என் மலர்
கிறித்தவம்
இதன்படி இன்று (புதன்கிழமை) ஈரோடு சத்தி ரோடு மணிக்கூண்டு செல்லும் வழியில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் கல்லறைகள் சுத்தம் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இறந்தவர்களை நினைவு கூர்ந்தும் ஆன்மா சாந்தி அடையவும் இந்த பிரார்த்தனை நடத்தப்படுகிறது.
இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ கல்லறைகளிலும் இன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து கல்லறைகளை சுத்தம் செய்து மெழுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
புனித அமல அன்னை பங்குதந்தை அருண் தலைமையில் அருள், முத்து, பிலிப் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இறந்தவர்களை நினைவு கூர்ந்து சிறப்பு பிரார்தனை செய்தனர்.
இதே போல் இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி புதுவையில் உப்பளம், முத்தியால்பேட்டை, உழவர்கரை, வில்லியனூர், அரியாங்குப்பம், ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைகளில் வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
கல்லறை தினத்தையொட்டி பெங்களூர், ஊட்டி மற்றும் தமிழக பகுதியில் இருந்து பட்ரோஸ், ஜெர்புரா, மினி ரோஸ், சாமந்தி, ரோஜா, உள்ளிட்ட பல வகையான வண்ணப்பூக்கள் வரவழைக்கப்பட்டன.
இவை கல்லறை தோட்டம் அருகிலும், பெரிய மார்க்கெட், பூக்கடை மற்றும் மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆலயம் உள்ளிட்ட இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டன.
கிறிஸ்தவர்கள் இறந்த தங்களின் குடும்ப உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்தும் கல்லறை திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் கல்லறைகளை தூய்மை செய்து மலர்மாலை அணிவித்து சாம்பிராணி காண்பித்துமனமுருக வழிபாடுகளை நடத்தினர்.
தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாளையொட்டி காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ்,உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஷ்ஏசுதாஸ், ஆன்மிகதந்தையர்கள் மாசிலாமணி, அருளானந்தம் ஆகியோர் இந்த திருப்பலியில் பங்கு கொண்டனர்.
திருப்பலிக்கு பின்னர் பூண்டி மாதா பேராலயத்தின் பங்குத்தந்தையாக பணியாற்றி மறைந்த , பேராலயத்தின் நுழைவு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அருட்தந்தை லூர்துசேவியர் கல்லறைக்கும், பேராலய பூங்கா வளாத்தில் உள்ள ராயப்பர் கல்லறைக்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் திருக்காட்டுப் பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள்நடைபெற்றது.கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ கல்லறைகளில் தூய்மை செய்து வழிபாடு நடத்தினார்கள்.
ஒருநாள் அதிகாலையிலேயே எழுந்து அவன் வெளியே சென்றான். பல ஆட்கள் வேலைக்குத் தயாராய் நின்றிருந்தார்கள்.
‘என்னுடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய உங்களுக்குச் சம்மதமா?’
‘கண்டிப்பாக ஐயா. யாராவது வேலைக்கு அழைப்பார்களா என்னும் எதிர்பார்ப்பில் தான் நாங்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறோம்...’
‘சரி. உங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி. என்னுடைய தோட்டத்தில் சென்று வேலை செய்யுங்கள்’.
உரிமையாளன் சொல்ல அவர்கள் தங்களுக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் திராட்சைத் தோட்டத்துக்கு விரைந்தார்கள். போன உடனேயே வேலையை ஆரம்பித்தார்கள்.
காலை ஒன்பது மணியளவில் தோட்ட உரிமையாளன் சந்தையை நோக்கிச் சென்றபோது அங்கே வேறு சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
‘என்னப்பா? வேலை தேடி நிற்கிறீர்களா?’ அவன் கேட்டான்.
‘ஆம் ஐயா...’
‘சரி.. நீங்களும் என்னுடைய திராட்சைத் தோட்டத்துக்குச் சென்று வேலை செய்யுங்கள். உங்களுக்கு நியாயமான கூலியை நான் தருவேன்’ அவன் சொல்ல அவர்கள் அவனுடைய தோட்டம் இருக்கும் இடத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு வேலைக்குச் சென்றார்கள்.
