என் மலர்
கிறித்தவம்
அரியாங்குப்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.
புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆலயத்தில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5-30 மணிக்கு திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி ஆகியவை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி மற்றும் 6-15 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடந்தன. தொடர்ந்து காலை 8 மணிக்கு புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.
மாலையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆரோக்கிய அன்னையை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

பாந்திரா மலைமாதா ஆலய திருவிழா வருகிற நாளை (11-ந்தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற மலைமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 11-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி முடிவடைகிறது.
விழா நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஆங்கிலம், கொங்கனி, மராத்தி, மலையாளம், குஜராத்தி மற்றும் தமிழில் திருப்பலி நடக்கும். இதில் வருகிற 15-ம் தேதி வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழ் மொழியில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
விழாவிற்காக ஆலயத்தில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் பல்வேறு கடைகளை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மலை மாதாவை வழிபட்டு சென்றால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதால், திருவிழாவில் மும்பை, தானே, பால்கர், நவிமும்பை மட்டுமின்றி கோவா, கொங்கன், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூண்டி மாதா பேராலயத்தில் புனித கன்னிமரியாள் பிறப்பு பெருவிழா அலங்கார தேர்பவனி நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தின் புனித கன்னிமரியாள் பிறப்பு பெருவிழா கடந்த ஆகஸ்ட் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில் தினமும் மாலை சிறுசப்பர பவனியும், திருப்பலி நிறைவேற்றலும் நடைபெற்றது. இதில் பல்வேறு நகரங்களில் இருந்து அருட்தந்தையர்கள் ஆரோக்கியபாஸ்கர், தியோபிலஸ், மரியஇஞ்ஞாசி, கிறிஸ்துராஜ், விஜய்அமல்ராஜ், ஐசக்ராஜ். டேவிட்தனராஜ், சூசை ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.
விழாவின் சிறப்பு நாளாகவும் புனித கன்னி மரியாள் பிறப்பு நாளாகவும் கருதப்படும் நேற்று மாலை மரியாள் -விசுவாசித்துபேறு பெற்றவர் என்ற தலைப்பில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை யில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஸ்ஏசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பலி நிறைவேற்றப் பட்ட பேராலய முகப்பில் மல்லிகை மலர், மின்விளக்கு களால் அலங்காரம் செய்யப்பட்ட பெரியதேரில் புனிதகன்னி மரியாள் சொரூபம் வைக்கப்பட்டது. அதிர்வேட்டுகள் முழங்கிட ஆலய மணிகள் ஒலித்திட புனிதகன்னி மரியாளின் தேர்பவனியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து துவக்கி வைத்தார்.
பக்தர்கள் மரியே வாழ்க என்ற முழக்கத்துடன் தேர் இழுத்தனர். தேர்பவனி நிறைவடைந்ததும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருவிழா சிறப்பு திருப்பலியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியாள்- நம்பிக்கையாளர்களின் அரசி என்ற தலைப்பில் நிறைவேற்றினார். இதில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, பேராலய அதிபர், துணை அதிபர், தியான மைய இயக்குநர் மற்றும் பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர். இத்துடன் பூண்டி மாதா பேராலயத்தின் புனித கன்னிமரியாள் பிறப்பு பெருவிழா நிறைவு பெற்றது.
விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர் களுக்கான வசதிகளை பேராலய நிர்வாகம் செய்திருந்தது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
ஆரோக்கிய மாதா பிறந்தநாளான நேற்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் இத்திருவிழா நிறைவுபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி தென்னூர் சங்கீதபுரம் புனித ஆரோக்கியமாதா ஆலய 104-வது ஆண்டு திருவிழா தேர்பவனி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
திருச்சி தென்னூர் சங்கீத புரத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள் ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவரிசையில் தற்போது 104-வது ஆண்டு திருவிழா கடந்த 29.8.2016 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி புனித பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ் செல்வ நாதன் கொடியேற்றினார். விழாவையட்டி தினமும் ஆடம்பர பாடல் திருப்பலி, நவநாள் ஜெபம் நடைபெற்று வருகிறது.
