search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செல்வத்தை  அள்ளித்தரும் வரலட்சுமி பூஜை
    X

    செல்வத்தை அள்ளித்தரும் வரலட்சுமி பூஜை

    • துவாதசி வெள்ளிக்கிழமை அன்று லட்சுமிதேவியை பூஜை செய்பவர் லட்சுமியின் அருளைப் பெறுவார்கள்.
    • ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் வருகிறது.

    செல்வத்திற்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த லட்சுமிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும்.

    துவாதசி வெள்ளிக்கிழமை அன்று லட்சுமிதேவியை பூஜை செய்பவர் லட்சுமியின் அருளைப் பெறுவார்கள். ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த விரதம் வருகிறது.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி விரத தினமாகும். செல்வம் இல்லை என்றால் இந்த உலகில் எதுவும் நடக்காது. நம்முடைய பெண் தெய்வங்கள்தான் கல்விக்கும், செல்வத் திற்கும் வீரத்திற்கும் உரியவர்களாக விளங்கு கிறார்கள். கல்விக்கு அதிபதி, நாமகளான சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி அலைமகளான லட்சுமிதேவி வீரத்திற்கு அதிபதி பார்வதிதேவி. இவளே துர்காதேவியும் ஆவாள்.

    எல்லா செல்வங்களும் நிரம்பி இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்டலட்சுமி. என்றாலும் எத்தனையோ லட்சுமிகள் இருக்கிறார்கள். ஆனந்த லட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, ஜோதிலட்சுமி, அனந்த லட்சுமி என்று பல லட்சுமி கள் இருக்கிறார்கள்.

    வெள்ளிக் கிழமைகளில் ஜோதியாக விளக்கு பூஜை செய்வார்கள். அதனால்தான் தூபலட்சுமி என்று அழைத்து வணங்குகிறோம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி பூஜை செய்யும்பொழுது தீபத்தில் பூக்களையோ, குங்குமத்தையோ போட்டு லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லலாம்.

    அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்பவர்கள் ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசியை போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்வார்கள். அரிசியை தானிய லட்சுமி என்றும், சாதமாக வடித்து விட்டால் அன்னலட்சுமி என்றும் கூறுவார்கள்.

    அஷ்டலட்சுமிகளிலும் ஒவ்வொரு வகையிலும் நம் வாழ்விற்குரிய செல்வத்தையும், இன்பத்தையும், நிம்மதியையும் தேவையையும் பூர்த்தி செய்கிறாள். அன்னபூரணி சிலைக்கு அடியில் வைத்த அரிசியை மறுநாள் சமையலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். பதவியை தருபவள் கஜலட்சுமி. குழந்தை பேற்றை தருபவள் சந்தானலட்சுமி. செல்வத்தை தருபவள் தான்ய லட்சுமி.

    வித்தையை தருபவள் வித்யாலட்சுமி. வீரத்தை தருபவள் வீரலட்சுமி. வெற்றியை தருபவள் விஜயலட்சுமி. லட்சுமிதேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாழ செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு விநாயகர் பூஜையை முதலில் செய்ய வேண்டும். அம்பாள் முன்பு மஞ்சள் நூலில் ஏதாவது ஒரு பூவைக்கட்டி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழங்கள் என்று வைக்க வேண்டும். சாமந்தி, இருவாட்சி, மல்லிகை, முல்லை, மல்லி, அல்லி, தாமரை, அரளி, சண்பகம், தாழம்பூ என்று எல்லாவகை பூக்களை வைத்தும் பூஜை செய்யலாம்.

    அஷ்டோத்திர மந்திரங் களை சொல்லி பூஜை போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரை பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், இட்லி, மகாநைவேத்தியம் (சாதம்) இவைகளை நைவேத்யம் செய்ய வேண்டும். பூக்கட்டி வைத்த மெல்லிய மஞ்சள் சரட்டை எடுத்து தீபாராதனை முடிந்த பின்பு கணவரோ, வீட்டில் உள்ள பெரியவர்களோ கையில் கட்டி விடுவார்கள். பூஜையை பார்க்க வந்தவர்களுக்கு தாம்பூலமும் பிரசாதமும் கொடுக்க வேண்டும்.

    Next Story
    ×