சந்தைக்குச் சென்று விட்டு தலைவன் மதியம் பன்னிரண்டு மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மீண்டும் சிலர் வேலை தேடி வழியில் நின்று கொண்டிருந்தார்கள். அவர் களையும் தலைவன் தன்னுடைய திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினான்.
பிற்பகல் மூன்று மணிக்கு வெளியே வந்த தலைவன் அப்போதும் அங்கே சிலர் வேலையில்லாமல் நிற்பதைக் கண்டு அவர்களையும் வேலைக்கு அமர்த்தினான்.
மாலை ஐந்து மணிக்கு தெருவில் சென்றபோது அப்போதும் சிலர் அங்கே வேலையில்லாமல் நிற்பதைக் கண்ட அவன் ஆச்சரியமடைந்தான்.
‘என்ன? நாள் முழுவதும் இப்படி வேலை செய்யாமல் பொழுதைக் கழிக்கிறீர்களே! தப்பென்று தெரியவில்லையா?’.
‘ஐயா... எங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை. நாங்கள் காலையிலிருந்தே காத்திருக்கிறோம்’ அவர்கள் சொன்னார்கள்.
‘சரி.. சரி.. நீங்களும் என்னுடைய திராட்சைத் தோட்டத்துக்குச் செல்லுங்கள். மாலையாகி விட்டது. பரவாயில்லை. கொஞ்ச நேரமாவது வேலை செய்யுங்கள்’ என்று அவர் களையும் அவன் தோட்டத்துக்கு அனுப்பினான்.
வேலை நேரம் முடிந்து விட்டது.
வேலையாட்களுக்குக் கூலி கொடுக்கும் நேரம்.
தலைவன் மேற்பார்வையாளனை அழைத்து, ‘வேலை செய்பவர்களுக்கெல்லாம் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அனைவருக்கும் கூலி கொடும்’ என்றான்.
மாலை ஐந்து மணியளவில் வந்தவர்கள் முதலில் அழைக்கப்பட்டார்கள்.
‘இதோ... ஒரு தெனாரியம். உனக்கான கூலி!’ அவன் கொடுக்க வேலையாட்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவர்கள் ஒரு மணிநேர உழைப்புக்கு ஒரு தெனாரியம் கிடைக்கும் என்று நினைத்திருக்கவில்லை. பொதுவாக ஒரு நாள் முழுவதும் வேலைசெய்பவர்களுக்கான கூலி அது.
முதலில் வந்தவர்கள் இதைப் பார்த்ததும் கணக்குப் போடத் தொடங்கினார்கள். ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கு ஒரு தெனாரியம் என்றால், சுமார் பன்னிரண்டு மணி நேரம் உழைத்த நமக்கு பன்னிரண்டு தெனாரியம் கூலி கிடைக்கும் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
அவர்களுடைய முறை வந்தது. அவர்களுக்கும் கூலி தரப்பட்டது! ஒரு தெனாரியம்!
அவர்கள் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
‘ஐயா... இது என்ன நியாயம்? ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கும், பகல் முழுவதும் வெயிலில் கிடந்து உழன்ற எங்களுக்கும் ஒரே கூலியா? அவங்களும், நாங்களும் ஒண்ணா? அநியாயமாய் இருக்கிறதே’ அவர்கள் தலைவனிடம் முறையிட்டார்கள்.
அவன் அவர்களில் ஒருவரை அழைத்தான்.
‘நண்பனே... நீ எப்போது வேலைக்கு வந்தாய்?’
‘விடியற்காலையில்...’
‘உனக்கு என்ன கூலி தருவதாகச் சொன்னேன்?’
‘ஒரு தெனாரியம்’
‘சொன்ன கூலி தரப்பட்டிருக்கிறதா?’
‘தரப்பட்டிருக்கிறது, ஆனால்...’
