என் மலர்
உடற்பயிற்சி
- அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது.
- தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி.
விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3-லிருந்து 5 முறை செய்யலாம்.
பலன்கள்
அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளை வலுவடையச் செய்கிறது. முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை வலுவாக்குகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இதயக் கோளாறு மற்றும் இடுப்பு வலியைப் போக்குகிறது.முதுகுவலியைப் போக்குகிறது.
கணையச் சுரப்பியின் வேலையைத் தூண்டுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.செரிமான உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. இரைப்பையில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுகிறது.தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி.
- உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம்.
- கழுத்துத் தசைகளை உறுதியாக்குகிறது.
சதுரங்க தண்டாசனம் மணிப்பூரக சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டது. இச்சக்கரம் சீராக இயங்கும்போது உடல் மற்றும் மனதில் மறைந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் வெளிக் கொண்டு வரப்பட்டு, வாழ்க்கையில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வல்லமை வளர்கிறது.
செய்முறை
விரிப்பில் குப்புற படுத்து கொள்ளவும். பின்னர் கும்பகாசன நிலையில் இருந்து உங்களை சதுரங்கள் தண்டாசனத்திற்கு கீழே இறக்கவும். இதை செய்வதற்கு உங்கள் பாதங்களை நகர்த்தி முன்னால் வரவும் மற்றும் உங்கள் மேல் கைகளால் கீழே வரவும். உங்கள் மேல் கைகளால் 90 டிகிரி (படத்தில் உள்ளபடி) கோணத்தை செய்யவும், நீங்கள் பிளாங்க் போஸில் செய்வது போல் உங்கள் விலா மற்றும் தசைகளையும் இழுத்து வைத்துக் கொள்ளவும்.
உங்கள் முதுகுதண்டை நேராக வைத்துக் கொள்ளவும். நீங்கள் உங்கள் தோள்களை கீழே இறக்காமல் நேராக முன்னோக்கி இருப்பதை உறுதி செய்யவும். நீங்கள் நிலையற்றதாக நினைத்தால், உங்கள் முழங்கால்களை இறக்கிக் கொள்ளலாம். இங்கிருந்து திரும்பவும் பிளங்க போஸ் அல்லது மேல்நோக்கி எதிர்கொள்ளும் நிலைக்கு வரவும். இதை 10 முறைகள் திரும்பச் செய்யுங்கள்.
பயன்கள்
கால்கள், கைகளுக்கு வலிமை தருகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம்.
முதுகுத்தண்டை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. முதுகு வலியைப் போக்க உதவுகிறது
தோள், கை, மணிக்கட்டு பலம் பெறுகிறது. கழுத்துத் தசைகளை உறுதியாக்குகிறது. வயிற்று தசைகளை உறுதியாக்குவதோடு வயிற்று உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்கிறது. சீரண மண்டல இயக்கத்தை மேம்படுத்துகிறது.
உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது
- யோகா பயில்வதால் மனம் அமைதி பெறுகிறது; மனச் சோர்வு அகலுகிறது.
- தொடர்ந்து ஆசனம் பழகுவதால் உடல் உள்ளுறுப்புகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது.
முதுமை அடைவது என்பது இயல்பான போக்கு என்றாலும் முதுமைக்கான அறிகுறிகளை ஒத்திப் போடுவதில் யோகப் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.
* ஒருவரின் முதுகெலும்பு எவ்வளவுக்கெவ்வளவு நலமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவரின் உடல் நலம் மேம்பட்டதாக இருக்கும். ஒருவரின் முதுகுத்தண்டு எந்த அளவு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கிறதோ அந்த அளவிற்கு வயதாவதால் ஏற்படும் உடல் இறுக்கம் தவிர்க்கப்படுகிறது. யோகா பயில்வதால் முதுகெலும்பின் நெகிழ்வுத் தன்மை பாதுகாக்கப்படுகிறது.
