என் மலர்
கிறித்தவம்
முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். இந்த ஆலயத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.
1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவரே.
இந்த அன்னையின் ஆலயத்திற்கு வருகை தந்த மாமனிதர்களில் ஒரு சிலர்: தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். இது போன்று எண்ணற்ற மாமனிதர்கள், மாமேதைகள் ஆவலுடன் வருகை தந்த தனிப்பெரும் பேற்றினை பெற்றுள்ள தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் தற்போது தங்கத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்பு சொல்லிலடங்காது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.
கி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இப்பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் 1555-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி "சாந்தலேனா' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தது சிறப்பு அம்சம். இப் பேராலயத்தில் இயேசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இப்பேராலயத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு தினமும் காலை, மாலையில் திருப்பலி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா நடைபெறும். இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தூத்துக்குடி நகரின் தெற்கு கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இத் தேவாலயம் ஆன்மிகத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்துக்குடிக்கு தமிழகத்தின் அனைத்து முன்னணி நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. மேலும், சென்னை, மைசூரில் இருந்து ரயில் வசதியும், செனையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவையும் உள்ளது. தூத்துக்குடியில் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை பல உள்ளன.

இயேசுவின் செயல்கள் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, நோக்கம் உண்டு, முக்கியமாக மனிதகுலத்தை நேசிப்பதற்கு இயேசுவின் அன்பு உலகத்தையும், தனிமனித உள்ளத்தையும் சுற்றியே செயல்படுகிறது.
இயேசு ஏன் உன்னை நேசிக்கிறார்? தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16).
இயேசுவின் செயல்கள் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, நோக்கம் உண்டு, முக்கியமாக மனிதகுலத்தை நேசிப்பதற்கு இயேசுவின் அன்பு உலகத்தையும், தனிமனித உள்ளத்தையும் சுற்றியே செயல்படுகிறது. இயற்கையாகவே மனித குலத்தை இயேசு நேசிப்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? பிறந்த குழந்தையை அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் அது களங்கமற்றது. அதனால் எதுவும் செய்ய இயலாது. களங்கமற்ற அழகான இயலாமை நிறைந்த அதே குழந்தை இரண்டு வருடங்களுக்கு பிறகு கத்தி, ரகளை, ஆர்ப்பாட்டம் செய்து தன் காரியத்தை சாதித்து கொள்ளும் சுயநலவாதியாக மாறி இருக்கும்.
ஆனால் நாம் இந்த இரு நிலைகளிலும் அந்த குழந்தையை நேசிப்பதை கைவிடுவதில்லை. இதை போன்றே இயேசுவும் தன் பிள்ளைகளை நேசிக்கிறார். ஆனால் மனம் திரும்பி மாறின பின்பே அந்த பிள்ளைகளை ஏற்றுக்கொள்கிறார். எல்லோரும் பாவம்செய்து தேவ மகிமையற்றவர்களாகி (ரோமர் 3:23) என வேதம் கூறுகிறது.
அப்படி என்றால் இயேசு மனிதனிடம் நேசிக்க என்ன இருக்கிறது? இயேசு பாவத்தை வெறுக்கிறார். மனிதர்கள் பாவம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ரோமர் 5:8 தெளிவாக விளக்குகிறது. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8).
அன்பு கிரியையினால் அறியப்பட வேண்டும். தனிமனிதன் சகமனிதன் மீது வைக்கும் அன்பு மாய்மாலமானது. ஆனால் இயேசு மனிதன் மீது வைத்த அன்பு மாய்மாலமற்றது. பாசாங்கு இல்லாதது. உனக்காக உயிரையும் தருவேன் என்று போலித்தனமாக கூறும் மனிதனை பார்க்கிலும், நம்மீது அன்பு வைத்ததினால் தன் ஜீவனையே பரிசாக மனித குலத்திற்கு ஈந்த தெய்வீக அன்பை நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.
- அ.பிரில்லியன்ஸி, வலங்கைமான்.

மாதாவைக் குறித்து சிந்திக்கும் போது அவர் உண்மையில் மனிதப் பிறவி தானா? என்ற சந்தேகம் வரும். அவர் நம்மிடமிருந்து எவ்வளவோ மாறுபட்டவராகக் காணப்படுகின்றார். இயேசுவைப் போலவே மாதாவும் எல்லா சோதனைகளையும் ஏற்றுக் கொண்டார்.
திருவிவிலியம் தூய கன்னி மரியாவைப் பேறு பெற்றவர் என்று எதனால் அழைக்கின்றது? மாதா கூட தாம் பேறுபெற்றவர் என்றும், எல்லாத் தலைமுறையினரும் தம்மைப் பேறுபெற்றவர் என்று அழைப்பர் என்றும் கூறுகின்றார். (லூக் 1 : 48). வேறு எவருக்கும் கிடைக்காத நான்கு அருளை ஆண்டவர் மாதாவுக்குக் கொடுத்தார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவைக் குறித்து நான்கு மறையுண்மைகளைப் போதிக்கின்றது.
அவை முறையே மாதா இறைவனின் தாய். நித்திய கன்னி, ஜென்ம பாவமில்லாமல் பிறந்த அமலோற்பவ மாதா மற்றும் விண்ணேற்பு அடைந்தவர். இந்த மாபெரும் அருளைப் பெற்றதால் அல்ல அவர் பேறுபெற்றவர் என்று அழைக்கப்படுவது.
