என் மலர்
கிறித்தவம்
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடு கிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
உங்கள் பிரயாசங்களை மறப்பதில்லை
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடு கிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை.

நாசரேத் - மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
நாசரேத் - மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா பிரகாசபுரம் பங்குத்தந்தை அருள்பிரபாகர் தலைமையில் சாத்தான்குளம் புனித இருதயமாதா ஆங்கிலப்பள்ளி தாளாளர் அந்தோணி ரூபர்ட் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாசரேத் - மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா பிரகாசபுரம் பங்குத் தந்தை அருள்பிரபாகர் தலைமையில் சாத்தான்குளம் புனித இருதயமாதா ஆங்கிலப்பள்ளி தாளாளர் அந்தோணிரூபர்ட் கொடியேற்றி திருவிழாவினை துவக்கிவைத்தார்.
திருவிழாக்காலங்களில் தினமும் மாலை 6:30 மணிக்கு திருவிழா திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது. 10 ஆம் திருவிழா அன்றுமாலை 5:30 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும், இரவு 7:30மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. முடிவில் சமபந்தி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத் தந்தையர்கள் அருள் பிரபாகர், அந்தோணி டக்லஸ் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

பூண்டி மாதா பேராலயத்தில் புனித கன்னிமரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே பூண்டிமாதா பேராலயம் அமைந்துள்ளது. புகழ்மிக்க இந்த பேராலயத்தில் புனித கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக புனித கன்னிமரியாளின் உருவம் பொறிக்கப்பட்ட விழா கொடியை பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலம் கொடிமேடையை அடைந்ததும் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஸ் ஏசுதாஸ் ஆன்மிக தந்தையர்கள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் சுற்று வட்டார பங்குத்தந்தையர்கள், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனி நடைபெறுகிறது. பின்னர் மரியாளின் சிறப்புக்கள் குறித்த பல்வேறு தலைப்புகளில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
புனித கன்னி மரியாளின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி இரவு 9.30 மணிக்கு மலர் அலங்காரத்தில் புனித கன்னி மரியாள் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெறுகிறது. மறுநாள் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலய 326-வது ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சென்னை முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.
நவ நாட்களாக நாளை முதல் 10-ந் தேதி வரை காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி, சிறப்பு மறையுரை, தேவ நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அருட்தந்தையர்கள் இருதயசாமி, அந்தோணிசாமி, ஸ்டேன்லி அலெக்ஸ் ஆகியோர் சிறப்பு மறையுரை வழங்குகின்றனர்.
ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11-ந் தேதி காலை சிறப்பு திருப்பலிகளும், புதுவை- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 12-ந் தேதி காலை திருப்பலிக்குப்பின் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பெருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தை தாமஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா திருத்தல பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி மாதா கொடியினை புனிதப்படுத்தி, கொடியேற்றி வைத்தார். பின்னர் அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டு பாடல் திருப்பலியில் லால்குடி மறைவட்ட முதன்மை குரு தனராஜ் மற்றும் சுற்று வட்டார அருள் தந்தையர்கள் கலந்துக் கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி 7-ந்தேதி நடக்கிறது. 8-ம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தங்கசாமி, உதவிபங்குதந்தை. அருண், ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