* தொடர்ந்து ஆசனம் பழகுவதால் உடல் உள்ளுறுப்புகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக வயது கூடும் போது மலச்சிக்கல் மற்றும் செரியாமை ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆசனங்கள் உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துவதால் இப்பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டு செரிமான மண்டலம் செம்மையாக இயங்குகிறது.
* வயதாகும் போது ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று உடல் சமநிலையில் (balance) மாற்றம் ஏற்படுவது. யோகாசனம் உடல் சம நிலையை மேம்படுத்துவதன் மூலம் முதுமையினால் சமநிலை இழத்தல் தவிர்க்கப்படுகிறது.
* யோகாசனம் பயில்வதால் மூட்டுகள் பலமாக இருப்பதோடு மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது.
* தொடர்ந்து யோகப்பயிற்சி செய்யும் போது நினைவாற்றல் பெருகுகிறது. வயது கூடும் போது நினைவாற்றல் குறைதல் என்பது பொதுவாகக் காணக் கூடியது. ஆனால், ஆசனங்கள் பயில்வதன் மூலம் அந்நிலையைத் தவிர்க்கலாம்.
* மனச்சோர்வு என்பது இக்காலத்தில் இளையவர்களிடமும் காணப்பட்டாலும், வயதில் முதியவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. யோகா பயில்வதால் மனம் அமைதி பெறுகிறது; மனச் சோர்வு அகலுகிறது.
அனைத்திற்கும் மேலாக எந்த அளவிற்கு நாம் யோகா போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோமோ அந்த அளவிற்கு நம் மனம் இளமையாக இருக்கும். இளமையான மனம் உடலை இளமையாக வைக்க உதவுகிறது.
- இந்த ஆசனம் ஆரம்ப கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.
- நரம்பு கோளாறுகளை குணமாக்குகிறது..
செய்முறை
விரிப்பில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி இடைவெளி விட்டு நிற்கவும். வலது கால் பாதத்தை வலது பக்கமாக திருப்பி வைக்கவும். பின்னர் வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது கால் பாதத்திற்கு முன்பாகவும், இடது கையை வலது காலின் பின்புறமும் வைத்து தலையால் கால் முட்டியை தொட வேண்டும். இவ்வாறு 30 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர் கால்களை மாற்றி இடது காலில் இவ்வாறு செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்
இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. மேலும் விந்தணு கோளாறுகள் மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகள் குணமாகின்றன. இடுப்பு பகுதியை வலுவூட்டுகிறது, இடுப்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது.
தொடை, கால்கள், கால் மூட்டுகளுக்கு வலிமை தருகிறது. முதுகெலும்பு வலுவடைகிறது. தூக்கமின்மை குணப்படுத்துகிறது. இந்த ஆசனம் ஆரம்ப கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. தொடைப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. தொடர்ந்து பழகி வர இளமையான தோற்றத்தைத் தருகிறது.
- ஊர்த்துவ தனுராசனம் உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது.
- முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகுவலியைப் போக்குகிறது.
ஊர்த்துவ தனுராசனத்தை சக்ராசனம் என்றும் அழைப்பர். ஆனால், சக்ராசனத்தில் முழுமையான சக்கர வடிவில் கால்களின் அருகே கைகள் இருக்கும். ஊர்த்துவ தனுராசனத்தில் கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். வடமொழியில் 'ஊர்த்துவ' என்றால் 'மேல் நோக்கும்' என்றும் 'தனுர்' என்றால் 'வில்' என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Upward Bow Pose என்று அழைக்கப்படுகிறது.
சக்ராசனத்தைப் போலவே ஊர்த்துவ தனுராசனமும் எட்டு சக்கரங்களையும் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. ஊர்த்துவ தனுராசனம் உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது.
பலன்கள்
உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; முதுகெலும்பை பலப்படுத்துகிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகுவலியைப் போக்குகிறது.
தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலன் காக்கிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது. வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது.
