என் மலர்
ஆன்மிகம்

பாந்திராவில் மலைமாதா ஆலய திருவிழா நாளை தொடக்கம்
பாந்திரா மலைமாதா ஆலய திருவிழா வருகிற நாளை (11-ந்தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற மலைமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 11-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி முடிவடைகிறது.
விழா நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஆங்கிலம், கொங்கனி, மராத்தி, மலையாளம், குஜராத்தி மற்றும் தமிழில் திருப்பலி நடக்கும். இதில் வருகிற 15-ம் தேதி வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழ் மொழியில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
விழாவிற்காக ஆலயத்தில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் பல்வேறு கடைகளை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மலை மாதாவை வழிபட்டு சென்றால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதால், திருவிழாவில் மும்பை, தானே, பால்கர், நவிமும்பை மட்டுமின்றி கோவா, கொங்கன், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story