த ஆசனத்துடன் என்றும் இளமையுடன் வாழ உகந்த உணவுமுறைகள்:

    இஞ்சி, சுக்கு, கரிசாலை, வல்லாரை, தூதுவளை இவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். இவை உடலில் உள்ள அசுத்தத்தை நீக்கி விடும். உடலில் கழிவுகள் தங்காது. இந்த மூலிகைகள் உடலில் இரும்புச்சத்தை சரியான விகிதத்தில் நிலைத்திருக்க செய்யும். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேருங்கள், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும்.

    அருகம்புல் சாறு வாரம் ஒரு முறை உண்ணவும். அருகம்புல் சாறுடன் ஒரு இளநீர் தண்ணீரை மட்டும் சேர்த்து அதில் தேனும் ஒரு கரண்டி கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.அத்தி பழம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    இரவு சாப்பாடு 7.30-8 மணிக்குள் முடித்துவிடுங்கள். இரவு மட்டும் அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் வேண்டும். இவ்வாறு அமைத்துக் கொள்ளுங்கள்.

    என்றும் இளமையோடு வளமாக, நலமாக வாழ்வதற்கு எல்லா ஆசனமும் செய்ய முடியாவிட்டாலும் ஏக அர்த்த ஹாலாசனத்தை தினம் காலை- மாலை 5 நிமிடம் மூன்று முறைகள் செய்யுங்கள். மேற்குறிப்பிட்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். வளமாக, நலமாக, என்றும் இளமையுடன் வாழலாம்.

    • கை, கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் செய்வதை தவிர்க்கலாம்.
    • நுரையீரலை பலப்படுத்தி நுரையீரல் சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது.

    வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இது நாயின் முகம் கீழ் நோக்கியவாறு உள்ளது போன்ற அமைப்பினை கொண்டதால் இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது.

    வஜ்ஜிராசனம் என்பது உடலின் நடுப்பகுதியை உறுதிப்படுத்தக் கூடியது. இந்த ஆசனம் அதை முழுமைப்படுத்த கூடியது. மேலும், வஜ்ஜிராசனத்தில் இருக்கும் போது கால்களின் முன்பக்கம் இழுக்கப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனத்தில் காலின் பின்புறம் இழுக்கப்படுகிறது. குறிப்பாக, sciatic நரம்பு இழுக்கப்பட்டு உறுதியாவதுடன் பின்னங்கால் தசைகளும் உறுதியாகின்றன.

    செய்முறை : குப்புறப்படுத்துக் கால்களை நீட்டி, உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முன்னோக்கி வைக்கவும். மூச்சை வெளிவிட்டு உடலை மேலே உயர்த்தவும் தலையைப் பாதங்களைப் பார்க்குமாறு திருப்பி உச்சந்தலையைத் தரையில் பதிக்கவும். முழங்கால்களை மடக்காமல் உள்ளங்கால்களை முன்பாக வைத்து முழுப் பாதமும் தரையில் வைத்து உடலின் எடை கால்கள் மற்றும் தலையில் இருப்பது போல் செய்யவும். இந்நிலையில் ஆழமாகச் சுமார் ஒரு நிமிடம் சுவாசித்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யவும்.

    பலன்கள் : விளையாட்டு வீரர்களின் களைப்பைப் போக்கும். கணுக்கால்கள், தோள்பட்டை வலுப்பெறுகின்றன. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும். இதயம் சரிவரச் செயல்படுகிறது. நாள்பட்ட தலைவலியை போக்க உதவுகிறது.

    நுரையீரலை பலப்படுத்தி நுரையீரல் சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது.

    மாதவிடாய் நிற்கும் கட்டத்தில் (menopause) ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

    அதோ முக ஸ்வானாசனம் ஜீரணத்தைப் பலப்படுத்தவும், மன அழுத்ததைப் போக்கவும் செய்வதால் இதன் காரணமாக ஏற்படக் கூடிய தலைவலியைச் சரி செய்யவும் தவிர்க்கவும் உதவுகிறது.

    குறிப்பு : கர்ப்பிணி இதை செய்வதை தவிர்க்கவும். கை மற்றும் கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் செய்வதை தவிர்க்கலாம்.

    • தீவிர இடுப்புப் பிரச்சினை, முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
    • இடுப்புப் பகுதியை வலுவாக்கவும், விரிக்கவும் செய்யும் உத்கட் கோணாசனம்

    வடமொழியில் 'உத்கட' என்றால் 'பலம் நிறைந்த' மற்றும் 'தீவிரமான' என்றும் 'கோண' என்றால் 'கோணம்' என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Goddess Squat என்று அழைக்கப்படுகிறது.