இனப் பெருக்க உறுப்புகளின் பணியை மேம்படுத்துகிறது. கால்களை நீட்சியடையச் செய்கிறது; கால் தசைகளை உறுதியாக்குகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது
செய்முறை
விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து பாதங்களை உங்கள் புட்டத்தின் அருகே வைக்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் இடைவெளி விடவும். கைகளை உயர்த்தி, தோள்களுக்கும் பின்னால் தரையில் வைக்கவும். விரல்கள் உங்கள் தோள்களை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.
உள்ளங்கைகளையும் பாதங்களையும் நன்றாகத் தரையில் ஊன்றி மூச்சை உள்ளிழுத்தவாறு மெதுவாக உடலை மேலே உயர்த்தவும். தலையை பின்னால் சாய்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். மெதுவாகத் தரையில் படுத்து கால்களையும் கைகளையும் நீட்டி ஆரம்ப நிலையில் படுக்கவும்.
குறிப்பு
தீவிர முதுகுத்தண்டு கோளாறு, இடுப்பு வலி, தோள் மற்றும் மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் ஊர்த்துவ தனுராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
- மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில் (menopause) ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது.
- முதுகுத்தண்டு, முதுகு, தோள், கைகளில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
அதோ முக ஸ்வானாசனத்தின் ஒரு வகையாக அர்த்த பிஞ்ச மயூராசனத்தைக் கூறலாம். அதோ முக ஸ்வானாசனத்தின் பெரும்பாலான பலன்கள் அர்த்த பிஞ்ச மயூராசனத்துக்கும் பொருந்தும்.
பலன்கள்
நுரையீரலைப் பலப்படுத்துகிறது. கால்களை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. தோள்களையும் முதுகுத்தண்டையும் நீட்சியடையச் செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. சீரணத்தைச் செம்மையாக்குகிறது
கைகளைப் பலப்படுத்துகிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது. முதுகு வலியைப் போக்குகிறது. சையாடிக் பிரச்சினையை சரி செய்கிறது. மூட்டுப் பிரச்சினைகளைப் போக்குகிறது.
சிறு வயது முதலே பயின்று வந்தால் தட்டைப் பாதம் சரியாக உதவுகிறது. மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில் (menopause) ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது. நினைவாற்றலை வளர்க்கிறது.
செய்முறை
தவழும் நிலைக்கு வரவும். அதாவது, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், உங்கள் கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்கும் வகையில் உங்கள் உள்ளங்கைகளையும் கால்களையும் தரையில் வைக்கவும்.
முன்கைகளை மடக்கித் தரையில் வைக்கவும். மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களைத் தரையில் வைத்து இடுப்பை நன்றாக மேலே உயர்த்தவும். உங்கள் கால் முட்டி மடங்காமல் நன்றாக நீட்டப்பட்டு இருக்க வேண்டும்.
தலை உங்கள் மேற்கைகளுக்கு இடையில் இருக்க வேண்டும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். இடுப்பை இறக்கி முட்டியைத் தரையில் வைத்து முன்கைகளை நேராக்கவும்.
குறிப்பு
கால்களை முழுவதுமாக நீட்ட முடியவில்லை என்றால் முட்டியை மடக்கி ஆசனத்தைப் பயிலவும். பழகப் பழக, ஆசனத்தை முழுமையான வடிவில் பயில முடியும்.
முதுகுத்தண்டு, முதுகு, தோள், கைகள் ஆகியவற்றில் தீவிரப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் மற்றும் தீவிரக் கண் கோளாறு உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
- தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சனை உள்ளவர்கள் செய்யவேண்டாம்.
- மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளைப் போக்க உதவுகிறது.
சேதுபந்தாசனம் என்கிற ஆசனத்தின் ஒரு மாற்று முறைதான் சதுஷ் பாதாசனம். சதுஷ் பாதாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, நிலையான தன்மை, படைப்புத் திறன் வளர்கின்றன. அன்பும் கனிவும் வளர்கின்றன. பிரபஞ்ச சக்தியைக் கவரும் திறன் உருவாகிறது. தொடர்பாடல் திறன் மேம்படுகிறது. தன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது.
