என் மலர்
கிறித்தவம்
குற்றவாளிகளின் தண்டனையை உடனே சிலுவையிலறைந்து நிறைவேற்றுவதை விட இவைகளை அனுபவிக்கும் காட்சி மிகமிகக் கொடுமையானது ஆகும்.
சிலுவை இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் உலக வரலாற்றில் தலையாய் இடம் பெற்றிருக்கின்றது. முன்னே குற்றவாளிகளின் அவமானச் சின்னமாக இருந்த சிலுவை இப்போது மானிடரின் ஈடேற்றத்திற்குச் காரணமாக அமைந்துள்ளது. கிறிஸ்துவின் மரணத்திற்கு முன் சிலுவை என்பது தாங்க முடியாத கொடுமையான தண்டனையை நிறைவேற்றும் கருவி.
ஒரு கள்வனுக்கோ, ஒரு கொலைப்பாதகனுக்கோ அல்லது ஒரு கலகக்காரனுக்கோ கொடுக்கப்பட்டு வந்து அதிகபட்சமான தண்டனை சிலுவையில் மரிக்கச் செய்வது. உபாகமத்தில் மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது. அது ஒரு பயங்கரமான சாவு. சிலுவை மரணம் மகா ஈனமானது. அது மகா பாவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை. அது தேவ கோபத்தினால் உண்டாகும் என்பது அக்காலத்துக் கொள்கை.
ஏற்கனவே செய்து வைக்கப்பட்டிருக்கும் சிலுவை குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அந்த சிலுவையை அவனே சுமந்துகொண்டு செல்லவேண்டும். அந்த காட்சியைப் பார்க்கும் ஜனங்களின் கேவலமான விமரிசனங்கள், போலிப் பேச்சுகள், தண்டனையை நிறைவேற்றக் காத்திருக்கும் போர்ச் சேவகரின் சித்திரவதைகள் சவுக்கடிகள் இவையெல்லாம் அவன் அனுபவித்துத் தீரவேண்டும். குற்றவாளிகளின் தண்டனையை உடனே சிலுவையிலறைந்து நிறைவேற்றுவதை விட இவைகளை அனுபவிக்கும் காட்சி மிகமிகக் கொடுமையானது ஆகும்.
ஆனால் இயேசுவின் மரணத்திற்கும் பின் அதுவரை நிலவிவந்த சிலுவையின் இழிநிலை மாற்றப்பட்டு அது ஒரு அன்பின் சின்னமாக பாவிகளை இரட்சிக்கம் கிறிஸ்து இயேசுவை நினைவு கூறும் சின்னமாக உலக வரலாற்றில் முக்கியமானதொரு அழியா இடத்தைப் பெற்றுள்ளது. இயேசு கிறிஸ்து தாம் சிலுவையில் ஒப்புக்கொடுக்கப்படும் முன்பு அவர் தாமே தமது சீஷர்களுக்கம் மக்களுக்கும் அறிவித்த ஞானார்த்தத்தை நாம் அறிந்து கொள்வது மிக அவசியமானதொன்றாகும்.
சிலுவை என்பது பரம பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத் தனக்குக் கொடுக்கப்பட்டக் கருவி என்று இயேசு கிறிஸ்து எண்ணினார். ஆகவே தமது அன்றாடப் பணியை பரம தந்தையின் சித்தத்திற்கேற்ப செய்து வந்த போது சிலுவை வந்தது சிலுவையைக்கண்டு அவர் பின்வாங்கவில்லை.
தன் சீஷர்களை பார்த்து ஓருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்துத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். என்றார் (மத் 16:24). மாற்கு 8:34ல் இயேசு தன் சீஷர்களுக்கு மட்டுமல்ல, எதிரே இருந்த ஜனங்களையும் பார்த்து இதே கருத்தை வலியுறுத்தியும் பேசுகிறார். மேலும் ஒருவன் இயேசுவிடம் வந்து 'நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ள நான் என்னச் செய்யவேண்டு;?" என்று கேட்டான்.
இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து ஒரு குறை அவனிடத்தில் கண்டார். 'உனக்குண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா" என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனானபடியால் அவர் சொன்னதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை (மாற்கு 10:21).
சிலர் சிலுவைக்குப் பயப்படுவார்கள் ஆனால், 'சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. ஆனால் இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது" (1கொரி 1:18) பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுலுக்குக் கிடைத்த சிலுவை, 'நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைப் பாராட்டாதிருப்பேனாக" (கலா 6:14). பவுல் இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து ஏன் மேன்மை பாராட்டினார்?
1. சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் அன்பைக் காண்கிறோம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறார் (ரோம 5:8). இறைவனின் அன்பை உலகிற்குக் கொண்டுவந்தவரும் அதை செயலில் காட்டியவரும் இயேசுதான். 'தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). கிறிஸ்து தாமே உலகத்துக்கு வராவிட்டால் நாம் பாவத்தில் மரித்திருப்போம்.
2. சிலுவையில் பாவத்தின் பயங்கரத்தைக் காண்கிறோம். தீமையோடும் தீய சக்தியோடும் போராட வேண்டியிருந்தது. இருதயம் கடினம் குருட்டாட்டம் பொறாமை, பெருமை ஆகிய இவைகள் சமயத்தலைவர்களின் கண்களைக் குருடாக்கி விட்டன. பொது மக்கள் ஏனோதானோ வென்றிருந்தார்கள். யூதாஸ் காட்டிக் கொடுத்தான். பேதுரு மறுதலித்தான்.
