என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தனது பணியைச் செய்பவர்களை இறைவன் வெறுமனே அனுப்புவதில்லை. அவர்களுக்கு நிச்சயம் பரிசுகளைக் கொடுக்கிறார்.
    மத்தேயு 20 : 1..16

    “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

    ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள்.

    மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

    ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

    மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார்.

    எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

    அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள்.

    அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

    இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்
    நாகர்கோவில், கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6.45 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து, திருப்பலி நிறைவேற்றுகிறார். 17-ந் தேதி மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறும்.

    18-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல்திருவிருந்து திருப்பலியில் முதன்மை அருட்பணியாளர் கிலாரியஸ் தலைமை தாங்குகிறார். மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, பிரார்த்தனை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 24-ந் தேதி காலை 6 மணி மற்றும் 10 மணிக்கு திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் அமிர்தராஜ் தலைமையில் திருப்பலியும், காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆங்கிலத்திலும், 11 மணிக்கு மலையாளத்திலும் திருப்பலி நடைபெறும். மாலை 5 மணிக்கு நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருள் ஆனந்த், துண பங்குதந்தை இன்பன்ட் ராஜ் மற்றும் அருட்சகோதரிகள், பங்குபேரவையினர் செய்து வருகிறார்கள்.
    உண்மையாகவே நம் அருமை ஆண்டவர் கரத்திலுள்ள சகல ஆசீர்வாதங்களுக்கும் நீங்கள் பாத்திரவான்கள் என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள். இந்த கிருபையை நினைத்து தேவனை ஸ்தோத்தரியுங்கள்.
    ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்களாக மாறுவது எப்படி?. உங்கள் விசுவாசத்தை கிரியையில் கொண்டு வாருங்கள்.

    ‘கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்’. ஆதி.12:4

    ஆம், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை மறந்து விடாதீர்கள். வாக்குத்தத்தத்தில் உள்ள சகல ஆசீர்வாதங்களும் உங்களிடத்திற்கு வந்து சேர மிகவும் முக்கியம் உங்கள் விசுவாசமே.

    ஆபிரகாம் விக்கிரக ஆராதனை குடும்பத்தில் பிறந்தவன். ஐசுவரியமும் கனமும் இவனுக்குத் தூரமாய் இருந்த காலத்தில் கர்த்தர் இவனை ஆதி.12-ம் அதிகாரத்தில் சந்திக்கிறார். தன்னில் தேவனுடைய ஆசீர்வாதங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக தன் தேசத்தையும், தன் இனத்தையும், தன் தகப்பன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டுப் போக அவன் தயங்கவில்லை. அவனுடைய விசுவாசமும் நம்பிக்கையும் கர்த்தர் மேல் இருந்தது.

    உங்கள் விசுவாசத்தை தளரவிடாமல் குழப்பமான நேரங்களிலும், எதிர்மறையான வார்த்தைகள் உங்கள் நாவில் வராதபடிக்கு விசுவாசம் நிறைந்த வார்த்தைகளைப் பேசி தேவனை ஸ்தோத்தரியுங்கள். நிச்சயம் அற்புதங்கள் உங்கள் வாழ்வில் நிகழும்.

    விலக்குங்கள்

    ‘இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம், நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன், நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்’. ஆதி.13:9

    வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க ஆபிரகாமும், லோத்தும் புறப்பட்டுப் போகும் பாதையில் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று என ஆதி.13:7 சொல்கிறது.

    இந்த வசனத்தை நீங்கள் உற்று நோக்குங்கள். கர்த்தர் சொல்லி, கர்த்தரால் வழிநடத்திக் கொண்டு செல்லும்போது வாக்குவாதங்கள் வந்திருக்கக் கூடாது. ஆனால் அவைகள் சம்பவித்துவிட்டன என நாம் வாசிக்கிறோம்.

    இதற்குக் காரணமென்னவெனில் ‘தன்னோடு லோத்தை அழைத்துக் கொண்டு போ’ என்று ஆண்டவர் சொல்லாதபோது ஆபிரகாம் அவராகவே தன்னோடு லோத்தைக் கூட்டிக் கொண்டு சென்றதே.

