என் மலர்
கிறித்தவம்
இயேசுவோ அலகையின் சோதனைக்கு இசையவில்லை. அவர், கடவுள் தமக்குக் கையளித்த பணியைப் பிரமானிக்கமாக இறுதிவரை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்.
இயேசு சந்தித்த இரண்டாம் சோதனையில், அலகை இயேசுவை “திருநகரில் உள்ள கோவில்” உச்சிக்குக் கொண்டுசெல்வதாக உள்ளது. இதில் வருகின்ற “திருநகரம்” எருசலேம் என்றும், “கோவில்” என்பது “எருசலேம் நகர் கோவில்” என்றும் கிறித்தவர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மத்தேயு நற்செய்தியில் “கோவில்” என்னும் சொல்வழக்கு 17 தடவை வருகிறது. அதில் ஒரு தடவை கூட “எருசலேம் கோவில்” என்று வெளிப்படையாகக் கூறப்படவில்லை. லூக்கா, நற்செய்தியில் தெளிவாக “எருசலேம் கோவில்” என்று கூறப்படுகிறது. அந்நற்செய்தியின் பெறுநரான “தியோபில்” யூத இனத்தவர் அல்ல என்பதால் அவருக்குத் தெளிவாகப் புரியும் அளவில் “எருசலேம் கோவில்” என்று எழுதப்பட்டதாகவும் அறிஞர் கருதுகின்றனர்.[20]
கோவிலின் “உயர்ந்த பகுதிக்கு” இயேசுவை அலகை கொண்டு சென்றதாக நற்செய்திகள் கூறுகின்றன. இந்த “உயர்ந்த பகுதி” எதைக் குறிக்கிறது என்று தெளிவில்லை. இது கோவில் கட்டடத்தின் கூரையாக இருக்கலாம்; அல்லது “மதில் உச்சியாக” இருக்கலாம்; அல்லது வெளியே நீண்டு நிற்கின்ற கோவில் மூலையின் முகடாக இருக்கலாம்.[18]
”பின்னர் அலகை இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுக்காக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது’ என்றது.” (லூக்கா 4:9-11).
ஆனால் இயேசுவோ அலகையின் சோதனைக்கு இசையவில்லை. அவர், கடவுள் தமக்குக் கையளித்த பணியைப் பிரமானிக்கமாக இறுதிவரை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்.
எனவே, இயேசு அலகைக்குத் தகுந்த பதில் கொடுத்தார். அப்பதிலும் விவிலியத்தின் நூலான இணைச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது: இயேசு அளித்த பதில்: “இயேசு அலகையிடம், “’உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்” (மத்தேயு 4:7).

கடவுளின் தூய ஆவி இயேசுவை ஓர் பாலைநிலத்திற்குக் கொண்டுசெல்கிறார். அங்கு இயேசு நோன்பிருக்கிறார். அதே பாலைநிலப் பின்னணியில் தான் இயேசு அலைகயால் சோதிக்கப்படுகிறார்.
கடவுளின் தூய ஆவி இயேசுவை ஓர் பாலைநிலத்திற்குக் கொண்டுசெல்கிறார். அங்கு இயேசு நோன்பிருக்கிறார். அதே பாலைநிலப் பின்னணியில் தான் இயேசு அலைகயால் சோதிக்கப்படுகிறார். அலக்சாண்டர் ஜோண்சு என்பவர் தரும் தகவல் இது: இயேசு சோதிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்ற பாலைநிலம் எருசலேம் நகருக்கும் எரிகோ நகருக்கும் இடையே பரந்துகிடக்கின்ற, பாறைகள் நிறைந்த வனாந்தரப் பகுதி என்று ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே அடையாளம் காட்டப்பட்டு வருகிறது. அதில் “குவாராந்தானியா குன்று” (Mount Quarantania - பொருள்: நாற்பது நாள் தொடர்பான மலை) பகுதியில் இயேசு நோன்பிருந்தார்.
பாலைநிலம் என்பது, யூத மரபில், மக்கள் வாழும் சமுதாயத்திற்குப் புறம்பே கிடக்கும் பாழடைந்த நிலமாகவும், அங்கே அலகைகள் உலவுவதாகவும் கருதப்பட்டது. லேவியர் 16:8-10 போன்ற சில பாடங்களில் “போக்கு ஆடு” என்று அழைக்கப்படுவதை சிலர் “அசாசேல்” என்னும் அலகையாயக் கொண்டு அது பாலைநிலத்தில் உலவியதாகக் கொண்டனர். வேறு சிலர், பாலைநிலத்தை இன்பவனமான ஏதேன் தோட்டத்தோடு தொடர்புபடுத்தியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி, முதல் மனிதரான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் இருந்ததுபோல, புது மனிதரும் புதிய ஆதாமுமான இயேசு பாலைவனத்தில் இருந்தார். இக்கருத்துக்கு மத்தேயு நற்செய்தியில் ஆதாரம் இல்லை என்று கூறி, அறிஞர்கள் மேற்கூறிய விளக்கத்தை ஏற்பதில்லை.
