என் மலர்

  ஆன்மிகம்

  கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது
  X

  கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில், கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
  நாகர்கோவில், கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6.45 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து, திருப்பலி நிறைவேற்றுகிறார். 17-ந் தேதி மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறும்.

  18-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல்திருவிருந்து திருப்பலியில் முதன்மை அருட்பணியாளர் கிலாரியஸ் தலைமை தாங்குகிறார். மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

  தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, பிரார்த்தனை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

  வருகிற 24-ந் தேதி காலை 6 மணி மற்றும் 10 மணிக்கு திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறும்.

  விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் அமிர்தராஜ் தலைமையில் திருப்பலியும், காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆங்கிலத்திலும், 11 மணிக்கு மலையாளத்திலும் திருப்பலி நடைபெறும். மாலை 5 மணிக்கு நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.

  இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருள் ஆனந்த், துண பங்குதந்தை இன்பன்ட் ராஜ் மற்றும் அருட்சகோதரிகள், பங்குபேரவையினர் செய்து வருகிறார்கள்.
  Next Story
  ×