என் மலர்
உடற்பயிற்சி
உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் இந்த ஆசனம். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
செய்முறை : விரிப்பில் கால்களை முன்னே நீட்டிக் கொண்டு, நேராக நிமிர்ந்து உட்காரவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கால்களை மடக்கி அதன் மேல் உட்காரவும். வலது காலை இடது காலை கீழ் வைக்கவும், கைகளை தளர்த்திக் கொள்ளவும். இடது கையை வலது முழங்காலில் வைக்கவும். வலது கையை உங்கள் உடலின் பக்கத்தில் முதுகெலும்பின் அருகாமையில் வைக்கவும்.
மூச்சை உள்ளே இழுக்கவும். முதுகெலும்பை மேலே நீட்டி கொள்ளவும். மூச்சை வெளி விடவும். இடுப்புக்கு மேல் உள்ள உடலின் பாகத்தை வலது பக்கம் திருப்பவும். நன்றாக இடது தோள் வலது தோளின் நேர் கோட்டில் இருக்குமாறு திருப்பவும்.
இடது கைகளை நேராக வைத்துக் கொண்டு வலது கையால் இடது முழங்கையை பிடித்துக் கொள்ளவும். தலையை திருப்பி வலது தோள் மேல் பார்வை செல்லும் படி வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் நார்மாலாக சுவாசிக்கவும். மூச்சை உள் இழுக்கும் போது உஙகள் உடலை, மார்பை விரித்து மேலே தூக்கவும். மூச்சை வெளியே விடும் போது உடலை (இடுப்புக்கு மேல்) திருப்பவும்.
மூச்சை உள் இழுக்கவும். உடலை நார்மல் நிலைக்கு திருப்பவும். கைகளை தளர்த்தி கொள்ளவும். மூச்சை வெளியே விட்டு கால்களை உடலுக்கு முன் நீட்டிக் கொள்ளவும். இந்த ஆசனத்தை மறுப்பக்கம் திருப்பிச் செய்யவும்.
பயன்கள் :
முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலுமையூட்டுகிறது.
முதுகு வலியை கட்டுப்படுத்துகிறது.
முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது.
மனமும் உடலும் இணைவதுதான் யோகா. எந்த நேரத்தில் யோகா செய்தால் முழுப்பலனையும் அடைய முடியும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
யோகாவில் எடைக்குறைவது மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும்.
யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில் பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இதில் ரத்த ஓட்டம் சீராகும், மனம் தெளிவடையும், புத்தியில் விழிப்புணர்வு உண்டாகும். மனமும் உடலும் இணைவதுதான் யோகா.
மற்ற பயிற்சிகளில் உடல் மிக விரைவாக இளைக்கும். ஆனால், பயிற்சியை நிறுத்தினால் முன்பைவிட அதிக எடை வர வாய்ப்பு உண்டு. யோகாவில் எடைக் குறைவது மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும். இடையில் யோகாவை நிறுத்தினாலும் எடை ஏறாது.
இயற்கை நமக்கு 24 மணி நேரம் கொடுக்கிறது. நேரப் பகிர்வு அவசியம். காலையில் எழுந்ததும் யோகா செய்வது மிக நல்லது. இதனால் உடல், மனம், புத்துணர்வு அடைவதோடு, சுத்தமான காற்றும் கிடைக்கும்.
யோகாசனம் செய்வதற்கு சில குறிப்பிட்ட நேரம் உள்ளது. அந்த நேரத்தில் யோகா பயிற்சியை மேற்கொண்டால் முழுப்பலனையும் அடையலாம். மேலும் முதன் முறையாக யோகா செய்ய ஆரம்பிப்பவர்கள் யோகா பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்ற பின்னரே தனியாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
தினமும் 30 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்தால் உங்களது மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
20 நிமிட யோகா, 16 மணி நேரம் புத்துணர்ச்சியுடன் வைக்கும். 11 மணிக்கு வேலைகளை முடித்துவிட்டு யோகா செய்யலாம். ஆனால், 8.30-க்கு காலை உணவை முடித்திருக்க வேண்டும். மாலையும் யோகா செய்வது நல்லது தான். ஆனால் மதிய வேளையில் யோகா பயிற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் அந்த நேரத்தில் செய்யும் யோகா முழு பலனையும் தராது.
காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, அதனால் தினசரி வாழ்க்கை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் (Serotonin), நோர்பினேப்ரைன் ( norepinephrine) எண்டார்ஃபின் (Endorphin), டோபமைன் (Dopamine) ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுன்கிறன.
முதன்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான ஜிம் பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை. 10 நிமிட வார்ம் அப் பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10- 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. உடற்பயிற்சி, வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமையடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது.
காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.
நீண்ட நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையைக் குறைக்க, உடலில் படிந்துள்ள கொழுப்பை எரிக்க, தேவையற்ற கொழுப்பு உடலில் தேங்கிவிடாமல் செய்ய உடற்பயிற்சி அவசியமாகிறது.
உடற்பயிற்சிப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, மூடநம்பிக்கைகள். நீண்ட நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வோர் உடற்பயிற்சிக்கும் நன்மைகளும் உண்டு, பக்கவிளைவுகளும் உண்டு. உதாரணமாக, ஏரோபிக் பயிற்சிகளால் கொழுப்பு மட்டும் குறையும். நாம் உண்ணும் உணவின் மூலம் 1200 கலோரி கிடைக்கிறது.
உடற்பயிற்சியால் 1400 கலோரி எரிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது உணவிலிருந்து கிடைக்கும் கலோரியின் அளவை விட எரிக்கப்படும் கலோரியின் அளவு அதிகமாக இருக்கும்போது, மீதி 200 கலோரி உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
இதனால் உடலுக்குத் தேவையான கலோரிப் பற்றாக்குறை ஏற்படும். எனர்ஜி லெவல் குறையும். அதனால் நீண்ட நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்யக் கூடாது.
உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, நமக்கான செயல்களை நாமே செய்து பழகுவது, கூடுமானவரை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது போன்று நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலமும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அலுவலகத்தில் லிஃப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்துசென்று பொருள்கள் வாங்கலாம்.
நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு-வெறுப்புகள் மறைகின்றன.
நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு-வெறுப்புகள் மறைகின்றன.
மற்றவர்களைப் பார்த்தால் நாம் நமஸ்காரம் செய்வதுகூட நாம் வளர்வதற்கான ஒரு வழிதான். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நம் உள்வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் ஒரு கலாச்சாரமாகவே அறிந்து வந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதிதான் யோக ஆசனங்கள்.
உங்கள் நாக்கு பேசுவதைக் காட்டிலும் உங்கள் கைகள் அதிகம் பேசி விடுகின்றன. ஒருவரை, நெஞ்சுக்கு நேரே இரு கை குவித்து நமஸ்காரம் செய்து வரவேற்கும்போது, உங்களுக்குள் எந்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். இதையே ஒரு கை மட்டும் பயன்படுத்தியோ அல்லது வேறு மாதிரி கைகளை வைத்தோ வணங்கி அப்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வை கவனியுங்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது உங்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
கை குவித்து செய்யும் நமஸ்காரத்தையே முகத்திற்கு நேராக அல்லது தலைக்கு மேலே வைத்து என்று செய்யும் போதும்கூட வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதை காணலாம். எங்கு எப்படி நமஸ்காரம் செய்வது என்பதும் இந்தக் கலாச்சாரத்தில் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.
நமஸ்காரம் வெவ்வேறு விதமாக செய்யும்போது நுரையீலின் வெவ்வேறு பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் உள்ளங்கைகளில்தான் நரம்புகள் முடிகின்றன. எனவே இரு உள்ளங்கைகளையும் குவித்து வணங்கும்போது உங்கள் சக்திநிலை ஒன்றிணைந்து செயல்படுகிறது. யோகாவில் கைகளில் வைக்கும் முத்திரைகளுக்கு என முழு விஞ்ஞானமே இருக்கிறது.
நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு-வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால் உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது.
நீங்கள் ஓரிடத்திற்கு தனியாக சென்று நெஞ்சுக்கு நேரே குவித்து வெறுமனே கும்பிட்டு பாருங்கள். இதை 10 நிமிடம் தனியாக உட்கார்ந்து செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலை மற்றும் உள்நிலையில் மாறுதல்களைக் கவனிக்க முடியும்.
நோய் ஏதும் இல்லாமலிருக்கும் போதே யோகாசனம் செய்தால் வியாதிகளை தடுக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம்.
இதர மருந்து முறைகளுடன் இணைந்து செய்யலாம். சில வியாதிகளுக்கு குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு அலோபதி சிகிச்சையுடன் யோக சிகிச்சையும் மேற்கொண்டால் சிறந்த பலனை பெறலாம். யோகா செய்யும் முன் உங்களின் டாக்டரையும், யோகா நிபுணரையும் கலந்தாலோசித்து செய்தால் மிகவும் நல்லது.
நோய் ஏதும் இல்லாமலிருக்கும் போதே யோகாசனம் செய்தால் வியாதிகளை தடுக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம். மனமும் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும். 30 லிருந்து 40 வயதுக்குள் யோகாவை பயின்று செயல்படுத்துவது மிகவும் நல்லது.
நமது துயரங்களுக்கெல்லாம் காரணம். புலனேந்திரியங்களுக்கு அடிமையாகி, கோப, காமக்குரோதங்கள், பணத்தாசை பிடித்து அலைவது. ஆனால் நம்முன் உறையும் ஆத்மாவை, அறிந்து கொண்டால், மன, உடல் நோய்கள் மறையும். இதற்கு உதவுவது யோகப் பயிற்சி.
ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய ஏரோபிக் உடற்பயிற்சி உறுதுணை செய்யும்.
ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய ஏரோபிக் உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்.
மலச்சிக்கலைத் தவிர்க்கும். சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும். இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.
இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.
இடைத்தூர, நெடுந்தூர ஓட்டம், மெல்லோட்டம், நீச்சல், சைக்கிளோட்டம், நடை, டென்னிஸ், நடனம் போன்ற உடற்பயிற்சிகள் ஏரோபிக் வகை பயிற்சிகளாகும்.
இடுப்பு சதையை குறைக்க வீட்டிலேயே செய்துகொள்ளும் வகையில் ஸ்டிக் எக்ஸர்சைஸின் சில எளிய உடற்பயிற்சி முறைகளை இங்கே பார்க்கலாம்.
வீட்டிலேயே செய்துகொள்ளும் வகையில் ஸ்டிக் எக்ஸர்சைஸின் சில எளிய உடற்பயிற்சி முறைகளை இங்கே பார்க்கலாம்.
நேராக நின்று குச்சியை தோள்களில் வைத்து இரண்டு கைகளாலும் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். வலதுகாலை முன்புறமாக எடுத்து வைக்கவும். இப்படி குச்சியை வைத்து அழுத்தும்போது, நல்ல பிடிமானம் கிடைப்பதால் தோள்பட்டை மேடைகளில் அதிக எடையைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் கழுத்து, தோள் நரம்பு, தசைகளுக்கு வலு சேர்க்கும். கூன் இல்லாத நிமிர்ந்த தோற்றத்தையும் கொடுக்கும்.
அப்படியே மெதுவாக இடதுகாலை பின்புறமும், வலது காலை முன்புறமும் கொண்டுவந்து உடலை மட்டும் வலப்பக்கமாக திருப்ப வேண்டும். பக்கவாட்டில் நன்றாக வளைந்து பயிற்சியைச் செய்வதால் வயிற்றுப்பகுதியின் வெளிப்புற பக்கவாட்டு தசைகள், அடிவயிற்றுத் தசைகள், நரம்பு மண்டலங்களின் வேலை தூண்டப்படுகிறது. அப்பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து நல்ல தோற்றத்தை கொடுப்பதோடு, தசைகளின் இயக்கம் அதிகரிக்கிறது. வயிறு அழகான ‘V’ வடிவத்தைப் பெறும்.