பாலைநிலம் என்பது விவிலியத்தின் வேறு இடங்களோடு தொடர்பு படுத்தப்படுகிறது. அதாவது, இசுரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்து வழிநடந்தனர் (விடுதலைப் பயணம் நூல்). மோசேயும் பாலைநிலத்தில் பல நாள்களைக் கழித்தார். அந்த நிகழ்ச்சிகள் இயேசுவின் பாலைநில அனுபவத்திற்கு முன்காட்சிகள் போல் உள்ளன.
இயேசு தம்முடைய பசியைத் தீர்த்திட கற்களை அப்பமாக மாற்றலாமே என்று கூறி அலகை அவரை சோதிக்கிறது. அதற்காக அலகை இயேசுவை நோக்கி “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றது. ஆனால் இயேசு மறுமொழியாக, “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்” என்று மறைநூலில் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (காண்க: திருப்பாடல்கள் 91:12). அலகையின் சோதனையை முறியடிக்கிறார் (மத்தேயு 4:1-4).

சில நேரங்களில் இந்த உலகமும், மனிதர்களும், சூழ்நிலைகளும் ஏன் நம்முடைய சொந்த மனதும் நம்மை எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லவே முந்திக்கொள்ளும்.
“அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ் செய்தான்- லூக்கா 15:20”.
அவன் சிறுவனாய் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் போயும், போயும் நீ எங்களுக்கு பிள்ளையாய் பிறந்தாயே என்றனர். அவன் பள்ளிக்கூடம் சென்றான். நீயெல்லாம் மாடு மேய்க்க போயிருக்கலாமே இங்கு வந்து இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றாயே என்றனர் ஆசிரியர்கள். அவன் வேலைக்கு போனான். நீ எங்காவது சாமியாராக போய் சம்பாதிக்காமலே, சாப்பிட்டிருக்கலாமே இங்கே வந்து என் உயிரையும் வாங்குறியே என்றார் முதலாளி. அவன் திருமணம் செய்தான். நான் செய்த பாவம் நீ எனக்கு போய் கணவனாக வந்திருக்கிறாய் என்றாள் மனைவி. வேறு எங்கும் போக வாய்ப்பில்லாமல் இறுதியாக கடவுளிடம் போய் நின்றான். இவ்வளவு பேரும் வேண்டாம் என்ற பிறகுதான் உனக்கு என்னைத்தேடும் உணர்வு வந்ததா. நீ மட்டும் அப்பொழுதே வந்திருந்தால் உன்னை எவ்வளவோ உயரமாய் வைத்திருப்பேன் என்று கடவுள் சொன்னாராம்.
சில நேரங்களில் இந்த உலகமும், மனிதர்களும், சூழ்நிலைகளும் ஏன் நம்முடைய சொந்த மனதும் நம்மை எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லவே முந்திக்கொள்ளும். நீ ஏன் வாழ்கின்றாய்? நீ வாழ்வதால் என்ன பயன்? நீ வாழ்வது யாருக்கு தேவை? என்ற சத்தங்கள் தான் நம்முடைய காதுகளில் ஒலிக்கும்.
கெட்ட குமாரன் கெட்டு சீரழிந்து திரும்பி வந்தபோது இப்படிப்பட்ட ஒருவனை தகப்பன் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொந்த சகோதரன் சிந்தித்தான். ஆனால் அந்த தகப்பன் மட்டும் தான் மகனே, நீ எவ்வளவு கெட்டுப்போனாலும் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல முடிந்தது. அதுதான் தகப்பனின் மனம். அதுதான் தகப்பனின் பார்வை.
“சோதனைகள் உன்னை தொய்ந்து போக செய்தால் வேத வார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாற கற்றுக்கொள்”.
- சாம்சன் பால்.
இன்றைக்கும் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் நாம் பெற்றுக்கொள்ள தகுதியோ,அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும்.
கிறிஸ்துவின் பாடுகள் பற்றி நாம் தியானித்து வரும் இந்த நாட்களில் கிறிஸ்துவின் போதனையான தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தைக் குறித்து நாம் தியானிப்போம். இன்றைய நாட்களை போலவே தேவைகள்,வியாதிகள்,பிரச்சனைகளிலிருந்து விடுதலை என்று பலவிதமான காரியங்களுக்கு பதில் தேடி அநேக இடங்களுக்கு அலைகிற ஜனங்கள் இயேசுவின் நாட்களிலும் இருந்தார்கள்.ஆனால் அவர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த நல்லதொரு போதனைதான் விசுவாசம். அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளை தமது சீடர்களுக்கு போதித்தார்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ:3:16)என்று வேதம் கூறுகிறது. இன்றைய உலகில் நாம் தேடும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசம் நமக்கு நல்ல பதிலைப் பெற்றுத்தரும். தம்முடைய குமாரனை விசுவாசிக்கும் அனைவருக்கும் உலக நன்மைகளை மட்டும் வாக்குப்பண்ணாமல் நித்திய ஜீவனையும் தேவன் கொடுத்திருக்கிறார். அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிற அனைவருக்காகவும் அவர் சிலுவையில் ரத்தம் சிந்தியிருக்கிறார்.
