என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    விண்ணகத் தந்தையின் அன்பை விட்டு விலகிச் செல்லும் போது, பாவத்தில் விழுகிறோம். அந்த தற்காலிக இன்பங்களே முழுமை என நினைக்கிறோம்.
    ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். கால்நடைகள், நிலபுலன்கள், வேலையாட்கள் என அவர்கள் செல்வச் செழிப்புடன் இருந்தார்கள்.

    மூத்த மகன் அமைதியானவன். தந்தைக்கு உதவியாய் இருந்தான். இளையவன் அவனுக்கு நேர் எதிர். உல்லாசப் பேர்வழி. ஒரு நாள் அவன் தந்தையிடம் வந்தான்.

    ‘அப்பா... நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்’.

    ‘என்ன முடிவு?’

    ‘நம்முடைய சொத்தில் எனக்குச் சேரவேண்டிய பாகத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள், நான் போகிறேன்’.

    தந்தை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவன் கேட்கவில்லை, எனவே தந்தை சொத்தைப் பிரித்து இருவருக்கும் அளித்தார்.

    இளையவன் சொத்தையெல்லாம் விற்று பெரும் பணம் திரட்டினான்.

    ‘வாருங்கள் நாம் வெளியூர் சென்று உல்லாசமாய் இருக்கலாம்’ என்று அவன் நண்பர்களை அழைத்தான். அவர்கள் வெளியூர் சென்று விடுதிகளிலும், சூதாட்ட இடங்களிலும் சென்று ஆனந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்.

    வருடங்கள் கடந்தன. அவனிடமிருந்த பணம் முழுவதும் தீர்ந்து போக, நண்பர்கள் விலகினர். விடுதியிலிருந்தும் துரத்தப்பட்டான்!

    செல்வத்தின் மீது நிமிர்ந்து படுத்திருந்த அவன் இப்போது கோணிக்குள் உடல் சுருக்கி தெருவோரத்தில் கிடந்தான். பசி அவனுடைய வயிற்றைக் கிள்ளியது.

    ‘ஐயா... எனக்கு ஏதாவது ஒரு வேலை தாருங்க ளேன்...’ என்று கேட்டு அவன் வேலை தேடி அலைந்தான், எதுவும் கிடைக்கவில்லை.

    கடைசியில் ஒருவர் இரக்கப்பட்டு பன்றிகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்தார். வேறு வழியில்லாமல் அதைச் செய்தான்.

    அந்த நாட்டில் பஞ்சம் பரவத் தொடங்கியது. எனவே அவன் பன்றிகளுக்கு வைக்கும் தவிட்டை உண்ணத் தொடங்கினான். அதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. உரிமையாளர் அவனை அடித்துத் துரத்தினார்.

    அப்போது தான் அவன் தன் தவறை உணர்ந்தான். தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவருடைய வேலைக்காரர்களில் ஒருவராக வாழலாம் என முடிவெடுத்தான். தந்தையின் இல்லம் நோக்கி நடந்தான்.

    அழுக்கடைந்த ஆடைகளுடன் ஒரு உருவம் தள்ளாடித் தள்ளாடி வருவதைக் கண்ட தந்தை அவனை அடையாளம் கண்டுகொண்டார்! அவனை நோக்கி ஓடினார்.

    ‘மகனே...’ என தன்னை நோக்கி ஓடி வரும் தந்தையைக் கண்டு மகன் கண் கலங்கினான்.

    ‘அப்பா... மன்னியுங்கள்... விண்ணகத் தந்தைக்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் நான் பாவம் செய்து விட்டேன். இனிமேல் எனக்கு உமது மகனாய் இருக்கும் தகுதி இல்லை. என்னை உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவராக எண்ணி உணவளிப்பீரா?’ - அவன் சொல்ல நினைத்திருந்ததை சொல்ல ஆரம்பிக்கும் முன், தந்தை பணியாளரை அழைத்தார்.

    ‘முதல் தரமான ஆடைகளைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். விரல்களுக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் உடனே அணிவியுங்கள். கொழுத்த கன்றை அடித்து விருந்து வையுங்கள்’.

    மாலையில் மூத்த மகன் வயலிலிருந்து வீடு திரும்பினான்.

    ‘இசை கேட்கிறது, நடனச் சத்தம் கேட்கிறது, என்ன விஷயம்?’ - பணியாளர் ஒருவரிடம் கேட்டான்.

    ‘உமது தம்பி திரும்பி வந்திருக்கிறார், எனவே தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறார்’.

    ஒரு உதவாக்கரைக்கு இத்தனை பெரிய விழாவா? அண்ணனின் மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. வீட்டுக்குள் நுழையாமல் வெளியே நின்றான்.

    தந்தை வெளியே வந்தார்.

    ‘மகனே உள்ளே வா... உன் தம்பி திரும்பி வந்திருக்கிறான்’.

    ‘உம் சொத்தையெல்லாம் அழித்து விட்டு வந்த மகனுக்காக விருந்தா...? ரொம்ப நல்லது. நீங்கள் விருந்து கொண்டாடுங்கள். நான் உள்ளே வரவில்லை’.

    ‘ஏன் இத்தனை கோபம்?’

    ‘இருக்காதா? நான் இத்தனை காலம் உம்மோடு இருக்கிறேனே. நான் விருந்துண்டு மகிழ எனக்கு ஒரு ஆட்டுக் குட்டியையாவது நீர் தந்ததுண்டா? இதோ கூத்தடித்து வந்த மகனுக்காய் கன்றை அடிக்கிறீர்’.

    ‘மகனே... நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையது எல்லாமே உன்னுடையது தான். நாம் இப்போது மகிழ்வது தான் முறை. ஏனென்றால், உன் தம்பி இறந்து போயிருந்தான், உயிர்த்துவிட்டான். காணாமல் போயிருந்தான், கிடைத்துவிட்டான்’ என்றார்.

    அண்ணனோ வீட்டுக்குள் நுழைய மனம் இல்லாமல் இருந்தான், தம்பியோ வீட்டுக்குள் தந்தையின் அன்பில் இணைந்திருந்தான்.

    விண்ணகத் தந்தையின் அன்பை விட்டு விலகிச் செல்லும் போது, பாவத்தில் விழுகிறோம். அந்த தற்காலிக இன்பங்களே முழுமை என நினைக்கிறோம். அவற்றை விட்டு விலகி மீண்டும் தந்தையின் அன்பில் இணைய விரும்பி வருபவர்களை தந்தை எந்த கேள்வியும் இன்றி அன்புடன் அரவணைக்கிறார்.

    நாம் நம் பாவத்தை விட்டு மனம் திரும்பி இறைவனிடம் வரும் மகனாய் இருக்க வேண்டும். திருந்திய தம்பியை ஏற்றுக் கொள்ள மறுக்கும், மன்னிக்கும் மனமற்ற அண்ணனாய் இருக்கக் கூடாது என்பதே இந்த நிகழ்வு சொல்லும் செய்தியாகும்.
    சிலுவை நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் வேறு எது நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.
    கல்வாரி மலை, இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். தனது மரணத்தின் விளிம்பில் நின்று மானுடத்தின் மன்னிப்புக்காய் குரல் கொடுக்கிறார் இயேசு.

    அவருடைய உரத்த குரலொலி பலருக்கு நகைப்பைத் தந்தது, சிலருக்கு இடைஞ்சலாய் இருந்தது. ஆனால் அங்கிருந்த ஒரு மனிதருக்கு அது வாழ்வு தரும் குரலாய் ஒலித்தது.