‘உனக்குரிய கூலி உனக்குத் தரப்பட்டிருக்கிறது. அதை வாங்கிக் கொண்டு போ. உன்னைப் போலவே கடைசியில் வந்தவனுக்கும் கூலி கொடுப்பது என் விருப்பம். நான் நல்லவனாய் இருப்பதனால் உனக்குப் பொறாமையா?’ தலைவன் கேட்க வேலையாட்கள் அமைதியானார்கள்.
விண்ணரசின் நிலை இதுவே. நீங்கள் கடைசியாய் வருகிறீர்கள் என்பதற்காக உங்களுடைய விண்ணக வாழ்வு மறுக்கப்படுவதில்லை. முதலில் வந்தீர்கள் என்பதற்காக அதிக சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை.
இறைவனின் அழைப்பை ஏற்று அவரிடம் வரவேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைபணி செய்ய வேண்டும்.
அடுத்தவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களுக்காக பொறாமை படக்கூடாது. கிடைக்கும் நேரத்தில் உண்மையாக இறைவனுக்காக உழைக்க வேண்டும். இத்தகைய பாடங்களை நாம் கற்றுக் கொள்வோம்.
28-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று திருவுடல் திரு ரத்த திருவிழா நடைபெற்றது. 29-ந்தேதி மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி மற்றும் புனிதரின் ஆடம்பர திருத்தேனி பவனி நடைபெற்றது. திருத்தூதரின் நம்பிக்கை திருவிழாவின் கூட்டு திருப்பலி செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் ஏ.நீதிநாதன் தலைமையில் நடைபெற்றது.
அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் புனித யூதா ததேயு திருத்தேர் திருவிழா நிறைவடைந்தது.
தினமும் மூன்றுவேளை ஜெருசலேமுக்கு நேராக தனது ஜன்னல்களை திறந்து வைத்து முழங்காலிட்டு ஜெபம் செய்தார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோதுகூட, வலி கடுமையாக இருந்தாலும் தனது ஜெபத்தில் இருந்து தவறவில்லை. அவர் சிலுவையில் ஆறு மணி நேரம் அறையப்பட்டிருந்தார்.
அந்த ஆறு மணி நேரமும் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணினார். கிறிஸ்துவை போல மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ கஷ்டமாக இருந்தாலும்கூட, ஜெபம் செய்வதில் இருந்து தவறக்கூடாது.
‘நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது’ (நீதி 23:18) என்கிறது விவிலியம்.
நம்பிக்கை என்றால் என்ன?
‘உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்வாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்’ (ரோமர் 4:18).
மேற்கண்ட வசனத்தில் நம்புவதற்கு எவ் விதத்திலும் சாத்தியக்கூறுகள் இல்லாத சூழ்நிலையில் ஆண்டவரை விசுவாசிப்பதுதான் நம்பிக்கை. மேலும், ‘அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல. ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில் அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்’ (ரோமர் 8:24,25).
மேற்கண்ட வசனங்களின்படி இது வரைக்கும் நீங்கள் காணாததை பொறுமையோடு விசுவாசிக்கிறது தான் நம்பிக்கை. ஆகவே, எதிர்மறையான எண்ணங்களுக்கு சாத்தான் உங்களைக் கொண்டு சென்றிருந்தால் உங்கள் சிந்தனையும், இருதயங்களின் எண்ணங்களையும் கிறிஸ்து இயேசுவுக்குள் சிறைப்படுத்தி, இச்செய்தியை ஜெபத்தோடு வாசியுங்கள்.
தேவனை நம்புகிறவர்கள் எப்படி இருப்பார்கள்?
‘அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக் கொண்டு நடந்தான்’ (2 ராஜா 18:6)
தன்னுடைய 25-வது வயதில் எருசலேமில் ராஜாவாகி 29 வருஷம் ஆட்சி நடத்திய ராஜாவாகிய எசேக்கியாவை குறித்து மேற்கண்ட வசனம் தெளிவாக கூறுகிறது.