பலன்கள்
முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து, மார்பு பகுதிகளை விரிக்கிறது. கைகளை நீட்சியடையச் செய்வதுடன் வலுப்படுத்தவும் செய்கிறது. தோள்களை நீட்சியடையச் செய்கிறது, அவற்றின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய இயக்கத்தைச் சீராக வைக்க உதவுகிறது. அதிக இரத்த அழுத்தத்தைச் சரி செய்ய உதவுகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
வயிற்று உள்ளுறுப்புகளின் நலனைப் பாதுகாக்கிறது. ஜீரண இயக்கத்தை மேம்படுத்துகிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது
மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளைப் போக்க உதவுகிறது. கால் வலியைப் போக்குகிறது; கால்களைப் பலப்படுத்துகிறது.
தூக்கமின்மையை சரி செய்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.
செய்முறை
விரிப்பில் படுக்கவும். கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும். கணுக்கால், முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் நீட்டியிருக்க வேண்டும். கைகளால் கணுக்கால்களைப் பற்றிக் கொள்ளவும்.
மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரையோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். தோள்களை விரிக்கவும்.
ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும். ஆசன நிலையிலிருந்து வெளியேற, இடுப்பைத் தரையில் வைத்து, கணுக்கால்களை விடுவித்து கால்களை நீட்டவும்.
குறிப்பு
தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் சதுஷ் பாதாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
- முட்டி, கணுக்காலில் பிரச்சனை உள்ளவர்கள் பதுமாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- முதுகெலும்பையும் முதுகுத் தசைகளையும் பலப்படுத்துகிறது.
பதுமாசனத்தின் பலன்கள்
மூளையின் கடை மடைப் பகுதி வரை இரத்த ஓட்டம் பாய்கிறது. தியானம் செய்யச் சிறந்த ஆசனமாகக் கருதப்படுகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. முதுகெலும்பையும் முதுகுத் தசைகளையும் பலப்படுத்துகிறது.
சுவாசத்தைச் சீராக்குகிறது. இடுப்புப் பகுதியை உறுதியாக்குகிறது. கர்ப்ப காலத்தில் பதுமாசனத்தை பயிற்சி செய்து வர குழந்தைப்பேறு நல்ல முறையில் நடக்க உதவுகிறது. குதிகால் வலியைப் போக்குகிறது. கால் மரத்துப் போதலைத் தவிர்க்கிறது
செய்முறை
கால்களை நீட்டி விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். வலது காலை மடித்து இடது கால் தொடையின் மீது குதிகால் வயிற்று பகுதியில் படுமாறு வைக்கவும்.
இடது காலை மடித்து, இடது பாதத்தை வலது கால் தொடையின் மீது குதிகால் வயிற்று பகுதியில் படுமாறு வைக்கவும்.
முதுகை நேராக வைத்து, கைகளை சின் முத்திரையில் வைக்கவும். சின் முத்திரையில், கட்டை விரல் நுனியும் சுட்டும் விரல் நுனியும் ஒன்றுடன் ஒன்று படுமாறும் மற்ற மூன்று விரல்களை நீட்டியும் வைக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு நிமிடம் இந்த ஆசனத்தில் இருக்கவும். தொடர் பயிற்சிக்கு பின் படிப்படியாக ஒரு மணி நேரம் வரை செய்யலாம்.
பதுமாசனத்தை முழுமையாக செய்ய முடியாதவர்கள், வலது காலை மட்டும் இடது காலின் தொடையின் மீது வைத்து இடது காலை தரையில் வலது காலின் கீழ் வைக்கலாம். இது அர்த்த பதுமாசன நிலை.
காலை தூக்கி வைப்பதிலேயே சிரமம் உள்ளவர்கள், இரண்டு கால்களையும் சாதாரணமாக மடித்து தரையில் உட்காரலாம். இது சுகாசனம் என்கிற நிலை.