இன்றைக்கும் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் நாம் பெற்றுக்கொள்ள தகுதியோ,அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும். கிறிஸ்துவைப்போல தேவன்மேல் வைத்த விசுவாசத்தை வெளிப்படுத்த எவருமில்லை. மற்றவர்களை ரட்சித்தான் தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத்தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் (மத்:27:42,43) என்று சுற்றி இருந்த ஜனங்கள் ஏளனமாய் பேசின போதிலும், நம்பிக்கையற்ற வார்த்தைகளைக் கூறின போதும் தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லமையுள்ள தேவன் மேல் விசுவாசமுள்ளவராகவே இருந்தார்.
தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லவரிடத்தில் தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் (எபி:2:15) என்று வேதம் கூறுகிறது. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொன்னவரை பிதாவாகிய தேவன் சொன்னபடி 3-ம் நாளிலே எழுப்பினார் கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் நாம் எதைக்கேட்டாலும் அதை செய்ய அவர் வல்லமையுள்ளவர். அவரை விசுவாசிப்போம்,தேவனுடைய அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம்.
சகோதரி. மேரி அமல்ராஜ்,
மண்ணரை பாரப்பாளையம், திருப்பூர்

வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் பிறர் கருத்துகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டும். இதனை உணர்ந்து கொண்டவர்கள், எதிர்பார்த்த வெற்றியினை நிறைவாக பெற்றிட இயலும்.
வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் பிறர் கருத்துகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டும். இதனை உணர்ந்து கொண்டவர்கள், எதிர்பார்த்த வெற்றியினை நிறைவாக பெற்றிட இயலும். இன்றைய உலகினில் எல்லா மனிதர்களிடமுமே, பிறர் என்னைப்பற்றி உயர்வாக பேச வேண்டும். மதிக்க வேண்டும் என்ற உணர்வு மிக அதிகமாகவே காணப்படுகிறது. பிறர் விமர்சிக்கின்ற போது எளிதாக மனமுடைந்து சோர்வு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். நம் மீது அக்கறையுடன் விமர்சிப்பவர்கள் விமர்சனத்தை மதிக்கலாம். ஆனால் எல்லாருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை. இந்த அணுகுமுறையே நமது வெற்றிக்கு மிகுந்த அவசியமானவை என்பதனை உணர்ந்திடுவோம்.
ஒன்றுமில்லாது அனைத்தையும விட்டு விட்டு பற்றற்று வாழும் துறவினை கூட இந்த உலகம் விமர்சிக்கின்றது. ஒன்றுமே வேண்டாம் என்று நிலையோடு வாழ்ந்தவரே பட்டினத்தார். ஒருமுறை உடல் களைப்பினால் வயலில் படுத்திருந்தார். அறுவடை முடிந்திருந்த காலமது. குச்சி குச்சியாய் பூமியிலிருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக்கொண்டிருந்தது. அந்த வழியே நடந்து சென்ற இருவரில் ஒருவர் வரப்பு மீது தலை வைத்து படுத்திருக்கின்றார். இவர் ஒரு பெரிய மகான் என்றார். மற்றொருவரோ வரப்பு மீது தலை வைத்து தலையணை வைத்து தூங்குவது போல் சுகம் இவருக்கு கேட்கிறதே. இவர் பெரிய மகானா? என கேலி செய்தார். உடனே பட்டினத்தார் தலையை கீழே இறக்கி வைத்து படுத்தார்.
அதே மனிதர்கள் மீண்டும் அவ்வழியே திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை கீழே வைத்து படுத்த அவரைப்பார்த்து ஒருவர், இவர் ஒரு மகானா? நாம் பேசுவதை ஒட்டு கேட்கிறார் என்றார். நாம் என்ன செய்தாலும் இந்த உலகம் நம்மை விமர்சிக்கும் கேலிப்பேசும். அனைத்தையும் கடந்து நேரிய முறையில் வாழ்வதே நமது மனித வாழ்வாக அடைந்திட வேண்டும். இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் நம்மோடு இணைந்து வாழ்கின்ற மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுப்பதற்கு நாம் அழைக்கப்படுகின்றோர்.
சிறு குழந்தைகளிடம் இருந்தும் ஞானமிக்க காரியங்கள் வெளிப்பட முடியும் என்பதனை நாம் ஏற்றிட வேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப முடிவுகள் எடுக்கின்ற போது அனைவரோடும் இணைந்து ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பக்குவப்பபட வேண்டும். உலகில் மாபெரும் சிந்தனையாளராக போற்றப்படுகின்ற சாக்ரடீஸ், நான் அறிந்தது கொஞ்சமே, இன்றும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது என்ற மனப்பான்மையோடே தனது வாழவினை நகர்த்துவதற்கு ஆசைப்பட்டார். அதனை சீடர்களுக்கு கற்றளித்தார். நாமும் இத்தகைய மனப்பான்மையினை உள்வாங்கி தொடர்நது வாழ்வினை கொண்டாடுவோம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.

