search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    புது வாழ்வு கொடுத்த இயேசு

    இயேசுவே நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை சுமந்தீர் என சாபங்களை சுமந்து தீர்த்து விட்டீர் என நாம் நம்புகிறேன் என அவரிடம் நம்பிக்கையோடு வாய்திறந்து சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை மாறுவதை காண்பீர்கள்.
    அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். பொதுவாக ஒருவருடைய மரணம் ஒரு இழப்பாகும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மரணம் இந்த மனுக்குலத்திற்கே பெரிய நன்மையும், ஆசீர்வாதமுமாகும். கிறிஸ்து நமக்காக சாபமாகி, சாபத்தில் இருந்து நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் என வேதத்தில் (கலாத்தியர்:3-13) பார்க்கிறோம். இயேசு ஏன் மரிக்க வேண்டும்? இயேசு வாழ்ந்த காலத்தில் ரோம பேரரசுதான் உலகத்தை ஆட்சி செய்தது. கொடிய குற்றவாளிகளை ரோமர்கள் சிலுவையில் அறைந்து கொல்லுவார்கள். இயேசு கிறிஸ்து ஒரு குற்றமும், பாவமும் செய்யாதவர். அவரை விசுவாசித்த பிலாத்து என்ற மன்னன் அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை என தீர்ப்பளித்தான். அப்படியானால் இயேசு ஏன் இப்படிப்பட்ட கொடிய மரணத்தை தழுவ வேண்டும்? அதைத்தான் மேற்காணும் பைபிள் வசனம் கூறுகின்றது. நமக்காக இயேசு சாபமானார். நம்முடைய பாவம், நம் முன்னோர்களின் பாவம் ஆகியவற்றினால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள், வியாதிகள், மரணங்கள், நஷ்டங்கள் இவைகளே சாபங்களாகும்.

    நம்முடைய பாவங்களை இயேசு சுமந்தார் என பைபிள் (1 பேதுரு 2:24) கூறுகிறது. முழு மனுக்குலத்தின் பாவத்தையும் இயேசு தன்னுடைய உடலில் ஏற்றுக்கொண்டு சிலுவையில் சுமந்து தீர்த்தார். உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவையில் சாபமானார். இயேசு நம்முடைய பாவங்களுக்குரிய தண்டனைகளை தன்மேல் ஏற்றுக்கொண்டார். எனவே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் அவரிடத்தில் மட்டுமே உண்டு. யாரெல்லாம் அவரிடத்தில் நம்பிக்கை வைத்து, அவரிடத்தில் கேட்கிறார்களோ அவர்களுக்கு பாவ மன்னிப்பை கொடுக்கிறார். பாவ மன்னிப்பை ஒருவர் பெறும்போது பாவனத்தின் விளைவாகிய சாபமும் நீங்கி விடும்.

    அருமையான தேவை பிள்ளைகளே உங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளால் துவண்டு போய் வாழ்க்கையே வெறுப்பாக உள்ளதா? தற்கொலை செய்து மடிந்து விடலாம் என நினைக்கிறீர்களா? பயப்படாதீர்கள் நீங்கள் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காகவே இயேசு உங்களுக்காக மரித்தார். உங்களுக்காக புதுவாழ்வு கொடுத்து உங்களை ஆசீர்வதிக்க இயேசு விரும்புகிறார். அவரிடம் வாருங்கள். இயேசுவே நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை சுமந்தீர் என சாபங்களை சுமந்து தீர்த்து விட்டீர் என நாம் நம்புகிறேன் என அவரிடம் நம்பிக்கையோடு வாய்திறந்து சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை மாறுவதை காண்பீர்கள்.

    பாஸ்டர்.ரபிபிரபு, இல்லந்தோறும் நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
    Next Story
    ×