குறிப்பு
முட்டி மற்றும் கணுக்காலில் பிரச்சினை உள்ளவர்கள் பதுமாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை முன்னேற்றுகிறது.
இந்த ஆசனம் பூனை நிலைக்கு மாற்று ஆசனமாகும். 'பிடிலா' என்றால் 'பசு' என்று அர்த்தம். இந்த நிலையில் இருப்பது ஒரு மாட்டின் உடலமைப்பை ஒத்து இருக்கும். பூனை / மாடு நிலை (cat / cow pose) என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இரண்டும் சேர்ந்துதான் சிறப்பான பலன்களைத் தரும். முதுகுத்தண்டு உள்புறமாகவும் மேல்புறமாகவும் அழுத்தி உயர்த்தப்படுவதால் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகமாகிறது. முதுகுப் பகுதி முழுவதும் புத்துணர்வு பெறுகிறது.
முக்கிய குறிப்பு: பஸ்சிமோத்தானாசனம் செய்த பின் முதலில் மாடு நிலை (Cow Pose) செய்து பின் பூனை நிலை (Cat Pose) செய்வது ஒன்றுக்கு ஒன்று மாற்றாக சரியாக இருக்கும். இனி இந்த வரிசையில் செய்வது நல்லது.
பலன்கள்
சீரான இரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை முன்னேற்றுகிறது.
மாதவிடாயின் போது ஏற்படும் வலியை போக்க உதவுகிறது.
உடல்-மனம் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.
மன அழுத்தத்தை போக்குகிறது.
செய்முறை
விரிப்பில் தவழும் நிலைக்கு செல்லவும். உங்கள் மணிக்கட்டு உங்கள் தோளின் நேர் கீழாகவும், கால் முட்டி, இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும். தலை கழுத்துக்கு நேராக இருக்க வேண்டும்; அதாவது, நீங்கள் தரையை பார்க்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்தவாறு, உங்கள் மார்பை முன் நோக்கியும் ஆசனப் பகுதியை மேல் நோக்கியும் உயர்த்தி, வயிற்றை கீழ் நோக்கி மென்மையாக தள்ளவும். அதாவது, உங்களின் முதுகு கீழ் நோக்கி நன்றாக வளைந்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது தலையை நிமிர்த்தி பார்க்கவும். மூச்சை வெளியேற்றியவாறே முதுகை சம நிலையில் வைக்கவும். இவ்வாறு 10 முதல் 20 முறை செய்யவும்.
குறிப்பு
மணிக்கட்டு மற்றும் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் மற்றும் தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தை நேராக வைத்து பயிலவும்.
- திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும்.
- கழுத்து வலியைப் போக்குகிறது. முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது
வடமொழியில் 'பரிவ்ருத்த' என்ற சொல்லுக்கு 'சுற்றி' என்றும், 'த்ரி' என்றால் 'மூன்று' என்றும் 'கோண' என்றால் 'கோணம்' என்றும் பொருள். திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் கையைச் சுற்றி வந்து மறுபக்க காலைப் பிடிப்பதால் இந்தப் பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இது Revolved Triangle Pose என்று அழைக்கப்படுகிறது.
திரிகோணாசனத்தில் கூறப்பட்டுள்ளது போல், பரிவ்ருத்த திரிகோணாசனம் செய்வாதாலும் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப் பெறுகின்றன. இதன் காரணமாக நிலையான தன்மையும், பக்குவமான மனமும், பிரபஞ்சப் பேராற்றலை ஈர்க்கும் தன்மையும் உருவாகும்.
பலன்கள்
நுரையீரலைப் பலப்படுத்துகிறது. முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டையும் பலப்படுத்துகிறது. முதுகுவலியைப் போக்குகிறது
நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. கழுத்து வலியைப் போக்குகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
இடுப்பில் உள்ள அதிக சதையைக் குறைக்க உதவுகிறது. கால்களை நீட்சியடையச் செய்வதுடன் கால்களுக்கு பலத்தையும் அளிக்கிறது. மாதவிடாய் வலிகளைப் போக்க உதவுகிறது. சையாடிக் பிரச்சினையைப் போக்க உதவுகிறது. மனக்கவலையைப் போக்குகிறது.