உண்மையை பேசுவதினால் நமக்கு பிரச்சினையும், அவமானமும் வந்தாலும் நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்பதினால் நாம் உண்மையையே பேச வேண்டும்.
நாம் இந்த உலகில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், நம் மனதிலே உண்மை இல்லாதவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த லெந்து நாட்களில் இயேசு எப்படி கடவுளிடம் உண்மையாக இருந்தார் என்று சற்று தியானித்து பார்ப்போம்.உள்ளதை உள்ளபடியே சொல்லும் தன்மையே உண்மை என்று பைபிள் நமக்கு கற்றுத்தருகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கடவுள் நம்மிடத்தில் விரும்புகிறார். இயேசுவும் கடவுளுக்கு பயந்து உண்மைக்கு அடையாளமாக வாழ்ந்து காட்டினார்.
யூதர்களை ரோமர்கள் ஆண்டு வந்த காலத்தில் ரோமர்களுக்கு யூதர்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால் இயேசுவோ யூதர் ஆனபடியினால் தனக்குரிய பணத்தை ரோமர்களுக்கு சரியாக வரி செலுத்தினார் என்று வேதாகமத்தில் மத்தேயு 17: 24-27-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இயேசுவிடம் குற்றம் கண்டு பிடிக்கும் பொருட்டு ராயனுக்கு வரி செலுத்துவது நியாயமோ? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு ராயனுடையதை ராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்று கூறினார். இதைத்தான் வேதாகமத்தில் மத்தேயு 22: 17-21 மற்றும் யோவான் 18:1-8-ல் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
இப்படி உண்மையாய் இருந்த இயேசுவின் மேல் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கொலை செய்ய திட்டமிட்டு போர்ச்சேவகர்கள் இயேசுவை பிடிக்க வந்த போது இயேசு அவர்களை பார்த்து யாரை தேடுகிறீர்கள்? என்று கேட்ட போது நசரேயனாகிய இயேசுவை தேடுகிறோம் என்று அவர்கள் கூறினார்கள். அப்போது இயேசு தனக்கு தீமை நேரிடப்போகிறது என்று தெரிந்தும் அவர்களை நோக்கி நான்தான் நசரேயனாகிய இயேசு என்று உண்மையை தைரியமாக கூறினார் என்று நாம் வேதத்தில் படிக்கிறோம்.
இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாமும் நம்முடைய காரியங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உண்மையாயிருக்க தேவன் விரும்புகிறார். உண்மையை பேசுவதினால் நமக்கு பிரச்சினையும், அவமானமும் வந்தாலும் நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்பதினால் நாம் உண்மையையே பேச வேண்டும். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் என்ற வேத வசனத்தின்படி நாம் செயல்படுவோம், ஆமென்.
பாஸ்டர். சாம் கிப்ட்சன், நற்செய்தி ஊழியம், திருப்பூர்.
மனிதனுடைய மிகபெரிய எதிரிகள் பிற மனிதர்ளோ எதிர்மாறான சூழ்நிலைகளோ அல்ல. அவன் வளரவிட்டு கொண்டிருக்கின்ற தவறான பழக்கங்களும், ஆசைகளும், கடினமாக மனநிலைகளும் தான் அவனை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கியமான எதிரிகள்.
உங்களுக்குள் யுத்தம் எதனாலே வருகிறது(யாக்கோபு-4:1)
மற்றவர்களால் நமக்கு துன்பங்கள் வந்தது உண்மைதான். சிலரலால் நாம் அதிகமாக வேதனையடையும் வேளைகள் வந்தது உண்மை தான். நம்முடைய சூழ்நிலைகளாலும், நாம் எதிர்பார்த்தறக்கு எதிராக நிகழ்ந்த காரியங்களினாலும் நாம் துயரமடைய நேரிட்டது உண்மை தான். ஆயிலும் பெரும்பாலான நம்முடைய கஷ்டங்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறர் அல்ல. சூழ்நிலைகள் அல்ல. நாமே தான் காரணமாயிருநதிருக்கின்றோம் என்பதே உண்மை.
நம்முடைய தவறான மனநிலைகளாலும், தவறான குணங்களாலும், தவறான முடிவுகளாலும், நமக்கு ஏராளமான துன்பங்களும் வேதனைகளும் வந்தது என்பது உண்மை. நாம் மட்டும நல்ல மனநிலையோடும், நல்ல சுபாவங்களோடும்,ந ல்ல சிந்தனையோடும், நல்ல உணர்வுகளோடும் வாழ்ந்திருந்தால் ஏராளமான மனவேதனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். நாம் சரியாக இருந்திருந்தால் பிறறோ, சூழ்நிலைகளோ நம்மை இந்த அளவிற்கு பாதித்திருக்க முடியாது.
