search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசுவின் மரணத்தின் ஆசீர்வாதங்கள்

    சுகவாழ்வு கிடைக்கிறது. இயேசு நம்முடைய பாவத்தை மட்டும் சுமக்கவில்லை. நம்முடைய நோய்களையும் சிலுவையில் சுமந்து விட்டார். எனவே நாம் உலகில் சுகமாக வாழ முடியும்.
    இயேசுவின் மரணத்தையும், பாடுகளையும் தியானிக்கும் இக்காலத்தில் இயேசுவின் மரணத்தினால் நமக்கு உண்டான சில நன்மைகள் குறித்து தியானிப்போம்.

    தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நமக்கெல்லோருக்காகவும் அவரை (இயேசுவை) ஒப்புக்கொடுத்தவர். அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி? என்று பைபிள் கூறுகிறது (ரோமர் 8:32). கடவுள் மனிதனை படைத்தார். மனிதன் பாவம் செய்து கடவுளை விட்டு பிரிந்து போனான். கடவுளை பிரிந்ததால் மனுக்குலத்திற்கு பல இன்னல்கள் வந்து சேர்ந்தது. குறிப்பாக பாவம் மனிதனை நரகத்திற்கு இழுத்து செல்கிறது. கடவுள் மனிதனை நேசித்தால் மீண்டும் மனிதனை தன்னோடு இணைத்துக் கொள்ள கடவுளின் திட்டமே தன்னுடைய சொந்த மகனான இயேசுவின் மரணம் அதற்காக கடவுள் தண்டனைகளை நம்மெல்லாருக்காகவும் சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். முதலாவது இயேசுவின் மரணம் நமக்கு இரட்சிப்பை கொடுக்கிறது. இரட்சிப்பு என்றால் பாவ மன்னிப்பு. பாவத்தின் சம்பளம் மரணம் அதாவது நரகம். பாவம் மனிதனை நரகத்தில் தள்ளும். ஆனால் இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்முடைய பாவங்களை சுமந்து தீர்த்தபடியால் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு நமக்கு கிடைக்கிறது. எனவே நாம் நரகத்திற்கு போகாமல் இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு பரலோகத்திற்கு செல்வோம் என்று விசுவாசிப்போம்.

    அடுத்து சுகவாழ்வு கிடைக்கிறது. இயேசு நம்முடைய பாவத்தை மட்டும் சுமக்கவில்லை. நம்முடைய நோய்களையும் சிலுவையில் சுமந்து விட்டார். எனவே நாம் உலகில் சுகமாக வாழ முடியும்.

    அடுத்து இயேசு நமக்காக தரித்திரரானார் என வேதம் கூறுகிறது. நம்முடைய வறுமையையும் இயேசு சிலுவையில் சுமந்து விட்டார். எனவே நாம் வறுமையில் வாட வேண்டியதில்லை. இயேசு நம் துக்கங்களையும், பாடுகளையும் சுமந்தார் என வேதம் கூறுகிறது. இப்படியாக கடவுள் தன்னுடைய மகனாகிய இயேசுவோடே கூட பல ஆசீர்வாதங்களை நமக்கு கொடுத்திருக்கிறார்.

    இந்த ஆசீர்வாதங்களை எப்படி அடைவது? அவர் மேல் வைக்கும் நம்பிக்கையினால் தான் தன்னை விசுவாசிப்பவர்கள் மகிமையின் ஆசீர்வாதங்களை காண்பார்கள் என இயேசு கூறுகிறார். இவ்வுலகில் சமாதானமாய் வாழ, கெட்ட பாவ பழக்கங்களில் இருந்து விடுதலைபெற்று பாவ மன்னிப்பை பெற்று வாழ நமக்காக மரித்தார். மீண்டும் 3-ம் நாள் உயிரோடு எழுந்தார். எனக்காக மரித்த இயேசுவே என்னை ஆசீர்வதியும் என்று அவரிடம் கேளுங்கள் நிச்சயமாக நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஆசீர்வாதமாக அமையும்.

    பாஸ்டர்.ரபிபிரபு, இல்லந்தோறும் நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
    Next Story
    ×