மாறாக அவரது நம்பிக்கையால்தான். ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (லூக் 1 : 45). யோவான் நற்செய்தியில் இயேசு இரண்டு நற்பேற்றைக் குறித்து கூறியுள்ளார். ஒன்று : பிறருக்குச் செய்யும் சேவை (13 : 17); இரண்டு : காணாமலே நம்புவது (20 : 19). மாதாவிடம் இந்த நம்பிக்கை இருந்ததால்தான் அவர் பேறுபெற்றவர் ஆனார்.
எல்லா சோதனைகளையும் ஏற்றுக்கொண்டவர்
மாதாவைக் குறித்து சிந்திக்கும் போது. அவர் உண்மையில் மனிதப் பிறவி தானா? என்ற சந்தேகம் வரும். அவர் நம்மிடமிருந்து எவ்வளவோ மாறுபட்டவராகக் காணப்படுகின்றார். இயேசுவைப் போலவே மாதாவும் எல்லா சோதனைகளையும் ஏற்றுக் கொண்டார். பலவிதமாகச் சோதிக்கப்பட்டார். நம்பிக்கையிலும் அவர் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார். ஆனால் நாளுக்கு நாள் மேன்மேலும் நம்பிக்கையில் வளர்ந்தார்!
மாதாவிடம் கபிரியேல் வான தூதர் மங்கள வார்த்தை அறிவித்த போது மாதா அதை ஏற்றுக்கொண்டார். உடனே இறைவார்த்தை மாதாவிடம் தங்கியது. அவர் கருத்தரித்த போது தாம் கருவுற்றிருப்பதை அவரால் மறைக்கவும் முடியவில்லை. எப்படி அவர் கருத்தரித்தார் என்பதற்கு சரியான விளக்கமும் கொடுக்க முடியவில்லை.
தமக்கு மண ஒப்பந்தமான யோசேப்பிடம் என்ன சொல்வது என்று அவர் கண்டிப்பாகக் கலங்கியிருப்பார். கவலைப்பட்டிருப்பார். தமது மணமகளை யோசேப்பு காணச் சென்ற போது மரியா கருவுற்றிருப்பதை அறிய நேர்ந்ததால் அவருடைய மனம் எப்படி துடித்திருக்கும் அவர் மறைவாக அழுதிருப்பார் எப்படி ஒரு மனிதனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்? அது தான் மாதாவின் இதயத்தில் பாய்ந்த முதல் வாளாக இருந்திருக்கும் மாதா
மாதாவின் வாழ்க்கையில் தோன்றிய மாபெரும் சோதனைதான் கல்வாரியில் தம் ஒரே மகனான இயேசுவின் பெருந்துன்பங்களும் இறப்பும். இயேசு ஆடை எதுவுமின்றி, ஓர் அடிமையைப் போல் சிலுவையில் அழுது இறந்தார். சிலிவையில் இறப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்பதுதான் இஸ்ரயேலின் அக்கால எண்ணம்.
இந்த இயேசு உண்மையில் இறைமகன் தானா? இறைவனின் தேஜஸ். மாட்சிமை, வல்லமை, மாண்பு, பெருமை, சிறப்பு எதுவும் இவரது முகத்தில் இல்லையே! திருத்தூதர்களும் சீடர்களும் இயேசுவை விட்டு ஓடிப் போனது அவர்கள் யூதர்களுக்கு அஞ்சியதால் மட்டுமல்ல, தாங்கள் நினைத்ததைப் போன்ற தெய்வீகம் இந்த இயேசுவிடம் காணப்படாததாலும் கூடத்தான்.
மாதாவின் நம்பிக்கை உச்ச கட்ட சோதனைக்குட்பட்டது புனித சனியன்றுதான்! இறந்து நிறம் மங்கி, கட்டைபோல் அடக்கம் செய்யப்பட்டவரிடம் மாதா என் மகனே ! என் இறைவா! என் ஆண்டவரே! என்று சொல்லியிருந்தால், அது தான் அற்புதமான நம்பிக்கை! இறந்து போனவரை நோக்கி நாம், என் இறைவா! என் கடவுளே! என்று சொல்வோமா? யாராவது சொல்வார்களா? ஆனால் மாதா சொன்னார்! அது தான் நம்பிக்கையின் மகுடமாகத் திகழ்கின்றது!
தொமினிக்கன் சபையைச் சேர்ந்தவர்களுக்கு மாதாவைக் குறித்து ஒரு மன்றாட்டு மாலை உள்ளது. அதில் பின்வரும் மன்றாட்டு உள்ளது. புனித சனிக்கிழமையன்றும் இயேசு கடவுள் என்று நம்பிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இது ஓர் அற்புதமான மன்றாட்டு. நாம் தினந்தோறும் சொல்லி மன்றாட வேண்டிய ஒரு மன்றாட்டு. புனித சனியன்று இயேசு இறை மகன் என்று நம்பிய மாதாவின் முன் உயிர்த்தெழுந்த இயேசு தமது முழு மாட்சிமையில் தோன்றிய போது மாதா எந்த அளவுக்கு சந்தோஷப்பட்டிருப்பார் அவரது நம்பிக்கை மெய்ப்பிக்கப்பட்டது அல்லவா?