சீஷர்கள் ஓடிப்போய்விட்டார்கள். பிலாத்து நீதி செலுத்தி அவரை விடுதலைச் செய்யத்தவறிவிட்டான். போர்ச்சேவர்கள் கேலி செய்து வாரினால் அடித்தார்கள். பாவமில்லாத அவர் நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே சிலுவையில் ஒப்புக்கொடுக்க நேர்ந்தது. நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு அவர்தாமே தமது சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்தார் (1பேதுரு 2:24). பாவமானது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பிரிவினை உண்டுபண்ணுகிறது. சிலுவையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.
3. சிலுவையில் மன்னிப்பின் செய்தி அறிவிக்கப்படுகிறது. இறைவன் இயேசு மன்னிக்கிறதற்குத் தயை பொருந்தினவர். மன்னிப்பின் உபதேசத்தைப் பலமுறை தமது சீஷர்களுக்குப் போதித்தார். மற்றவர்களுக்கு விரோதமாகச் செய்தக் குற்றங்களை மன்னித்தால், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்றார். தமது வாழ்க்கையில் தாமே அதை முன் மாதிரியாகச் செயல்முறையில் காட்டினார்.
கிறிஸ்து இரட்சகர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே நமக்கு மன்னிப்பை அருளுகிறார் (எபே 1:17, 1யோவா 1:7-9). இரட்சகரின் மன்னிப்பின் மாட்சிமையை உணர்ந்து மனந்திருப்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் (லூக் 24:47) மனந்திரும்புதலும் மன்னிப்பும் ஒன்றுபோல் வருகிறது. மன்னிப்பை பெற நாம் மன்னிக்கும் சிந்தையுள்ளவர்களாக இருக்கவேண்டும் (மத் 18:33-35).

புனித பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுவை தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலய 62-ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் கொடியேற்றி வைத்தார். மாலையில் திருப்பலியும், தேர்பவனியும் நடந்தது.
இதேபோல் வருகிற 13-ந்தேதி வரை நாள்தோறும் காலையில் திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடக்கிறது. 13-ந்தேதி காலை புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலையில் பெரிய தேர் பவனி நடக்கிறது. 14-ந்தேதி கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

இன்று உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் அனுசரிக்கப்படுகின்ற புனித வெள்ளியைக் குறித்தே புனித விவிலியத்தின் வாயிலாக புனித ராயப்பர் (பேதுரு) மேற்கண்டவாறு கூறுகிறார்.
உங்களை விடுதலையாக்குவதற்குக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும், வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள ரத்தமாகும்.' (1ராய:1: 18-19)
இன்று உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் அனுசரிக்கப்படுகின்ற புனித வெள்ளியைக் குறித்தே புனித விவிலியத்தின் வாயிலாக புனித ராயப்பர் (பேதுரு) மேற்கண்டவாறு கூறுகிறார்.
விலை மதிப்பில்லாத அவர் ரத்தம், நம் பாவங்களைக் கழுவவும் நம் விடுதலைக்காகவும் சிந்தப்பட்டது. ""கடவுள் மீது விசுவாசம் வையுங்கள்; என் மீதும் விசுவாசம் வையுங்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்'' (அருளப்பர்:14-1) என்று இறைமகன் கூறியதை அனைவரும் அலட்சியம் செய்தார்கள். குறிப்பாக அவருடன் சீடர்களாய், உற்ற தோழர்களாய் இருந்தவர்களே அவரைப் பற்றி புரிந்து கொள்ளாமல் புறக்கணித்ததை என்னென்பது?
எதிராளிகளிடம் கையளிக்கப்பட்ட இயேசு
கெத்சமனித் தோட்டத்தில் கள்வனைப்போல எதிராளிகள் சதி செய்து இயேசுவைப் பிடிக்கின்றபோது அனைத்துச் சீடர்களும் உயிருக்குப் பயந்து நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்ததுபோல சிதறி ஓடினார்கள்.
அவர்களில் ஒரு சீடன் துரோகியாக மாறி, அவரைக் காட்டிக் கொடுக்கவே துணிந்தான். அவருக்குத் ""துணையாக கடைசி வரை கூடவே வருவேன்'' என்று கூறிய மற்றொரு சீடனோ- அவரை "தெரியவே தெரியாது' என்று ஒரேயடியாக மறுதலித்தலின் மூலம் இயேசு ஆதரவின்றி, சாட்சிகளின்றி பெருங்குற்றவாளியைப் போல எதிராளிகளிடம் கையளிக்கப்பட்டார்.
சோதனை ஏற்படுத்திய வேதனை
மேலும் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர் நீத்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்து வந்தபோது பிற சீடர்கள் அதிசயித்து அவரைக் கண்டனார். அப்போதும் அவரிடம், ""உயிர்த்தெழுந்த இயேசு நீங்கள்தானா?'' என்பது போன்று சந்தேகப்பட்டு கேள்விகள் எழுப்பி, சோதனை செய்து வேதனைக்குள்ளாக்கினார் ஒரு சீடர்.
மேற்கண்ட வேதனை நிறைந்த வரலாற்று நிகழ்வுகள், இறை மகன் இயேசுவின் வாழ்வில் இடம் பெற்றதைப் புனித விவிலியத்தில் புனித மத்தேயு, புனித அருளப்பர் (யோவான்) ஆகியோர் எழுதிய பகுதிகளின் வாயிலாகக் காண்போம்.
