என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எவ்வளவு மழை பெய்தாலும் சிறிது நேரத்தில் நீரை உறிஞ்சும் பெங்களூரு மைதானம்- வைரலாகும் வீடியோ
- பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
- நாளை பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறப் போவது யார்? என்பது நாளை தெரியும். பெங்களூருவில் நாளை நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை அணி தகுதி பெற்று விடும்.
பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ரன் ரேட் அதிகமாக வைத்து வெற்றி பெற வேண்டும். பெங்களூரு முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெல்ல வேண்டும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூரு அணிக்கு கடினமாக அமையும்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் குறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. அந்த வீடியோவில் மைதானத்தில் அதிகபடியான நீரை பைப் மூலம் ஊற்றுகின்றனர். அந்த நீர் சிறிது நேரத்தில் காணாமல் பொய்விட்டது.
Chinnaswamy Stadium has the best sub-air drainage and aeration system in the world♥️Let's hope for the best✌?#RCBvCSK #CSKvRCB #RCBvsCSK @RCBTweets pic.twitter.com/cj5h4WIfkf
— Ⓤನೌನ್_ಮಂದಿ?❤️ (@unknown_trio) May 17, 2024
இதனால் நாளை எவ்வளவு மழை பெய்தாலும் போட்டி சீக்கிரம் தொடங்கி விடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.
நாளை பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