நம்முடைய துன்பங்களுக்கு காரணமாயிருந்தவர்களை நினைத்து நினைத்து மனங்குமுறுகின்றோம். நமக்கு வேதனைகளை ஏற்படுத்திய சூழ்நிலைகளை எண்ணி சுய பச்சாதாபம் கொள்கின்றோம். ஆனால் நம்முடைய தவறான குணங்களாலும், ஊறிப்போன தவறான மனப்பண்புகளாலும் நமக்கு ஏற்பட்ட வருத்தங்களையும், சோர்வுகளையும் எண்ணி மனம் வருந்துகின்றோமா?
மனிதனுடைய மிகபெரிய எதிரிகள் பிற மனிதர்ளோ எதிர்மாறான சூழ்நிலைகளோ அல்ல. அவனுடைய தீய பாவங்கள் தான் எதிரிகள். அவன் வளரவிட்டு கொண்டிருக்கின்ற தவறான பழக்கங்களும், ஆசைகளும், கடினமாக மனநிலைகளும் தான் அவனை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கியமான எதிரிகள். நம்முடைய தவறான குணங்களும், கடவுளை மையமாக கொண்டு வாழாத மனநிலைகளும் நமக்கு ஏற்படுத்தும மனவேதனைகளையும், சோர்வையும் எண்ணி மனம் வருந்த வேண்டும். அவற்றை சரி செய்திட தேவகிருபையும் பலமும் பெற்றுவிட்டால் 25 சதசீத துன்பங்களை நல்ல குணங்களுள்ள இருதயத்தால் எளிதாக மேற்கொண்டுவிடலாம். நமக்கு எதிராக நின்று செயல்படும் தவறான குணங்களை குறித்து கவலைப்படாமல் மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எண்ணி நொந்து கொள்வதால் நன்மையில்லை.
“தன்னை சீர் செய்யாமல் பிறரை சீர்திருத்த விரும்புகிறவன்
தானும் சீர்கெட்டு பிறரையும் சீரழிக்கின்றான்”

இயேசுவே நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை சுமந்தீர் என சாபங்களை சுமந்து தீர்த்து விட்டீர் என நாம் நம்புகிறேன் என அவரிடம் நம்பிக்கையோடு வாய்திறந்து சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை மாறுவதை காண்பீர்கள்.
அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். பொதுவாக ஒருவருடைய மரணம் ஒரு இழப்பாகும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மரணம் இந்த மனுக்குலத்திற்கே பெரிய நன்மையும், ஆசீர்வாதமுமாகும். கிறிஸ்து நமக்காக சாபமாகி, சாபத்தில் இருந்து நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் என வேதத்தில் (கலாத்தியர்:3-13) பார்க்கிறோம். இயேசு ஏன் மரிக்க வேண்டும்? இயேசு வாழ்ந்த காலத்தில் ரோம பேரரசுதான் உலகத்தை ஆட்சி செய்தது. கொடிய குற்றவாளிகளை ரோமர்கள் சிலுவையில் அறைந்து கொல்லுவார்கள். இயேசு கிறிஸ்து ஒரு குற்றமும், பாவமும் செய்யாதவர். அவரை விசுவாசித்த பிலாத்து என்ற மன்னன் அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை என தீர்ப்பளித்தான். அப்படியானால் இயேசு ஏன் இப்படிப்பட்ட கொடிய மரணத்தை தழுவ வேண்டும்? அதைத்தான் மேற்காணும் பைபிள் வசனம் கூறுகின்றது. நமக்காக இயேசு சாபமானார். நம்முடைய பாவம், நம் முன்னோர்களின் பாவம் ஆகியவற்றினால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள், வியாதிகள், மரணங்கள், நஷ்டங்கள் இவைகளே சாபங்களாகும்.
நம்முடைய பாவங்களை இயேசு சுமந்தார் என பைபிள் (1 பேதுரு 2:24) கூறுகிறது. முழு மனுக்குலத்தின் பாவத்தையும் இயேசு தன்னுடைய உடலில் ஏற்றுக்கொண்டு சிலுவையில் சுமந்து தீர்த்தார். உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவையில் சாபமானார். இயேசு நம்முடைய பாவங்களுக்குரிய தண்டனைகளை தன்மேல் ஏற்றுக்கொண்டார். எனவே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் அவரிடத்தில் மட்டுமே உண்டு. யாரெல்லாம் அவரிடத்தில் நம்பிக்கை வைத்து, அவரிடத்தில் கேட்கிறார்களோ அவர்களுக்கு பாவ மன்னிப்பை கொடுக்கிறார். பாவ மன்னிப்பை ஒருவர் பெறும்போது பாவனத்தின் விளைவாகிய சாபமும் நீங்கி விடும்.