    ‘கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான், லோத்தும் அவனோடே கூடப் போனான்’. ஆதி.12:4

    வாக்குத்தத்தம் லோத்துக்கல்ல, ஆபிரகாமுக்கு மட்டும் தான். இச்சம்பவத்திலிருந்து நாம் அறிகிறதென்ன, இவ்வுலக வாழ்வின் பயணத்தில் ஆண்டவருக்குப் பிரியமில்லாதவர்களோடு நாம் தொடர்பு வைக்கும்போது தற்போது இனிமையாக இருந்தாலும் நாளடைவில் அவர்கள் நம் ஆசீர்வாதத்திற்கு இடைஞ்சலைக் கொண்டு வருவார்கள்.

    ஆகவே, இன்றே கர்த்தருக்குப் பிரியமில்லாதவர்களை உங்களைவிட்டு விலக்குங்கள். ஆதி.13:9 -ல் அவர்கள் பிரிந்து விட்டார்கள் என வேதம் கூறுகிறது. இதைத்தான் ஆண்டவர் உங்களிடத்திலும் எதிர்பார்க்கிறார்.

    ஆபிரகாமோடு இடைபட்ட தேவன்

    ‘லோத்து ஆபிரகாமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்’. ஆதி.13:14

    மேற்கண்ட வசனம் மிக முக்கியமானது. லோத்து ஆபிரகாமோடு இணைந்திருந்தவரைக்கும் கர்த்தர் ஆபிரகாமோடு பேசவில்லை. எப்போது லோத்து பிரிந்து சென்றானோ அதற்குப் பிறகு தான் கர்த்தர் மறுபடியும் தனது தொடர்பை ஆபிரகாமோடு ஏற்படுத்தினார்.

    உங்கள் ஆசீர்வாதங்களை நீங்கள் அளவில்லாமல் சுதந்தரிக்க தேவன் உங்களோடு இடைபடுதல் அவசியம் தேவை.

    ஆகவே, லோத்தின் ஆவிகளைத் துரத்துங்கள். தேவனுக்குப் பிரியமில்லாதவர்களோடு தொடர்பு, அப்படிப்பட்டவர்களோடு ஐக்கியம் இவை அனைத்தும் லோத்தின் சுபாவங்கள் என ஆதி.13:12,13 கூறுகிறது.

    ஆபிரகாமின் ஒரே நோக்கம் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிப்பது தான். உங்களின் நோக்கமும் அப்படியே இருக்கட்டும். தீர்மானியுங்கள், நீங்கள்தான் ஆசீர்வாதத்திற்குப் பாத்திரவான்கள், அல்லேலூயா.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.
    இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு,

    ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

    அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

    பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.

    அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.

    பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை⁕ கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

    நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

    “ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

    மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

    இயேசு சொன்ன உவமைகளில் அதிகம் அறியப்படாத, அலசப்படாத‌ உவமை இது எனலாம். இவ்வுலகின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது விண்ணக வாழ்க்கையைக் குறித்துக் கவலைப்படாத, மண்ணுலக வாழ்க்கையே முக்கியம் எனக் கருதி வாழும் மனிதர்களை.

    ஒளியின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது இறைமகன் இயேசுவின் போதனைகளைக் கேட்டு, ஆன்மீக வெளிச்சத்தில் நடப்பவர்களை. இவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாட்டை இயேசு பேசுகிறார்.

    இவ்வுலக மக்கள் ஒரு நெருக்கடி வரும்போது தங்களுடைய புத்தியையெல்லாம் செலவழித்து அந்த சிக்கலிலிருந்து வெளிவர முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

    ஆனால் ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.

    இந்த உலகின் செல்வங்கள் அழிந்து போகக் கூடியவை அவற்றால் எந்த பயனும் இல்லை. ஆனால் அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு உரியவற்றைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்வதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.

    தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலயத்தில் உலக நன்மைக்காக புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலயத்தில் உலக நன்மைக்காக புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அருட்தந்தை அற்புதராஜ் தலைமையில் அருள் பொழிவு திருப்பலி நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட புதுமை மாதா சொரூபம் ஆலயத்தை சுற்றி வந்தது. இதை தொடர்ந்து இரவு ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைசாமி உதவி பங்குதந்தையர்கள், ஆன்மிக தந்தையர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி இளையோர் பணிக்குழு செயலாளர் அற்புதராஜ் புதுமை இரவு வழிபாட்டினை நடத்தினார்.
    இறைநீதியை மட்டும் முழுமனதுடன் தேடுபவர்களுக்கு, அவர்கள் கேட்பதைவிட அதிகம் தர இறைவன் தயாராக இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் (மத்.6:33).
    உலகில் எல்லாருமே இக்கட்டான நிலைகளைத் தாண்டித்தான் வாழ வேண்டியதுள்ளது. பலரது பேராசைகள், மற்றவர்களின் வாழ்வாதாரங்களில் மறைமுக தாக்கங்களை ஏற் படுத்துகின்றன. உதாரணமாக, பேராசைகளை அடைவதற்கு லஞ்சம், ஊழல் போன்றவை பெரிய அளவில் உதவுவதால் பல்வேறு நன்மைகள், பணம் உள்ளவர்களிடமே சென்று தஞ்சம் அடைந்து கொண்டிருக்கின்றன.

    எனவே நியாயமான நன்மைகளைக்கூட எளியவர்கள் பெறுவதற்கு வழியில்லாமல் போய், தவித்து அலையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் நல்ல வழிகாட்டுதலை நாடும் இதுபோன்றவர்களை அற்புதம், அதிசயங்கள் தொடர்பான போதனைகள் அதிக அளவில் ஈர்த்துவிடுகின்றன.

    வியாதி, வறுமை, கடன் போன்ற சிக்கல்களில் இருந்து மீட்பது போன்ற போதனைகளை, கனிவான வார்த்தை களுடன் கூறுவதையே அவர்கள் அதிகமாக நம்புகின்றனர். ஏனென்றால், பல்வேறு சிக்கல்களால் தவித்துக் கொண்டிருக்கும் எவருக்கும் இதுபோன்ற ஆறுதலான வார்த்தைகளை சொன்னாலே சிறிது நேரத்துக்கு மனஅமைதி கிடைக்கும். இப்படி கிடைக்கும் தற்காலிக மனஅமைதிதான், உலக வாழ்க்கைக்கான போதனைகளை மட்டுமே நாடிச்செல்ல வழி அமைத்துக் கொடுக்கிறது.

    பாங்களுக்கு எதிரான கண்டிப்பான போதனைகள்தான், தனது இயல்பான பாவ வாழ்க்கையில் இருந்து விலகி, மனந்திரும்பி, இயேசுவின் வழிகளை நோக்கிச் செல்ல பாவிகளுக்கு தூண்டுதலாக உள்ளன. ஆனால் கண்டிப்பான வார்த்தைகள், ஈர்ப்பை ஏற்படுத்தாது.

    போதகங்கள் எதை மையப்படுத்தி இருந்தாலும் சரி, பக்தியை முதல் படியில் இருந்து பின்பற்றுகிறோமா என்பதை ஒவ்வொருவரும் ஆராய வேண்டும். அதிகாலையில் எழுந்து ஜெபி, உபவாசம் இருந்து ஜெபி, வேதத்தை தினமும் வாசித்து தியானம் செய், ஆலயத்துக்கு போகும்போது வேதத்தை கையில் வைத்துக்கொள், பொருளாதார ஆசியைப் பெற காணிக்கை கொடு என்றெல்லாம் மக்கள் போதிக்கப்படுகின்றனர்.