இப்போது இடதுகாலை முன்புறமாகவும், வலது காலை பின்பக்கமாகவும் வைத்துக் கொண்டு உடலை மட்டும் இடப்பக்கமாக திருப்ப வேண்டும். மேலே குறிப்பிட்டதைப்போலவே வயிறின் பக்கவாட்டு தசைகள் நல்ல இறுக்கமடைகிறது. அதுமட்டு மல்லாமல் இடுப்புக்கு மேல் டயர் போல இருக்கும் அதிகப்படியான தசைப்பகுதியை குறைக்க முடியும்.
கால்கள் இரண்டையும் அகலமாக வைத்துக் கொண்டு, குச்சியை பிடித்தவாறே வலதுபுறமாக பக்கவாட்டில் நன்றாக சாய்ந்து நிற்க வேண்டும். இதனால் அடிவயிறு மற்றும் இடுப்பு தசைகள் வலுவடைகின்றன. இடுப்பில் உள்ள அதிகப்படியான தசைகள் குறைகிறது. அடிவயிற்று உறுப்புகள் தூண்டப்படுகின்றன. அடிவயிறு மற்றும் பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுக்கமடைகின்றன. பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.
மேலே சொன்ன பயிற்சியையே இடது புறமாகவும் சாய்ந்து செய்ய வேண்டும். இதிலும் இடுப்பு தசை இறுக்கமடைந்து அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை.
பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிரணாயாமம் என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும்.
பிரணாயாமம் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும்.
அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரணாயாமம் செய்ய முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது. பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.
பிரணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை.
உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிரணாயாமம் பயிற்சியை தினமும் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிரணாயாமம் பயிற்சி.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிரணாயாமம். உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.
முதியவர்களுக்கான உடற்பயிற்சிகளை வரையறுக்க முடியும். உடல் தள்ளாடுவதைக் குறைக்க Balance training programme என்ற முறையில் பயிற்சிகள் இருக்கின்றன.
முதியவர்களுக்கான உடற்பயிற்சிகளை வரையறுக்க முடியும். உடல் தள்ளாடுவதைக் குறைக்க Balance training programme என்ற முறையில் பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு வகை உண்டு. நின்றுகொண்டே செய்யும் பயிற்சிகள், நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள்.
நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள். குதிகாலில் நிற்பது, முன்னங்கால் அல்லது விரல்களில் நிற்பது, முன்னங்காலை வைத்து அதன் பின்பகுதியைத் தொடுமாறு நேர்க்கோட்டில் மற்றொரு காலின் விரலை வைத்து நின்றுகொள்ளுதல், நின்ற இடத்திலேயே காலை மாற்றி மாற்றி தூக்குதல், நின்ற இடத்திேலயே தன்னைத்தானே சுற்றிக்கொள்வது போன்ற பயிற்சிகள் இவற்றில் அடங்கும்.
நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள் நேராக நடப்பது, பக்கவாட்டில் நடப்பது, பின்புறமாக நடப்பது ஒரு கோடு கிழித்து அதன் மேல் நடப்பது, நடந்துகொண்டே கழுத்தை மேலேயும் கீழேயும் அசைத்தல், கைகளை ஆட்டிக்கொண்டே நடப்பது, முன்னங்காலில் நடப்பது, குதிகாலில் நடப்பது போன்ற பயிற்சிகள் இந்த வகையில் அடங்கும்.
இந்த பயிற்சிகளை டிரெயினர் ஒருவரின் ஆலோசனையின்படி ஒருமுறை கற்றுக் கொண்டுவிட்டு, பிறகு வீட்டிலேயே தொடர்ந்து செய்யலாம். சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்டால் அதற்குரிய இயன்முறை மருத்துவ மையங்களில் சென்று சில சிறப்பு சாதனங்கள் / உபகரணங்களின் உதவியுடன் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கூட கால்களை வலுவுடன் வைத்திருக்க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். கால்களை வலுவாக்கும் பயிற்சியை பார்க்கலாம்.
