என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல் 2024 தொடர்: பயிற்சியை தொடங்கினார் சி.எஸ்.கே கேப்டன் டோனி
- இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
- சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் கேப்டன் டோனி தனது பயிற்சியை இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்ததை ஒட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story