அருமையான தேவை பிள்ளைகளே உங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளால் துவண்டு போய் வாழ்க்கையே வெறுப்பாக உள்ளதா? தற்கொலை செய்து மடிந்து விடலாம் என நினைக்கிறீர்களா? பயப்படாதீர்கள் நீங்கள் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காகவே இயேசு உங்களுக்காக மரித்தார். உங்களுக்காக புதுவாழ்வு கொடுத்து உங்களை ஆசீர்வதிக்க இயேசு விரும்புகிறார். அவரிடம் வாருங்கள். இயேசுவே நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை சுமந்தீர் என சாபங்களை சுமந்து தீர்த்து விட்டீர் என நாம் நம்புகிறேன் என அவரிடம் நம்பிக்கையோடு வாய்திறந்து சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை மாறுவதை காண்பீர்கள்.
பாஸ்டர்.ரபிபிரபு, இல்லந்தோறும் நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.

சுகவாழ்வு கிடைக்கிறது. இயேசு நம்முடைய பாவத்தை மட்டும் சுமக்கவில்லை. நம்முடைய நோய்களையும் சிலுவையில் சுமந்து விட்டார். எனவே நாம் உலகில் சுகமாக வாழ முடியும்.
இயேசுவின் மரணத்தையும், பாடுகளையும் தியானிக்கும் இக்காலத்தில் இயேசுவின் மரணத்தினால் நமக்கு உண்டான சில நன்மைகள் குறித்து தியானிப்போம்.
தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நமக்கெல்லோருக்காகவும் அவரை (இயேசுவை) ஒப்புக்கொடுத்தவர். அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி? என்று பைபிள் கூறுகிறது (ரோமர் 8:32). கடவுள் மனிதனை படைத்தார். மனிதன் பாவம் செய்து கடவுளை விட்டு பிரிந்து போனான். கடவுளை பிரிந்ததால் மனுக்குலத்திற்கு பல இன்னல்கள் வந்து சேர்ந்தது. குறிப்பாக பாவம் மனிதனை நரகத்திற்கு இழுத்து செல்கிறது. கடவுள் மனிதனை நேசித்தால் மீண்டும் மனிதனை தன்னோடு இணைத்துக் கொள்ள கடவுளின் திட்டமே தன்னுடைய சொந்த மகனான இயேசுவின் மரணம் அதற்காக கடவுள் தண்டனைகளை நம்மெல்லாருக்காகவும் சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். முதலாவது இயேசுவின் மரணம் நமக்கு இரட்சிப்பை கொடுக்கிறது. இரட்சிப்பு என்றால் பாவ மன்னிப்பு. பாவத்தின் சம்பளம் மரணம் அதாவது நரகம். பாவம் மனிதனை நரகத்தில் தள்ளும். ஆனால் இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்முடைய பாவங்களை சுமந்து தீர்த்தபடியால் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு நமக்கு கிடைக்கிறது. எனவே நாம் நரகத்திற்கு போகாமல் இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு பரலோகத்திற்கு செல்வோம் என்று விசுவாசிப்போம்.
அடுத்து சுகவாழ்வு கிடைக்கிறது. இயேசு நம்முடைய பாவத்தை மட்டும் சுமக்கவில்லை. நம்முடைய நோய்களையும் சிலுவையில் சுமந்து விட்டார். எனவே நாம் உலகில் சுகமாக வாழ முடியும்.
அடுத்து இயேசு நமக்காக தரித்திரரானார் என வேதம் கூறுகிறது. நம்முடைய வறுமையையும் இயேசு சிலுவையில் சுமந்து விட்டார். எனவே நாம் வறுமையில் வாட வேண்டியதில்லை. இயேசு நம் துக்கங்களையும், பாடுகளையும் சுமந்தார் என வேதம் கூறுகிறது. இப்படியாக கடவுள் தன்னுடைய மகனாகிய இயேசுவோடே கூட பல ஆசீர்வாதங்களை நமக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த ஆசீர்வாதங்களை எப்படி அடைவது? அவர் மேல் வைக்கும் நம்பிக்கையினால் தான் தன்னை விசுவாசிப்பவர்கள் மகிமையின் ஆசீர்வாதங்களை காண்பார்கள் என இயேசு கூறுகிறார். இவ்வுலகில் சமாதானமாய் வாழ, கெட்ட பாவ பழக்கங்களில் இருந்து விடுதலைபெற்று பாவ மன்னிப்பை பெற்று வாழ நமக்காக மரித்தார். மீண்டும் 3-ம் நாள் உயிரோடு எழுந்தார். எனக்காக மரித்த இயேசுவே என்னை ஆசீர்வதியும் என்று அவரிடம் கேளுங்கள் நிச்சயமாக நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஆசீர்வாதமாக அமையும்.

படைத்த இறைவனையும், நம்மை சூழ்ந்து வாழ்கின்ற மானுட சமுதாயத்தையும், முழுமையாக நம்பி செய்து பயணத்தை ஆரம்பிக்கின்றபோது எல்லாமே நல்லதாகவே நடந்தேறும்.
இன்றைய உலகம் எல்லாவிதமான நன்மைகளையும் நிறைவாக பெற்றிருப்பதை போன்று ஏராளமான முரண்பாடுகளையும் பெற்றுள்ளது. நாம் பாராட்டப்படுவதை போன்று சில நேரங்களில் விமர்ச்சிக்கவும் படுவோம். நமக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கொண்டு அதற்கேற்ப இறங்குவதற்கு பழக வேண்டும். இதுவே நமது கடமைகளை சரிவர செய்வதற்கு நமக்கு வழிகாட்டுகின்றது.
பலமுறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஆபிராம்லிங்கன், முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட போது அங்கு நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஒரு சிறுமியை அழைத்து பாராட்டினார். நான் ஜனாதிபதி ஆக இவரே காரணம் என்றுரைத்தார். அந்த சிறுமி என்ன செய்தார் தெரியுமா? ஆபிராம்லிங்கன் ஒல்லியான உடல்வாகு கொண்டவர். அவரின் கன்னங்கள் ஒட்டிபோய் முகத்தில் பள்ளங்கள் இருந்தன. அம்மைத் தழும்பு வேறு இருந்தன. இதனை கவனித்த சிறுமி, நீங்கள் தாடி வளர்த்து கொண்டால் உங்கள் முகம் அழகாக, கம்பீரமாக இருக்கும் என்றார். நம்மீது சாட்டப்படும் எல்லா விமர்சனங்களையும் எதிர்மறையாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. சிற்சில சமயங்களில் எங்கிருந்தோ வருகின்ற எளிய யோசனைகள் கூடி நம்மை வளர்த்தெடுக்கின்றது.
இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காரியங்களிலொன்று ‘விமர்சனங்கள்‘ விமர்சனங்களை நேர்மறையாக பார்கின்ற சூழலமைவுகளையும் நாம் வளர்த்திட வேண்டும். எல்லாச்சூழல்களிலும் எல்லாவற்றையும் முரண்டு பிடிக்காது பணியாற்றுவதற்கு நாம் பழகிட வேண்டும். சிலரின் கூற்றுக்கள் நமது வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது என்ற எண்ணத்துடன் பார்க்கவும் வேண்டும். பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்கின்ற எல்லா தனி மனிதர்களின் மீதும் ஏராளமான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவர்களை கீழே தள்ளிவிட பல விதங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை கண்டு அஞ்சுவதோ, தடுமாறுவதோ அல்ல நமது வாழ்வின் இலக்கு. மிக தைரியமாக எதிர்கொண்டு வாழ்வின் மூலம் பதில் சொல்வதற்கு அழைக்கப்படுகின்றோம்
படைத்த இறைவனையும், நம்மை சூழ்ந்து வாழ்கின்ற மானுட சமுதாயத்தையும், முழுமையாக நம்பி செய்து பயணத்தை ஆரம்பிக்கின்றபோது எல்லாமே நல்லதாகவே நடந்தேறும். எதையும் கண்டு அஞ்சி, பயந்து இவ்வளவுதான் வாழ்க்கை என சோர்ந்திடாது நம்பிக்கையோடு முன்னோறி செல்வோம். நம்மீது வீசப்படுகின்ற எல்லா முட்களும் அகன்று போகும். வாழ்க்கை இனியதாக நமக்குத் தெரியும்.

சிலரிடம் சுத்தம் உண்டு. ஆனால் அது பரிசுத்தம் அல்ல. அது சுயபலத்தால் சாதிக்கப்பட்ட சுயநீதி வாழ்க்கை. பரிசுத்தம் என்பது கடவுள் உறவு சார்ந்தது. கடவுள் அன்பை பிரதிபலிப்பதே பரிசுத்தம். க
தேவைனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான (ரோமர்-12:2)
தந்தை ஒருவர் இறப்பதற்கு முன்பு ஒரு பெரிய வீட்டை தன் மகன்களிடம் கட்ட சொன்னார். அந்த வீட்டை மிக மிக சுத்தமாக வைக்க வேண்டும் என்றார். அந்த வீட்டை சுற்றிலும் அழகான பூந்தோட்டம் அமைத்து அதனை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றார். சில காலங்களுக்கு பிறகு தந்தை இறந்து விட்டார். மகன்கள் தந்தையின் விருப்பப்படி அழகான வீட்டைகட்டி அதற்குள் ஒரு சிறுதூசி கூட தங்கமுடியாதபடி தினமும் சுத்தமாக வைத்தனர். அழகான பூந்தோட்டம் அமைத்து மிகச்சிறப்பாக பராமரித்தனர். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால் வீட்டை சுத்தமாக வைப்பதற்கும், பூந்தோட்டத்தை பராமரிப்பதற்கும் அதிகமாக கவனம் செலுத்திய அவர்கள் ஒருபோதும் அந்த வீட்டை தங்குமிடமாக உபயோகிக்கவில்லை. தந்தை சொன்னபடி செய்தபோதிலும் தந்தையின் நோக்கம் அவர்களுக்கு விளங்கவில்லை.