    ஆனால் இறைவனை நோக்கி ஜெபிப்பதற்கும், காணிக்கை கொடுப்பதற்குமான தகுதிநிலை (முதல் படி) பற்றிய ஆலோசனைகள் பல போதனைகளில் இடம்பெறுவதில்லை. அதிகாலை ஜெபம், வசன தியானம், வாரம் தவறாத ஆலய வழிபாடு, காணிக்கையை அள்ளி வழங்குதல் போன்றவற்றை பின்பற்றுவதால் மட்டுமே ஒருவனுடன் இறைவன் இடைபட்டுவிடுவாரா என்றால் இல்லை. அப்படியானால் ஒருவனது வாழ்க்கையில் இறைவன் இடைபடக் கூடிய தகுதிநிலை என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.

    நீதிமொழிகள் 15:8,9-ம் வசனங்களில், “துன்மார்க்கருடைய பலி, கர்த்தருக்கு அருவருப்பானது. செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். துன்மார்க்கரின் வழி, கர்த்தருக்கு அருவருப்பானது. நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்” என்று கண்டிப்பு வார்த்தைகளுடன் கூறப்பட்டுள்ளது.

    யோவான் 9:31-ம் வசனத்தில், “பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லை என்று அறிந்திருக்கிறோம். ஒருவன் தேவபக்தியுள்ளவனாய் இருந்து அவருக்கு சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்” என்று வாசிக்கிறோம்.

    மேலும், “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்” என்று மனந்திரும்புவதற்கு ஏற்ற ஜெபத்தை முன்வைத்த பாவியின் ஜெபத்தையே இறைவன் கேட்டார் என்றும் வேதம் சுட்டிக்காட்டுகிறது. ஆக, ஒருவன் செய்யும் ஜெபம் கேட்கப்பட வேண்டும் என்றால், துன்மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப விரும்பும் பாவியாக அவன் இருக்க வேண்டும்; அல்லது, மனந்திரும்பி பக்திப்பாதையில் செம்மையாக நடக்கிறவனாக இருக்க வேண்டும் என்பதை அறியலாம்.

    துன்மார்க்கன் என்ற வார்த்தைக்கு ஒரு கோணத்தில் மட்டும் அர்த்தத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். பலரை கொலை செய்தவன், கொள்ளை அடிப்பவன், பலாத்காரங்களை செய்பவன், லஞ்ச லாவண்யங்களுடன் சொகுசு வாழ்க்கையில் இருப்பவன் என்றெல்லாம் நினைத்து அப்படிப்பட்டவர்களை மனதில் நிறுத்திக்கொள்கிறோம். அது சரிதான். ஆனால் அந்தக் கோணத்தோடு அந்த அர்த்தம் முடிந்துவிடவில்லை.

    பிறருக்கோ அல்லது தனக்கோ துன்பம் தரக்கூடிய மார்க்கத்தில் (வழியில்) உள்ள பாவங்களைச் செய்யும் அனைவருமே துன்மார்க்கரே. உதாரணமாக, புகைத்தல், மது அருந்துதல், ரகசிய சரீர பாவங்கள் போன்றவற்றை ஒருவன் செய்தால், பிந்தைய காலத்தில் அவனது சொந்த உடல் துன்பமடையும். இறைவன் தந்த உடலை அந்த பாவங்கள் மூலம் துன்பப்படுத்திய அவனும் துன்மார்க்கனே. இது சொந்த சரீரத்துக்கு எதிரான துன்மார்க்கம்.

    மேலும், அதிக எரிச்சல், கோபம் போன்ற சில ஜென்ம சுபாவங்களின் அடிப்படையிலான பேச்சு மற்றும் செயல்பாட்டினால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பமும், அதைச் செய்தவனை துன்மார்க்கனாக்கி விடுகிறது. அதோடு, உள்ளத்தில் இருந்து புறப்படும் பொறாமை, இச்சை, பெருமை, பொருளாசை, பகை போன்றவற்றின் அடிப்படையிலான செயல்பாட்டினால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது அவன் துன்மார்க்கன் ஆகிறான்.