    அந்த மனிதர் ஒரு நூற்றுவர் தலைவன். ‘நூற்றுவர் தலைவன்’ என்றால் நூறு படை வீரர்களுக்குத் தலைவன் என்பது பொருள்.

    நூற்றுவர் தலைவனை சிலுவை தொட்டது. இயேசுவின் வார்த்தைகள் தொட்டன. மதம் இயேசுவை மறுதலித்தது. மதத்துக்கு வெளியே நின்ற நூற்றுவர் தலைவன் இயேசுவால் தொடப்பட்டார்.

    அந்த நூற்றுவர் தலைவன் இயேசுவின் சீடன் அல்ல. இயேசுவை விரும்பியவன் அல்ல. இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டவன் அல்ல.

    அந்த சிலுவை அவனைத் தொட்டது. சிலுவை வார்த்தைகள் அவனைத் தொட்டன. அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு அவனைத் தொடவில்லை. பாதகர்களின் பகட்டுச் சிரிப்பு அவனைத் தொடவில்லை. காவல்காரர்களின் கேலிச்சிரிப்பு அவனை அசைக்கவில்லை.

    ஆனால் தவறே செய்யாமல் உலகின் பாவங்களை சிலுவை வடிவில் தனது தோளில் விருப்பத்தோடு சுமந்து சென்ற இயேசுவின் சிரிப்பு அவனைத் தொட்டது. வலி மிகுந்த நேரத்திலும் பிறர் மீது குற்றம் சுமத்தாத இயேசுவின் வார்த்தைகள் அவனைத் தொட்டன. அந்த நூற்றுவர் தலைவன் சிலுவையைப் பார்த்தான். சிலுவையினால் தொடப்பட்டார். அவனுடைய வாழ்க்கை மாறியது.

    இன்று சிலுவை நமக்கு முன்னால் நிற்கிறது. இயேசுவின் வார்த்தைகள் நம்மிடம் இருக்கின்றன. நமது வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்த வல்ல வார்த்தைகள் அவை. அவருடைய சிலுவை நம்மைத் தொடுகிறதா? அவருடைய வார்த்தைகள் நமக்குள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா? சிந்திப்போம்.

    இயேசுவின் வார்த்தைகள் ஆதி முதல் இன்று வரை பல்வேறு வகையில் நம்மோடு உறவாடுகிறது.

    1.அவர் மலையில் எழுதினார், மனிதன் மாற்றி எழுதினான்.

    பழைய ஏற்பாட்டில் பத்து கட்டளைகளை கடவுள் மோசேயிடம் கொடுத்தார். அந்த வார்த்தைகளைக் கடவுள் மலையில் எழுதினார்.

    ‘ஆண்டவர் சீனாய் மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்’ (யாத்திராகமம் 31:18) என்கிறது விவிலியம்.

    ஆனால் அந்த வார்த்தைகளை மனிதன் மாற்றி எழுதினான். சட்டங்களை தனது வசதிக்கு ஏற்ப திரித்து எழுதினான்.

    ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்’ என்று இயேசு அவர்களிடம் கூறினார். (மார்க் 7:8–13)

    கடவுளின் வார்த்தைகள் நமக்குள் மாற்றங்களை ஏற் படுத்த வேண்டுமே தவிர, கடவுளின் வார்த்தைகளில் நாம் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடாது.

    2. அவர் மன்னன் மாளிகையில் எழுதினார், மனிதன் மறந்து போனான்.

    கடவுள் தனது திட்டம் என்ன என்பதை மன்னனின் அறை சுவரில் எழுதிய நிகழ்வு ஒன்று தானியேல் காலத்தில் நடந்தது. தானியேல் இறைவனோடு நடந்த ஒரு இறை மனிதர்.

    ‘அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார்’ (தானியேல் 5:24) என்கிறது பைபிள்.

    ‘தீய வாழ்க்கையை இறைவன் அழிப்பார்’ எனும் அந்த எச்சரிக்கை வார்த்தைகளை மனிதன் மறந்து போனான்.

    3. அவர் மணலிலே எழுதினார், மனிதன் மறைந்து போனான்.

    இயேசுவின் முன்னால் விபசாரத் தவறிழைத்த ஒரு பெண்ணை மக்கள் தள்ளிக்கொண்டு வருகின்றனர். ‘விபசாரத் தவறுக்குத் தண்டனை கல்லால் எறிந்து கொல்வது’ என்பது மோசேயின் கட்டளை. இயேசு புதிய போதனையை அங்கே சொன்னார். கல்லால் கொல்வதை விடுத்து, அன்பு கொள்வதை போதித்தார்.

    ‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்’ என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். (யோவான் 7:8)

    இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் முதியவர் தொடங்கி இளையவர் வரை அங்கிருந்து விலகிப் போனார்கள்.

    4. அவர் மனிதனுடைய மனதிலே எழுதினார், தனது ரத்தத்தினால் எழுதினார்.

    ‘என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்’ (எபிரேயர் 10:16) என்கிறது இறை வார்த்தை.

    கல்லிலும், சுவரிலும், மணலிலும் எழுதியவர் இன்று நமது மனங்களில் எழுதியிருக்கிறார். சிலுவையில் தனது ரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்ட இறைவன் நமது உள்ளத்தில் இன்று உறவாடுகிறார். அவருடைய வார்த்தைகள் பைபிள் வடிவில் நமது கரங்களில் இருக்கின்றன.

    அந்த வார்த்தைகள் நமது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா?

    சிலுவை நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் வேறு எது நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

    சிந்திப்போம், செயல்படுவோம். இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி.
    பிரியமானவர்களே, நம் ஆண்டவர் ஒருமனப்பட்டு ஜெபிக்கிற ஜெபத்திற்கு உடனே பதில் கொடுப்பார்.
    நம் அருமை ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர். அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு குழந்தையை தந்தார். எசேக்கியா ராஜாவின் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். தானியேலின் ஜெபத்தைக் கேட்டார். தாவீதின் விண்ணப்பத்திற்கு செவி கொடுத்தார்… இப்படி வேதத்திலே தொடர்ந்து வாசிக்கிறோம்.

    உங்கள் ஜெபத்தையும் கேட்க தேவன் வல்லவர். உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்கள் குடும்ப வாழ்வை ஆசீர்வதிப்பார். ஆனால் இன்னும் உங்கள் ஜெபம் ஒருவேளை கேட்கப்படாமல் இருந்தால், அதற்கு காரணம் என்ன என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்

    ‘உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது’. ஏசா. (59:2)

    தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்கக்கூடாதபடி உங்கள் வாழ்விலும், உங்கள் குடும்ப வாழ்விலும் தேவன் வெறுக்கும் பாவங்களை அவரிடம் அறிக்கை செய்து, அந்த பாவத்தில் இருந்து விலகி இருந்தால், நிச்சயம் உங்கள் பாவங்களை ஆண்டவர் மன்னித்து உங்கள் ஜெபங்களைக் கேட்பார். உங்கள் ஜெபங் களுக்கு பதில் கொடுத்து உங்களை சந் தோஷப்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    ஒருமனப்பட்டு ஜெபியுங்கள்

    ‘உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’. (மத்.18:19)

    பிரியமானவர்களே, நம் ஆண்டவர் ஒருமனப்பட்டு ஜெபிக்கிற ஜெபத்திற்கு உடனே பதில் கொடுப்பார். இந்த உலகத்திலே கணவனும், மனைவியும் ஒருமனப்பட்டு ஜெபித்தால் உங்கள் ஜெபத்தை கர்த்தர் கேட்பார். பிள்ளைகளுக்காக மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்காக நாம் ஒருமனப்பட்டு ஜெபித்தால் நிச்சயம் ஆண்டவர் பதில் கொடுப்பார்.