    இடுப்புப் பகுதியை வலுவாக்கவும், விரிக்கவும் செய்யும் உத்கட் கோணாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இவ்வாசனத்தைப் பயில்வதால் ஆளுமை, ஆற்றல் ஆகியவைப் பெருகிறது; படைப்புத் திறன் கூடுகிறது.

    பலன்கள்

    உடல் முழுவதற்கும் ஆற்றல் அளிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலனை பாதுகாக்கிறது. தொடை முதல் பாதம் வரை உறுதியாக்குகிறது.

    மூட்டுகளைப் பலப்படுத்துகிறது. சையாடிக் வலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. குழந்தை பாக்கியம் ஏற்பட உதவுகிறது.

    சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது. உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதை ஒருமுகப்படுத்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். கால்களுக்கிடையில் சுமார் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்கவும். பாதங்களை வெளிப்புறமாகத் திருப்பவும்.

    மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பைச் சற்றுக் கீழிறக்கவும். கால் முட்டியும் கணுக்காலும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். கைகளைத் தலைக்கு மேலாக உயர்த்தவும். உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும்.

    30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும்.

    குறிப்பு

    தீவிர இடுப்புப் பிரச்சினை மற்றும் தீவிர முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

    கைகளை மேல் நோக்கித் தூக்குவதில் சிரமம் உள்ளவர்கள் மார்புக்கு முன்னால் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து வைக்கலாம்.

    • ரத்த அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
    • ஆசனப் பயிற்சிகள் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.

    நாம் வாழும் முறையில் தான், நமது உடல் ஆரோக்கியம் அமைந்துள்ளதாகக் கூறுகிறார் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் அனுராதா ரங்கராஜ். இவர் 'யோகா சக்கரவர்த்தனி' விருது பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளில்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். புதுச்சேரி அரசு நடத்தும் 'சர்வதேச யோகாசனப் போட்டிகளின் தேர்வுக் குழு'விலும் இடம் பெற்றிருக்கிறார்.

    ''மனித உடலில் இருக்கும் நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்துமே முறையான அளவில் சுரக்க வேண்டும். அப்போது தான் உடல் உறுப்புகள் பாதிப்படையாமல் ஒழுங்காகச் செயல்படும். இன்சுலின், தைராய்டு உள்ளிட்ட பல சுரப்பிகளில், ஏதேனும் ஒரு சுரப்பியின் சமநிலை தவறினாலும், மனித உடல் தனது செயல்பாடுகளில் தடுமாறும். அவ்வாறு தவறும் போது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

    தொடர்ந்து யோகாசனம் செய்து வருவதன் மூலம் இவற்றை குணப்படுத்தலாம். ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், இதயத்தின் செயல்பாடுகள் பாதிப்படையும். நாம் கசப்பு, துவர்ப்பு உள்ளிட்ட அறுசுவைகளையும் சமமாக உண்பதில்லை. மாறாக நாக்கின் சுவை விருப்பத்திற்கு ஏற்ப உணவை சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

    உடலில் ரத்த அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை முறையான யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். குறைந்த ரத்த அழுத்தத்தினைப் பச்சிமோத்தாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பாத கோனாசனம், சேது பந்தாசனம், அர்த்த ஹலாசனம் போன்ற ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த அழுத்தத்தை பாலாசனம், தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை சீராக்கும். வயிற்றுப் பகுதிதான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்பதால், அதற்குரிய பயிற்சிகளையும், செயல்பாட்டையும் முறையாக்க வேண்டும்.

    இரவில் நேரம் தவறி சாப்பிடக்கூடாது. இரவு உணவை 7 மணிக்கு முன்பே முடித்து விட வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் அவசியம். ஆசனப் பயிற்சிகள் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். பசி உணர்வை அதிகரிக்கச் செய்யலாம். தூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் யோகாசனத்தில் பயிற்சிகள் இருக்கின்றன.

