search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல் (Health)

    யோகாவின் சிறப்பு அம்சங்கள்
    X

    யோகாவின் சிறப்பு அம்சங்கள்

    நோய் ஏதும் இல்லாமலிருக்கும் போதே யோகாசனம் செய்தால் வியாதிகளை தடுக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம்.
    இதர மருந்து முறைகளுடன் இணைந்து செய்யலாம். சில வியாதிகளுக்கு குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு அலோபதி சிகிச்சையுடன் யோக சிகிச்சையும் மேற்கொண்டால் சிறந்த பலனை பெறலாம். யோகா செய்யும் முன் உங்களின் டாக்டரையும், யோகா நிபுணரையும் கலந்தாலோசித்து செய்தால் மிகவும் நல்லது.

    நோய் ஏதும் இல்லாமலிருக்கும் போதே யோகாசனம் செய்தால் வியாதிகளை தடுக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம். மனமும் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும். 30 லிருந்து 40 வயதுக்குள் யோகாவை பயின்று செயல்படுத்துவது மிகவும் நல்லது.

    நமது துயரங்களுக்கெல்லாம் காரணம். புலனேந்திரியங்களுக்கு அடிமையாகி, கோப, காமக்குரோதங்கள், பணத்தாசை பிடித்து அலைவது. ஆனால் நம்முன் உறையும் ஆத்மாவை, அறிந்து கொண்டால், மன, உடல் நோய்கள் மறையும். இதற்கு உதவுவது யோகப் பயிற்சி.
    Next Story
    ×