இயேசுவைக் காட்டிக் கொடுத்த துரோக நிகழ்வு
இயேசு கெத்சமனித் தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய பன்னிரு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கு வந்தான்.
அவனோடு மூப்பர்களும், குருக்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக் கொடுக்க வந்த யூதாஸ், ""நான் ஒருவரை முத்தமிடுவேன்.
அவர்தான் இயேசு; அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, "ரபியே வாழ்க!' என்று கூறிக் கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், ""தோழா எதற்காக வந்தாய்? முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?'' என்றார். (மத்தேயு 26: 47-56)
இயேசுவைத் "தெரியாது' என மறுதலித்த நேர்மையற்ற நிகழ்வு
இயேசுவைக் கைது செய்து தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு சென்றபோது ராயப்பரும், அருளப்பரும் (பேதுரு, யோவான்) விசாரணையின் முடிவைத் தெரிந்து கொள்வதற்காகத் தொலைவில் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். வீட்டு உள் முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருந்தவர்களோடு ராயப்பரும் இருந்தார்.
அப்போது பணிப் பெண் ஒருவர் அவரை உற்றுப் பார்த்து, "இவனும் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்' என்றார். அவரோ, "அம்மா! அவரை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்தார்.
சிறிது நேரத்திற்குப் பின் அவரைக் கண்ட வேறு ஒருவன், ""நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்'' என்றார். ராயப்பர் ""இல்லையப்பா!'' என்று இரண்டாம் முறையாக மறுதலித்தார். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர், ""உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்'' என்று வற்புறுத்திக் கூறினார். ராயப்பரோ, ""நீர் குறிப்பிடுவதைப் பற்றி எனக்குத் தெரியாது'' என்று மூன்றாம் முறையும் மறுதலித்தார். ""சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்'' என்று இயேசு கூறியது நிறைவேறிற்று. (மத்தேயு 26: 69-75)
இயேசுவைச் சந்தேகப்பட்ட அவ நம்பிக்கை நிகழ்வு
இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சி கொடுத்தபோது, பன்னிருவருள் ஒருவரான தோமா (தோமையார்) அவர்களோடு இல்லை. அவர் வந்ததும் மற்ற சீடர்கள், ""இயேசுவைக் கண்டோம்!'' என்றுரைத்தனர்.
ஆனால் தோமா, ""அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை விட்டுச் சோதனை செய்தாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார்.
எட்டு நாட்களுக்குப் பிறகு இயேசுவின் சீடர்கள் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் உடனிருந்தார். இயேசு அவர்கள் முன் தோன்றி, ""உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என்றார். பிறகு தோமாவிடம், ""இதோ என் கைகள். இங்கே உன் விரலை இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைக் கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ""நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்'' என்றார். இயேசு அவரிடம் ""நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலேயே நம்புவோர், பேறு பெற்றோர்'' என்றார். (யோவான் 20:24-29)
தேவை, வாழ்வில் சீரிய வழி!
இறைமகன் இயேசுவோடு இணைந்து, தோழர்களாக வாழ்ந்து, அவர் செயல்களைக் கண்ணுற்று, அவரோடு ஒரே பந்தியில் உண்டு களித்த சில சீடர்களே அவருக்கு எதிராகச் செயல்பட்டதை நினைக்கின்றபோது நாம் வேதனைக்குள்ளாகின்றோம். நாம் இந்த நிகழ்வுகளை மனதில் நிறுத்தி, சீலமற்ற முறைகளைத் தவிர்த்து நம் வாழ்வில் சீரிய வழியில் செல்வோம்.
"என்னைப் பின் செல்ல விரும்புகின்றவன் தன்னையே மறுத்து தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்'' (மத்தேயு 16:24) என்ற இறை வார்த்தையை மனதில் இறுத்தி இறைமகனின் வார்த்தைக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, எல்லா வல்ல ஆண்டவரின் ஆசீரைப் பெறுவோமாக!

இயேசுவின் போதனை மொழிகள் என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).
"நல்ல ஆயன் நானே...என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்" (யோவான் 10:14-15).
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6).
"உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (மத்தேயு 5:44).
"பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத்தேயு 7:12).
"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்" (மத்தேயு 12:33).
"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22:39).
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34).

தஞ்சை ஜெபமாலைபுரம் தூய ஜெபமாலை மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது.
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் தூய ஜெபமாலை மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் பங்குதந்தை தார்கிஸ்ராஜ் கலந்து கொண்டு நவநாள் ஜெபமாலை பிரார்த்தனை செய்து திருவிழா கொடியேற்றி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி வருகிற 7-ந்தேதி மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபமாலை பிரார்த்தனை, திருவிழா பாடற்கூட்டுப் பாடல் திருப்பலி, இரவு 9 மணிக்கு தூய ஜெபமாலை மாதாவின் தேர்பவனி, இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
8-ந்தேதி காலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி, கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
பழைய ஏற்பாட்டில் இந்த “யெகோவா” என்ற பெயர் கூட்டுப் பெயராகவே வருகிறது.
பிதாவாகிய தேவனுக்குள்ள சகல தன்மைகளும் குமாரனாகிய தேவனுக்கும் இருக்கின்றன. பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவரே பரிசுத்தாவி என்பதை வசனங்களே தெளிவாய் போதிக்கின்றன.