    இவ்வாறு பல்வேறு உடல் உபாதைகள், சிக்கல்களுக்கும் யோகா மூலம் தீர்வு காண முடியும். இந்த அவசர உலகில் ஆண், பெண், மாணவர்கள் அனைவருமே நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். தகுந்த யோகாசனங்கள் மூலம் தங்கள் உடலினை அனைவரும் பேணிக்காப்பது சிறந்தது'' என்கிறார் அனுராதா ரங்கராஜ்

    • தீவிர முதுகுத்தண்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
    • வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

    பலன்கள்

    * நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது

    * முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது

    * நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது

    * கால்களை நீட்சியடையச் செய்வதோடு பலப்படுத்தவும் செய்கிறது

    * நுரையீரலைப் பலப்படுத்துகிறது

    * உடலின் சமநிலையை முன்னேற்றுகிறது

    * இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது

    * வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது

    * சீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது

    * மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது.

    * மூட்டுகளை நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு மூட்டுகளையும் பலப்படுத்துகிறது.

    * சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக நிற்கவும். பாதங்களை அருகருகே வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளியேற்றவும்.

    மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளை மேலே உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்க்கவும். அதே நேரத்தில் இடுப்பைக் கீழ் நோக்கி இறக்கவும்.

    கால் முட்டி விலகாமல் குதிகால்களுக்கு அருகே புட்டம் இருக்கும் அளவுக்குக் கீழிறங்கவும். பாதங்களை உயர்த்தக் கூடாது. 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், எழுந்து கைகளைப் பக்கவாட்டில் கொண்டு வரவும். தொடர் பயிற்சியில் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.

    குறைவான இரத்த அழுத்தம், தூக்கமின்மை, தீவிர முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் முன்னால் நாற்காலி போன்ற ஒன்றைப் பற்றி முடிந்த அளவுசெய்தால் போதுமானது.

    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன
    • முதுகுத்தண்டை சீராக வைத்திருக்க உதவுகின்றன

    * கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்துகின்றன

    * உடல் முழுவது ஆற்றலைப் பெருக்குகின்றன

    * நுரையீரலைப் பலப்படுத்துகின்றன

    * இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகின்றன

    * முதுகுத்தண்டை சீராக வைத்திருக்க உதவுகின்றன

    * நிற்கும் நிலையை சரி செய்கின்றன; நாம் நிற்கும் நிலையில் இருக்கும் தவறுகளை சரி செய்ய உதவுகின்றன

    * இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன

    * சீரண ஆற்றலை அதிகரிக்கின்றன

    * வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன

    மேலும் பெரும்பாலான நின்று செய்யும் ஆசனங்கள் மூலாதார சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதாக இருக்கும். சீரான மூலாதார இயக்கம் ஆற்றலை வளரும், வளர்ச்சியை ஊக்குவிக்கும், சோம்பலைப் போக்கும். மூலாதாரம் நிலையான தன்மையை உருவாக்கும்.

    • நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.
    • இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    ஒரு மனிதனுடைய உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டுமெனில் உடலுக்குறிய ஓய்வு வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கினால்தான் சிறுகுடல் நன்கு இயங்கும். இதற்கு இரவு தூக்கம் மிக முக்கியமாகும்.

    இன்று நிறைய நபர்கள் இரவு வேலை பார்ப்பதால் இரவு தூக்கமில்லை, இதனால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள் வருகின்றது. அது கேன்சர் ஆக கூட மாறிவிடுகின்றது. எனவே இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    இன்றைய பரபரப்பான உலகில் மனிதர்கள் மத்தியில் நிதானமாக செயல்படும் நிலை குறைந்து கொண்டே வருகின்றது. காலை முதல் இரவு படுக்கும் வரை ஒரு பதட்டமான மன நிலையில் வேகமாக ஓடுகின்றனர். நிதானம், பொறுமை இழந்து விடுகின்றனர். இதனால் இதயத்துடிப்பு சீராக இருப்பதில்லை. இதன் காரணமாகவும் ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது. குடல் இயக்கம் பாதிப்பு அடைகின்றது. எனவே நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ வேண்டும். அதற்கு யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.

    மேற்குறிப்பிட்ட பண்புகளை சரி செய்துவிட்டு மாதங்கி முத்திரையும், சூரிய முத்திரையும் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    சூரிய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    மாதங்கி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களை கோர்த்து நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக சேர்த்து வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக சேர்த்து வைக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    மாதுளம் பழம், கொய்யா பழம் ,உணவில் அடிக்கடி எடுக்கவும். வேப்ப இலை கொழுந்து 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு பிடி சாப்பிடவும். வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி.
    • யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.

    யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.

    ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உடல் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழவும், தன்னை உணரவும், தனக்குள் இறுக்கும் பேராற்றலை உணரவும் ஒரே வழி ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி என எளிமையாக விளக்கியுள்ளார்.

    1. இயமம்

    மனம் சம்பந்தப்பட்ட ஒழுக்க நியதிகள். முக்கியமான கட்டுப்பாடுகள் அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம், அஸ்தேயம், பேராசையின்மை போன்ற அடிப்படை மனித பண்புகளை வளர்க்க வேண்டும்.

    2. நியமம்

    இதுவும் மனம் சார்ந்த ஒழுக்க கோட்பாடுகள் – அகத்தூய்மை, புறத்தூய்மை, தவம், புனித நூல்கள் படித்தல், இறைவனிடம் சரணாகதி முதலியவற்றை விளக்குகிறது.

    3. ஆசனம்

    ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்

    4. பிராணாயாமம்

    பிராணயாமம் (சமசுகிருதம்: प्राणायाम prāṇāyāma ) என்பது ஒரு சமசுகிருத சொல், அதற்கு "பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்" என்று பொருள்

    5. பிரத்தியாகாரம்

    பிரத்தியாகாரம் என்பது அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆகும். மொத்தம் 11 புலன்கள் உள்ளன. அதாவது ஐந்து உணர்வுகள், ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம். பிரதி மற்றும் அகாரா, அதுவே பிரத்தியாகாரம் எனப்படுகிறது

    6. தாரணை

    மனதை ஒரு பொருளில் குவிய செய்தல். அதன் மூலம் எண்ணற்ற ஆற்றலை அடையலாம். தாரணை கை கூட வைராக்கியம், சாத்வீக உணவு, தனித்திருத்தல் முதலியவை தேவை.

    7. தியானம்

    ஒரே சிந்தனை. தாரனையின் முடிவு தியானமாகும். மன அமைதி. இதயம் பாதுகாக்கப்படும். எந்த நோயும் வராது. தியானம் கைகூடினால் எல்லாம் கைகூடும்.

    8. சமாதி

    ஆதியில் சமம். எண்ணமற்ற நிலை. மனம் கரைந்த நிலை. மௌன நிலை. பேரின்ப நிலை. இதுவே நம் உண்மை இயல்பு.

    அஷ்டாங்க யோக எட்டு படிகளை அனைவரும் கடை பிடிக்கலாம். ஆனந்த வாழ்வு வாழலாம்.

    • வாழ்க்கை ஒட்டாது இருக்கத் தெளிவாய் பலதும் புலப்படும்.
    • தனிமை தியானத்தை வலுப்படுத்தும்.

    தியானம் தெளிவின் துவக்கம்.

    தியானம் மனதை, அதாவது எண்ணத்தை இல்லாது செய்யும் முயற்சி. வேறொரு கோணத்தில் எண்ணம் எங்கே தோன்றுகிறதோ அங்கேயே நிற்கும் கலை. நிற்க, எண்ணங்கள் தோன்றுகிற போதே அதை புனிதப்படுத்தும் செயல் உன்னை அறியாது நடைபெறும்.

    ஆரம்பகட்ட தெளிவுகள் வந்து விடும். வம்புக்கு போகாத அமைதி ஏற்படும். கனவுகளில் மூழ்காத நிதானம் வரும். சொற்களில் பரபரப்பு இருக்காது. பதட்டம் ஏற்படாது.

    கும்பலிலிருந்து பிரியும் எண்ணம் வரும். தனிமை தியானத்தை வலுப்படுத்தும். தியானம் தனிமையினை அதிகப்படுத்தும். தியான பலத்தால் எண்ணம் தோன்றும் போதே ஏன் எது என்கிறது சடசடவென்று புரியும். செயல் சுத்தமாகும், தெளிவாகும்.

    கோபம் குறைய நியாயங்கள் தெளிவாய் தெரியும்.

    ஆத்திரம் குறைய நல்லது கெட்டது எது என்று அறிய முடியும்.

    எவரோடும் பிணக்கு வர முடியாது. கைகோர்த்து அலைந்தால்தான் நட்பா. கைகோர்த்து அலைந்தவன்தானே கன்னத்தில் இடிக்கிறான்.

    கையும் கோர்க்க வேண்டாம். கைகலப்பும் வர வேண்டாம். ஒரு அடி விலகியே நில். விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. பிரியமும் இல்லை. அலட்சியமும் இல்லை.

    வாழ்க்கை ஒட்டாது இருக்கத் தெளிவாய் பலதும் புலப்படும்.

    ×