தினமும் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கூட கால்களை வலுவுடன் வைத்திருக்க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகள் செய்வதற்கு முன்பு வார்ம் அப் செய்துவிட்டு தொடங்கினால் கால் மேல் பலன் கிடைக்கும். கால்களை வலுவாக்கும் எளிய பயிற்சிகள் பல உள்ளன.
அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் விரைவில் பலன் தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.
முன் கால் விரல்களை தரையில் பதித்தபடி நின்று கொண்டு பின்னங்கால் பாதத்தை முடிந்தவரை உயர்த்தி பின் கீழ் இறக்கி தரையை தொடாமல் மீண்டும் உயர்த்தவும். இதுபோல் 20 எண்ணிக்கையில் இரண்டு செட்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 3 வேளைகள் என தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்வதால் தண்டந்தசை வலுப்பெறும். முட்டி வலி, முதுகு வலி குணமாகும். கணுக்கால் வலியைப் போக்கும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சிறியவர் முதல் பெரியோருக்கான உடற்பயிற்சி விதிமுறைகளை பார்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிட்டது. இதைத் தவிர்க்க தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் நல்லது.
1 தினமும் காலை குறைந்தது 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். இயற்கையான காற்றை சுவாசித்தபடி செல்லும்போது, மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. எடை சீராக இருக்கும். நோய்களும் அண்டாது. உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.
2 நடைப்பயிற்சிக்குப் பின், தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் செய்ய வேண்டும். எடுத்ததும் கடினமான பயிற்சிகளைச் செய்யக் கூடாது. எளிய வார்ம் அப் பயிற்சிகளுடன் தொடங்க வேண்டும். அவரவர் உடல் நலம், வயது, பாலினம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு, குடும்ப மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகரிடம் உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் பெற வேண்டும்.
3 குழந்தைகள், தசையை உறுதிப்படுத்தும் எடை பயிற்சிகளைச் செய்யக் கூடாது. பெரியவர்கள், குழந்தைகள் என அவரவர்கானப் பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
4 குழந்தைகளைப் பொறுத்தவரை பிரதானமான உடற்பயிற்சி என்பது விளையாட்டுதான். குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள்.
5 நீச்சல், ஸ்கேட்டிங், டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற தனி விளையாட்டுகளிலும், கால்பந்து, கூடைப்பந்து போன்ற அணி விளையாட்டுகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்கிறதெனக் கண்டறிந்து, அதில் அவர்கள் பிரத்யேகக் கவனம் செலுத்த ஊக்குவியுங்கள்.
6 முதியவர்கள் அன்றாடம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. ஒரே நேரத்தில் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால், பத்து பத்து நிமிடங்களாகப் பிரித்துச் செய்யலாம்.
7 நடைப்பயிற்சி செய்யும்போது, மிதமான வேகத்தில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதாவது, முதல் 5-10 நிமிடங்களுக்கு மிதமான வேகம். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து அடுத்த 20 நிமிடங்களுக்கு அதிவேகம். பின்னர் 5-10 நிமிடங்களுக்கு வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும்.
8 நடைப்பயிற்சிக்கு என பிரத்யேகமான காலணிகளை உபயோகியுங்கள். இதனால் மூட்டுத் தேய்மானம் கட்டுப்படுத்தப்படும். குதிகால் வலி வராது.
9 தசை இழுப்புப் பயிற்சிகளான பாதம் தொடுதல், கைகளை உயர்த்துதல், மணிக்கட்டைச் சுழற்றுதல், குதிகால் சுழற்றுதல், முட்டியை மடக்குதல், கழுத்து அசைவுகள் போன்றவற்றை தினமும் 5 முறை செய்யலாம்.
10 பெரியவர்கள், பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் என ஏதாவது ஒரு விளையாட்டில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடலாம். இது உங்களை ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.






