search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசு சந்தித்த முதல் சோதனை: கற்களை அப்பமாக மாற்றலாமே

    கடவுளின் தூய ஆவி இயேசுவை ஓர் பாலைநிலத்திற்குக் கொண்டுசெல்கிறார். அங்கு இயேசு நோன்பிருக்கிறார். அதே பாலைநிலப் பின்னணியில் தான் இயேசு அலைகயால் சோதிக்கப்படுகிறார்.
    கடவுளின் தூய ஆவி இயேசுவை ஓர் பாலைநிலத்திற்குக் கொண்டுசெல்கிறார். அங்கு இயேசு நோன்பிருக்கிறார். அதே பாலைநிலப் பின்னணியில் தான் இயேசு அலைகயால் சோதிக்கப்படுகிறார். அலக்சாண்டர் ஜோண்சு என்பவர் தரும் தகவல் இது: இயேசு சோதிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்ற பாலைநிலம் எருசலேம் நகருக்கும் எரிகோ நகருக்கும் இடையே பரந்துகிடக்கின்ற, பாறைகள் நிறைந்த வனாந்தரப் பகுதி என்று ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே அடையாளம் காட்டப்பட்டு வருகிறது. அதில் “குவாராந்தானியா குன்று” (Mount Quarantania - பொருள்: நாற்பது நாள் தொடர்பான மலை) பகுதியில் இயேசு நோன்பிருந்தார்.

    பாலைநிலம் என்பது, யூத மரபில், மக்கள் வாழும் சமுதாயத்திற்குப் புறம்பே கிடக்கும் பாழடைந்த நிலமாகவும், அங்கே அலகைகள் உலவுவதாகவும் கருதப்பட்டது. லேவியர் 16:8-10 போன்ற சில பாடங்களில் “போக்கு ஆடு” என்று அழைக்கப்படுவதை சிலர் “அசாசேல்” என்னும் அலகையாயக் கொண்டு அது பாலைநிலத்தில் உலவியதாகக் கொண்டனர். வேறு சிலர், பாலைநிலத்தை இன்பவனமான ஏதேன் தோட்டத்தோடு தொடர்புபடுத்தியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி, முதல் மனிதரான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் இருந்ததுபோல, புது மனிதரும் புதிய ஆதாமுமான இயேசு பாலைவனத்தில் இருந்தார். இக்கருத்துக்கு மத்தேயு நற்செய்தியில் ஆதாரம் இல்லை என்று கூறி, அறிஞர்கள் மேற்கூறிய விளக்கத்தை ஏற்பதில்லை.

    பாலைநிலம் என்பது விவிலியத்தின் வேறு இடங்களோடு தொடர்பு படுத்தப்படுகிறது. அதாவது, இசுரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்து வழிநடந்தனர் (விடுதலைப் பயணம் நூல்). மோசேயும் பாலைநிலத்தில் பல நாள்களைக் கழித்தார். அந்த நிகழ்ச்சிகள் இயேசுவின் பாலைநில அனுபவத்திற்கு முன்காட்சிகள் போல் உள்ளன.

    இயேசு தம்முடைய பசியைத் தீர்த்திட கற்களை அப்பமாக மாற்றலாமே என்று கூறி அலகை அவரை சோதிக்கிறது. அதற்காக அலகை இயேசுவை நோக்கி “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றது. ஆனால் இயேசு மறுமொழியாக, “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்” என்று மறைநூலில் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (காண்க: திருப்பாடல்கள் 91:12). அலகையின் சோதனையை முறியடிக்கிறார் (மத்தேயு 4:1-4). 
    Next Story
    ×