கர்த்தரை நம்புகிறவர்களின் சுபாவம் எந்த சூழ்நிலையிலும் ஆண்டவரை விட்டு விலக மாட்டார்கள். ஆபத்துக் காலத்தில் ஆண்டவரைத்தேடி ஆசீர்வாதங்களை கண்டடைந்த பிறகு ஆண்டவரை மறந்துபோகிற மக்கள் அநேகராய் இந்நாட்களில் இருக்கிறார்கள். துன்பமும் துயரமும் சிலரை சில நேரங்களில் சூழ்ந்துக் கொள்ளும்போது கர்த்தரை மறந்து மறு தலிக்கிற மக்களும் நம்மிடையே உண்டு.
ஆண்டவராகிய இயேசு ராஜா சிலுவைக்கு செல்வதற்கு முன்பு அவரோடு இருந்த சீடர்கள் அனைவரும் அவரை விட்டு விலகி ஓடினார்கள். ‘பேதுருவோ விலகி ஓட மனதில்லாமல், வைராக்கியமாக அவரோடு நிற்க முடியாமல், இயேசுவுக்கு விரோதமானவர்களோடு அமர்ந்துக் கொண்டு இயேசுவை மறுதலித்தார்’ என (லூக்கா 22:54-60) வசனங்கள் கூறு கிறது.
நம்பிக்கை உடையவர்கள் எந்த நிலைமையிலும் ‘நான் நம்புகிறது கர்த்தாராலே வரும்’ (சங்: 62:5) என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஒருநாளும் ஆண்டவரை விட்டு விலக அவரது இருதயம் இடம் கொடுக்காது.
தேவனை சார்ந்த வாழ்க்கை
‘அவன் கர்த்தரை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்’ (2 ராஜா 18:6)
கர்த்தரை முழு இருதயத்தோடு நம்புகிறவர் களின் மற்றொரு முக்கிய சுபாவம் எப்போதும், எல்லாவற்றிற்காகவும் ஆண்டவரையே சார்ந் திருப்பார்கள். ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்று சொல்வது வேறு, முற்றிலுமாய் அவரையே சார்ந்திருப்பது வேறு. சில வேளைகளில் நம்முடைய இருதயம் ஆண்டவரை நம்புவது போல தெரியும். ஆனால் சிந்தையிலோ எல்லா நம்பிக்கையும் மனுஷனையே சார்ந்து இருக்கும்.
‘மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதை தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரே 17:5)
மேற்கண்ட வசனத்தில் மனுஷனை நம்புகிறவர்கள் மாம்சத்தை சார்ந்து இருப்பார்கள் என்று வாசிக்கிறோம் அல்லவா? அதாவது உலகப் பிரகாரமான எண்ணங்கள், உலக ஞானம் படிப்பினால் வருகிற பலன், மனுஷனுடைய ஒத்தாசை இவைகள் எல்லாம் மாம்சத்துக்கு உரியவைகளைக் குறிக்கும். ஆனால் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கீழ்காணும் வசனங்கள் நமக்கு மிகவும் அழகாக எடுத்துக் கூறுகிறது.
‘கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்’ (எரே 17:7,8)
எந்த சூழ்நிலையிலும் கர்த்தரையே சார்ந்து வாழப் பழகுங்கள். அவ்வாழ்க்கை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிக்கே பெருத்த ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். ஆண்டவரை சார்ந்து வாழும்போது உங்கள் வாழ்க்கை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். எசேக்கிகயல் ராஜாவை கர்த்தர் ஆசீர்வாதத்திற்கு இது முக்கிய காரணமாகும்.
தேவனை நம்புவதின் ஆசீர்வாதங்கள்
‘அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை’ (2 ராஜா 18:7). எத்தனை ஆசீர்வாதமான வாழ்க்கை. மேலும் ‘கர்த்தர் அவனோடு இருந்தார்’ என்று 2 ராஜா 18:7 சொல்லுகிறது. இதைவிட வேறொரு ஆசீர்வாதம் நமக்கு வேண்டுமா?
எத்தனை கோடி பணம் இருந்தாலும், சரீர பெலன் இருந்தாலும் கர்த்தர் நம்மோடு கூட இருப்பதை போன்ற ஆசீர்வாதம் வித்தியாசம் அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக எசேக்கியா ராஜா செல்லும் இடமெல்லாம் அவன் காரியம் அனுகூலமாயிற்று என்று 2 ராஜா 18:7-ல் வாசிக்கிறோம். எத்தனை பெரிய ஆசீர்வாதம்.