நம்பிக்கை இல்லாமல் போவது
நம்பிக்கை என்னும் காரியத்தில் மிகவும் கடினமான சோதனைக்குள்ளானவர் கண்டிப்பாக கன்னி மரியாதாம். நம்பிக்கை கொண்டோரின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாமும் பழைய ஏற்பாட்டு நேர்மையாளரான யோபுவும் மாதாவுக்கு நிகராக மாட்டார்கள்! அவ்வளவு கொடிய சோதனைகளை மாதா ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
இருந்தும் அவர் நம்பிக்கையில் நிலைத்திருத்தார். உறுதியாக இருந்தார். ஒரு சிறுசோதனை வந்தால்கூட பலர் இறைவனைவிட்டு விலகி விடுகின்றனர். நாற்பது ஆண்டுகள் சோதனைக்குள்ளான போது இஸ்ரயேலர் கூட இறைவனிடமிருந்து விலகினர். அவர்களுள் பலர் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுத்தனர். தங்களுக்கென ஒரு தலைவனை நியமித்துக் கொண்டு எந்த எகிப்திலிருந்து தப்பியோடி வந்தனரோ அதே எகிப்துக்கு மீண்டும் அடிமைகளாகச் செல்ல நினைத்தனர் (எண் 14 : 1 – 4).
யோபுவின் பிள்ளைகள் அனைவரும் இறந்தனர். அவரது சொத்துக்கள் அனைத்தும் அழிந்தன. யோபுக்கு கொடிய நோய் வந்தது அவரது காயங்களில் புழு அரித்தது. அவரது நண்பர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். ஆனால் அவர் இறைவனைப் போற்றித் துதிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவரது மனைவி கூட பின்வருமாறு பரிகாசம் செய்தாள்: இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிaர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே? (யோபு 2 : 9). சோதனை வந்தபோது அவள் கடவுளை விட்டு விலகினாள்.
ஆண்டவர் இயேசு திவ்விய நற்கருணையைப் பற்றி போதித்த போது விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். என்று சொன்ன போது (யோவா 6 : 51), அதுவரை அவரைப் பின்பற்றிய சீடர்களுள் பலர் முணுமுணுத்தனர்.
பலர் அவரை விட்டு விலகினர் (யோவா 6 : 66). ஆனால் தூய கன்னி மரியாவோ இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருந்தார்! பயப்படும் குழந்தை தன் தந்தையின் கழுத்தை இறுக்கி பிடித்து மார்பில் சாய்ந்து கொள்வதுபோல் மாதா ஒவ்வொரு சோதனையிலும் இறைவனைக் கெட்டியாகப் பிடித்து நம்பிக்கையில் உறுதியடைந்தார்! இது தான் மாதாவுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். நாம் சோதனையில் இறைவனிடமிருந்து விலகிச் செல்கிறோம். ஆனால் மாதா இறைவனோடு இணைந்திருந்தார். நம்பியதால் பேறுபெற்றவரான மாதா வழியில் செல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக!

புதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோணியாரே எங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும்.
புதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோணியாரே எங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும். குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற புனித அந்தோணியாரே, துன்பப்படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே, ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உம்மிடம் வருகின்றோம். நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி, எம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வேண்டிய வரங்களைப் பெற்றுத்தாரும். இறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோணியாரே, நாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நாங்கள் வந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும்.
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோணியாரே, மகிமையில் விளங்கிடும் புனித லீலியே, துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே, அழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும். எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும். நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால் எங்களிடமிருந்து நீக்கியருளும்.
ஆமென்.
*தூய அந்தோணியார் மன்றாட்டு மாலை* :
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய தமதிரித்துவமாயிருக்ககிற ஒரே இறைவா
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தூய மரியாயே
கன்னியரில் உத்தம கன்னிகையே
பதுவைப் பதியரான தூய அந்தோணியாரே
பரத்தின் சீர்மிகு பெட்டகமான தூய அந்தோணியாரே
தூய்மையில் லீலி மலரான தூய அந்தோணியாரே
தவ வலிமை மிக்க தூய அந்தோணியாரே
தருமத்தை விரும்பிச் செய்து வந்த தூய அந்தோணியாரே
திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான தூய அந்தோணியாரே
தரும நெறியில் மாறா மனத்தினை உடைய தூய அந்தோணியாரே
சிற்றின்ப ஆசையினை வென்றவரான தூய அந்தோணியாரே
போர்ச்சுக்கல் நாட்டின் நவ விண்மீனான தூய அந்தோணியாரே
நற்செய்தியை ஊக்கமுடன் பிரசங்கித்த தூய அந்தோணியாரே
இறைவனின் திருவாக்கில் குரல் ஒலியான தூய அந்தோணியாரே
தூய ஆவியானவரின் படிப்பினைகளை விரும்பியவரான தூய அந்தோணியாரே
விசுவாசமில்லாதவர்களுக்கு வாய்மையாய் உபதேசம் செய்கிறவரான தூய அந்தோணியாரே
பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான தூய அந்தோணியாரே
புண்ணியவான்களுக்கு நிறைவான படிப்பினையான தூய அந்தோணியாரே
மீனோரென்கிற துறவிகளுக்குப் படிப்பினையான தூய அந்தோணியாரே
அப்போஸ்தலர்களின் கொழுந்தான தூய அந்தோணியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் தருகிறவரான தூய அந்தோணியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான தூய அந்தோணியாரே
வழிதவறிப் போவோர்க்குத் துணையான தூய அந்தோணியாரே
சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் தூய அந்தோணியாரே
குற்றமற்ற மக்களின் ஆறுதலும் பாதுகாவலுமான தூய அந்தோணியாரே
ஊமைகளைப் பேசச்செய்கிறவரான தூய அந்தோணியாரே
உண்மையைப் போதிக்கும் உபதேசியான தூய அந்தோணியாரே
பசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான தூய அந்தோணியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான தூய அந்தோணியாரே
பிணியாளர்களைக் குணமாக்குகிறவரான தூய அந்தோணியாரே
மரணமடைந்தோர்க்கு இறைவன் உதவியால் உயிர்கொடுத்தவரான தூய அந்தோணியாரே
பிறவிக் குருடருக்குப் பார்வை அளித்த தூய அந்தோணியாரே
காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோணியாரே
இழந்துபோன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோணியாரே
வழக்காளிகளுடய உண்மையைப் பாதுகாக்கிறவரான தூய அந்தோணியாரே
பரத்திற்கு சுதந்திரவாளியான தூய அந்தோணியாரே
தரித்திரருக்கு இரத்தினமான தூய அந்தோணியாரே
கடலில் மீன்களுக்கு உபதேசித்தவரான தூய அந்தோணியாரே
விஷஉணவு அருந்திய தூய அந்தோணியாரே
அப்போஸ்தலர்களின் குறைவற்ற தூய்மையை நேசித்தவரான தூய அந்தோணியாரே
புண்ணியமென்கிற ஞான வேளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான தூய அந்தோணியாரே
உலகமென்கிற அபத்தத்தை விட்டகன்ற தூய அந்தோணியாரே
கடலில் தத்தளித்த வீரர்களை மீட்ட தூய அந்தோணியாரே
உம்மை வேண்டுவோரின் அன்பரான தூய அந்தோணியாரே
எண்ணிறந்த ஆன்மாக்களை பரத்திற் சேர்த்த தூய அந்தோணியாரே
நன்னாக்கு அழியாத நற்றவரான தூய அந்தோணியாரே
பிரான்சிஸ் அசியாரின் சபை அரணான தூய அந்தோணியாரே
சிறுகுழந்தை வடிவில் வந்த தேவபாலனைத் தாங்கிய தூய அந்தோணியாரே
நீர் இறந்ததை சிறு குழந்தை வழியாக தெருக்களில் இறைவனால் அறிவிக்கப்பட்ட பேறுபெற்றவரான தூய அந்தோணியாரே
இறந்த ஓர் ஆண்டிற்குள் பீடத்தின் மகிமைக்கு உயர்த்தப்பட்ட தூய அந்தோணியாரே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
மன்றாடுவோமாக:
தூய அந்தோணியாரே, வீரமிகும் ஆயரே, துன்புறுவோருக்கு மகிழ்வு தருபவரே, பாவிகளை மீட்டிட அரும்பாடுபட்டவரே, இவ்வுலக துன்பங்களுக்குப் பின் எங்களுக்கு முடிவில்லா பேரின்ப வாழ்வு தரவும் இக்கட்டுகள் நீங்கப் பெறவும் வேண்டும் வரங்கள் கிடைக்கவும், எங்கள் ஆண்டவரும் இறைவனின் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும். இயேசு கிறிஸ்துநாதர் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படியாக தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

வேதாகமத்தில் சங்கீதம் முதலாம் அதிகாரம் 2-ம் வசனத்தில் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை நாம் எப்படி இருந்தோம் என்பதை விட இந்த தவக்காலத்தில் எப்படி நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேதத்தை எப்படி தியானிப்பது, கர்த்தருக்கு எப்படி பாக்கியவானாய் இருப்பது என்பது குறித்து சற்று தியானிப்போம்.
பொதுவாக ஒரு இடத்தில் கண்காட்சி நடந்தால் அங்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருட்கள் பிடித்தமானதாக அமையும். அதில் ஒருவர் என்ன செய்வார் என்றால் தனக்கு பிடித்தமான பொருளை எடுத்து இது எப்படி செய்தார்கள்?, எப்படி உபயோகப்படுத்துவது? என்பதை குறித்து ஆய்வு செய்து பின்னர் அந்த பொருளை வாங்குவார். சிலர் பார்த்தவுடன் நமக்கு பிடித்திருக்கிறது நாம் வாங்கி கொள்ளலாம் என்று வாங்கி சென்று விட்டு அந்த பொருள் வீட்டில் ஒரு மூலையில் கிடக்கும்.
இப்படித்தான் நாமும் வாரந்தோறும் கோவிலுக்கு செல்கிறோம். விசேஷ நாட்களில் கோவிலுக்கு செல்கிறோம். அப்படி செல்லும் போது கோவிலுக்கு அருகே புதுப்புது கடைகள் இருக்கும் உடனே அங்கு சென்று பல்வேறு பொருட்களை வாங்கி விட்டு, பின்னர் வேதாகமத்தை புதிய புதிய வடிவங்களில் பார்த்து அதையும் வாங்கி வருகிறோம். அதை சிலர் வாங்கி வந்து வீட்டின் மூலையில் போட்டு விடுகின்றனர். ஆனால் சிலர் அந்த வேதாகமத்தை ஆராய்ந்து அறிகின்றனர். இப்படி வேதத்தை ஆராய்ந்து தியானிக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு ஏற்பட்டு நம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
இப்படி வேதாகமத்தை வாங்கி வந்து தியானிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களிடம் எங்கள் வீட்டில் சிறியதும், பெரியதுமாக பல்வேறு வடிவங்களில் உள்ளது என்று பெருமை பாராட்டாமல் அந்த வேதாகமத்தை இந்த தவக்காலத்தில் தியானிக்க ஆரம்பிப்போம்.
