என் மலர்
ஆன்மிகம்

புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.
அரியாங்குப்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது
அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரிமாநிலம் அரியாங் குப்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் சென்னை முன்னாள் பேராயர் சின்னப்பா கலந்து கொண்டு கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
திருவிழாவையொட்டி ஆலயத்தில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5-30 மணிக்கு திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி ஆகியவை நடைபெறு கின்றன. தினமும் சிறப்பு மறையுரை, தேவ நற்கருணை ஆசீர்வாத நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மறையுரை நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள் இருதயசாமி, அந்தோணி சாமி, ஸ்டேன்லி அலெக்ஸ் ஆகியோர் சிறப்பு மறையுரை வழங்குகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருகிற 8-ந் தேதி மாலை திருப்பலிக்கு பின் சிறப்பு தேர்பவனி நடைபெறுகிறது. 11-ந் தேதி ஆண்டு பெருவிழா நடக்கிறது.
அன்று அதிகாலை 5 மணி மற்றும் 6-15 மணிக்கு திருப்பலிகள் நடைபெறுகின்றன.
காலை 8 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் ஆலய திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
மாலையில் திருப்பலியும், தொடர்ந்து ஆடம்பர தேர் பவனியும் நடைபெறுகிறது. 12-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்று கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Next Story