என் மலர்
ஆன்மிகம்

இறைவார்த்தை எனும் வால்நட்சத்திரம்
இறைவார்த்தை எனும் வால்நட்சத்திரத்தை நாம் கடைசி வரை தொடர்ந்தால் இறைமகனைச் சென்றடைவோம் என்பது இதில் பொதிந்துள்ள ஆன்மிக அர்த்தமாகும்.
கிழக்கு தேசத்தில் மூன்று வானியல் ஞானியர் இருந்தனர். குறிப்பாக வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து உலகில் நடக்கும் முக்கிய சம்பவங்களை கணிப்பதில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.
ஒருநாள் அவர்கள் வானத்தில் அதைக் கண்டனர். அது ஒரு வால் நட்சத்திரம். அந்த வால்நட்சத்திரம் புதிய அரசன் பிறந்திருப்பதன் அடையாளம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
ஞானியர் வால் நட்சத்திரத்தை நோக்கி நடந்தனர். அது அவர்களுக்கு முன்பாக யூதேயா நாட்டை நோக்கிச் சென்றது. யூதேயா வந்தடைந்த ஞானியர் வால் நட்சத்திரத்தை விட்டு விட்டு அங்குள்ள மன்னனான ஏரோதின் அரண்மனைக்குச் சென்றனர். புதிய அரசன் அரண்மனையில் பிறந்திருக்கலாம் என்பது அவர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது.
அரண்மனையைச் சென்றடைந்த ஞானிகள் ஏரோது மன்னனைக் கண்டு வணங்கினார்கள்.
‘அரசே என் பெயர் காஸ்பர், இவர் மெல்கியர், பெல்தாசர் நாங்கள் மூவரும் யூதர்களின் அரசரைக் காண வந்திருக்கிறோம்’ என்று ஞானிகள் சொன்னார்கள்.
ஏரோது மன்னன் குழம்பினான். அரண்மனையில் வாரிசுகள் யாரும் பிறக்கவில்லை என்று ஞானியரிடம் சொன்னான்.
‘இந்த நாட்டில் மன்னர் பிறந்திருப்பது உறுதி’ என்றனர் ஞானியர்.
ஏரோது குழம்பினான். உடனே தனது அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினான்.
‘மீட்பரோ, மெசியாவோ ஒருவர் நம்முடைய நாட்டில் பிறக்கிறார் என்றால் அவர் எங்கே பிறப்பார்?’ என்று கேட்டான்.
“பெத்லேகேமில் பிறக்கலாம். மீக்கா எனும் தீர்க்கதரிசி ஒருவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். ‘யூதா நாட்டு பெத்லேகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரவேலரை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’, என்பதே அந்த வாக்கு அரசே” என்றார் ஒருவர்.
ஞானிகள் பெத்லேகேம் நோக்கி பயணிக்கத் தொடங்கினர். வால் நட்சத்திரம் வானத்தில் மீண்டும் தோன்றி அவர்களுக்கு முன்னால் சென்றது. சென்று கொண்டிருந்த விண்மீன் ஒரு இடத்தில் வந்ததும் நின்றது. அதன் ஒளி ஒரு குடிசையின் மீது படர்ந்தது. விண்மீன் நின்றதைக் கண்டதும் ஞானிகள் உற்சாக மடைந்தார்கள்.
அது ஒரு தொழுவம். அங்கே மரியாவின் கைகளில் ஒரு குழந்தை. அருகிலேயே யோசேப்பு. சுற்றிலும் கால்நடைகள்.
ஞானிகள் ஒரு வினாடி திடுக்கிட்டனர். ‘வானத்தில் அதிசய வால் நட்சத்திரம். பூமியில் தொழுவத்தில் அரசரா? இத்தனை எளிமையாய் ஒரு மீட்பரா?’ என்று வியந்தவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தனர்.
பட்டாடைகள் தொழுவத்தின் அழுக்கில் புரள, தங்களுக்கு முன்பாக விழுந்து கிடக்கும் மூன்று ஞானிகளைக் கண்ட மரியாவும், யோசேப்பும் பதறினார்கள்.
‘ஐயா நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்’ யோசேப்பு கேட்டார்.
‘நாங்கள் கிழக்கு திசையிலிருந்து வரும் ஞானிகள். நீண்ட தூரம் பயணித்து இங்கே வந்திருக்கிறோம். அரசரைக் காண்பதற்காக!’ அவர்கள் சொன்னார்கள்.
‘இந்தக் குழந்தையைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார்?’ யோசேப்பு வியந்தார்.
‘வானம்’
‘வானமா?’
‘ஆம், வானத்தில் ஒரு அதிசய வால் நட்சத்திரம் தோன்றியது. அதுதான் எங்களை வழிநடத்தியது. இவரைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத் திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்’, ஞானிகள் சொன்னார்கள்.
‘இதோ பொன்... இது எனது காணிக்கை’, ஒரு ஞானி தன் ஒட்டகத்தில் சுமந்து வந்திருந்த மூட்டையை குழந்தையின் முன்னால் வைத்தார்.
‘இது தூபம். சாம்பிராணி... என்னுடைய காணிக்கை’ இரண்டாவது ஞானி காணிக்கை படைத்தார்.
‘இதோ வெள்ளைப் போளம். இது என்னுடைய காணிக்கை’ மூன்றாவது ஞானி பேழையைத் திறந்து காணிக்கை கொடுத்தார்.
பொன் மிக விலை உயர்ந்த அந்தஸ்தின் அடையாளம். தூபம் என்பது வழிபாட்டுக்குரியவர் என்பதன் அடையாளம். வெள்ளைப்போளம் மிகவும் நறுமணம் மிகுந்த பொருள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இதை கல்லறையில் வைப்பது அரச குலத்தினரின் வழக்கம்.
மரியாவும், யோசேப்பும் நடப்பதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
ஞானிகள் குழந்தையை வணங்கிவிட்டு விடைபெற்று அரண்மனை நோக்கி பயணித்தார்கள். இரவில் ஞானிகள் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.
அவர்கள் மூவருமே அன்று ஒரு கனவு கண்டார்கள். கனவில் ஒரு தேவதூதர் தோன்றினார்.
‘ஞானிகளே, நீங்கள் ஏரோது மன்னனின் அரண் மனைக்குச் செல்லவேண்டாம். அவனுக்கு எந்தத் தகவலையும் அளிக்க வேண்டாம். வேறு வழியாக உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்றார்.
ஞானியர்களுக்கு அந்தக் கனவு மிகப்பெரிய வியப்பைத் தந்தது. ‘மன்னனின் கட்டளையை மீறலாம், ஆனால் கடவுளின் கட்டளையை மீறக் கூடாது’ என அவர்கள் முடிவெடுத்தார்கள். மன்னனின் அரண் மனைக்குச் செல்லாமல் தங்கள் நாட்டுக்குத் திரும்பினார்கள்.

Next Story