செய்முறை
விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் மூன்று முதல் நான்கு அடி இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்.
இடது கால் பாதத்தைச் சற்று வலதுபுறமாகத் திருப்பவும். வலது பாதத்தை 90 degree கோணத்தில் வெளிப்புறம் திருப்பவும். மூச்சை வெளியேற்றியவாறு மேல் உடலை வலதுபுறம் நோக்கித் திருப்பவும். இடது உள்ளங்கையை வலது பாதத்தின் வெளிப்புறமாகத் தரையில் வைக்கவும். வலது கையை மேல் நோக்கி உயர்த்தவும். வலது கை தோளுக்கு நேர் மேலாக இருக்க வேண்டும்.
தலையைத் திருப்பி மேல் நோக்கி உயர்த்திய கையைப் பார்க்கவும். அல்லது, நேராகப் பார்க்கவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால் மாற்றி இந்த ஆசனத்தைப் பயிலவும்.
குறிப்பு
தீவிர முதுகுத்தண்டு கோளாறுகள், இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் பரிவ்ருத்த திரிகோணாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் தலையை மேல் நோக்கித் திருப்பாமல் நேராக பார்த்தவண்ணம் இந்த ஆசனத்தைப் பழகலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கீழ் நோக்கி செய்யலாம்.
- கால்களை நீட்சியடையச் செய்வதோடு கால் தசைகளையும் உறுதியாக்குகிறது.
- தீவிர முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
'பரிக' என்ற வடமொழி சொல்லின் பொருள் 'உத்திரம்' அல்லது 'கதவை மூடப் பயன்படும் கட்டை' என்பதாகும். இது ஆங்கிலத்தில் Gate Pose என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாசனத்தில் உடல் முழுதும் நீட்சியடைவதோடு மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. பரிகாசனத்தைத் தொடர்ந்து பழகும் போது நிலையான தன்மை வளர்கிறது.
பலன்கள்
முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. கால்களை நீட்சியடையச் செய்வதோடு கால் தசைகளையும் உறுதியாக்குகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
உடலின் பக்கவாட்டுப் பகுதிகளை நீட்சியடையச் செய்கிறது. நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
செய்முறை
விரிப்பில் முட்டி போடவும். இரண்டு முட்டிகளுக்கு இடையே இடுப்பளவு இடைவெளி விடவும். மூச்சை உள்ளிழுத்தவாறே இடது காலை பக்கவாடில் நீட்டி இடது குதிகாலைத் தரையில் வைக்கவும். இடது குதிகால் வலது முட்டிக்கு நேர்க் கோட்டிலும் இருக்கலாம்; அல்லது சற்று பின் தள்ளியும் இருக்கலாம்.
வலது கையை மேல் நோக்கி உயர்த்தவும். மூச்சை வெளியேற்றியவாறு இடது புறம் சாயவும். இடது கையால் இடது காலைப் பிடிக்கவும். இடது புறம் சாயும் போது வலது கையையும் இடது புறமாக கொண்டு செல்லவும். வலது கை விரல்கள் இடது புறம் நோக்கி இருக்க வேண்டும். நேராகப் பார்க்கவும். 20 முதல் 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்தபின் ஆரம்ப நிலைக்கு வந்து மறுபக்கம் செய்யவும்.
குறிப்பு
கால் முட்டி வலித்தால் ஏதேனும் விரிப்பை மடித்து முட்டிக்கடியில் வைத்து ஆசனத்தைப் பயிலவும். உடலை சமநிலையில் வைப்பது கடினமாக இருந்தால் நீட்டும் காலை சுவற்றை ஒட்டி வைத்துப் பழகவும். தீவிர முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
- இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைகள் பலப்படும்.