    வீட்டிலே எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் பண்ணிக் கொண்டு, சண்டை போட்டுக்கொண்டு ஜெபித்தால் எப்படி ஜெபம் கேட்கப்படும்? உங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் ஒருமனதோடு ஜெபியுங்கள். உங்கள் வாழ்வில் அற்புதங்களைக் காண்பீர்கள்.
    மால்வாணியில் ஏசு சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    மும்பை மால்வாணி மேற்கு மார்வேரோடு பகுதியில், ஜனகல்யாண் சாலை ஓரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஸ்லம் சேக் அலுவலகம் எதிரே ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது போன்ற சிலை உள்ளது. இந்த சிலையில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்துவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வது வழக்கம். இங்கு எதை வேண்டினாலும் நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

    நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வழக்கம் போல் ஏசு சிலைக்கு மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர். அப்போது திடீரென ஏசு சிலையின் காலில் இருந்து சொட்டுசொட்டாக தண்ணீர் வடிந்தது. இதை பார்த்து அங்கு பிரார்த்தனையில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதை கடவுளின் அதிசயமாக பார்த்தனர்.

    இந்த நிலையில் ஏசுசிலையில் இருந்து தண்ணீர் வடிந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீபோல பரவியது. இதையடுத்து பெண்கள் தண்ணீர் பாட்டிலுடன் வந்து சிலையில் இருந்து வடிந்த தண்ணீரை பிடித்து சென்றனர். ஏசு சிலை முன் மக்கள் கூடியதை அடுத்து சம்பவ இடத்திற்கு மலாடு போலீசார் சென்றனர். அவர்கள் அங்கு கூடிய பொதுமக்களை கலைத்தனர். பின்னர் போலீசார் ஏசு சிலையில் வடிந்த தண்ணீரை பிடித்து ஆய்விற்காக கலினாவில் உள்ள ஆய்வகத்திற்காக அனுப்பி வைத்தனர். ஏசு சிலையில் இருந்து தண்ணீர் வடிந்த சம்பவத்தால் நேற்று மலாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சிலுவை நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் வேறு எது நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.
    கல்வாரி மலை, இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். தனது மரணத்தின் விளிம்பில் நின்று மானுடத்தின் மன்னிப்புக்காய் குரல் கொடுக்கிறார் இயேசு.

    அவருடைய உரத்த குரலொலி பலருக்கு நகைப்பைத் தந்தது, சிலருக்கு இடைஞ்சலாய் இருந்தது. ஆனால் அங்கிருந்த ஒரு மனிதருக்கு அது வாழ்வு தரும் குரலாய் ஒலித்தது.

    அந்த மனிதர் ஒரு நூற்றுவர் தலைவன். ‘நூற்றுவர் தலைவன்’ என்றால் நூறு படை வீரர்களுக்குத் தலைவன் என்பது பொருள்.

    நூற்றுவர் தலைவனை சிலுவை தொட்டது. இயேசுவின் வார்த்தைகள் தொட்டன. மதம் இயேசுவை மறுதலித்தது. மதத்துக்கு வெளியே நின்ற நூற்றுவர் தலைவன் இயேசுவால் தொடப்பட்டார்.

    அந்த நூற்றுவர் தலைவன் இயேசுவின் சீடன் அல்ல. இயேசுவை விரும்பியவன் அல்ல. இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டவன் அல்ல.

    அந்த சிலுவை அவனைத் தொட்டது. சிலுவை வார்த்தைகள் அவனைத் தொட்டன. அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு அவனைத் தொடவில்லை. பாதகர்களின் பகட்டுச் சிரிப்பு அவனைத் தொடவில்லை. காவல்காரர்களின் கேலிச்சிரிப்பு அவனை அசைக்கவில்லை.

    ஆனால் தவறே செய்யாமல் உலகின் பாவங்களை சிலுவை வடிவில் தனது தோளில் விருப்பத்தோடு சுமந்து சென்ற இயேசுவின் சிரிப்பு அவனைத் தொட்டது. வலி மிகுந்த நேரத்திலும் பிறர் மீது குற்றம் சுமத்தாத இயேசுவின் வார்த்தைகள் அவனைத் தொட்டன. அந்த நூற்றுவர் தலைவன் சிலுவையைப் பார்த்தான். சிலுவையினால் தொடப்பட்டார். அவனுடைய வாழ்க்கை மாறியது.

    இன்று சிலுவை நமக்கு முன்னால் நிற்கிறது. இயேசுவின் வார்த்தைகள் நம்மிடம் இருக்கின்றன. நமது வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்த வல்ல வார்த்தைகள் அவை. அவருடைய சிலுவை நம்மைத் தொடுகிறதா? அவருடைய வார்த்தைகள் நமக்குள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா? சிந்திப்போம்.

    இயேசுவின் வார்த்தைகள் ஆதி முதல் இன்று வரை பல்வேறு வகையில் நம்மோடு உறவாடுகிறது.

    1.அவர் மலையில் எழுதினார், மனிதன் மாற்றி எழுதினான்.

    பழைய ஏற்பாட்டில் பத்து கட்டளைகளை கடவுள் மோசேயிடம் கொடுத்தார். அந்த வார்த்தைகளைக் கடவுள் மலையில் எழுதினார்.

    ‘ஆண்டவர் சீனாய் மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்’ (யாத்திராகமம் 31:18) என்கிறது விவிலியம்.

    ஆனால் அந்த வார்த்தைகளை மனிதன் மாற்றி எழுதினான். சட்டங்களை தனது வசதிக்கு ஏற்ப திரித்து எழுதினான்.

    ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்’ என்று இயேசு அவர்களிடம் கூறினார். (மார்க் 7:8-13)

    கடவுளின் வார்த்தைகள் நமக்குள் மாற்றங்களை ஏற் படுத்த வேண்டுமே தவிர, கடவுளின் வார்த்தைகளில் நாம் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடாது.

    2. அவர் மன்னன் மாளிகையில் எழுதினார், மனிதன் மறந்து போனான்.

    கடவுள் தனது திட்டம் என்ன என்பதை மன்னனின் அறை சுவரில் எழுதிய நிகழ்வு ஒன்று தானியேல் காலத்தில் நடந்தது. தானியேல் இறைவனோடு நடந்த ஒரு இறை மனிதர்.

    ‘அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார்’ (தானியேல் 5:24) என்கிறது பைபிள்.

    ‘தீய வாழ்க்கையை இறைவன் அழிப்பார்’ எனும் அந்த எச்சரிக்கை வார்த்தைகளை மனிதன் மறந்து போனான்.

    3. அவர் மணலிலே எழுதினார், மனிதன் மறைந்து போனான்.

    இயேசுவின் முன்னால் விபசாரத் தவறிழைத்த ஒரு பெண்ணை மக்கள் தள்ளிக்கொண்டு வருகின்றனர். ‘விபசாரத் தவறுக்குத் தண்டனை கல்லால் எறிந்து கொல்வது’ என்பது மோசேயின் கட்டளை. இயேசு புதிய போதனையை அங்கே சொன்னார். கல்லால் கொல்வதை விடுத்து, அன்பு கொள்வதை போதித்தார்.

    ‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்’ என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். (யோவான் 7:8)

    இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் முதியவர் தொடங்கி இளையவர் வரை அங்கிருந்து விலகிப் போனார்கள்.

    4. அவர் மனிதனுடைய மனதிலே எழுதினார், தனது ரத்தத்தினால் எழுதினார்.

    ‘என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்’ (எபிரேயர் 10:16) என்கிறது இறை வார்த்தை.

    கல்லிலும், சுவரிலும், மணலிலும் எழுதியவர் இன்று நமது மனங்களில் எழுதியிருக்கிறார். சிலுவையில் தனது ரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்ட இறைவன் நமது உள்ளத்தில் இன்று உறவாடுகிறார். அவருடைய வார்த்தைகள் பைபிள் வடிவில் நமது கரங்களில் இருக்கின்றன.

    அந்த வார்த்தைகள் நமது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா?

    சிலுவை நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் வேறு எது நமது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

    சிந்திப்போம், செயல்படுவோம். இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம்,

    வேளச்சேரி.
    இறைவார்த்தை எனும் வால்நட்சத்திரத்தை நாம் கடைசி வரை தொடர்ந்தால் இறைமகனைச் சென்றடைவோம் என்பது இதில் பொதிந்துள்ள ஆன்மிக அர்த்தமாகும்.
    கிழக்கு தேசத்தில் மூன்று வானியல் ஞானியர் இருந்தனர். குறிப்பாக வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து உலகில் நடக்கும் முக்கிய சம்பவங்களை கணிப்பதில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.

    ஒருநாள் அவர்கள் வானத்தில் அதைக் கண்டனர். அது ஒரு வால் நட்சத்திரம். அந்த வால்நட்சத்திரம் புதிய அரசன் பிறந்திருப்பதன் அடையாளம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

    ஞானியர் வால் நட்சத்திரத்தை நோக்கி நடந்தனர். அது அவர்களுக்கு முன்பாக யூதேயா நாட்டை நோக்கிச் சென்றது. யூதேயா வந்தடைந்த ஞானியர் வால் நட்சத்திரத்தை விட்டு விட்டு அங்குள்ள மன்னனான ஏரோதின் அரண்மனைக்குச் சென்றனர். புதிய அரசன் அரண்மனையில் பிறந்திருக்கலாம் என்பது அவர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது.

    அரண்மனையைச் சென்றடைந்த ஞானிகள் ஏரோது மன்னனைக் கண்டு வணங்கினார்கள்.

    ‘அரசே என் பெயர் காஸ்பர், இவர் மெல்கியர், பெல்தாசர் நாங்கள் மூவரும் யூதர்களின் அரசரைக் காண வந்திருக்கிறோம்’ என்று ஞானிகள் சொன்னார்கள்.

    ஏரோது மன்னன் குழம்பினான். அரண்மனையில் வாரிசுகள் யாரும் பிறக்கவில்லை என்று ஞானியரிடம் சொன்னான்.

    ‘இந்த நாட்டில் மன்னர் பிறந்திருப்பது உறுதி’ என்றனர் ஞானியர்.

    ஏரோது குழம்பினான். உடனே தனது அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினான்.

    ‘மீட்பரோ, மெசியாவோ ஒருவர் நம்முடைய நாட்டில் பிறக்கிறார் என்றால் அவர் எங்கே பிறப்பார்?’ என்று கேட்டான்.

    “பெத்லேகேமில் பிறக்கலாம். மீக்கா எனும் தீர்க்கதரிசி ஒருவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். ‘யூதா நாட்டு பெத்லேகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரவேலரை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’, என்பதே அந்த வாக்கு அரசே” என்றார் ஒருவர்.

    ஞானிகள் பெத்லேகேம் நோக்கி பயணிக்கத் தொடங்கினர். வால் நட்சத்திரம் வானத்தில் மீண்டும் தோன்றி அவர்களுக்கு முன்னால் சென்றது. சென்று கொண்டிருந்த விண்மீன் ஒரு இடத்தில் வந்ததும் நின்றது. அதன் ஒளி ஒரு குடிசையின் மீது படர்ந்தது. விண்மீன் நின்றதைக் கண்டதும் ஞானிகள் உற்சாக மடைந்தார்கள்.

    அது ஒரு தொழுவம். அங்கே மரியாவின் கைகளில் ஒரு குழந்தை. அருகிலேயே யோசேப்பு. சுற்றிலும் கால்நடைகள்.

    ஞானிகள் ஒரு வினாடி திடுக்கிட்டனர். ‘வானத்தில் அதிசய வால் நட்சத்திரம். பூமியில் தொழுவத்தில் அரசரா? இத்தனை எளிமையாய் ஒரு மீட்பரா?’ என்று வியந்தவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தனர்.

    பட்டாடைகள் தொழுவத்தின் அழுக்கில் புரள, தங்களுக்கு முன்பாக விழுந்து கிடக்கும் மூன்று ஞானிகளைக் கண்ட மரியாவும், யோசேப்பும் பதறினார்கள்.

    ‘ஐயா நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்’ யோசேப்பு கேட்டார்.

    ‘நாங்கள் கிழக்கு திசையிலிருந்து வரும் ஞானிகள். நீண்ட தூரம் பயணித்து இங்கே வந்திருக்கிறோம். அரசரைக் காண்பதற்காக!’ அவர்கள் சொன்னார்கள்.

    ‘இந்தக் குழந்தையைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார்?’ யோசேப்பு வியந்தார்.

    ‘வானம்’

    ‘வானமா?’

    ‘ஆம், வானத்தில் ஒரு அதிசய வால் நட்சத்திரம் தோன்றியது. அதுதான் எங்களை வழிநடத்தியது. இவரைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத் திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்’, ஞானிகள் சொன்னார்கள்.

    ‘இதோ பொன்... இது எனது காணிக்கை’, ஒரு ஞானி தன் ஒட்டகத்தில் சுமந்து வந்திருந்த மூட்டையை குழந்தையின் முன்னால் வைத்தார்.

    ‘இது தூபம். சாம்பிராணி... என்னுடைய காணிக்கை’ இரண்டாவது ஞானி காணிக்கை படைத்தார்.

    ‘இதோ வெள்ளைப் போளம். இது என்னுடைய காணிக்கை’ மூன்றாவது ஞானி பேழையைத் திறந்து காணிக்கை கொடுத்தார்.

    பொன் மிக விலை உயர்ந்த அந்தஸ்தின் அடையாளம். தூபம் என்பது வழிபாட்டுக்குரியவர் என்பதன் அடையாளம். வெள்ளைப்போளம் மிகவும் நறுமணம் மிகுந்த பொருள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இதை கல்லறையில் வைப்பது அரச குலத்தினரின் வழக்கம்.

    மரியாவும், யோசேப்பும் நடப்பதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

    ஞானிகள் குழந்தையை வணங்கிவிட்டு விடைபெற்று அரண்மனை நோக்கி பயணித்தார்கள். இரவில் ஞானிகள் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.

    அவர்கள் மூவருமே அன்று ஒரு கனவு கண்டார்கள். கனவில் ஒரு தேவதூதர் தோன்றினார்.