“யெகோவா” - என்ற எபிரேய வார்த்தையை “கர்த்தர்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருள் “இருக்கிறவராகவே இருக்கின்றவர்” என்பதாகும். பழைய ஏற்பாட்டில் இந்த “யெகோவா” என்ற பெயர் கூட்டுப் பெயராகவே வருகிறது. கூட்டுப் பெயர் என்றால் தேவனின் மூன்று ஆளத்துவங்களும் அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி என இணைந்தே சொல்லபடுவது - “யெகோவா”.
பழைய ஏற்பாட்டில் கூட்டுப் பெயராகவே வருகின்ற யெகோவாவின் நாமங்கள், பெயர்கள்:
1. யெகோவா ரஃபா - உன்னை குணமாக்குகிற கர்த்தர் (யாத்திராகமம்: 15:26)
2. யெகோவா நிசி - கர்த்தரே நமது வெற்றி அல்லது கொடி (யாத்திராகமம்: 17:8-15)
3. யெகோவா ஷாலோம் - கர்த்தர் நமது சமாதானம் (நியாயாதிபதிகள்: 6:24)
4. யெகோவா ரா - கர்த்தர் நமது மேய்ப்பர் - (சங்கீதம்: 23:1-4)
5. யெகோவா சிட்க்கனு - கர்த்தர் நமது நீதியாயிருக்கிறார் (எரேமியா: 23:6)
6. யெகோவாயீரே - கர்த்தர் தேவைகளை பூர்த்தி செய்கிறவர் (ஆதியாகமம்: 22:14)
7. யெகோவா ஷம்மா - கர்த்தர் அங்கே இருக்கிறார் (எரேமியா : 48:35)
8. ஏல்-எலியோன் - கர்த்தர் உன்னதமானவர் (ஆதியாகமம்: 14:18-20
9. எல்-ஷடாய் - கர்த்தர் போதுமானவர் ; சர்வ வல்லவர் (ஆதியாகமம்: 17:1 ; யாத்திராகமம்: 6:3)
10. எல்-ஓலம் - சதாகாலமும் உள்ள தேவன் (ஆதியாகமம்: 21:33)
11. அடோனாய் - எஜமான் (யாத்திராகமம்: 23:17) கர்த்தராகிய ஆண்டவர்.
12. ஏலோகிம் - “ஏல்” என்ற வார்த்தையின் பன்மை இது. “தேவன்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
வேதத்தில் கர்த்தரின் தன்மைகள் பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. அத்தனை பெயர்களும் கூட்டுப் பெயர்களே.
ஒரு தாய் தன் மகனை நிச்சயம் மறக்கமாட்டாள். அவள் மறந்தாலும் கர்த்தர் நம்மை மறப்பதில்லை.
‘இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்’ (ஏசா.49:16).
ஒரு தாய் தன் மகனை நிச்சயம் மறக்கமாட்டாள். அவள் மறந்தாலும் கர்த்தர் நம்மை மறப்பதில்லை. ‘கர்த்தர் நம்மை அவருடைய உள்ளங்கைகளில் வரைந்திருக்கின்றார்’ என்பதற்கு விளக்கம், அவரது கரம்தான் நம்மை உண்டாக்கி உருவாக்கிற்று. தாயின் வயிற்றில் தோன்றி கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் நம்மைத் தாங்குகின்றார். அவருடைய வலது கரம் நமக்கு இரட்சிப்பை கொடுக் கிறது.
நமது முன்புறத்திலும், பின்புறத்திலும் நம்மை நெருக்கி அவர் கரத்தை நம்மேல் வைக்கிறார். சமுத்திரத்தின் அடியாழத்தில் போய்த் தங்கினாலும் அவரது கரம் நம்மை பிடித்துக்கொள்ளும். உயரத்திலிருந்து அவர் கரத்தை நீட்டி ஆபத்திலிருந்து தப்புவிக்கிறார். நாம் தூங்கும் போது கூட தேவனின் கரம் நம்மை தாங்குகிறது. எந்த நேரத்திலும் யாவரையும் தாங்கும் கரம் தேவனின் கரமாகும்.
நாம் துக்கத்தில் சோர்ந்து போகும் போது நம்மை தேற்றி உயர்த்துகின்ற கரம். சத்துருவின் கிரியைகளை நீக்கி நம்மை பாதுகாக்கும் கரம். நோயாளிகளை குணமாக்கும்படி அவருடைய கரத்தை நீட்டி அனைவருக்கும் சகல வியாதிகளையும் குணமாக்குகிறார். நமது காலங்கள் அவர் கரத்திலிருக்கிறது. அவரது கரம்தான் எப்பொழுதும் நம் முடைய துணையாக இருக்கும்.
‘உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது. ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது’ (2 நாளா.20:6).
சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு வல்லமையுள்ள புஜங்களும், பராக்கிரமம் உள்ள கரங்களும் உள்ளது. அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் போன்று இருக்கிறது. தேவனின் கரம் உலகில் உள்ள அனைத்தையும் சிருஷ்டித்து நம்மை அரவணைக்கிறது.
‘என் கரங்கள் வானங்களை விரித்தன’ (ஏசா.45:12). ‘என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தியது’ (ஏசா.48:13).
அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று. அவருடைய கரத்திலிருந்து கிரகணங்கள் வீசப்பட்டது. கற்பாறையிலிருந்து நீர் ஊற்றை புறப்படச் செய்தார். தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருக் கிறார்.