சிலருக்கு ஆன்மிக வாழ்க்கையும் இப்படியாகவே உள்ளது. அவர்கள் தங்களின் வாழ்க்கையை மிக சுத்தமாக வைத்து கொள்வது தான் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதில் கவனமாயிருக்கின்றார்கள். அவர்கள் எதைச்செய்தாலும் எங்கு போனாலும் பரிசுத்தம் பரிசுத்தம் என்று மட்டும் சிந்திக்கின்றனர். அவர்கள் அசுத்ததிற்கும், ஆகாதவைகளுக்கும் இடம் தராமல் அவற்றை தூரமாக்குகின்றனர். தங்களை ஏதாவது ஒன்று தீட்டுபடுத்திவிடுமோ என்ற மிகவும் ஜாக்கிரதையாக இருக்கின்றனர்.
ஆனால் இந்த பரிசுத்தத்தின் மேல் உள்ள கடவுளின் நோக்கம் அவர்களுக்கு தெரியவில்லை. நாம் கடவுளின் உறவில் வாழ வேண்டும். கடவுள் நம்மோடு தங்கி நம்மை நடத்த வேண்டும். நம் மூலமாக கடவுள் தம்முடைய அன்மை, கிருபையை கருணையை, அனேகருக்கு வெளிப்படுத்த வேண்டும். பரிசுத்தராகிய தேவன் நம்மோடு தங்கியிருந்து செயல்படுத்துவதற்காக தான் கடவுள் நம்மிடம் பரிசுத்தத்தை எதிர்பார்க்கின்றார்.
சிலரிடம் சுத்தம் உண்டு. ஆனால் அது பரிசுத்தம் அல்ல. அது சுயபலத்தால் சாதிக்கப்பட்ட சுயநீதி வாழ்க்கை. பரிசுத்தம் என்பது கடவுள் உறவு சார்ந்தது. கடவுள் அன்பை பிரதிபலிப்பதே பரிசுத்தம். கடவுளுக்கேற்றபடி அன்பு, அமைதி, சந்தோஷத்தை வெளிப்படுத்துவதே பரிசுத்தம். கடவுள் ஐக்கியத்தின் பிரதிபலிப்புதான் பரிசுத்தம். நம்மை சுத்தம் செய்து கொண்டேயிருப்பது அல்ல. கடவுள் உறவினை அதிகமாக நமக்குள் தேடுவதே பரிசுத்தம்.
“தாழ்த்தி கொள்கின்ற நிலையில் நீ நல்லவனாயிரு
உன்னை உயர்த்த வேண்டிய நிலையில் கடவுள் வல்லவராயிருப்பார்.”
சாம்சன்பால்.

மனிதனின் பாவத்தின் நிமித்தமே இயேசு காயப்பட்டார். நமக்கு சமாதானத்தையும் விடுதலையும் பெற்று தரும்படியே இயேசு காயப்பட வேண்டியதாகி இருந்தது.
இன்றைய தவக்கால சிந்தனையின் தலைப்பாக இயேசு ஏன் காயப்பட வேண்டும் என்று இருப்பதை சற்று சிந்திப்போம். ஏசாயா 53:5-ம் வசனம் இப்படி சொல்கிறது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். இந்த வேத வசனம் மிக நன்றாக நமக்கு விளக்கி காட்டுகிறது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் என்று.
மனிதன் கடவுளுக்கு பயந்து உண்மையாக வாழ வேண்டும் என்று இறைவன் பல கட்டளைகளை வேதாகமத்தின் மூலம் அவன் நல்வாழ்விற்கு தந்தார். அது அவனை அவன் சேர்ந்த சமூகத்திற்கு நல்லவைகளான பல நற்காரியங்களை செய்வதற்கும் அவன் நல்லவனாக வாழ்வதற்குமான அடிப்படையாக அமைந்தது. அந்த கட்டளைகளை அவனை மீறச்செய்தது. முதன் முதலில் உண்டாக்கப்பட்ட ஆதி மனிதனின் துணையாகிய ஏவாள் மீறுகிறாள் பின் ஆதாமும் மீறுகிறான். அன்று ஆரம்பித்தது இன்று வரை மனிதன் மீறுதல் செய்கிறவனாகவே வாழ்கிறான்.
உதாரணமாக ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தும் பலர் அதை அணியாமல் வாகனம் ஓட்டவது போல, துணிந்து சட்டத்தை மீறுவது. தேவன் கொடுத்த நல்ல கட்டளைகளை கடைபிடிக்காமல் மனிதன் பாவம் செய்ய பழகி விட்டான். நியாய பிரமாணத்தை மீறுவதே பாவம் என்று வேதம் சொல்கிறது. இப்படி மனிதனின் பாவத்தின் நிமித்தமே இயேசு காயப்பட்டார். நமக்கு சமாதானத்தையும் விடுதலையும் பெற்று தரும்படியே இயேசு காயப்பட வேண்டியதாகி இருந்தது. அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம் என்று வேதம் சொல்கிறது போல இந்த தவக்காலத்தில் இயேசுவின் கட்டளைகளை பின்பற்றி நல்வழியில் நடப்போம்.
- சகோதரி. ரூத்,
சமாதான ஐக்கிய ஜெப ஊழியங்கள், திருப்பூர்.