    ‘ஞானிகளே, நீங்கள் ஏரோது மன்னனின் அரண் மனைக்குச் செல்லவேண்டாம். அவனுக்கு எந்தத் தகவலையும் அளிக்க வேண்டாம். வேறு வழியாக உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்றார்.

    ஞானியர்களுக்கு அந்தக் கனவு மிகப்பெரிய வியப்பைத் தந்தது. ‘மன்னனின் கட்டளையை மீறலாம், ஆனால் கடவுளின் கட்டளையை மீறக் கூடாது’ என அவர்கள் முடிவெடுத்தார்கள். மன்னனின் அரண் மனைக்குச் செல்லாமல் தங்கள் நாட்டுக்குத் திரும்பினார்கள்.

    இறைவார்த்தை எனும் வால்நட்சத்திரத்தை நாம் கடைசி வரை தொடர்ந்தால் இறைமகனைச் சென்றடைவோம் என்பது இதில் பொதிந்துள்ள ஆன்மிக அர்த்தமாகும்.
    மயிலாப்பூர் மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதா அருளிய அற்புதச் சுடர் வெளிச்சத்தால் உருவாகியது இந்த ஆலயம்.
    கி.பி. 1516ம் ஆண்டு வங்க கடலோரத்தில் மயிலாப்பூர் மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதா அருளிய அற்புதச் சுடர் வெளிச்சத்தால் உருவாகியது இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம். இது இறைவன் தாமே தேர்ந்து எடுத்துக் கொண்ட அற்புத இடமாகும்.

    479 ஆண்டுகளுக்கு முன் இறைவனின் அன்னை மரியாள் தமிழக மக்களுக்கு செய்தருளிய முதல் வெளிப்படையான அற்புதம் இத்திருத்தலமேயாகும். பிரகாச மாதா ஆலய 400 வது ஆண்டு விழா 1916ம் ஆண்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    வாஸ்கோடகாமா, போர்ச்சுக்கல்லிலிருந்து கொச்சிக்கு புதிய கடல் மார்க்கம் கண்டுபிடித்து உலக சரித்திரத்தில் இடம் பெற்றவர்.

    இதை அவர் கி.பி. 1498ல் கண்டறிந்தார். இது மேல் திசையிலிருந்து கீழ் திசைக்கு கடல்வழி புதிய மார்கமாகும். இதனால் வாணிபமும் நம் நாட்டில் பெருகலாயிற்று.

    நற்செய்தி குருக்கள் :

    இயேசு கிருஸ்துவின் நற்செய்தி சுவிசேஷத்தை தாங்கிய புனித பிரான்சிஸ் அசிசியாருடையை எட்டு குருக்களும், மாலுமிகளும் கி.பி. 1500 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல்-லிஸ்பனிலிருந்து புறப்பட்டு புதிய கடல் வழியே வந்து கேரளாவில் கொச்சியை வந்தடைந்தனர். சில காலம் அங்கு தங்கி வேதத்தை போதித்த இந்த குருக்களில் ஐவர் தமது கடல் பயணத்தை தொடர்ந்தனர். கன்னியாகுமரியை சுற்றிக் கொண்டு வங்க கடலுக்கு வந்தனர்.

    அங்கு அவர்கள் பல நாட்கள் திசை சரிவர அறியாது அல்லல்பட்டனர். துயர் மிக்க வேளையில் துயர் துடைத்தது போல் கடற்கரையில் ஒரு பிரகாசச் சுடர் அவர்கள் கண்களை கவர்ந்தது.

    சொல்லொண்ணா மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் பெருஞ்சுடரை நோக்கிய வண்ணம் தமது படகை விரைவில் ஓட்டி கடற்கரையை அடைந்தனர். அவர்கள் தரை இறங்கிய இடம் பெதூமா என வழங்கப்பட்ட புனித தோமையாரின் சடலம் புதைக்கப்பட்ட புனித இடமாகும்.

    அவர்கள் தரையில் இறங்கியதும் தாங்கள் கண்ட பிரகாசச் சுடர் தொடர்ந்து மேற்கு திசையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்று காட்டுப்பகுதியாக இருந்த இடத்தை அடைந்து மறைந்தது.

    இவ்வற்புத சுடரில் வழி நடத்தப்பெற்று இங்கு வந்தடைந்த பின்னர் பிரான்சிஸ்கன் குருக்கள் அன்னை மரியாளின் மகிழ்ச்சிக்குரிய அற்புதத்தை கண்டுணர்ந்து, இங்கு ஒரு ஆலயம் எழுப்ப திட்டமிட்டு கி.பி. 1516ம் ஆண்டு கட்டி முடித்து இதனை லஸ் ஆலயம் என அழைத்தனர். காரணம் லஸ் என்றால் பிரகாசம், சுடர் எனப் போர்ச்சுக்கீசிய மொழியில் பொருள்படும்.

    இந்த மகிமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதம் நிகழ்ந்ததனால்தான் இந்தக் காட்டுப் பகுதிக்கே லஸ் என வழங்கப்பட்டு வருகிறது. காட்டுப் பகுதியாக இருந்தமையால் இன்றும் காட்டுக் கோயில் என அழைக்கப்படுகிறது.

    அன்னையின் (மாதா) அரும்பெரும் செயலாக அற்புதத்தின் வழி தமிழகத்தில் மரியாளின் வெளிப்படையான முதல் அற்புத புதுமையின் ஆலயம் லஸ் ஆலயம் ஆகும்.

    பல நூற்றாண்டுகளாக இவ்வாலயத்தில் அமையப் பெற்றிருக்கும் மரியன்னையின் அற்புத சுருபம் (மாதா சிலை) புனித தன்மையுடன் விளங்குகிறது. அற்புதக் காட்சி அளித்து அண்டி வருவோர் அனைவருக்கும் வாழ்வின் வழிகாட்டியாகவும் வாழ்வின் பாதையாகவும் இருந்து மாதா ஆசிர் வழங்குகிறார்கள். பிரகாச அன்னையின் அருளால் எண்ணற்றோர், தீராத வியாதிகளுக்கு நற்சுகத்தையும், ஞானத் தெளிவையும் மழலை செல்வமற்ற தாய்மார்கள் பிள்ளைப் பேற்றையும் பெற்று மகிழ்கிறார்கள்.

    பிரகாச மாதாவுக்கு செபம் :

    இறையருள் நிறையப் பெற்று, மக்கள் இருள் போக்கும் பிரகாச மாதவே தரணி வாழ் மக்களின் துயர் துடைக்கும் தூயவளே, விண்ணவர் போற்றிடும் விமலியே, உமது பரிந்துரைக்கும் ஆற்றலில் நம்பிக்கை கொண்டு, உம்மை நாடி வரும் அடியோர் எம்மை கடைக்கண் பாரும் அம்மா.

    புயலில் சிக்கியவர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரமே வாழ்க்கையில், பல துன்ப துயரங்களால், அலைகழிக்கப்பட்டு அமைதியிழந்த நிலையில், உம் திருமுன் நிற்கின்றோம். எங்கள் துயரினை துடைத்து, நாங்கள் வாழ்வில் வளம் பெற அருள் புரியும் தாயே!

    ஒளிநிறை அன்னையே எங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும், நிலையான அமைதி நிலவச் செய்யும். உடைந்த உள்ளங்களுக்கு உவகையூட்டும். புத்திக்கு ஒளியையும், சிந்தைக்கு தெளிவையும் தந்தருளும்.

