search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    மனிதனுடைய திறமையை வெளிப்படுத்தும் குபேர முத்திரை
    X

    மனிதனுடைய திறமையை வெளிப்படுத்தும் குபேர முத்திரை

    • தொடர்ந்து 48 நாட்கள் இடைவிடாமல் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.
    • இது ஒரு சங்கல்ப முத்திரையாகும். நாம் நினைத்ததை நிச்சயம் அடையலாம்.

    இன்று நிறைய நபர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுடைய திறமை வெளிப்படவும், அதனை பயன்படுத்தி முன்னேற வாய்ப்பு கிடைக்க குபேர முத்திரையை பயில வேண்டும். இதன் மூலம் நமது திறமை வெளிப்படும். திறமைக்கேற்ற வேலையிலும் நாம் அமரலாம். தன்னம்பிக்கை கிடைக்கும். இம் முத்திரையை காலை, மதியம், மாலை மூன்று வேளையும் ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும். சாப்பிடுமுன் செய்யவும்.

    குபேர முத்திரை செய்முறை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமரவும். மோதிரவிரல், சுண்டு விரலை மடித்து உள்ளங்கையில் வைக்கவும். ஆள்காட்டி விரல், நடு விரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை தொடவும். இரு கைகளிலும் செய்யவும். கைகளை முட்டியின் மேல் வைக்கவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் ஐந்து முறை. பின் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.

    ஆள் மனதில், எனது திறமை நிச்சயம் வெளிப்படும். என் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். அதில் நான் சிறப்பாக பணி செய்வேன், நல்ல பொருளாதார மேன்மை கிட்டும். அதனை நல்வழிக்கு பயன்படுத்துவேன் என்று மூன்று முறை கூறி விட்டு சாதாரண மூச்சில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    தொடர்ந்து 48 நாட்கள் இடைவிடாமல் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும். அளவிடற்கரிய பலன்கள் கிட்டும். பண்புகள் மாறும், திறமை வெளிப்படும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இது ஒரு சங்கல்ப முத்திரையாகும். நாம் நினைத்ததை நிச்சயம் அடையலாம்.

    தினமும் காலை எழுந்தவுடன் நிமிர்ந்து அமர்ந்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடுங்கள். பத்து முறைகள், இதே போல் மதியம், மாலை பயிற்சி செய்யுங்கள் நல்ல பிராண சக்தி உடல் முழுவதும் பாயும். தெளிந்த சிந்தனை பிறக்கும். அறிவில் மலர்ச்சி உண்டாகும். அத்துடன் காலை எழுந்து குளித்துவிட்டு கிழக்கு முகமாக ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து சிறிய நாடிசுத்தி என்ற பயிற்சியை செய்யவும்.

    இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.

    வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடவும். இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.

    பின் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை இழுத்து இடதை அடைத்து வலது நாசியில் மூச்சை விடவும். இடதில் இழுத்து வலதில் மூச்சை விடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் இடது நாசியை அடைத்து வலதில் இழுத்து இடது நாசியில் வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும். இதனை காலை / மாலை இரு வேளை செய்யவும்.

    இந்த பயிற்சியின் மூலமாக மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாயும். சுறுசுறுப்பாகவும். உற்சாகமாகும் இருக்கலாம். சிந்தனை தெளிவு பிறக்கும். அறிவில் மலர்ச்சி உண்டாகும். நமது திறமை நன்கு வெளிப்படும்.

    திறமை வெளிப்பட அன்றாட வாழ்க்கைமுறை

    அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிட வேண்டும். காலை கடன்களை முடித்துவிட்டு எளிய குபேர முத்திரை, மூச்சு பயிற்சி செய்துவிட்டு கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் இருக்கவும். இது ஒரு தியானமாகும். நமது மூச்சில் கவனம் செலுத்தும் பொழுது மனம் ஒருமுகப்படும். மன அமைதி கிடைக்கும். நமக்குள் உள்ள திறமை வெளிப்படும்.

    காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் காலை உணவு அருந்தவும். மதியம் 1 மணி முதல் 1.30 மணிக்குள் மதியம் உணவு அருந்தவும்.

    இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவு அரைவயிறு சாப்பிடவும். இரவு 10 மணிக்கு படுத்துவிட வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஆழ்ந்த உறக்கம் வேண்டும்.

    எண்ணெய் பண்டம், மைதாவினால் ஆன உணவு, அதிக காரம், அதிக புளிப்பு, தவிர்த்து காய்கறிகள், கீரைகள், பழங்கள், உணவில் அதிகம் சேர்க்கவும். இப்படி வாழ்வை அமைத்தால்தான் உடல் ஆரோக்கியம் கிட்டும். உடல் உள் உறுப்புக்கள் நன்கு இயங்கினால்தான் திறமை வெளிப்படும். அதனை பயன்படுத்தி வளமாக வாழலாம்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×