இதைத்தான் வேதாகமத்தில் சங்கீதம் முதலாம் அதிகாரம் 2-ம் வசனத்தில் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்’ என்று கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த தவக்காலத்தில் வேதத்தை வாசித்து அதை தியானித்து கர்த்தருக்கு பாக்கியவானாய் மாற முயற்சிப்போம். கடவுள் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
சகோ.அகஸ்டின்குமார், வீரபாண்டி, திருப்பூர்.

மிக கடினமான சூழல்களை கூட இயல்வாக எதிர்கொள்வதற்கு நகைக்சுவை உணர்வு அடிப்படையானது என்பதை உணர்ந்திடுவோம். நம்மால் முடிந்த அளவுக்கு பிறரை மகிழ்ச்சிப்படுத்தி அதன் வழியாக நல்சமுதாயத்தினை அமைத்திடுவோம்.
மொழிக்கு முன்னதாக மனிதம் கட்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு. அகில உலகத்துக்கு பொதுவான மொழி இது. பார்வையற்ற கேட்கும் திறன் இல்லாத குழந்தைகள் சுட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பதே சிரிப்பின் தனித்தன்மை ஆகும். சிரிக்கிற மனிதனே, சிறப்போடு அகிலத்தில் வாழ்கின்றான். யாவருக்கும் பயன்படுகிற சமுதாயத்தை கட்டமைக்கிறான். நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதர்கள், வாழ்வின் எத்தகைய செயல்களையும் மிக இயல்பாக கையாள்கிற அணுகுமுறையினை முழுதாய் பெற்று இருக்கின்றனர். துன்பங்கள், நெருக்கடிகள் போன்ற எது அவர்களை தாக்கினாலும் துவண்டு போய் தடுமாறி கீழே விழுந்து விடுவதில்லை. பிறருடைய கேலி, கிண்டல்களையும் பெரிதாக எடுத்திட மாட்டார்கள்.
இயல்பாகவே மிக நெருக்கமான மனிதர்களோடு மட்டும் தான் கேலி, கிண்டல் செய்ய முடியும். அப்போது கேலி, கிண்டல் எவ்விதத்திலும் அம்மனிதனை பாதிக்காது. நம்மீது உள்ள அக்கறையினாலும், அன்பினாலும் தான் கேலி, கிண்டல் செய்கின்றனர் என்பர். ஆனால் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள், எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவர்களாகவே இருப்பர். சின்ன சின்ன செயலை கூட மிகப்பெரிய பிரச்சனையாகவே மாற்றி விடுவர். கேலி செய்கிற மனிதர்களுடன் நாம் சேர்ந்து வாழ பழகி விட்டால் எல்லாம் நல்லதாகவே தெரியும். நகைச்சுவை உணர்வு மனிதனுக்கு தேவையான அடிப்படை உணர்வு. இது உள்ள ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்துக்கும் மிக மிக அவசியமானதாகும். ஒரு குழந்தை சராசரியாக தினசரி 400 முறை சிரிக்கிறதாம். தினமும் குறைந்தபட்சம் 30 முறையாவது ஒரு மனிதன் சிரிக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் ஆக்கப்பூர்வமான மனநிலையோடு தொடர்ந்து வளர நகைக்சுவை உணர்வினை நம்மில் வளர்த்திடுவோம். மிக கடினமான சூழல்களை கூட இயல்வாக எதிர்கொள்வதற்கு நகைக்சுவை உணர்வு அடிப்படையானது என்பதை உணர்ந்திடுவோம். நம்மால் முடிந்த அளவுக்கு பிறரை மகிழ்ச்சிப்படுத்தி அதன் வழியாக நல்சமுதாயத்தினை அமைத்திடுவோம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறை மாவட்டம்.

இந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து பல்வேறு கஷ்டங்கள் அனுபவித்து கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தன்னையே சிலுவையில் ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து மேன்மையான ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்.
இயேசு நமக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தது குறித்து இந்த லெந்து நாட்களில் தியானித்து வருகிறோம். தன் வாழ்வை எப்படி நமக்காக அர்ப்பணித்தார் என்று பார்த்தால் இந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து பல்வேறு கஷ்டங்கள் அனுபவித்து கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தன்னையே சிலுவையில் ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து மேன்மையான ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்.
இப்படி நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்த இந்த சிலுவையின் ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெற்றுக்கொள்வது? என்பதை வேதாகமத் தில் மத்தேயு 10:38-ல் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இந்த சிலுவையை பின்பற்றுவது? என்று சற்று தியானிப் போம்.
அநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர், நன்றாக வேதம் வாசிக்கின்றனர், கோவிலுக்கு சென்று ஆராதனை செய்கின்ற னர். ஆனாலும் அவர்களின் வாழ்க்கையில் தேவ ஆசீர்வாதங் கள் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசம் இருந்தாலும் சரியான அனுதினமும் தேவனுக் கென்று அர்ப்பணிப்பு இல்லாமல் பழைய மனிதனாகவே ஜென்ப சுபாவத்திலே உள்ளனர். இதனால் கடவுளின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்காமலேயே உள்ளது.
கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும். அவர் நமக்காக சிலுவையில் அறையப்பட்டு பாடுகளை அனுபவித்ததை நினைவுகூர்ந்து நாமும் சிலுவையை பின்பற்றி தேவசாயலாக மாற வேண்டும்.