    எங்கள் அருள் வழ்விற்கும், பொருள் வாழ்விற்கும் தேவையான வரங்களை எங்கள் ஆண்டவரும் உம் திரு மகனுமாகிய, இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றுத் தரும் தாயே - ஆமென்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கும். 15ம் தேதி முடிவடையும்.

    முகவரி : 156, லஸ் சர்ச் சாலை
    சென்னை - 600 004

    ஏழைகளை இறைவனின் பிள்ளைகளாகக் கண்டு, தன்னலமற்ற உள்ளத்துடன் உதவி செய்து வாழ்வதே இறைவனை அன்பு செய்வதன் அடையாளம்.
    செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடம் இருந்த செல்வத்துக்கு கணக்கே இல்லை. தினம் ஒரு புத்தாடை அணிந்து, தினமும் விருந்து உண்டு மகிழ்ந்திருந்தான். அவனும் அவனுடைய சகோதரர்கள் ஐந்து பேரும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

    செல்வந்தன் அணிந்திருக்கும் ஆடைகள் மிகவும் விலை உயர்ந்தவை. அவன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தன்னுடைய செல்வம் எல்லாம் கடவுள் தனக்குக் கொடுத்த ஆசீர்வாதம் என்று நினைத்து இறுமாந்திருந்தான்.

    அவனுடைய வீட்டு வாசலருகே ஏழை மனிதன் ஒருவனும் கிடந்தான். அவனது பெயர் லாசர். அவனுடைய உடலெங்கும் புண்கள். அழுக்கடைந்த ஆடை மட்டுமே அவனுக்குச் சொந்தமானதாக இருந்தது. தெரு நாய்கள் மட்டுமே அவனருகில் வந்து அவனுடன் சொந்தம் கொண்டாடும். அவனுடைய புண்களை நக்கும். அவனுடைய வயிற்றுப் பசிக்குத் தேவையான உணவைத் தருவார் யாருமில்லை.

    அவனிடம் எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை. செல்வந்தனின் வீட்டில் மிஞ்சுகின்ற உணவு கிடைக்காதா? என ஆசைப்பட்டான். ஆனால் அவனுக்கு அதுவும் கிடைக்கவில்லை. ஆடம்பர மாளிகையின் வெளிவாசலில் குப்பையோடு குப்பையாய்க் கிடந்தான் அவன்.

    தன் வீட்டு வாசலருகே கிடக்கும் ஏழை மனிதனை செல்வந்தன் தினமும் காண்பான். ஆனால் அவனுக்கு ஒருநேர உணவளிக்க வேண்டுமென்றோ, அவனுக்கு ஒரு ஆடை வழங்க வேண்டுமென்றோ அவன் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அவனுடைய சகோதரர்களும் அப்படி நினைக்கவில்லை. அவன் ஏழையாய் இருப்பது இறைவனின் சாபம் என உதாசீனப்படுத்தினர்.

    வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலும் வலியிலும் வருந்திய அந்த ஏழை இறந்தான். அவனை அடக்கம் செய்வார் யாருமில்லை. அவனை தேவதூதர்கள் விண்ணகத்துக்கு எடுத்துச் சென்று விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமின் மடியிலே அமர வைத்தார்கள். குப்பையில் கிடந்தவன் சொர்க்கத்தின் பிள்ளையானான்.

    மரணம் எல்லோருக்கும் பொது தானே! அந்த செல்வந்தரும் இறந்தான். நல்ல வெகுவிமரிசையாக, ஆடம்பர அடக்கம் செய்யப்பட்டான். ஆனால் அவர் நரகத்தில் தள்ளப்பட்டான். பாதாளத்தில் அணையா நெருப்பில் அவனுடைய உடல் வெந்தது.

    அவன் அங்கிருந்து கண்களை உயர்த்தி விண்ணகத்தைப் பார்த்தபோது ஆபிரகாமையும் அவரது மடியில் அமர்ந்திருக்கும் லாசரையும் கண்டான், அதிர்ந்தான். தன்னுடைய வீட்டு வாசலில் கிடந்த ஏழைக்கு இப்போது விண்ணக வாழ்வு கிடைத்திருக்கிறதே என்று நினைத்தான்.

    குரலை உயர்த்தி ‘தந்தை ஆபிரகாமே... எனக்கு இரங்கும். உமது மடியிலிருக்கும் லாசரின் விரல் நுனியில் ஒரு துளி தண்ணீரைக் கொடுத்து என்னுடைய நாவில் வைக்கச் சொல்லும். நான் இங்கே தணியா நெருப்பில் வேகிறேனே’ என்று கதறினான். அவனுடைய மனதில் இன்னும் லாசர் ஒரு பணியாளனாய்த் தெரிந்தான்.

    ஆபிரகாமோ, ‘மகனே உன்னுடைய வாழ்நாளில் நீ நலன்களையே பெற்றாய். லாசரோ இன்னல்களை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தான். அதை நினைவில் கொள். அவன் இப்போது ஆறுதல் அடைகிறான். நீ வேதனைப்படுகிறாய்’ என்றார்.

    ‘தந்தையே எனக்கு இரங்கும்’ செல்வந்தன் மீண்டும் கத்தினான். வலியால் புழுவாய்த் துடித்தான்.

    ‘உங்களுக்கும், எங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உண்டு. அங்கிருந்து இங்கேயோ, இங்கிருந்து அங்கேயோ யாரும் கடந்து வர முடியாது’ ஆபிரகாம் சொன்னார்.

    ‘தந்தையே, அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்யும். லாசரை என் தந்தை வீட்டுக்கு அனுப்பும். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களாவது இந்த நெருப்பில் விழாமல் தங்களைக் காத்துக் கொள்ளட்டும்’ செல்வந்தன் கதறினான். அப்போதும் தன் குடும்பம் எனும் சுயநலம் அவனுக்குள் நிலைத்திருந்தது.

    ‘மகனே, இறைவாக்கினர்கள் தேவையான அளவு சொல்லி விட்டார்கள். மறை நூலும் இருக்கிறது அவர்களுக்கு...’

    ‘ஐயோ தந்தையே அப்படிச் சொல்லவேண்டாம். அதையெல்லாம் என் சகோதரர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் இறந்த ஒருவர் உயிருடன் சென்று சொன்னால் நம்புவார்கள்’ செல்வந்தன் உரக்கக் கெஞ்சினான்.

    ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் செவிசாய்க் காதவன், இறந்தோரிடமிருந்து செல்பவனுக்கும் செவி சாய்க்க மாட்டான்’ ஆபிரகாம் சொன்னார்.

    ‘இயேசு இறந்து உயிர்த்த பின்னும் அவரை மக்கள் நம்பாமல் இருப்பார்கள்’ என்பதை அந்த வாசகம் விளக்கியது.

    மண்ணுலகில் ஏழையான லாசர், விண்ணுலகில் செல்வந்தரானார். மண்ணுலகின் சுயநல செல்வந்தர் விண்ணுலகில் நரக வேதனையில் விழுந்தார்.

    ஏழைகளுக்கு உதவுபவன் இறையரசுக்காய் தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறான். ‘கண்ணில் தெரியும் சகோதரனுக்கு அன்பு செய்யாதவன், கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு அன்பு செய்ய முடியாது’ என்கிறது பைபிள். எல்லா உயிர்களிலும் இறைவனின் உயிரும், சாயலும் இருக்கிறது.