மேற்கண்ட ஆசீர்வாதங்களை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்கள், நம்புவதற்கு ஏதுவல்லாத அற்புதங்களை இன்று முதல் நம்புங்கள். நீங்கள் நம்புகிற ஆசீர்வாதங்களை வாய்களைத் திறந்து விசுவாச அறிக்கையாகக் கூறுங்கள். நீங்கள் கூறின ஆசீர்வாதங்கள் உங்களிடத்திற்கு வரும்வரை நம்பிக்கையோடு கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். நம்பிக்கையின் தேவன் தம்முடைய அளவற்ற ஆசீர்வாதங்களால் உங்களை நிரப்பி சந்தோஷப்படுத்துவார்.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
ஒரு தாய், தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலேயே அதை அன்போடு வளர்ப்பவளே தாய்.
ஆனால் இன்றைய சமுதாயத்திலே அப்படிப்பட்ட தாய் கூட, தன் பிள்ளைகளை மறந்து விடுகிறாள். இதுபோன்ற சம்பவங்களை நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அத்தகைய அன்பில்லாத காலத்திலேதான் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதே இல்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்த பரம தகப்பன், நம்மை ஒரு நாளும் கைவிடுவதே இல்லை. ஒருநாளும் மனிதனை தேடிப் போகாதீர்கள்.
ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். அவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
இக்கால சூழ்நிலையில் மட்டுமல்ல, அக்காலத்திலும் கூட இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையில், அவர்கள் தேவனை விட்டு விலகிப் போனார்கள். 'கர்த்தர் என்னை மறந்தார், ஆண்டவர் என்னை கைவிட்டார்' என்று கூறியப்படியே இறைவனிடமிருந்து விலகி சென்றார்கள்.
ஆனால் உண்மையில் தேவனை விட்டு மனிதர்கள்தான் விலகிச் செல்கிறார்களே தவிர, ஒரு போதும் தேவன் மனிதனை விட்டு விலகுவது இல்லை. இதை ஆதி மனிதனான ஆதாம் முதலே, நாம் வேதாகமத்தில் பார்க்கிறோம். அதே நேரத்தில் முதல் மனிதன் முதற்கொண்டு தேவனே நம்மை தேடி வந்திருக்கிறார். இயேசு வானவர் நம்மை தேடியே, இந்தப் பூமியில் மனிதனாக பிறந்து நமக்காக துன்பங்களை அனுபவித்தார்.
நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்னும் நமக்காகவே காத்திருக்கிறார். இயேசு கைவிடுபவர் அல்ல, கரம் பிடித்து நடத்துபவர். நம்முடைய கரத்தை இயேசுவின் கரத்தில் கொடுத்து ‘தேவனே நீர் என்னை நடத்தும்' என்று, நம்மை முழுவதுமாக அர்ப்பணிக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய செயல்களை அனுதினமும் பார்க்கலாம்.
இயேசு கிறிஸ்து கூறுகிற இளைய குமாரன் உவமையில், தகப்பனை விட்டு இளைய குமாரன் தான் விலகி போகிறானே தவிர, அவனை விட்டு தகப்பன் விலகி செல்லவில்லை. நம்முடைய தகப்பனாகிய தேவன், எப்பொழுதும் நம்மை அரவணைக்கவே ஆசைப்படுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற சிறுசிறு விஷயங்கள் நம்மை கவலையில் ஆழ்த்தும் போதெல்லாம், இறை விசுவாசத்தில் இருந்து விலகி தேவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மறந்து 'தேவன் என்னை கை விட்டார்; என்னை அவர் மறந்து விட்டார்' என்று நாம் எண்ணுவோமானால், அது விசுவாச துரோகம்.
பவுல் அப்போஸ்தலர் தன்னுடைய துன்பத்தின் மத்தியிலும் 'நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்' (2 தீமோ 1:12) என்று, விசுவாசத்தின் உறுதியை வெளிப்படுத்தினார். அதுபோல நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழலிலும் ‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்' (சங் 138:8) என்று விசுவாசத்தில் உறுதியாய் இருக்கவேண்டும்.
'கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்து விடு' (சங் 55:22) என்ற வேத வார்த்தைக்கு கீழ்ப் படிந்தவர்களாக, இயேசுவின் மீது எல்லா பாரங்களையும் இறக்கி வைக்க பழகிக்கொள்ளுங்கள். அப்போது தேவன் அனுதினமும் நமக்காக செயல்படுவதை பார்க்கலாம். மேலும் தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்படும் மனிதனின் வாழ்க்கையில் 'தேவன் என்னை கை விட்டார்' என்ற எண்ணத்திற்கே இடம் கொடுக்காமல், தேவனின் வழிக்காட்டுதலில் வாழலாம்.
தேவனுடைய சித்தத்தை வேத வாசிப்பினாலும், ஜெபத்தினாலும் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நாம் ஜெபிப்பது நம்முடைய சித்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இருப்பதைவிட, தேவனுடைய சித்தத்தை நம்முடைய வாழ்வில் நிறைவேற்றிக் கொள்வதாக அமையவேண்டும்.
நம்முடைய சுயசித்தம் எந்த அளவிற்கு அழிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு தேவனுடைய சித்தம் நமது வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கிறது. தேவனுடைய சித்தம் நமது வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கும் பொழுது தேவனோடு நெருங்கி தேவனுக்கு பிரியமாக வாழ ஆரம்பிக்கிறோம்.
தேவனுக்கு பிரியமாக வாழ ஆரம்பிக்கும் பொழுது நம்முடைய வாழ்வில் சமாதானமும், சந்தோஷமும் எப்பொழுதும் நமக்குள் இருக்கும் என்று வேதம் கூறுகிறது 'ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக் களும் அவனோடே சமாதானமாகும் படி செய்வார்' (நீதி 16:7). எனவே நாம் தேவனோடு இருக்க பிரயாசப்பட்டால், தேவன் என்றென்றைக்கும் நம்மோடு கூடவே இருப்பார்.
- மிராண்டாஸ், சென்னை.
விவிலியத்தில், யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் என குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் (காண்க: மத்தேயு 13:55-56; மாற்கு 6:3), அவர்கள் யோசேப்புக்கும் மரியாவுக்கும் பிறந்தவர்களா அல்லது சகோதரர்கள் முறை கொண்டவர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் முதலாம் நூற்றாண்டின் யூத வரலாற்று ஆசிரியரான யோசேஃபசு என்பவரும் யாக்கோபை இயேசுவின் சகோதரர் என குறிப்பிடுகிறார். அவருடைய கூற்று நற்செய்தி நூல்கள் தரும் செய்தியோடு ஒத்திருக்கின்றன.
புனித பவுலும் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் "ஆண்டவரின் சகோதரரான யாக்கோபு" (கலாத்தியர் 1:19) என குறிப்பிடுகிறார். மேற்கூறிய இடங்களில் எல்லாம் adelphos என்னும் கிரேக்க மூலச் சொல்லே சகோதரர் என்று பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தாய் வழிவராச் சகோதரரையும் குறிக்கலாம்; பெற்றோரின் சகோதரர்களுக்குப் பிறந்தோரையும் குறிக்கலாம்.
மேலும், அக்காலத்தில் ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபட்டு இருந்தவர்களையும் "சகோதரர்கள்" என்று அழைப்பது வழமையாயிருந்தது. இன்னொரு கருத்துப்படி, மரியாவின் கணவரான யோசேப்பு ஏற்கனவே மணமாகி, தம் மனைவி இறந்தபின்னர் மரியாவை மணந்துகொண்டார் எனவும், முந்திய மணத்திலிருந்து அவருக்குப் பிறந்த குழந்தைகளே இயேசுவின் சகோதரர் என்று குறிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே நற்செய்தி நூல்களில் இயேசுவின் சகோதரர் என்று குறிப்பிடப்படுவோர் மரியாவுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியா கணவனின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்தார் என்றும், எப்போதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்றும் கத்தோலிக்கர் உட்பட பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்று நம்புகின்றன; இதுவே அச்சபைகளின் போதனையும் ஆகும்.
புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபெத்து மரியாவின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறை யாதென்று குறிப்பிடப்படவில்லை.
‘நீங்கள் உலகின் ஒளியைப் போன்றவர்கள். விளக்கைக் கொளுத்தி மரக்காலின் கீழ் மறைத்து வைத்தால் அதனால் என்ன பயன்? அதன் ஒளி சுற்றியிருக்கும் இருட்டை அகற்ற வேண்டும். அதற்கு அந்த விளக்கானது விளக்குத் தண்டின் மீது தான் இருக்க வேண்டும். நீங்களும் விளக்கு போன்றவர்கள்’ என்ற இயேசு உலகின் பாவ இருளை அகற்றும் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
‘தீமையைத் தீமையால் வெல்ல முடியாது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதெல்லாம் பழைய போதனைகள். மோசேயின் காலத்தில் ஒருவனுடைய பல்லை யாரேனும் உடைத்தால் பதிலுக்கு அவனுடைய கண்ணைப் பிடுங்குவதோ, மிருகத்தனமாய் நடந்து கொள்வதோ வழக்கமாய் இருந்தது. அதை நெறிப் படுத்தத் தான் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று சட்டங்கள் வகுத்தார்கள்’.
‘நான் இப்போது சொல்கிறேன், அவற்றை விட்டு விடுங்கள். யாரேனும் உங்களை வலக்கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு உங்கள் இடக்கன்னத்தையும் காட்டுங்கள். அவன் செய்வது தவறு என்பதை அவனே புரிந்து கொள்ள வையுங்கள்’.
‘யாரேனும் உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் அவனுக்கு அதைவிட விலையுயர்ந்த உங்கள் மேலாடையையும் கொடுங்கள். யாராவது ஒரு கல் தொலைவு கூட வர கட்டாயப்படுத்தினால், இரண்டு கல் தொலைவு அவனோடு செல்லுங்கள். பணிவாய் இருப்பதற்கும் ஒரு துணிவு வேண்டும். அதை வளர்த்துக் கொள்ளுங்கள்’.
இயேசுவின் இந்த போதனையினால் கவரப்பட்டு ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். ஒரு நாள் இயேசு பெத்தானியாவில் பெரும் திரளான மக்கள் பின் தொடர சென்று கொண்டிருந்தார்கள். அந்தத் தெரு ஓரத்தில் இரண்டு பார்வையிழந்தவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் சத்தத்தைக் கேட்டபோது தங்களுக்கு அதிக காசு கிடைக்கும் என்ற ஆவலில் சத்தமாகப் பிச்சை கேட்டார்கள்.
வழக்கத்துக்கு மாறான கூட்டம் என்பதால் அவர் களில் ஒருவன் சென்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து, ‘ஏன் இவ்வளவு கூட்டம்?’ என்று கேட்டான்.
‘இயேசு சென்று கொண்டிருக்கிறார். அதனால் தான் இத்தனை கூட்டம்’ அவர் பதில் சொன்னார்.
‘இயேசு சென்று கொண்டிருக்கிறார்’ என்பதைக் கேட்டதும் அந்த இரண்டு பார்வையிழந்த மனிதர் களும் ‘தாவீதின் மகனே... இயேசுவே... எங்கள் மீது இரக்கம் வையும்’ என்று உரத்த குரலில் கத்தினார்கள்.
ஏனெனில் அவர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வல்லமை பற்றியும் கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது அவர்களுடைய தேவை பொருளாதாரத்தைத் தாண்டி பார்வை பெறுதல் என்று மாறியிருந்தது.
பார்வையில்லாமல் இருந்ததால் அவர்களால் இயேசுவை நெருங்கிச் செல்ல முடியவில்லை.
‘தாவீதின் மகனே... இயேசுவே... எங்கள் மீது இரக்கம் வையும்’ மீண்டும் அவர்கள் கத்தினார்கள்.
‘பேசாதே... அமைதியாய் இரு ...’ கூட்டத்தினர் அவர்களை அதட்டினார்கள்.