- இந்த ஆசனம் கருட பட்சி போன்று தோற்றமளிக்கும்.
இந்த ஆசனம் செய்தும் போது ஒரு தொடை மற்றொரு தொடையை பின்னப்படுவதால் தொடைகளும், தோள்களும் கைகளும் ஆரோக்கியமடைகின்றன. இந்த ஆசனம் கருட பட்சி போன்று தோற்றமளிக்கும். ஒரு தொடை மற்றொரு தொடையை பின்னப்படுவதால் தொடைகளும், தோள்களும் கைகளும் ஆரோக்கியமடைகின்றன. அவற்றில் சுத்த ரத்தம் பாய்கிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைகள் பலப்படும். ஹார்னியா தடுக்கப்படும். இடுப்பு வலி, வாதம் நீங்கும். தொடைகள் பலப்படும். கொழுப்பு சத்து நீங்கும். கிரண்டைக்கால் தசைப்பிடிப்பு நீங்கும்.
செய்முறை :
விரிப்பில் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து நேராகா நிற்க வேண்டும். இரண்டு கைகளையும் நேராக நீட்டி இடது காலை நேராக வைத்து அதை வலது காலை ஒட்டினாற்போல் பாம்பு போல சுற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின் இரண்டு கைகளையும் ஓட்டினார் போல பாம்பு போல சுற்றிக்கொண்டு இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்தார் போல வைக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் முகத்திற்கு நேராக இருக்க வேண்டும்.
ஒன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை நின்று கொண்டிருக்க வேண்டும். கைகளையும் கால்களையும் இறுக்கமாக சுற்றி பின்னிக்கொண்டு இருக்க வேண்டும். நரம்புகளும் தசைகளும் இறுக்கினாற்போல இருக்க வேண்டும். அதன் பின் கை,கால்களை தளர்த்திவிட்டு ஒரு நிமிடம் வரை ஓய்வு எடுக்க வேண்டும். அதன்பின் வலது காலை நேராக வைத்துக்கொண்டு அதில் இடது காலை பாம்புபோல சுற்ற வேண்டும்.
இரண்டு கைகளையும் முன்பு போல சுற்றி உள்ளங்கைகளை சேர்த்து எதிரில் வைக்க வேண்டும். இதற்கு முன்பிருந்த நிலையில் எவ்வளவு நேரம் நின்றோமோ அதே நேரத்தின் அளவில் வலது காலில் நின்றிருக்க வேண்டும். பின்பு எல்லாவற்றையும் தளர்த்தி ஒரு நிமிடம் ஓய்வு எடுக்கவேண்டும். இது போல மாறி மாறி ஐந்து முறை இந்த ஆசனத்தை செய்யலாம்.
ஆரம்பத்தில் ஒரு காலில் ஒரு நிமிடம் வரை நிற்பது கடினமாக இருந்தால் முப்பது நொடி வரை நிற்கலாம். இந்த ஆசனம் செய்து கால்களுக்கு பலம் வந்து விட்டால் படிப்படியாக இயல்பாக ஒரே காலில் நெடுநேரம் நிற்க முடியும். சிலர் ஆசனத்தில் நின்ற நிலையில் இரண்டு கை மணிக்கட்டுகளையும் சேர்த்து மூக்கு நுனியில் வைத்து கருடன் மூக்கு போல சேர்த்த உள்ளங்கைகளை கருடன் மூக்கு போல வைப்பார்கள்.
இதனால் மனம் ஒருநிலைபடும். பார்வையை கைகள் மீது வைத்தால் கண்களுக்கு பயிற்சியாகிறது. ஐந்து நிமிடம் இந்த ஆசனத்தை போட்டு பழகியபின் சுற்றிய கால் பெருவிரலை பூமியில் வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதனால் நின்ற கால் வளையும். இவ்வாறு செய்யும் போது விழுந்து விடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.