    ஆக, உடல், உள்ளம், சுபாவம் ஆகிய 3 வகையில் பாவம் செய்யும் எந்தவொரு மனிதனும் துன்மார்க்கனே. இப்படிப்பட்ட நிலையில் இருந்து நீங்குவதற்கான இறைவழியை நாடுவதே, வாழ்க்கையில் இறைவன் இடைபடக்கூடிய தகுதியை நாடும் நிலையாகும். அதுதான் பக்திக்கு முதல்படி. அந்த முதல் படியில் ஏறாமல், அதிகாலை ஜெபம், வசன தியானம், வாரம் தவறாத ஆலய வழிபாடு, காணிக்கையை அள்ளி வழங்குதல் போன்றவற்றை பின்பற்றுவது இறைவனுக்கு அருவருப்பாகிவிடுகிறது என்பதை நீதிமொழிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

    மற்றவனுக்கு துன்பம் இழைத்துவிட்டு, அதை நிவர்த்தி செய்யாமல் ஆலயத்துக்கு காணிக்கை கொண்டு வராதே என்று இயேசு நேரடியாகவே எச்சரித்துள்ளார் (மத்.5:23,24). இறைவனுக்கு அருவருப்பானதை செய்தால் பல்வேறு துன்பத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை பல உதாரணங்கள் மூலம் வேதம் நமக்கு காட்டியுள்ளது.

    எனவே பாவங்களில் இருந்து மனந்திரும்புவது, பாவ நிவர்த்தி ஆகியவற்றுக்கான போதனைகளை மட்டுமே முதலில் நாடுங்கள், அதையே தேடுங்கள். மனந்திரும்பி, பாவநிவர்த்தி செய்யும் இறைநீதியில் நடப்பதுதான் பக்தியில் செம்மையான நிலையாகும். இறைநீதியை மட்டும் முழுமனதுடன் தேடுபவர்களுக்கு, அவர்கள் கேட்பதைவிட அதிகம் தர இறைவன் தயாராக இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள் (மத்.6:33).

    பணத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு உரியவற்றைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்வதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.
    லூக்கா 16 : 1 முதல் 10 வரை

    இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு,

    ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

    அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

    பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.

    அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.

    பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை⁕ கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

    நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

    “ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

    மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

    இயேசு சொன்ன உவமைகளில் அதிகம் அறியப்படாத, அலசப்படாத‌ உவமை இது எனலாம். இவ்வுலகின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது விண்ணக வாழ்க்கையைக் குறித்துக் கவலைப்படாத, மண்ணுலக வாழ்க்கையே முக்கியம் எனக் கருதி வாழும் மனிதர்களை.

    ஒளியின் மக்கள் என இயேசு குறிப்பிடுவது இறைமகன் இயேசுவின் போதனைகளைக் கேட்டு, ஆன்மீக வெளிச்சத்தில் நடப்பவர்களை. இவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாட்டை இயேசு பேசுகிறார்.

    இவ்வுலக மக்கள் ஒரு நெருக்கடி வரும்போது தங்களுடைய புத்தியையெல்லாம் செலவழித்து அந்த சிக்கலிலிருந்து வெளிவர முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

    ஆனால் ஒளியின் பிள்ளைகள் ஆன்மீக வாழ்வின் வீழ்ச்சியின் போது தங்கள் ஆன்மீக வெளிச்சத்தைப் பயன்படுத்தி விண்ணகத்துக்கு உரியவற்றைத் தேடுவதில்லை.

    இந்த உலகின் செல்வங்கள் அழிந்து போகக் கூடியவை அவற்றால் எந்த பயனும் இல்லை. ஆனால் அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வுக்கு உரியவற்றைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்வதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.
    நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார்.
    கர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவர். தம்முடைய வார்த்தையினாலே இந்த முழு உலகத்தையும், அதில் இருக்கிற ஒவ்வொன்றையும் உண்டாக்கினார். அதைப்போல் கர்த்தர் நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்கிறவராய் இருக்கிறார்.

    இந்நாளில் எல்லா தேசங்களிலும் பொருளாதாரத்தில் நெருக்கடிகள், பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நெருக்கடியால் பெரிய பணக்காரர்கள் முதல், வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் ஏழை எளிய ஜனங்கள் வரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    இதன் நிமித்தம் பாவம் பெருகுகிறது. சமாதானம் குறைகிறது. தற்கொலை, மரணம் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றது.

    அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதும் போது ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலிப்.4:19) என்று எழுதியிருக்கிறார்.

    ஆகவே குறைவை நிறைவாக்கும் நம் தேவன் உங்கள் சகல குறைவுகளையும் நிறைவாக்க வல்லவராய் இருக்கிறார். நிச்சயம் கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்வில் வெளிப்பட்டு உங்களின் சகல குறைவுகளும் நிறைவாக்கப்படும்.

    குறைவு எப்போது ஏற்படுகிறது?

    ‘எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி...’ (லூக்.15:14)

    நம்முடைய வாழ்வில் குறைவு அல்லது நெருக்கடி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமான ஒரு காரணம் தேவனாகிய கர்த்தர் விரும்பாததை நாம் செய்யும் போது நம் வாழ்வில் குறைவு ஏற்படுகிறது.

    மேற்கண்ட வசனத்தை கவனமாய் வாசித்துப் பாருங்கள். தகப்பன் வீட்டில் இளைய குமாரன் இருந்த காலமெல்லாம் அவனுக்குள்ளே எந்த குறைவும் ஏற்படவில்லை. நிறைவான பொருளாதாரம், நிறைவான சந்தோஷம், அவனில் காணப்பட்டது.

    அவன் தகப்பன் வீட்டைவிட்டு தன் சொத்தை எல்லாம் பிரித்துக் கொண்டு பாவிகளும், கெட்ட நண்பர்களும், விபசாரிகளும் நிறைந்த இடத்திற்கு (தூர தேசம்) சென்ற போது தான் எல்லாவற்றையும் அவன் இழந்தவனாய் குறைவுபடத் தொடங்கினான்.

    ஆண்டவர் விரும்பாத காரியங்களில் ஈடுபடும் போது நாமாகவே குறைவுகளில் சிக்கிக் கொள்கிறோம். குறைவு என்ற பிரச்சினைக்கு மூலகாரணமாய் இருப்பவன் பிசாசு. ஆகவே குறைவை உண்டாக்குகிற அவனை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நிற்கும் போது குறைவு என்ற ஆவி நம்மை விட்டு ஓடிப்போகும்.

    மேலும், குறைவு வருவதற்கு மற்றொரு காரணம், நமக்கு உண்டான வருமானத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்கிற ஞானம் இல்லாமையே. அநேக குடும்பங்களில் ஞானமில்லாமல், பொறுப்பில்லாமல் வருவாய்க்கு அதிகமாய் செலவு செய்து, கடன்பட்டு, கடைசியில் குறைவுள்ளவர்களாய் மாறுகிறார்கள். இப்படிக் குறைவான வாழ்வு ஒவ்வொரு ஆத்மாவையும் மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற இந்நாட்களில் அருமை ஆண்டவரிடத்தில் விசுவாசத்தோடு வருவீர்களேயானால் உங்கள் குறைவை நிறைவாக்கி, சகல தேவைகளையும் சந்திக்க அவர் வல்லவராய் இருக்கிறார்.

    நம் தேவைகளை கர்த்தர் எப்படி சந்திப்பார்?

    ‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்’ (யோவான் 14:14).

    நம்முடைய தேவை சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பார்வையில் எல்லாமே லேசான காரியம். ஏனென்றால் பூமியும் அதின் நிறைவும் ஆண்டவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கிறதல்லவா.

    ஆகவே, ஆண்டவருக்கு நம் தேவைகளை சந்திக்க முடியும். விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் நூறு வயதான ஆபிரகாமிற்கு மகனாக ஈசாக்கைக் கொடுத்தவர் அல்லவா நம் ஆண்டவர்.

    தேவனுடைய வார்த்தையின்படி, கேரீத் என்ற ஆற்றின் அருகே மறைந்து வாழ்ந்த எலியாவிற்கு காகத்தின் மூலம் ஆகாரம் கொடுத்து அவரது தேவைகளை பூர்த்தி செய்தவர் அல்லவா நம் ஆண்டவர்.