வருகிற 10-ந்தேதி வரை நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு அன்னையின் வெளி தேர்பவனி நடக்கிறது. இரவு 8 மணிக்கு பேண்டு வாத்தி யம் முழங்க, வாண வேடிக்கையுடன் நடைபெறும் இந்த தேர் பவனியில் ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள்.
விழாவின் தொடர்ச்சியாக நாளை (9-ந்தேதி, வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு அன்னையின் உள் வீதி தேர் பவனி நடக்கிறது. வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) ஆலய முக்கியஸ்தர்கள், சங்கீதபுரம் இளைஞர்கள் நடத்தும் 26-வது ஆண்டு அன்னதானம் நடக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் அன்பழகன், தொழில திபர் ஜோசப்லூயிஸ் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி நேற்று நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 44-வது ஆண்டு பெருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்கள் விழா, துறவற சபைகள் விழா, இளைஞர்கள் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை விழா, ஆசிரியர்கள் விழா, நலம்பெரும் விழா என்ற தலைப்புகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
இந்தநிலையில் நேற்று பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது. சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆடம்பர கூட்டு திருப்பலி நடத்தி தேர் பவனியை தொடங்கிவைத்தார்.
தேர் பவனி பெசன்ட் நகர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது வழி நெடுக திரண்டிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’, ‘மரியே வாழ்க’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் வழியாக சென்ற தேர் பவனி மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

முன்னதாக, அன்னை தெரசா புனிதர் பட்டம் பெற்றதையொட்டி, அவருடைய உருவச்சிலை ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டது. அந்த சிலையை சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திறந்துவைத்தார்.
விழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. காலை 7.45 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அன்னைக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது.
மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கத்துடன், விழா நிறைவு பெறுகிறது. நன்றி திருப்பலியை திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா நடத்துகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் பங்கு தந்தை பி.கே.பிரான்சிஸ் சேவியர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாநாட்களில் தினமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல சிலுவை பாதைவழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் முகப்பிலிருந்து தேர் புறப்பட்டு சென்றது.
தேர்புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஆவேமரியா வாழ்க” என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியர், அமலோற்பவமாதா, புனித உத்திரியமாதா ஆகியோரின் தேர்கள் வண்ண மின்விளக்கு அலங்காரத்துடன் அணிவகுத்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர்பவனி நடந்தது. தேர் மீது பக்தர்கள் பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கியமாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுதிருப்பலி நிறைவேற்றப்பட்டது. தேர்பவனியில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, போலீஸ் சூப்பிரண்டு துரை, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்குதந்தைகள் ஜோதி நல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். மேலும், வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் கூடியிருந்த பக்தர்களும் காணும் வகையில் தேர்பவனி நிகழ்ச்சியானது அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது.
தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பெசன்ட்நகர் மாதா ஆலயத்தில் இன்று மாலை தேர் பவனி நடக்கிறது.
சென்னை பெசன்ட்நகர் ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய திருவிழாவான தேர் பவனி நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. பின்னர் புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.
மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணி யார், சூசையப்பர், உத்தரிய மாதா, சொரூபங்கள் சிறிய சப்பரங்களில் பவனியாக கொண்டு வரப்படுகின்றன.
தேர் பவனி பீச்ரோடு, பஸ்நிலையம், எம்.ஜி.ரோடு வழியாக சென்று பேராலய முகப்பை வந்தடையும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது. அத்துடன் ஆண்டு விழா நிறைவடைகிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி இன்று (புதன் கிழமை) நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்ற பெருமையுடன் அழைக்கப் படுகிறது.
கிறிஸ்தவ ஆலயங் களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயத்துக்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, ஆரோக்கியமாதாவை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பெரிய தேர்பவனி வெகுசிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு செல்வதும் வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (புதன்கிழமை) இரவு 7.30மணிக்குநடைபெறுகிறது. இதில் ஆரோக்கிய மாதா அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளி லட்சக் கணக்கான பக்தர்கள் மத்தியில் வலம் வரும் நிகழ்ச்சி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.
