என் மலர்
ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி
கிறிஸ்தவர்கள் இறந்த தங்களின் குடும்ப உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்தும் கல்லறை திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் கல்லறைகளை தூய்மை செய்து மலர்மாலை அணிவித்து சாம்பிராணி காண்பித்துமனமுருக வழிபாடுகளை நடத்தினர்.
தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாளையொட்டி காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ்,உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஷ்ஏசுதாஸ், ஆன்மிகதந்தையர்கள் மாசிலாமணி, அருளானந்தம் ஆகியோர் இந்த திருப்பலியில் பங்கு கொண்டனர்.
திருப்பலிக்கு பின்னர் பூண்டி மாதா பேராலயத்தின் பங்குத்தந்தையாக பணியாற்றி மறைந்த , பேராலயத்தின் நுழைவு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அருட்தந்தை லூர்துசேவியர் கல்லறைக்கும், பேராலய பூங்கா வளாத்தில் உள்ள ராயப்பர் கல்லறைக்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் திருக்காட்டுப் பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள்நடைபெற்றது.கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ கல்லறைகளில் தூய்மை செய்து வழிபாடு நடத்தினார்கள்.