    நம் அருமை ஆண்டவர் சொன்ன வாக்குத்தத்தம் என்னவெனில், ‘என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் நான் தருவேன்’.

    உங்கள் கண்களுக்கு முன்பாய் தோன்றுகிற சகல பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கண்டு மலைத்துப் போகாமல் உங்கள் நாவில் இயேசுவின் நாமத்தில் பிரார்த்தனை செய்து அற்புதங்களை எதிர்பாருங்கள். அவரது நாமத்தை உங்கள் நாவில் உச்சரிக்கும்போதே உங்கள் தேவைகளை சந்திக்க அவர் ஆவலோடு வருவார்.

    நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார். உங்களைச் சுற்றியிருக்கிற தரித்திரத்தின் ஆவியை விரட்டி அடிக்க அவர் ஜீவனுள்ளவராயிருக்கிறார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    பிரியமானவர்களே! ஜெபவேளையில் அல்லது, வேதத்தை வாசிக்கும் போதோ உங்களிடம் ஆண்டவர் என்ன சொல்லுகிறாரோ அல்லது உணர்த்துகிறாரோ உடனே அதற்கு கீழ்ப்படியுங்கள்.
    பிரியமானவர்களே! இயேசுவின் நாமத்தில் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

    நம் தேவன் அற்புதர். உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்யும்படிக்கே மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றும் அற்புதமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார். இந்த தேவன் உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார்.

    வேதம் சொல்லுகிறது, ‘ஆராய்ந்து முடியாத பெரிய காரியங் களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்’ (யோபு.9:10).

    அன்று கானாவூர் கல்யாண வீட்டிலே முதல் அற்புதத்தை செய்த ஆண்டவர் உங்கள் குடும்பத்திலும் அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார்.

    இயேசுவுக்கு முதலிடம்

    ‘இயேசுவும் அவருடைய சீடரும் அந்தக் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்’. (யோவான் 2:2)

    கானாவூரிலே திராட்சரசம் குறைவுபட்ட போது அந்த திருமண வீட்டிலே இயேசு அற்புதம் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா? இயேசு அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

    பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு உங்கள் குடும்ப வாழ்வில் அற்புதங்களை செய்ய வேண்டுமானால், அவருக்கு முதலிடம் கொடுங்கள்.

    ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அவரோடு பேசுங்கள். அவர் வாசற்படியில் நின்று தட்டுகிறவர். அவருக்கு உங்கள் உள்ளக்கதவைத் திறந்தால் அவர் உங்களுக்குள் உலாவி உங்களோடு வாசம் பண்ணுவார். உங்கள் குடும்பத்தில் வருகிற எல்லா போராட்டங்களையும் அவரே பொறுப்பெடுத்து நடத்தி உங்களுக்கு அற்புதம் செய்வார்.

    இயேசுவிடம் சொல்லுங்கள்

    ‘திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்’ (யோவான் 2:3).

    திருமண வீட்டில் ஒரு குறைவு ஏற்பட்ட போது இயேசுவின் தாயார் இயேசுவிடம் சொன்னார்கள். உடனே ஆண்டவர் குறைவுகளை நிறைவாக்கி ஒரு அற்புதம் செய்தார்.

    உங்கள் குடும்ப வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினையோ, போராட்டமோ, வியாதியோ, நஷ்டமோ ஏற்பட்டால் உடனே ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்ணுங்கள்.

    இன்று அநேகர் மனுஷரைத் தேடி ஓடுகிறார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என அவர்களையே நோக்குகிறார்கள்.

    ஆனால் ஆண்டவரை நோக்கிப் பார்த்து, அவரிடம் உங்கள் பிரச்சினைகளையும், குறைவுகளையும் சொல்வீர்களேயானால் நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு அற்புதங்களை செய்து உங்களை சந்தோஷப்படுத்துவார்.

    இயேசுவுக்கு கீழ்ப்படியுங்கள்

    “இயேசு வேலைக்காரரை நோக்கி: ‘ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள்’ என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்” (யோவான் 2:7).

