என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டி மாதா ஆலய தேர்பவனி  8-ந்தேதி நடக்கிறது
    X

    பூண்டி மாதா ஆலய தேர்பவனி 8-ந்தேதி நடக்கிறது

    பூண்டி மாதா பேராலயத்தில் புனித கன்னிமரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
    திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே பூண்டிமாதா பேராலயம் அமைந்துள்ளது. புகழ்மிக்க இந்த பேராலயத்தில் புனித கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக புனித கன்னிமரியாளின் உருவம் பொறிக்கப்பட்ட விழா கொடியை பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலம் கொடிமேடையை அடைந்ததும் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.

    அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஸ் ஏசுதாஸ் ஆன்மிக தந்தையர்கள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் சுற்று வட்டார பங்குத்தந்தையர்கள், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனி நடைபெறுகிறது. பின்னர் மரியாளின் சிறப்புக்கள் குறித்த பல்வேறு தலைப்புகளில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    புனித கன்னி மரியாளின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி இரவு 9.30 மணிக்கு மலர் அலங்காரத்தில் புனித கன்னி மரியாள் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெறுகிறது. மறுநாள் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
    Next Story
    ×