இப்படி செய்தால் நம் வாழ்க்கையில் தேவ ஆசீர்வாதங்கள் பெருக செய்வார் என்பதில் ஐயமில்லை ஆமென்.
சகோ.சாம்சன், திருப்பூர்.

ஒரு சவால் பிரச்சனை நமது கண்முன் நிற்கிற போது அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது வாழ்வின் வெற்றி தோல்வி அமைகிறது.
ஒரு சவால் பிரச்சனை நமது கண்முன் நிற்கிற போது அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது வாழ்வின் வெற்றி தோல்வி அமைகிறது. மனித வாழ்வே சவால் நிறைந்தது தான். மனித குலம் காடுகளில் தான் தனது வாழ்வை தொடங்கியது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்த்து போராடியே தன்னை தக்க வைத்து கொண்டது. கொடிய விலங்குகள், மலைப்பாம்புகள், விஷப்பூச்சிகள் போன்றவற்றை எதிர்த்தே வாழ்ந்து வந்தான் மனிதன். இதற்கிடையே மழை, வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவையும் மனிதனை எதிர்த்து யுத்தம் நடந்தன.
சவால்களை, நெருக்கடிகளை கண்டு பயந்து ஓடுவதல்ல வாழ்க்கை. மாறாக அவற்றோடு போட்டிப்போட்ட வாழ்வதிலே உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்திருவோம். வாழ்வில் இருந்து விலகி ஓடும் மனிதர்களை விட எதிர்த்து நின்று போராடுகிறவர்களே உயர்ந்த இடம் பெறுகின்றனர். சவாலை சந்திப்பது என்று முடிவெடுத்து விட்டால், அதில் எப்படியும் வெற்றியினை எட்டிப்பிடித்திட முடியும்.
இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் கத்தோலிக்க திரு அவையின் தொடக்க கால வரலாறுகளை ஆய்வு செய்கிற போது பல்வேறு சிக்கல்கள், வேதனைகள், குழப்பங்கள் போன்றவற்றுக்கு மத்தியிலே கிறிஸ்தவம் பிறப்பெடுத்து பல மனிதர்களின் உயிர்தியாகங்களும், ஒப்புயர்வற்ற சிந்தனை திறன்களுமே கிறிஸ்துவத்திற்கான களத்தினை இம்மண்ணில் பிறப்பெடுக்க செய்தது. இதையே எல்லா சமயங்களில் வரலாற்றிலும் நாம் கண்டுணர முடியும். போராட்டங்களோடு தான் தனது இருப்பை பல்வேறு சமயங்கள், உலகத்தில் உறுதி செய்திருக்கிறது.
இயேசுவின் துன்பகரமான பாடுகளே, ஏராளமான மனிதர்களுக்கு வாழ்வினை உறுதி செய்து கொடுத்தது. துன்பத்தின் வழியாகவே வாழ்வும், மீட்பும் உண்டு என்பதை மிக அழுத்தமாய் பதிவு செய்தார். இன்று மனிதர்களாககிய நாம் ஒவ்வொருவருமே அத்தகைய மனப்பான்மையோடு வாழ்வினை எதிர்கொள்வதற்கு அழைக்கப்படுகிறோம். மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார். அவரின் பார்வையில் இருந்து அவை மறைந்திருப்பது இல்லை. மனிதரின் செயல்கள் அனைத்தும் கதிரவன் ஒளிபோல் அவர் முன் தெளிவாய் தொடங்குகின்றன. அவருடைய கண்கள் எப்போதும் அவர்களுடைய வழிகள் மீது இருக்கும்(சீராக்17:15,19). இதனை முழுதாய அறிந்து வாழ்வினை எதிர்கொள்ள நாம் தொடங்குகிற போது அனைத்தையும் சமநிலையோடு நாம்மால் அணுக இயலும். போராட்ட வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்போம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் மீது வைத்துள்ள அன்பை போல, நாமும் பிறரிடத்தில் அன்பாயிருக்க அழைக்கிறார்.
நாம் மற்றவர்கள் மீது எப்படி அன்பாய் இருக்க வேண்டும் என்று வேதாகமத்தில் யோவான் 15-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில், ‘நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையிருக்கிறது’ என்று சொல்லப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து இந்த மேற்கண்ட வசனத்தில் நம்மை பிறர்மேல் அன்பாயிருக்க சொன்னது மாத்திரமல்லாமல் அதை கட்டளையாய் கைக்கொள்ள வலியுறுத்துகிறார். இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது தன்னலமற்ற தெய்வீக அன்பை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தினார். அவருடைய அன்பில் இரக்கமிருந்தது, சாந்தமிருந்தது, பொறுமையிருந்தது, அனைத்திற்கும் மேலாக பிறரை மன்னிக்கும் தன்மை இருந்தது. இறுதியில் அவர் மனுக்குலத்திற்கு தன் ஜீவனையே பலியாகக்கொடுத்தார். ஒருவன் சகல அறிவையும், வரத்தையும் உடையவனாயிருந்து, அன்பு அவனுக்கு இல்லாமல் போனால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பான் என்றும், ஒருவன் தனக்கு உண்டான யாவற்றையும் அன்னதானம் பண்ணினாலும், தன் சரீரத்தை சுட்டெரிக்கக்கொடுத்தாலும் அன்பு அவனிடம் இல்லை என்றால், அதில் அவனுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. மேலும் அன்புக்கு பொறாமை இல்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாக இராது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும், அன்பு சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் நம்பும் என்று பரிசுத்த வேதாகமம் அன்பை பற்றி தெளிவாகச்சொல்லுகிறது.
