என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    டி20 தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    • 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் கண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்கினர்.

    முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடரந்து, ருத்துராஜ்- இஷான் கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. இதில், இஷான் கிஷான் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    18 ஓவரில் ருத்துராஜூடன் ரிங்கு சிங் களத்தில் இருந்தார். இதில், ருத்துராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ரங்கு சிங்குடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதில், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×