என் மலர்
ஆன்மிகம்

செல்வந்தரும், ஏழை லாசரும்
ஏழைகளை இறைவனின் பிள்ளைகளாகக் கண்டு, தன்னலமற்ற உள்ளத்துடன் உதவி செய்து வாழ்வதே இறைவனை அன்பு செய்வதன் அடையாளம்.
செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடம் இருந்த செல்வத்துக்கு கணக்கே இல்லை. தினம் ஒரு புத்தாடை அணிந்து, தினமும் விருந்து உண்டு மகிழ்ந்திருந்தான். அவனும் அவனுடைய சகோதரர்கள் ஐந்து பேரும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.
செல்வந்தன் அணிந்திருக்கும் ஆடைகள் மிகவும் விலை உயர்ந்தவை. அவன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தன்னுடைய செல்வம் எல்லாம் கடவுள் தனக்குக் கொடுத்த ஆசீர்வாதம் என்று நினைத்து இறுமாந்திருந்தான்.
அவனுடைய வீட்டு வாசலருகே ஏழை மனிதன் ஒருவனும் கிடந்தான். அவனது பெயர் லாசர். அவனுடைய உடலெங்கும் புண்கள். அழுக்கடைந்த ஆடை மட்டுமே அவனுக்குச் சொந்தமானதாக இருந்தது. தெரு நாய்கள் மட்டுமே அவனருகில் வந்து அவனுடன் சொந்தம் கொண்டாடும். அவனுடைய புண்களை நக்கும். அவனுடைய வயிற்றுப் பசிக்குத் தேவையான உணவைத் தருவார் யாருமில்லை.
அவனிடம் எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை. செல்வந்தனின் வீட்டில் மிஞ்சுகின்ற உணவு கிடைக்காதா? என ஆசைப்பட்டான். ஆனால் அவனுக்கு அதுவும் கிடைக்கவில்லை. ஆடம்பர மாளிகையின் வெளிவாசலில் குப்பையோடு குப்பையாய்க் கிடந்தான் அவன்.
தன் வீட்டு வாசலருகே கிடக்கும் ஏழை மனிதனை செல்வந்தன் தினமும் காண்பான். ஆனால் அவனுக்கு ஒருநேர உணவளிக்க வேண்டுமென்றோ, அவனுக்கு ஒரு ஆடை வழங்க வேண்டுமென்றோ அவன் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அவனுடைய சகோதரர்களும் அப்படி நினைக்கவில்லை. அவன் ஏழையாய் இருப்பது இறைவனின் சாபம் என உதாசீனப்படுத்தினர்.
வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலும் வலியிலும் வருந்திய அந்த ஏழை இறந்தான். அவனை அடக்கம் செய்வார் யாருமில்லை. அவனை தேவதூதர்கள் விண்ணகத்துக்கு எடுத்துச் சென்று விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமின் மடியிலே அமர வைத்தார்கள். குப்பையில் கிடந்தவன் சொர்க்கத்தின் பிள்ளையானான்.
மரணம் எல்லோருக்கும் பொது தானே! அந்த செல்வந்தரும் இறந்தான். நல்ல வெகுவிமரிசையாக, ஆடம்பர அடக்கம் செய்யப்பட்டான். ஆனால் அவர் நரகத்தில் தள்ளப்பட்டான். பாதாளத்தில் அணையா நெருப்பில் அவனுடைய உடல் வெந்தது.
அவன் அங்கிருந்து கண்களை உயர்த்தி விண்ணகத்தைப் பார்த்தபோது ஆபிரகாமையும் அவரது மடியில் அமர்ந்திருக்கும் லாசரையும் கண்டான், அதிர்ந்தான். தன்னுடைய வீட்டு வாசலில் கிடந்த ஏழைக்கு இப்போது விண்ணக வாழ்வு கிடைத்திருக்கிறதே என்று நினைத்தான்.
குரலை உயர்த்தி ‘தந்தை ஆபிரகாமே... எனக்கு இரங்கும். உமது மடியிலிருக்கும் லாசரின் விரல் நுனியில் ஒரு துளி தண்ணீரைக் கொடுத்து என்னுடைய நாவில் வைக்கச் சொல்லும். நான் இங்கே தணியா நெருப்பில் வேகிறேனே’ என்று கதறினான். அவனுடைய மனதில் இன்னும் லாசர் ஒரு பணியாளனாய்த் தெரிந்தான்.
ஆபிரகாமோ, ‘மகனே உன்னுடைய வாழ்நாளில் நீ நலன்களையே பெற்றாய். லாசரோ இன்னல்களை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தான். அதை நினைவில் கொள். அவன் இப்போது ஆறுதல் அடைகிறான். நீ வேதனைப்படுகிறாய்’ என்றார்.
‘தந்தையே எனக்கு இரங்கும்’ செல்வந்தன் மீண்டும் கத்தினான். வலியால் புழுவாய்த் துடித்தான்.
‘உங்களுக்கும், எங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உண்டு. அங்கிருந்து இங்கேயோ, இங்கிருந்து அங்கேயோ யாரும் கடந்து வர முடியாது’ ஆபிரகாம் சொன்னார்.
‘தந்தையே, அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்யும். லாசரை என் தந்தை வீட்டுக்கு அனுப்பும். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களாவது இந்த நெருப்பில் விழாமல் தங்களைக் காத்துக் கொள்ளட்டும்’ செல்வந்தன் கதறினான். அப்போதும் தன் குடும்பம் எனும் சுயநலம் அவனுக்குள் நிலைத்திருந்தது.
‘மகனே, இறைவாக்கினர்கள் தேவையான அளவு சொல்லி விட்டார்கள். மறை நூலும் இருக்கிறது அவர்களுக்கு...’
‘ஐயோ தந்தையே அப்படிச் சொல்லவேண்டாம். அதையெல்லாம் என் சகோதரர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் இறந்த ஒருவர் உயிருடன் சென்று சொன்னால் நம்புவார்கள்’ செல்வந்தன் உரக்கக் கெஞ்சினான்.
‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் செவிசாய்க் காதவன், இறந்தோரிடமிருந்து செல்பவனுக்கும் செவி சாய்க்க மாட்டான்’ ஆபிரகாம் சொன்னார்.
‘இயேசு இறந்து உயிர்த்த பின்னும் அவரை மக்கள் நம்பாமல் இருப்பார்கள்’ என்பதை அந்த வாசகம் விளக்கியது.
மண்ணுலகில் ஏழையான லாசர், விண்ணுலகில் செல்வந்தரானார். மண்ணுலகின் சுயநல செல்வந்தர் விண்ணுலகில் நரக வேதனையில் விழுந்தார்.
ஏழைகளுக்கு உதவுபவன் இறையரசுக்காய் தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறான். ‘கண்ணில் தெரியும் சகோதரனுக்கு அன்பு செய்யாதவன், கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு அன்பு செய்ய முடியாது’ என்கிறது பைபிள். எல்லா உயிர்களிலும் இறைவனின் உயிரும், சாயலும் இருக்கிறது.
ஏழைகளை இறைவனின் பிள்ளைகளாகக் கண்டு, தன்னலமற்ற உள்ளத்துடன் உதவி செய்து வாழ்வதே இறைவனை அன்பு செய்வதன் அடையாளம். இந்த சிந்தனையைப் பற்றிக் கொள்வோம், விண்ணுலகைப் பெற்றுக் கொள்வோம்.

Next Story