search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    கால்கள், கைகளுக்கு வலிமை தரும் ஸ்டாப் போஸ் என்கிற சதுரங்க தண்டாசனம்
    X

    கால்கள், கைகளுக்கு வலிமை தரும் ஸ்டாப் போஸ் என்கிற சதுரங்க தண்டாசனம்

    • உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம்.
    • கழுத்துத் தசைகளை உறுதியாக்குகிறது.

    சதுரங்க தண்டாசனம் மணிப்பூரக சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டது. இச்சக்கரம் சீராக இயங்கும்போது உடல் மற்றும் மனதில் மறைந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் வெளிக் கொண்டு வரப்பட்டு, வாழ்க்கையில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வல்லமை வளர்கிறது.

    செய்முறை

    விரிப்பில் குப்புற படுத்து கொள்ளவும். பின்னர் கும்பகாசன நிலையில் இருந்து உங்களை சதுரங்கள் தண்டாசனத்திற்கு கீழே இறக்கவும். இதை செய்வதற்கு உங்கள் பாதங்களை நகர்த்தி முன்னால் வரவும் மற்றும் உங்கள் மேல் கைகளால் கீழே வரவும். உங்கள் மேல் கைகளால் 90 டிகிரி (படத்தில் உள்ளபடி) கோணத்தை செய்யவும், நீங்கள் பிளாங்க் போஸில் செய்வது போல் உங்கள் விலா மற்றும் தசைகளையும் இழுத்து வைத்துக் கொள்ளவும்.

    உங்கள் முதுகுதண்டை நேராக வைத்துக் கொள்ளவும். நீங்கள் உங்கள் தோள்களை கீழே இறக்காமல் நேராக முன்னோக்கி இருப்பதை உறுதி செய்யவும். நீங்கள் நிலையற்றதாக நினைத்தால், உங்கள் முழங்கால்களை இறக்கிக் கொள்ளலாம். இங்கிருந்து திரும்பவும் பிளங்க போஸ் அல்லது மேல்நோக்கி எதிர்கொள்ளும் நிலைக்கு வரவும். இதை 10 முறைகள் திரும்பச் செய்யுங்கள்.

    பயன்கள்

    கால்கள், கைகளுக்கு வலிமை தருகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம்.

    முதுகுத்தண்டை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. முதுகு வலியைப் போக்க உதவுகிறது

    தோள், கை, மணிக்கட்டு பலம் பெறுகிறது. கழுத்துத் தசைகளை உறுதியாக்குகிறது. வயிற்று தசைகளை உறுதியாக்குவதோடு வயிற்று உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்கிறது. சீரண மண்டல இயக்கத்தை மேம்படுத்துகிறது.

    உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது

    Next Story
    ×