    கானாவூர் கல்யாண வீட்டிலே வேலைக்காரர்கள் ஆண்டவர் என்ன சொன்னாரோ அதன்படி செய்ததால்தான் சாதாரண தண்ணீர் ருசியுள்ள திராட்சரசமானது.

    பிரியமானவர்களே! ஜெபவேளையில் அல்லது, வேதத்தை வாசிக்கும் போதோ உங்களிடம் ஆண்டவர் என்ன சொல்லுகிறாரோ அல்லது உணர்த்துகிறாரோ உடனே அதற்கு கீழ்ப்படியுங்கள்.

    கர்த்தர் நல்லவர். நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்வில் கர்த்தர் பெரிய அற்புதங்களை செய்து உங்களை சந்தோஷப்படுத்துவார். சிறிய காரியமோ, பெரிய காரியமோ தேவனுக்கு நீங்கள் கீழ்ப் படிந்தால் பெரிய பெரிய அற்புதங்களை தேவன் உங்கள் வாழ்வில் செய்வார்.

    இந்த மாதத்திலேயே கர்த்தர் உங்கள் குடும்ப வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கி உங்களை சந்தோஷப்படுத்துவார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். திண்டுக்கல் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
    உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இதையொட்டி அன்றைய நாளில் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, அவர்கள் விரும்பி உண்ணும் உணவை படைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன்படி திண்டுக்கல்-திருச்சி ரோடு கல்லறை தோட்டத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தன.

    இதையொட்டி நேற்று முன்தினம் கல்லறை தோட்டம் முழுவதும் புற்கள், செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கல்லறை தோட்டத்துக்கு வருகை தந்தனர். அவர்கள், தங்களது முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து உணவு படைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக கூட்டுத்திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஸ்டான்லி ராபின்சன் உள்பட பாதிரியார்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினர்.

    அதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம், குமரன் திருநகர் உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலும் கல்லறைத்திருவிழா கூட்டுத்திருப்பலி அந்தந்த பங்குதந்தைகள் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானலில், வத்தலக்குண்டு சாலை கல்லறைத் தோட்டத்தில், கல்லறைத் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களின் கல்லறைககளில் மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து பிரார்த்தனை செய்தனர். இதில் வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ், பங்குத்தந்தைகள் பீட்டர்சகாயராஜா, அடைக்கலராஜ், ஏஞ்சல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செந்துறையில் கல்லறைத்திருநாள் நடந்தது. இதில் செந்துறை புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தைகள் ஆரோக்கியம், ஜான் ஜெயபால், பிரிட்டோ ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
    திருவண்ணாமலை கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
    கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்தனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆராதனைகளில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை கல்லறையில் கூட்டு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடந்தது.

    திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து, பல்வேறு பூக்களை கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் பெருந்துறை பட்டு, அள்ளிகொண்டாபட்டு, இளையங்கன்னி, அந்தோணியார்புரம், தென் கரும்பனூர், கூடலூர், தண்டரை, விருது விளங்கினான், பெருமணம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    கல்லறை திருநாளை முன்னிட்டு மறைந்த உறவினர்களுக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள், கல்லறைக்கு சென்று இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
    கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த தினத்தையொட்டி சென்னை கல்லறை வாரியத்துக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், காசிமேடு, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. கல்லறைகளைப் பார்ப்பதற்கு மக்கள் இன்று மாலை வரை வந்து செல்வார்கள் என்பதால் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வதும், கண்ணீர் அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. மேலும், இந்தத் தினத்தையொட்டி அங்கு குவிந்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்தவர்கள் பலர் உதவிகளைச் செய்வதும் வழக்கம்.

    கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு தேவையான பூ, மாலை, ஊதுபத்தி போன்ற பொருட்கள் பெருமளவில் கல்லறை தோட்டத்துக்கு வெளியே விற்பனை செய்யப்படும். மக்கள் அதிகம் கூடுவதால் அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் காவல் பணியில் ஈடுபடுவர்.
    ×