அவருடைய கரத்திலே சமத்துவமும் வல்லமையும் உண்டு. எவரையும் மேன்மைப்படுத்தவும் உயர்த்தவும் அவருடைய கரத்தால் ஆகும். எந்த மனுஷனாலும் கிரகிக்கக் கூடாத மகா பயங்கரமான செயல்களை செய்கிறார். அக்னிமயமான பிரமாணம் அவருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்டது. ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ண முடியாத அதிசயங்களையும் அவருடைய கரத்தினால் எப்பொழுதும் செய்து கொண்டு இருக்கிறார்.
‘நீ உன் கோலை ஓங்கி உன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டி சமுத்திரத்தை பிளந்துவிடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள்’ (யாத்.14:16).
எகிப்து தேசத்தில் 430 வருடம் சிறைப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு பாலும், தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு அவரது வலக்கரத்தால் அழைத்து வருகின்ற வழியில் முன்பக்கம் செங்கடல், பின்பக்கம் எகிப்தின் யுத்த சேனைகள், இரு பக்கமும் பெரிய மலைகள்.எங்கும் ஓட இயலாத சூழ்நிலை ஏற்பட்ட போது எகிப்தியரின் யுத்த வீரர்கள் தங்களுக்குப் பின்னே நெருங்கி வருகிறதை பார்த்து இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி ‘நீ உன் கோலை ஓங்கி உன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டி சமுத்திரத்தை பிளந்துவிடு’ என்றார். மோசேயின் கரத்தின் மேல் கர்த்தருடைய பலத்த கரம் இருந்தது.
தேவன் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார். செங்கடல் தண்ணீர் இரண்டாக பிளந்து இரு பக்கமும் மதில்போல் நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்து போயிற்று. இஸ்ரவேல் ஜனங்கள் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். தேவனுடைய வலதுகரம் அவர்களை தாங்கி நடத்தியது.
‘நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும் உன் தேவனுடைய கரத்தில் ராஜ முடியுமாயிருப்பாய்’ (ஏசா.62:3).
அவருடைய இரட்சிப்பின் கேடயத்தை எனக்குத் தந்து வலது கரத்தினால் என்னை தாங்குகிறார். தேவன் கொடுக்கும் ஞானம் நமது தலைக்கு அலங்காரமான மகிமையான கிரீடத்தை சூட்டும். மரணபரியந்தம் உண்மையாய் ஜீவிக்கிறவர்களுக்கு ஜீவ கிரீடத்தை கொடுக்கிறார். ஆத்துமா ஆதாயம் செய்கிறவர்களுக்கு அழிவில்லாத கிரீடத்தை கொடுக்கிறார். விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிறவர்களுக்கு நீதியின் கிரீடத்தை கொடுக்கிறார். அவர்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு மகிழ்ச்சியின் கிரீடத்தை கொடுக்கிறார். தேவனுடைய மந்தையை மேய்க்கிறவர்களுக்கு மகிமையுள்ள வாடாத கிரீடத்தை கொடுக் கிறார்.
உண்மையாய் கர்த்தரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன் மேல் இருக் கும். பரிசுத்தமாய் ஜீவிக்கின்றவர்களுக்கு பரிசுத்தமுள்ள பொற்பட்டயத்தின் கிரீடத்தை அவர்கள் தலையின்மேல் கட்டு கிறார். அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன (வெளி.19:12).
நம்மை தேவனுடைய கரத்தில் ராஜமுடியாக வரைந்து வைத்திருக்கிறார். அவருடைய கரத்தின் நிழலினால் நம்மை மறைக்கிறார், ஆமென்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருஉருவம் திருச்சி உலக மீட்பர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.
திருச்சி பாலக்கரையில் உலக மீட்பர் சகாயமாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதாவின் திருஉருவம் நேற்று கொண்டு வரப்பட்டது.
அதில் சகாயமாதாவின் கையில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் அச்சத்தில் இருப்பது போன்றும், மாதா அவரது பயத்தை போக்கி அரவணைத்து கொள்வது போலவும் வரையப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் லூக்கா இந்த படத்தை வரைந்துள்ளார். பழமை வாய்ந்த மற்றும் அரிய ஓவியத்தை பார்வையிட கிறிஸ்தவர்கள் நேற்று காலை முதலே ஆலயத்திற்கு வரத்தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சகாயமாதாவின் திருஉருவத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.
மக்கள் செல்வதற்கு வசதியாக ஆலயத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தன. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை சகாயமாதாவின் திருஉருவத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர். இந்த அரிய திருஉருவ ஓவியம் குறித்து உலகமீட்பர் பசிலிக்கா ஆலயத்தின் பாதிரியார்கள் கூறியதாவது:-
இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் இருந்த போது தாய் மாதா அவரை கையில் வைத்திருக்கும் போது நற்செய்தியாளர் லூக்கா நேரில் கண்டு வரைந்துள்ளார். இந்த திருஉருவம் வரையப்பட்டு 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இயற்கையான மூலிகைகளால் வரையப்பட்ட இந்த திருஉருவம் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சகாயமாதாவின் இந்த தோற்றம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மேலும் இந்த தோற்றத்தால் மாதா இடைவிடா சகாயமாதா அன்னை என அழைக்கப்படுகிறார்.