ஆனால் அவர்கள் தங்கள் கூச்சலை நிறுத்தவில்லை. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தால் அமைதியாய் போக முடியுமா? அவர்கள் இன்னும் உரக்கக் கத்தினார்கள்.
‘தாவீதின் மகனே... இயேசுவே... எங்கள் மீது இரக்கம் வையும்’.
இயேசு நின்றார், ‘அவர்களை என்னிடம் கூட்டி வாருங்கள்’ என்றார்.
அதுவரை அவர்களைத் திட்டிக் கொண்டிருந்த கூட்டத்தினர் அவருக்கு அருகே சென்றனர், ‘உற்சாகமாய் இரு. இயேசு உன்னை அழைக்கிறார்’ என்றனர்.
அவர்கள் இருவரும் பரவசமானார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்தார்.
‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?’ இயேசு கேட்டார்.
‘ஆண்டவரே... நாங்கள் பார்வை பெற வேண்டும். எங்கள் கண்களைத் திறந்தருளும்’ அவர்கள் வேண்டினார்கள்.
‘நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?’ இயேசு அவர்களுடைய நம்பிக்கையை ஆழம் பார்த்தார்.
‘ஆம் ஐயா...’ சற்றும் தயக்கமில்லாமல் பதில் வந்தது.
இயேசு அவர்கள் கண்களைத் தொட்டார், ‘உங்கள் நம்பிக்கை உங்களை நலமாக்கியது. பார்வையைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.
இருட்டுக்குள் கிடந்த இருவரும் சட்டென்று வெளிச்சத்துக்குள் வந்தார்கள்.
கூட்டத்தினர் அதிசயிக்க, பார்வை பெற்றவர்கள் சொல்ல முடியா ஆனந்தத்தில் குதித்தார்கள்.
‘யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கண்டிப்பான குரலில் இயேசு சொன்னார்.
ஆனால் அவர்களோ தங்களுக்குப் பார்வை தந்தவரின் பேச்சைக் கேட்கவில்லை. ஊரெங்கும் சென்று இயேசு தங்களுக்குச் செய்ததைப் பற்றி அறிவிக்கத் தொடங்கினார்கள்.
இயேசுவின் குழந்தை பருவ நற்செய்திகள் (Infancy Gospels) என்னும் பெயரில் பல நூல்கள் இப்பருவத்தில் இயேசுவின் வாழ்வை சித்தரிப்பதாக கூறுகின்றன.
3ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டிலிருந்து இயேசுவின் குழந்தை பருவம் கலையில் சித்தரிக்கப்படலாயிற்று. இதில் குறிப்பாக அவரின் பிறப்பு சித்தரிப்பு அடங்கும். இயேசுவின் தாய் மரியாவை சித்தரிக்கும் போது இயேசுவை குழந்தையாக அவை கையில் ஏந்தியவாறு சித்தரிப்பது வழக்கம். இச்சித்தரிப்புகளில் இயேசுவின் விருத்த சேதனம், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல், ஞானிகள் வருகை, எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல் ஆகியனவும் பொதுவாக சித்தரிக்கப்படுவது வழக்கம். நற்செய்திகள்.
லியொனார்டோ டா வின்சி போன்ற வல்லுனர்களின் படைப்புகளின் திருக்குடும்பம் மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் குழந்தை இயேசுவை சித்தரிப்பது வழக்கமானதொன்றாக இருந்தது.
திருமுறை நற்செய்திகளில் இப்பருவத்தினைப்பற்றி மிகக் குறைவாகவே உள்ளது. இயேசுவின் பிறப்பிலிருந்து 12ஆம் அகவையில் கோவிலில் சிறுவன் இயேசு அறிஞரோடு விவாதிப்பது வரை எத்தகவலும் இல்லை.
இதில் ஆயர் துரைராஜ், அருட்பணியாளர்கள் அமல், மைக்கேல், பெனடிக்ட், ஜான்பால் மற்றும் மும்பை மறைமாவட்ட தமிழ் பணிக்குருக்கள், தாபோர் குழுவினர் கலந்துகொண்டு வழி நடத்துகின்றனர். அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.