    ஏழைகளை இறைவனின் பிள்ளைகளாகக் கண்டு, தன்னலமற்ற உள்ளத்துடன் உதவி செய்து வாழ்வதே இறைவனை அன்பு செய்வதன் அடையாளம். இந்த சிந்தனையைப் பற்றிக் கொள்வோம், விண்ணுலகைப் பெற்றுக் கொள்வோம்.
    திருச்சபை வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு மாபெரும் புனிதர் புனித பிரான்சிஸ் அசிசியார்.
    ஏழைகளின் தோழன் அசிசி.

    ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் திங்கள் 4-ம் தேதி கத்தோலிக்கத் திருச்சபையானது ஒரு முக்கியமான புனிதரின் திருநாளை கொண்டாட அழைப்பு விடுக்கிறது. கி. பி. 1182 ம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து பின்னர் இயேசுவுக்காக அனைத்தையும் துறந்துவிட்டு, எளிமை வாழ்வினை பூண்டு, திருச்சபை வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு மாபெரும் புனிதர் புனித பிரான்சிஸ் அசிசியார்.

    புனிதரின் திருநாளைச் சிறப்பிக்கும் இந்நன்னாளில் அவரது வாழ்வு நமக்கு ஒரு மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைக் கற்பிக்கிறது என்பதில் ஐயமில்லை. செல்வாக்கு மிகுந்த ஒரு வணிகரான தன் தந்தையின் செல்வச்செழிப்பில் தனது இளமைப் பருவத்தை செலவிட்ட அவர், 1204-ல் ஆண்டவர் இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு உலக வாழ்வினை வெறுத்து தனக்குச் சொந்தமான தன் தந்தையின் செல்வம் அனைத்தையும் வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு ஏழைகளின் தோழனாய் எளிமை வாழ்வு பூண்டார்.

    தன்னை ஆட்கொண்ட இயேசுவுக்காக எல்லாவற்றையும் இழந்து எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு பாவித்து எளிமையினை மையப்படுத்திய ஓர் இனிமையான ஆன்மீத்தை அனைவருக்கும் தனது வாழ்வினால் வழங்கினார். 1209- ல் பிரான்சிஸ்கன் துறவற சபையினைத் துவங்கி அதன் மூலம் எளிமை வாழ்வினை வாழ்ந்து ஏழைகளின் தோழர்களாய் இயேசுவைப் போதிக்க அழைப்பு விடுத்தார்.

    தனது 42ம் வயதில் ஆண்டவர் இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் அவருக்கு வழங்கப்பட்டு அதிக வேதனைகளை அனுபவித்து தனது 44ம் வயதில் 1226ம் ஆண்டு உயிர் நீத்தார். இவர் மறைந்தாலும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இவரின் வாழ்வும், உயரிய ஆன்மீகமும் இன்றும் பலரையும் கவர்ந்திழுக்கின்றது.

    ஏழை எளியோரிலும், வாடிடும் வறியோரிலும், பறவைகள் விலங்குகளிலும் பரமனைக் கண்டு தரிசித்து இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த இப்புனிதரின் வாழ்வு இந்த நவீன உலகில் இயற்கையை மதிக்க மறுக்கும் மானுடத்தை மாற்றிட வேண்டும். பணத்திலும், பகட்டிலும் கவனம் செலுத்தும் மனிதர்கள் அனைவரும் பணிவிலும், பரிவிலும் கவனம் செலுத்தி பண்பான வாழ்வு வாழ்ந்திட புனிதரின் வாழ்வு வித்திடட்டும்.

    ஏழைகளின் தோழன் புனித அசிசியை பின்பற்றி ஏழைகளின் தோழனாய் எழுச்சிமிகு வார்த்தைகளாலன்றி எளிமையான வாழ்வால் கிறிஸ்துவை அறிவித்துக் கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையிலே ஏழைகளிலும், இயற்கையிலும் இறைவனைக் கண்டு பணிவிலும் பரிவிலும் நிலைத்து ஏழைகளின் தோழர்களாய் வாழ முற்படும் போதுதான் நாம் கொண்டாடும் இத்திருநாள் அர்த்தம் பெறும் நமது விசுவாசமும் ஆழம் பெரும்.

    இறைவனிடம் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் அவருடைய காணிக்கையைச் செலுத்துவோம்.
    உலகம் உனக்கு நிலையானது அல்ல, அது தற்காலிகமானது; நீ நித்திய இராஜ்யத்துக்குப் போகத்தக்கதாக நான் உனக்குக் கொடுத்துள்ள ஆசீர்வாதத்தில் ஒரு பகுதியைக் காணிக்கையாய் எனக்குக் கொடு என்று கேட்கும் கடவுள், நமக்கு என்ன கைமாறு செய்கிறார்? பள்ளிக்கூடத்திலிருந்து மாலை பசியோடு வீடு திரும்பும் குழந்தைக்கு தட்டு நிறைய இனிப்புப் பதார்த்தம் கொடுத்து, அது ருசித்து உண்ணும் அழகை ரசிக்கும் தாய், “செல்லம்! என் கண்ணுல்ல... உன் அம்மாவுக்கு கொஞ்சம் தாயேன்” என்று கை நீட்டிக் கேட்கும் போது, குழந்தையும் தன் பிஞ்சு விரல்களால் சிறிது எடுத்து அதைத் தாயிடம் கொடுக்க, தாய் அதை அப்படியே அதன் வாயிலேயே ஊட்டி விடுவதோடு, பிள்ளையை அப்படியே வாரி அணைத்து முத்தமழையினால் தன் அன்பை வெளிப்படுத்துவாள் அல்லவா? ஆம்... அதைவிட நம் தேவன் அதிக அன்புள்ளவர் அல்லவா? அவருக்கு உரித்தான காணிக்கையை நாம் செலுத்தும்போது,

    “…. நீங்கள் எவ்விதத்திலும் சம்பூர்ணமுள்ளவர்களாவீர்கள்” (2கொரி.9: 11) என்றும்,

    “…. உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்” (2கொரி.9: 10) என்றும்,

    “கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்…” (லூக்.6: 38) என்றும்,

    “…… அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடம் கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்லி.3: 10).

    அவரை சோதித்துப் பார்க்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்தவர்களாய், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் அவருடைய காணிக்கையைச் செலுத்துவோம்.
    ‘உன் பெருகிய விளைச்சலையும், வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே’ (விடுதலைப்பயணம் 22:29) என்கிறது விவிலியம்.
    ஒரு வீட்டு பணப்பெட்டியில் பல வித ரூபாய் நோட்டுகள் இருந்தன. ‘நாங்க தான் ஒசத்தி, நாங்க தான் நகைக்கடை, துணிக்கடை போன்ற இடங்களுக்குப் போவோம்’ என்றன அங்கிருந்த ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள்.

    ‘நாங்க ஒண்ணும் கொறஞ்சவங்க இல்லை. மளிகைக்கடைக்கெல்லாம் நாங்க தான் போவோம்’ என்றன நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகள்.

    ‘உங்களை எல்லாம் விட நாங்க தான் உசத்தி, நாங்க தான் கோவில் உண்டியலுக்கு போவோம்’ என்றன அங்கிருந்த சில்லறை காசுகள்.