1 யோவான் 4-ம் அதிகாரம் 8-ம் வசனத்தில், ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்’ என்று வாசிக்கிறோம். தேவனுடைய அருமையான குணாதிசயம் அன்பு. ஆகவே இந்த தவக்காலங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் மீது வைத்துள்ள அன்பை போல, நாமும் பிறரிடத்தில் அன்பாயிருக்க அழைக்கிறார்.
ரூத்பிமோராஜ். ராக்கியாபாளையம்.

இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக அவருக்கு ஏற்பட்டன என்ற கேள்விக்குப் பதில் பல விதங்களில் பல காலங்களில் தரப்பட்டுள்ளது.
இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக அவருக்கு ஏற்பட்டன என்ற கேள்விக்குப் பதில் பல விதங்களில் பல காலங்களில் தரப்பட்டுள்ளது. மரபு வழி விளக்கம் இது: மூன்று சோதனைகள் வழியாக இயேசு மூன்று பாவங்களுக்கு உட்படுமாறு சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் தம்மைச் சோதித்த அலகையை முறியடித்து, சோதனைகளை வென்றார். அந்த மூன்று சோதனனைகள் இவை:
அகங்காரம் என்னும் பாவம்: இயேசு உச்சியிலிருந்து குதித்தால் அவர் கீழே விழுந்துவிடாமல் கடவுளின் தூதர்கள் அவரைக் காக்க மாட்டார்களா என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.
போசனப் பிரியம் (பெருந்தீனி விருப்பம்) என்னும் பாவம்: இயேசு கற்களை அப்பமாக மாற்றித் தம் பசியைத் தீர்க்க முடியாதா என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.
பேராசை என்னும் பாவம்: உலக அரசுகள் மீது அதிகாரம் செலுத்தலாமே என்னும் சோதனை வழி வெளிப்பட்டது.
நோன்பு இருந்த ஒருவர் தம் பசியை ஆற்ற முனைந்தால் அதை "பெருந்தீனி விருப்பம்" என்று கூற முடியாது என்பதால் அதை ஓர் உயர்வு நவிற்சி அணி எனலாம் என்று ஜோன்சு என்பவர் கருத்துத் தெரிவிக்கிறார்.
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி என்னும் புதின ஆசிரியர் "கரமாசோவ் சகோதரர்கள்" என்னும் தம் புதினத்தின் ஒரு பாத்திரத்தின் வழி தருகின்ற விளக்கம் இது: இயேசு இவ்வுலகில் மெசியாவாக, மீட்பராக வந்தார். ஆனால் எத்தகைய மெசியா அவர்? அவர் கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து, அவரிடத்தில் நம்பிக்கை கொண்டவராகத் தமது பணியை ஆற்றுவாரா அல்லது தமது சொந்த விருப்பப்படி, அதிகாரத்தைக் கைப்பற்றி கொடுங்கோல் மன்னன் போல அரசுகளைக் கையகப்படுத்தி மக்களை ஒடுக்குவாரா? இது இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை. அவர் முன்னிலையில் அதிகார மமதை ஒரு பக்கம் கீழ்ப்படிதல் மறுபக்கம் என்று இரு முடிவுகள் வைக்கப்பட்டன. அவர் எதைத் தேர்ந்தெடுப்பார்? - இதுவே இயேவுக்கு ஏற்பட்ட சோதனை. [17]
எனவே, இயேசு எந்த முடிவைத் தேர்ந்தெடுக்கும்படி சோதிக்கப்பட்டார்?
தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களிலிருந்து தம்மை விடுவிப்பது அவர் பணியா? (கற்களை அப்பமாக்கி உண்ணுவதற்கான சோதனை)
எல்லாரும் காணும்படி மந்திர மாயஜால வித்தைகள் நிகழ்ந்த்தி மக்களைக் கவர்வது அவரது பணியா? (கோவில் முகட்டு உச்சியிலிருந்து கீழே குதித்தாலும் காயம் ஏற்படாமல் தப்பிக்க சோதனை)
உரோமையரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கின்ற அரசியல் விடுதலைப் போராளியாக அவர் மக்களுக்குத் தம்மைக் காட்டுவாரா? (உலக அரசுகள் மீது ஆட்சி அதிகாரம் பெறுவதற்கான சோதனை)
ஜான் ஹவட் யோடர் (John Howard Yoder) என்பவர் எழுதிய “இயேசுவின் அரசியல்” (The Politics of Jesus) என்னும் நூலில் கூறுவது: இயேசு பாலைநிலத்தில் சந்தித்த சோதனைகள் பிற்காலத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அரசியல் தலைவராக அவர் மாறும்படியாக அவருக்கு ஏற்பட்ட சோதனைகளின் முன் அறிவிப்புப் போல அமைந்தன. அச்சோதனைகள் கீழ்வருவன:
இயேசு பாலைநிலத்தில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு அளித்தார். ஐந்து அப்பங்களையும் சில மீன்களையும் பலுகச் செய்து அவர் மக்களுக்கு உணவளித்தார். உடனேயே மக்கள் அவரைத் தம் அரசராக ஆக்கிவிட முயன்றார்கள். அச்சோதனைக்கு இடம் கொடுப்பதா?
இயேசு எருசலேம் கோவிலுக்குச் சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடித்தார். கோவில் மீது தமக்கு அதிகாரம் உண்டெனக் காட்டினார். அக்கட்டத்தில் அவருக்கு மக்களுடைய ஆதரவு தாராளமாக இருந்தது. ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கிவிட்டால் என்ன என்ற விதத்தில் ஏற்பட்ட சோதனைக்கு இடம் கொடுப்பதா?
இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்குமுன் கெத்சமனி தோட்டத்தில் தந்தையை நோக்கி மன்றாடிக்கொண்டிருந்த வேளையில் அவரைக் கைதுசெய்ய வந்தவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வானதூதர்களின் படையை வரவழைக்கின்ற ஒரு சோதனை ஏற்பட்டது. அச்சோதனைக்கு இடம் கொடுப்பதா?
இவ்வாறு இயேசுவின் சோதனைகளை விளக்குகிறார் யோடர்.

இயேசு தாம் சோதிக்கப்பட்ட நாள்களில் கடவுளிடத்தில் கொண்ட நம்பிக்கையை இழந்துவிடவில்லை. மாறாக, சோதனைகளின் நடுவிலும் நிலைத்துநின்றார்
நோன்பிருந்தபோது தம்மை சோதித்த அலகையை முறியடித்ததும், வானதூதர் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர் (மத்தேயு 4:11).
நற்செய்திகளின்படி, இயேசு அலகையினால் சோதிக்கப்பட்டு அச்சோதனைகளை வென்றார். "அலகை இயேசுவை விட்டு அகன்றது"; "உடனே வானதூதர் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர்" (மத். 4:11). லூக்கா கூற்றுப்படி, "அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும் வரை இயேசுவை விட்டு அகன்றது" (லூக் 4:13). எனவே, அலகை மீண்டும் திரும்பிவரும் என்ற கருத்து தொக்கிநிற்கின்றது.
மாற்கும் மத்தேயுவும் "வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்ததை" குறிப்பிடுகின்றனர். லூக்கா அக்குறிப்பைத் தரவில்லை. மத்தேயு நற்செய்தியின்படி, இங்கு மீண்டும் ஒருமுறை இயேசு எலியாவோடு ஒப்பிடப்படுவது தெரிகிறது (காண்க: 1 அரசர்கள் 19:4-9). எலியாவுக்குக் காகங்கள் உணவு கொண்டுவந்தன.
இயேசு தாம் சோதிக்கப்பட்ட நாள்களில் கடவுளிடத்தில் கொண்ட நம்பிக்கையை இழந்துவிடவில்லை. மாறாக, சோதனைகளின் நடுவிலும் நிலைத்துநின்றார். எனவே, கடவுள் அச்சோதனைகளின் முடிவில் இயேசுவுக்கு வானதூதர் வழியாக உணவளித்தார். சிலர் வானதூதர் செய்த பணிவிடை அவர்கள் அலகையைத் துரத்தியதைக் குறிக்கிறது என்று விளக்குகின்றனர்.

இயேசு தன்முன்னால் விழுந்து தன்னை வணங்கினால் அவருக்கு உலக அரசுகளைக் கொடுப்பதாகக் கூறி, அலகை அவரை சோதித்தது (மத்தேயு 4:8-9).
இறுதி சோதனையின்போது அலகை இயேசுவை “மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,” தன்னை வணங்கச் சொன்னது (மத்தேயு 4:8-9). இந்த “உயர்ந்த மலை” யாது என்பது குறித்துப் பல விளக்கங்கள் தரப்படுகின்றன. அவை:
எருசலேம் நகரிலிருந்து எரிக்கோ நகருக்குச் சென்ற சாலையில் ஒரு சுண்ணாம்புக் கல் குன்று உள்ளது. அது “குவாராந்தானியா குன்று” என்று அழைக்கப்படுகிறது. அலகை இயேசுவை அக்குன்றின்மேல் நிறுத்தி சோதித்திருக்கலாம்.[21]
ஜாண் கால்வின் இயேசுவை அலகை ஓர் “உயர்ந்த இடத்திற்குக் கொண்டுசென்று” உலக அரசுகளைக் காட்டி, அவரை சோதித்தது என்று கூறுகிறார். ஜெனீவா விவிலியம் அவ்வாறே மொழிபெயர்க்கிறது.
”உலக அரசுகள்” என்பது நிலப்பகுதியை அல்ல, மாறாக “உலகை ஆளுகின்ற அதிகாரம்” என்ற பொருளைக் குறிக்கிறது.
”உலக அரசுகள் அனைத்தையும்” அலகை காட்டியது என்னும்போது, இயேசுவின் காலத்தில் அக்கூற்று ஒரு சிறு நிலப்பகுதியையே குறித்தது. எனவே, அதை ஓர் உயர்ந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. ஆயினும் அமெரிக்காக்கள் மற்றும் ஆஸ்திரேலியா பகுதி மக்களினங்களை இங்கு அடக்க முடியாது.
”உயர்ந்த குன்று” என்பதை எழுத்துக்கு எழுத்து பொருள் கொள்ளலாகாது. சோதனைகள் இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட அனுபவங்களே. அந்த அனுபவங்களையே இயேசு ஓர் உவமை வழியாக எடுத்துக் கூறினார்.[22]
இயேசு தன்முன்னால் விழுந்து தன்னை வணங்கினால் அவருக்கு உலக அரசுகளைக் கொடுப்பதாகக் கூறி, அலகை அவரை சோதித்தது (மத்தேயு 4:8-9).
அதற்கு இயேசு கொடுத்த பதில் இது: “அகன்று போ, சாத்தானே. ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” (மத்தேயு 4:10).