இந்த தோற்றத்தில் இருக்கும் சகாயமாதாவை கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வழிபட தொடங்கினர். திருச்சியில் பசிலிக்கா ஆலயத்தில் கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இடைவிடா சகாயமாதாவின் பக்தி முயற்சி தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும், திருச்சியில் பசிலிக்கா ஆலயத்தில் 60-வது ஆண்டையொட்டியும் இடைவிடா சகாயமாதாவின் திருஉருவம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருஉருவத்தை ரோம் நகரில் இருந்து ரட்சகர்கள் சபை குருக்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் ஆலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மதுரையில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோவை ஆகிய ஊர்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘தூய இதய ஆண்டவர் ஆலயம்’ பார்ப்போர் அனைவரையும் வசீகரிக்கும் நூற்றாண்டுப் பழமையுடையது.
புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கியதும், கிழக்கே கம்பீரமாகத் தோற்றமளிக்கும் ‘தூய இதய ஆண்டவர் ஆலயம்’ பார்ப்போர் அனைவரையும் வசீகரிக்கும் நூற்றாண்டுப் பழமையுடையது.
நூற்றாண்டுப் பழமையுடைய தூய இதய ஆண்டவர் ஆலயங்கள் தமிழகத்தில் இடைக்காட்டூர், கொடைக்கானல், புதுக்கோட்டை போன்ற இடங்களில் இருந்தாலும், நுண்கலை அழகியலில் இடைக்காட்டூர் ஆலயமே நம்மைக் கவரும். அது போலப் பல சிறப்புகளைக் கொண்டும், அளவில் பெரியதுமான ஆலயமே, புதுவை தூய இதய ஆண்டவர் ஆலயம்.
உலக நாடுகளில் தூய இதய ஆண்டவர் ஆலயங்கள் பெருவாரியாக எழுந்ததற்கும் ஒரு காரணமுண்டு. பிரான்ஸ் நாட்டில்பாரிஸ் நகரிலுள்ள மோன்மார்த்ர் (Montmartre) மலையிலுள்ள தூய இதய ஆண்டவர் ஆலயத்தை மையமாகக் கொண்டு, உலகெங்கிலும் இயேசுவின் தூய இதய பக்தி வளர்ச்சி பெற்றதாகக் கூறுவர். இதைத் தொடர்ந்து, தூய இதய ஆண்டவருக்கான ஆலயங்கள் பரவலாக எழுந்துள்ளன. இந்தப் பின்னணியிலேயே நம் நாட்டிலும் தூய இதய ஆண்டவர் ஆலயங்கள் தோன்றியுள்ளன.
புதுவையிலுள்ள இத்தூய இதய ஆண்டவர் ஆலயம் கட்டப்படுவதற்கு 1902 – இல் அடிக்கல் நடப்பட்டு ஆலயப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 1907 – இல் ஆலய இறக்கைப் பகுதியில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமை அடையாமல் இருந்திருந்த கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று 1909 – இல் நிறைவு பெற்றுள்ளன. இவ்வாலய வரைபடத்தை வரைந்தவர் அருட்தந்தை. டெலஸ்போர் வெல்டர்(Rev.Fr. Telesphore Welter). இவர் புதுவை மறை மாவட்டத்தில் பல கோவில்களைக் கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர். இவர் இவ்வாலயப் பணிகள் நிறைவுற்ற நிலையில் 15.04.1909 இல்இறையடி சேர்ந்துள்ளார்.

1897-98 ஆண்டுகளிலேயே இக்கோவில் கட்டுவதற்கான வேலைகளைத் தொடங்கி இருந்தாலும், புதுவையில் அப்போது நிலவிய பஞ்சம், பணப் பற்றாக்குறை, இடம் முழுமையாகக் கிடைக்காத நிலை போன்ற பல காரணங்களால் இக்கோவில் கட்டுமானப்பணி 1902-இல் தாமதமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் இலத்தீன் சிலுவை வடிவமைப்பும், கோதிக் கட்டடக்கலைத் திறனும் கொண்டதாக உள்ளது. 50 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும், 18 மீட்டர் உயரமும் கொண்ட இவ்வாலயத்தை 24 மிகப்பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஆலயத்தில் உள்ள கண்ணாடி ஓவியங்கள் அழகானவை. புனிதர்கள் படங்களைச் சித்தரித்துள்ள அவைகளில் 14 முழு உருவப் படங்களும், 14 மார்பளவுப் படங்களும் உள்ளன. 2005 சுனாமி நேரத்தில் இக்கண்ணாடி ஓவியங்களில் சில சிதைந்துள்ளன.
ஆலயத்தின் நடுவிலுள்ள பீடம் தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது போலவே இடது வலது இறக்கைப் பகுதிகளிலும் தலா மூன்று பீடங்கள் உள்ளன. மர வேலைப் பாடுகளுடன் கூடிய இப்பீடங்களை, அன்றைய திண்டிவனம் தொழிற்பயிற்சி மாணவர்கள் செய்துள்ளனர்.
இத்தகு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலயம், 2011-இல் போப்பாண்டவரால் “பசிலிக்கா” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமுதல் புதுவையின் முதல் பசிலிக்கா தேவாலயம் ஆயிற்று. தமிழகத்தில் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம், பூண்டி மாதா, திருச்சி சகாயமாதா, தூத்துக்குடி பனிமயமாதா ஆகிய ஐந்து தேவாலயங்கள் பசிலிக்கா தரத்தில் உள்ளன. இப்போது புதுவை – தமிழக அளவில் இது ஆறாவதாகவும், இந்தியாவில் 20-வதாகவும், ஆசியாவில் 50-வதாகவும் இத்தூய இதய ஆண்டவர் ஆலயம் இடம் பிடித்துள்ளது.
