என் மலர்
ஆன்மிகம்

வடுகர்பேட்டை புனித ஆரோக்கியமாதா திருத்தல விழா கொடியேற்றம்
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா திருத்தல பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி மாதா கொடியினை புனிதப்படுத்தி, கொடியேற்றி வைத்தார். பின்னர் அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டு பாடல் திருப்பலியில் லால்குடி மறைவட்ட முதன்மை குரு தனராஜ் மற்றும் சுற்று வட்டார அருள் தந்தையர்கள் கலந்துக் கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி 7-ந்தேதி நடக்கிறது. 8-ம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேர் பவனி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தங்கசாமி, உதவிபங்குதந்தை. அருண், ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

Next Story