வட சென்னை சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பொன்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வடசென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் பொன் விழா ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி எருக்கஞ்சேரி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து 3 மதங்களை சேர்ந்த பெரியோர்களால் அன்னையின் திருவுருவ கொடி பவனியாக கொண்டு வரப்பட்டு ஆயர் டாக்டர் தாமஸ் பால்சாமி கொடியேற்றி வைத்தார்.
50-வது பொன்விழாவையொட்டி மும்மதத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதனை பங்குதந்தை பாலசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.ஏ. சேவியர் இருதய மணி, அசோக்குமார், உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழா தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது விழா நாட்களில் தினமும் காலை மாலை வேளைகளில் திருப்பலி, நற்கருணை ஆசிர், தேர் பவனி நடக்கிறது. வருகிற 3-ந் தேதி மாலை 6மணிக்கு சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலை மையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய வியாசர்பாடி சாஸ்திரிநகர் இறை மக்களின் வரலாற்றை நினைவு கூறும் வரலாறு ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது.
7-ந்தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் ஆண்டு திருவிழாவையொட்டி ஆடம் பர தேர்பவனி நடக்கிறது. அதனை தொடர்ந்து பேராயர் பாப்புசாமி தலைமையில் அன்னைக்கு மணி மகுடம் சூட்டும் நிகழ்வு மற்றும் கூட்டுதிருப்பலி நடக்கிறது. 8-ந்தேதி அன்னையின் பிறந்த நாளையொட்டி காலை முதல் சிறப்பு திருப்பலியும், மாலை 4.30 மணிக்கு அருட்தந்தை அதிரூபன் தலைமையில் ஆடம்பர திருப்பலியும் தொடர்ந்து கொடி இறக்கமும், நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும்பங்கு தந்தையுமான எம்.பாலசாமி உதவி பங்கு தந்தை கிரீத்மேத்யூஸ், மற்றும் அருட்சகோதரிகள், விவேகானந்தாநகர், எம். சூசை, மயிலை எஸ் மார்ட்டின் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பேராலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டு தெரு வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து மாலை 6.30 மணிக்கு கொடியை ஏற்றினார். அப்போது பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் எரியவிடப்பட்டன. பின்னர் பக்தர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அதையடுத்து வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பேராலயத்தில் தமிழ் திருப்பலியும், அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து விண்மீன் ஆலயம், பேராலய கீழ்கோவில், மேல்கோவில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.

அதைதொடர்ந்து இரவு 8 மணிக்கு மாதா திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறுகின்றன. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்பவனியும் நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 44-வது ஆண்டு திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அன்னையின் திருஉருவம் பொறிக்கப்பட்ட 12 அடி நீளம் உள்ள கொடி பக்தர்கள் மத்தியில் திருப்பவனியாக கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் வேளாங்கண்ணி அன்னையின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மலர் தூவி ‘மரியே வாழ்க’, ‘மரியே வாழ்க’ என கோஷம் எழுப்பினர்.
கொடியேற்றத்தை காண்பதற்காக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலை முதலே பாதயாத்திரையாக திருத்தலத்துக்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களுக்கு வழிநெடுக உணவு பொட்டலங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களின் வசதிக்காக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) தேவ அழைத்தல் விழாவாக நெசப்பாக்கம் பங்கு தந்தை பி.ஜே.லாரன்ஸ் ராஜ் அடிகளார் தலைமையிலும், நாளை புதன்கிழமை உழைப்பாளர் விழா போரூர் பங்குதந்தை என்.ஏ.சார்ல்ஸ் குமார், கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் ஏ.எல்.செபாஸ்டின் தலைமையிலும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 1-ந் தேதி துறவற சபைகள் விழாவாகவும், 2-ந் தேதி இளைஞர்கள் விழாவாகவும், 3-ந் தேதி பக்த சபைகள் விழா சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையிலும், 4-ந் தேதி நற்கருணை பெருவிழா திருவள்ளூர், சென்னை- மயிலை உயர்மறைமாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ் தலைமையிலும், 5-ந் தேதி ஆசிரியர்கள் விழா ஆர்.ஏ.புரம் பங்குதந்தை பி.எஸ்.காணிக்கைராஜ், எருக்கஞ்சேரி பங்குதந்தை பி.அந்தோணி தலைமையிலும் நடைபெறுகிறது.
6-ந் தேதி நலம் பெறும் விழா திருவொற்றியூர் பங்குதந்தை எல்.பால்ராஜ், அண்ணாநகர் பங்குதந்தை ஏ.தாமஸ் தலைமையிலும், 7-ந் தேதி தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. தேர்பவனிக்கு சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்குகிறார்.
8-ந் தேதி அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா மற்றும் அன்னைக்கு முடிசூட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமை தாங்குகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் பங்கு தந்தை பி.கே.பிரான்சிஸ் சேவியர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