நூற்றாண்டு விழாவின் போது புதுவை அரசு இவ்வாலயத்தைச் சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது.

நாமும் நமக்கு இறைவன் தந்திருக்கும் திறமைகளை அவருக்காகப் பயன்படுத்தி, அதை இறுதியில் அவரிடமே ஒப்படைக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்கு பெறுவோம்
ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் வெளிநாடு செல்லும் முன் தன்னுடைய பணியாளர்கள் மூவரை அழைத்து அவர்களிடம் தன்னுடைய உடமைகளையெல்லாம் ஒப்படைத்து, பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
பின் அவர்களின் திறமைக்கு ஏற்ப ஒருவனுக்கு ஐந்து தாலந்துகளும், ஒருவனுக்கு இரண்டு தாலந்துகளும், மூன்றாமவனுக்கு ஒரு தாலந்துமாக அவர்களிடம் கொடுத்தான். ஒரு ‘தாலந்து’ என்பது சுமார் முப்பது கிலோ தங்கம் என வைத்துக் கொள்ளலாம்.
ஐந்து தாலந்து பெற்றவன் மகிழ்ந்தான். தன்னுடைய திறமையின் மீது தலைவன் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்யாய்ப் போய்விடக் கூடாது என்று நினைத்து மிகவும் கடுமையாக உழைத்தான். அந்த ஐந்து தாலந்துகளையும் முதலீடாய்ப் போட்டு அவன் உழைத்ததில் மேலும் ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்தான்.
இரண்டு தாலந்து பெற்றவனும், தலைவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்து விடக் கூடாதே என எண்ணி கடுமையாய் உழைத்தான். அவனுடைய உழைப்பினால் மேலும் இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்தான்.
ஆனால் ஒரு தாலந்து பெற்றவனோ ஒன்றுமே செய்யவில்லை. தனக்குக் கிடைத்தத் தாலந்தை மண்ணிலே புதைத்து வைத்துவிட்டு இளைப்பாறினான். சோம்பித் திரிந்தான். தலைவன் வந்து கேட்கும்போது எடுத்துக் கொடுத்து விடலாம் என்பது அவனுடைய சிந்தனை.
வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்ட தலைவன் வீடு திரும்பினான். தன்னுடைய ஊழியர்களை அழைத்துக் கணக்குக் கேட்டான்.
ஐந்து தாலந்து பெற்றவன் தலைவனுக்கு முன்பாக வந்து நின்றான், ‘ஐயா.. நீர் என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஐந்து தாலந்துகளைக் கொடுத்தீர்கள். அதைக் கொண்டு மேலும் ஐந்து தாலந்துகளை நான் சம்பாதித்திருக்கிறேன். இந்த பத்து தாலந்துகளும் உமக்கே சொந்தமானவை. இதோ பத்து தாலந்துகள்’ என்றான்.
தலைவன் மகிழ்ந்தான், ‘நன்று ஊழியனே. என்னுடைய நம்பிக்கையை நீ காப்பாற்றிவிட்டாய். சிறிய செயல்களில் நீ நம்பிக்கைக்குரியவனாய் இருந்ததால் உன்னைப் பெரிய பொறுப்புகளுக்குத் தலைவனாக்குவேன்’ என்று அந்த ஊழியனைப் பாராட்டினான். ஊழியன் மகிழ்ந்தான்.
அப்போது இரண்டு தாலந்து பெற்றவன் தலைவனுக்கு முன்பாக வந்தான், ‘ஐயா... நீர் எனக்குத் தந்த இரண்டு தாலந்தை முதலீடு செய்து மேலும் இரண்டு தாலந்து களைச் சம்பாதித்துள்ளேன். இதோ நான்கு தாலந்துகள்’ என்றான்.
ஆஹா... உன்னை நினைத்து நான் மிகவும் மகிழ்கிறேன். நீயும் என்னுடைய நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியன் என்பதை நிரூபித்துவிட்டாய். சிறிய பொறுப்பில் நீ சிரத்தையுடன் செயல்பட்டதால் பெரியவற்றுக்கு உன்னைப் பொறுப்பாளியாக்குவேன்’ என்று பாராட்டினான்.
கடைசியாக ஒரு தாலந்து பெற்றவன் வந்தான்.
‘ஐயா... நீர் மிகவும் கடின மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும்... விதைக்காத இடத்திலும் போய் அறுவடை நடத்துவீர், தூவாத இடத்திலும் போய் சேகரிப்பீர்...’ பணியாளன் தன்னுடைய தலைவனைப் பற்றி குற்றம் சொல்ல ஆரம்பித்தான்.
‘உம்முடைய குணம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் எங்காவது முதலீடு செய்து நஷ்டமடைந்தால் என்ன செய்வது என்று பயம். அதனால் எதற்கு வீண் வம்பு என்று உம்முடைய பணத்தை மண்ணில் புதைத்து வைத்தேன். இதோ உமது பணம். நீர் தந்த பணம் அப்படியே இருக்கும் எதுவும் குறைவுபடாது’ அவன் பணத்தை நீட்டினான்.
தலைவன் கோபமடைந்தான்.