    ‘இறைவனுக்குக் கொடுத்தல்’ என்று சிந்திக்கும்போது நம்முடைய மனதில் பெரும்பாலும் பணம், பொருள் போன்ற விஷயங்கள் தான் வருகின்றன. உண்மையில் அதை விட முக்கியமாக நம்மையே நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்த அர்ப்பணத்தில் தான் கிறிஸ்தவ வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

    இறைவனுக்கு நாம் கொடுக்கும் எல்லாமே அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவை தான். கடவுள் இந்த பூமியைப் படைத்து அதை மனிதருக்குக் கொடுத்தார் என்கிறது விவிலியம். படைத்தவர் இறைவன் என்பதையும், படைத்து அவர் மனிதனுக்கு அளித்தார் என்பதையும் விவிலியம் நமக்கு தெளிவாக்குகிறது.

    ‘மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்’ (சங்கீதம் 24-1) என்கிறது பைபிள்.

    நிலத்துக்கு உரிமையாளர் இறைவன். அதே போல நிலத்தின் அறுவடைக்கும் அவரே உரிமையாளராக இருக்கிறார். ‘....தேவையான வேலையாட்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்’ (மத்தேயு 9:38) என்கிறது பைபிள்.

    விளைச்சலையும் அது சார்ந்த அனைத்தையும் கூட தனது ஆளுகைக்குள் வைத்திருக்கிறார் இறைவன். ‘தக்க காலத்தில் முன்மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்’ (எரேமியா 5:24) எனும் விவிலிய வார்த்தை அதை நமக்கு விளக்குகிறது.

    இறைவன் தனது விருப்பத்தின்படியும், தீர்மானத்தின்படியும் தான் நிலத்தின் விளைச்சலை நிர்ணயிக்கிறார். ‘நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்; ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன். ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன். வேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று’ (ஆமோஸ் 4:7) என்கிறது விவிலியம்.

    இப்படி விளைச்சல் தரும் இறைவனுக்கு மனிதன் தருகின்ற பிரதிபலன் என்னவாக இருக்க வேண்டும்?

    ‘உன் பெருகிய விளைச்சலையும், வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே’ (விடுதலைப்பயணம் 22:29) என்கிறது விவிலியம்.

    நான் உழைக்கிறேன், இது என்னோட நிலம், இதில் விளைகின்றவை என்னுடையவை என மனிதன் நினைக்க முடியாது. காரணம், நிலத்தின் உரிமையாளர் இறைவன். அறுவடைக்காரர் இறைவன். நிலத்தின் விளைச்சலை நிர்ணயிப்பவர் இறைவன். எனவே அதன் பலனை அவருக்கு செலுத்த வேண்டும், அதுவும் தாமதமின்றி செலுத்த வேண்டும்.

    இறைவனின் கருணை இல்லையேல் நிலம் விளைச்சலைத் தராது. ‘கோதுமையை விதைத்தார்கள்; ஆனால் முட்களையே அறுத்தார்கள். உழைத்துக் களைத்தார்கள்; ஆயினும் பயனே இல்லை. தங்கள் அறுவடையைக் கண்டு வெட்கம் அடைந்தார்கள். இதற்கு ஆண்டவரின் கோபக்கனலே காரணம்’ (எரேமியா 12:13) எனும் இறைவாக்கு இதை சொல்கிறது.

    அர்ப்பணிப்பு குறித்தும், காணிக்கைகள் குறித்தும் விவிலியம் பல விஷயங்களைப் பேசுகிறது. அவற்றில் மூன்று சிந்தனைகளைப் பார்ப்போம்.

    ஆபேலின் காணிக்கை: ‘...காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்’ (ஆதியாகமம் 4:3-4).

    விவிலியம் கூறுகின்ற முதல் காணிக்கை நிகழ்வு இது. இங்கே ஆபேலின் காணிக்கை முதல் தரமானதாக இருக்கிறது. கூடவே அவனுடைய காணிக்கை முழுமையானதாக இருக்கிறது.

    இறைவனுக்குக் காணிக்கை செலுத்தும் போது, தலையீறுகளையும், கொழுமையானவைகளையும் ஆபேல் தரம் பிரிக்கிறார். முழுமையானதை இறைவனுக்கு அளிக்க வேண்டும் எனும் ஆர்வம் இதில் வெளிப்படுகிறது. முழுமையின் கடவுளான இறைவன் ஆபேலையும், அவனுடைய காணிக்கையையும் ஏற்றுக் கொள்கிறார்.

    மக்கதோனியரின் காணிக்கை: ‘நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்’ (2 கொரி 8: 5). தங்களை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்ற மக்களினமாக மக்கதோனிய மக்களை பைபிள் சித்தரிக்கிறது.

    வழங்குவதில் முன்னோடியாக இருந்த மக்கதோனிய (மாசிதோனிய) திருச்சபை வறுமையின் பிடியில் இருந்தது. அந்த சூழலிலும் அவர்கள் இறைவனுக்கு தாராளமாய் வழங்கினார்கள். கூடவே, தங்கள் வாழ்வையும் இறைவனுக்கு அர்ப்பணித்தார்கள்.

    எத்தனை பொருள் கொடுத்தாலும் இறைவனின் அன்புக்கு ஈடு செய்ய முடியாது. நம்முடைய முழுமையான வாழ்வையும் அவருக்கு அர்ப்பணிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

    ஏழை விதவையின் காணிக்கை: ஆலயத்தில் எல்லோரும் கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளி காணிக்கை செலுத்தி கர்வத்துடன் கடந்து போனார்கள். ஒரு ஏழை விதவை இரண்டு காசுகளை மட்டும் பணிவுடன் போட்டு விட்டு நகர்ந்தார். அவளிடம் இருந்தது அந்த இரண்டு காசுகள் மட்டுமே.

    இயேசு சொன்னார், ‘எல்லோரையும் விட அதிகமாய்ப் போட்டது இந்த ஏழைப் பெண்ணே’.

    அவர் தன்னிடம் இருந்ததில் முதன்மையானதை மட்டுமல்ல, தன்னிடம் இருந்த முழுவதையுமே படைத்து விட்டார். ‘எல்லாம் இழந்தாலும் இறைவன் தன்னை காப்பாற்றுவார்’ எனும் இறை நம்பிக்கையின் வெளிப்பாடு இது. எல்லாவற்றையும் ஆலயத்தில் அர்ப்பணித்து விட்டதால் இனி திருச்சபை அவரைக் கவனித்துக் கொள்ளவேண்டும் எனும் கடமையையும் அது சுட்டிக் காட்டுகிறது.

    இனியும் தாமதம் வேண்டாம். நம்மையே இறைவனிடம் அர்ப்பணிப்போம், இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. வங்க கடலோரத்தில் பிரமாண்டமாக அமைந்து உள்ள இந்த பேராலயம், பாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் வழிபடும் புண்ணிய தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு அரிதாக கிடைக்கக் கூடிய பசலிக்கா அந்தஸ்தை பெற்றுள்ளது இந்த ஆலயம்.

    இந்தியாவில் பிரமாண்ட கட்டிட வடிவமைப்புடன் 5 கிறிஸ்தவ ஆலயங்களே உள்ளன. இவற்றுள் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று. எனவே வேளாங்கண்ணி பேராலயத்திற்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து, புனித ஆரோக்கியமாதாவை வழிபட்டுச் செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் திருவிழா தொடங்கும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள்.

    பிரமாண்ட கட்டிட வடிவமைப்பை கொண்ட இந்த ஆலயத்திற்கு வண்ணம் பூசும் பணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆலயத்தின் பின்பகுதியை புதுப்பிக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. தற்போது முகப்பு பகுதியில் சாரம் அமைத்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    ×