சேலம் சாமிநாதபுரம் வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா இன்று (29-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சேலம் அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தின் கிளை ஆலயமான சாமிநாதபுரம் புனித வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 33-ம் ஆண்டு ஆலய பெருவிழா இன்று (29-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இன்று மாலை 6.30 மணிக்கு சேலம் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜான்ஜோசப் கொடியேற்றுகிறார். தொடர்ந்து அன்னையின் தேர்பவனியும் ஜெப மாலையும், சிறப்பு திருப்பலி மறையுரைடன் நடைபெற உள்ளது.
வருகிற 8-ந் தேதி மதியம் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை பொங்கல் மந்திரிப்பும், அன்னதானமும், சமபந்தியும் ஆலயம் சார்பில் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் கூட்டுப்பாடர் திருப்பலியும், இரவு தேர் மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

வட சென்னை சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பொன்விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வடசென்னை வியாசர் பாடி சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் பொன் விழா ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி எருக்கஞ்சேரி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து 3 மதங்களை சேர்ந்த பெரியோர்களால் அன்னையின் திருவுருவகொடி பவனியாக கொண்டு வரப்பட்டு இன்று மாலை 6.30 மணிக்கு ஆயர் டாக்டர் தாமஸ் பால்சாமி கொடியேற்றி வைக்கிறார்.
விழா தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர் 8-ந்தேதி வரை நடக்கிறது விழா நாட்களில் தினமும் காலை மாலை வேளைகளில் திருப்பலி, நற்கருணை ஆசிர், தேர் பவனி நடக்கிறது. வருகிற 3-ந்தேதி மாலை 6மணிக்கு சென்னை-மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய வியாசர்பாடி சாஸ்திரிநகர் இறைமக்களின் வரலாற்றை நினைவு கூறும் வரலாறு ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது.
7-ந்தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் ஆண்டு திருவிழாவையொட்டி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. அதனை தொடர்ந்து பேராயர் பாப்புசாமி தலைமையில் அன்னைக்கு மணி மகுடம் சூட்டும் நிகழ்வு மற்றும் கூட்டுதிருப்பலி நடக்கிறது. 8-ந்தேதி அன்னையின் பிறந்த நாளையொட்டி காலை முதல் சிறப்பு திருப் பலியும், மாலை 4.30 மணிக்கு அருட்தந்தை அதிரூபன் தலைமையில் ஆடம்பர திருப்பலியும் தொடர்ந்து கொடி இறக்கமும், நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும்பங்கு தந்தையுமான எம்.பாலசாமி உதவி பங்கு தந்தை கிரீத் மேத்யூஸ், மற்றும் அருட்சகோதரிகள், விவேகானந்தாநகர், எம். சூசை, மயிலை எஸ் மார்ட்டின் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

காரைக்கால் வழியாக செல்லும் கிறிஸ்தவர்கள் காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் இரவு படுத்து தூங்கி காலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் இன்று (திங்கட்கிழமை) பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர்.
காரைக்கால் வழியாக செல்லும் கிறிஸ்தவர்கள் காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் இரவு படுத்து தூங்கி காலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கமாக இரவு நேரங்களில் கோவில் பூட்டப்படும். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் காரைக்காலில், பாதயாத்திரை செல்லும் கிறிஸ்தவர்கள் தங்குவதற்காக கோவில் மணிமண்டபம் திறந்து விடப்பட்டுள்ளது.
பாதயாத்திரை செல்லும் கிறிஸ்தவர்களுக்கு காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளர் அசனா எம்.எல்.ஏ. பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கினார்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், கொடியை புனிதம் செய்து ஏற்றுகிறார்.
அதன்பின்னர் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. பின்னர் 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழு அளவில் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.