‘கெட்ட ஊழியனே. சோம்பேறியே! நான் விதைக்காத இடத்திலும் அறுப்பேன், தூவாத இடத்திலும் சேர்ப்பேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா? அப்படியானால் ஏன் என்னுடைய பணத்தை மண்ணில் புதைத்து வைத்தாய்? அதற்குப் பதிலாக நீ வட்டிக் கடைக்காரரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமே. எனக்கு வட்டியாவது கிடைத்திருக்குமே! உன்னால் எனக்கு என்ன பலன்?’ தலைவன் கோபத்தில் கத்தினான்.
‘இவனிடம் இருக்கும் தாலந்தைப் பிடுங்கி, பத்து தாலந்து உள்ளவனுக்குக் கொடுங்கள். அவன் இதைப் பயன்படுத்துவான். இந்த பயன்படாத ஊழியனை வெளியே உள்ள இருளில் தள்ளுங்கள். இவன் அழுகைக்கும் அங்கலாய்ப்புக்கும் சொந்தக்காரன்’ தலைவன் ஆணையிட்டான்.
அவர்கள் அவனைப் பிடித்து வெளி இருளில் தள்ளினார்கள். அவனிடமிருந்த தாலந்து பறிக்கப்பட்டது. அது பத்து தாலந்து உள்ளவனுக்குக் கொடுக்கப்பட்டது.
‘உள்ளவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என்பதே இந்த நிகழ்ச்சி சொல்லும் பாடம்.
பயன்படுத்தும் ஆர்வமும், முயற்சியும் உள்ளவனுக்கு வாய்ப்புகளும், இறைவார்த்தையும் கொடுக்கப்படும். அவன் சோதனைகளையும், தடைகளையும் தாண்டி பணி செய்வான். அந்தத் தகுதி இல்லாதவர்களுக்கோ அழுகையே மிஞ்சும்.
நாமும் நமக்கு இறைவன் தந்திருக்கும் திறமைகளை அவருக்காகப் பயன்படுத்தி, அதை இறுதியில் அவரிடமே ஒப்படைக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்கு பெறுவோம் என்பதே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
உடன்குடி மரியம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் உடன்குடி மரியம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 23-ம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் அமலிநகர் பங்கு தந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறையுரை நடந்தது.
திருவிழா தொடங்கியதையொட்டி தினமும் காலையிலும் மாலையிலும் திருப்பலியும், மறையுரையும் நடைபெறும். விழாவின் முக்கிய நாளான வருகிற வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நற்கருணை பவனியும், பங்கு தந்தை சில்வெஸ்டர் மறையுரையும் நடைபெறும். வருகிற 1-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தேவதாயின் சொரூப சப்பர பவனியும் மாலை 7 மணிக்கு மணப்பாடு புனித யாகப்பர் பங்கு தந்தை இருதயராஜ் பர்னாந்து தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், மகேஷ் சந்தியா மறையுரையும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜக்கிய விருந்தும்,கலைநிகழ்ச்சியும் நடைபெறும்.
2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஐக்கிய விருந்து, மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டிகள், தொடர்ந்து பரிசளிப்பு விழா, இரவு 8 மணிக்கு ஜெபமாலை, சப்பரபவனியும் நடக்கிறது. 3-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு திருப்பலியும்,கொடியிறக்க திருப்பலியும் நடைபெறும். மாலை 4 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, அருட்சகோதரிகள், நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் கமிட்டி மக்கள் செய்து வருகின்றனர்.
திருச்சி செல்வநாயகிபுரம் ஆலம் தெருவில் மாதாகோயில் புனித செல்வநாயகி அம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இந்த ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் திருச்சி மறைமாவட்ட ஆயரும், பேராலய அதிபருமான அந்தோணி டிவோட்டா நல்லாசியுடன், புனித ஆரோக்கிய அன்னை பேராலய பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார், நிர்வாக பங்குத்தந்தை லியோர் மில்கியோர் பாபு, உதவி பங்குந் தந்தை அன்புராஜ் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தினமும் மாலை 5.30 மணிக்கு சிறப்பு நவநாள் மற்றும் மறையுரையுடன் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (25-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னையின் திருவுருவம் தாங்கிய மின் அலங்காரத் தேர்பவனி நடைபெற்றது.
இதில் தஞ்சை புகழ் ஆல்பர்ட் மைந்தர்களின் கிளாரி டென்ட் இன்பநாத இன்னிசை இடம் பெறுகிறது. இந்த அலங்கார தேர்பவனி குட் ஷெட்ரோடு, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தது.. அருட்தந்தை லாரன்ஸ் அடிகளார் புனிதப்படுத்தி பவனியைத் துவங்கி வைத்தார்.
இன்று (26-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதனை தூய பவுல் இறையியற் கல்லூரி அதிபர் டாக்டர் ஆரோக்கியராஜ் அடிகள் நிறைவேற்றுகிறார். முடிவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அர்ச்வனத்து சின்னப்பர் திருவிழா அன்று பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கே.என்.நேரு எம்.எல்.ஏ. மற்றும் பலர் பங் கேற்கிறார்கள். அன்று இரவு இன்னிசை நிகழ்ச்சி நடை பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் பீட்டர், செயலாளர் பேசில் தலைமையில் நிர்வாகிகள், விழா சிறப்பு குழுவினர், அன்பியங்கள், இளைஞர் மன்றம் மற்றும் இறை மக்கள் செய்து வருகிறார்கள்.