பெரிய தேர்பவனி நடை பெறுவதை முன்னிட்டு நேற்று வேளாங்கண்ணியில் பக்தர் கள் கூட்டம் அலைமோதியது. வேளாங்கண்ணிக்கு வருகை தரும் பக்தர்கள் புதிய பேராலயத்தில் இருந்து மாதா குளம் பேராலயத்துக்கு செல்லும் சிலுவைப்பாதையில் மண்டியிட்டு சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போலீஸ் தரப்பில் கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

சுரண்டை அருகே தூயயோவான் ஆலய திருவிழா நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே வாடியூரில் தூயயோவான் ஆலய 103-வது திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊர்த்தலைவர் சேசுராஜன் தலைமையில் வாடியூர் பங்குத்தந்தை ஜோசப்ராஜ் கொடியேற்றினார். ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
4, 5-ம் நாள் அன்பிய கலைவிழா, 6-ம் நாள் மருத்துவ முகாம், 7-ம் நாள் விளையாட்டுவிழா நடந்தது. 8-ம் நாள் நற்கருணை பவனி, தேர்பவனி நடந்தது. சிகர நிகழ்ச்சியாக 9-ம் நாள் காலை 9 மணிக்கு சிறப்பு திருப்பலியும் மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர் சப்பரத்தில் தூயயோவான் மற்றும் மரியன்னை எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப்ராஜ் தலைமையில் ஊர்த்தலைவர் சேசுராஜன், ஊர்க்கமிட்டி உறுப்பினர்கள் மரியசூசை, கட்டளைதாரர் வக்கீல் அந்தோணி, தர்மகர்த்தா துரைசாமி, உபதேசியார் சவரிமுத்து ஆகியோர் செய்து இருந்தனர். வாடியூர், மரியதாய்புரம், ஆனைகுளம், குறிச்சான்பட்டி சபைகளை சேர்ந்த இறைமக்கள் கலந்து கொண்டனர்.

வேளாங்கண்ணியில் நாளை பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலிருந்தும் வெளிநாட்டினரும் வந்து செல்கிறார்கள்.
இந்த ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மாலை கொங்கணி, தமிழ், ஆங்கிலம், மராத்தியில் சிலுவை பாதை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதா பாடல்களை பாடிய படி புனிதப் பாதையில் சென்றனர்.
நேற்று மாலை பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை நடந்தது. நாளை (7-ந்தேதி) மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடக்கிறது.
விண்மீன் ஆலயத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்று இரவு பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.
மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடியிறக்கம் நடைபெறும். 6.15 மணிக்கு பேராலய கீழ் கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடைபெறும்.
கொடியேற்றத்துக்கு முன்பிருந்தே வேளாங்கண்ணிக்கு பல்வேறு மாவட்டங்கள், கிராமங்களிலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் இருந்தனர்.
நாளை நடைபெறும் தேர் பவனியில் பங்கேற்க ஏராளமானோர் வேளாங்கண்ணியில் திரண்டு உள்ளனர்.
இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரிமாநிலம் அரியாங் குப்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் சென்னை முன்னாள் பேராயர் சின்னப்பா கலந்து கொண்டு கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
திருவிழாவையொட்டி ஆலயத்தில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5-30 மணிக்கு திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி ஆகியவை நடைபெறு கின்றன. தினமும் சிறப்பு மறையுரை, தேவ நற்கருணை ஆசீர்வாத நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மறையுரை நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள் இருதயசாமி, அந்தோணி சாமி, ஸ்டேன்லி அலெக்ஸ் ஆகியோர் சிறப்பு மறையுரை வழங்குகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருகிற 8-ந் தேதி மாலை திருப்பலிக்கு பின் சிறப்பு தேர்பவனி நடைபெறுகிறது. 11-ந் தேதி ஆண்டு பெருவிழா நடக்கிறது.
அன்று அதிகாலை 5 மணி மற்றும் 6-15 மணிக்கு திருப்பலிகள் நடைபெறுகின்றன.
காலை 8 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் ஆலய திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
மாலையில் திருப்பலியும், தொடர்ந்து ஆடம்பர தேர் பவனியும் நடைபெறுகிறது. 12-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்று கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.