search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம்- ஹர்திக் பாண்ட்யா
    X

    மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம்- ஹர்திக் பாண்ட்யா

    • ரன் சேசிங்கில் ரோகித், இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
    • மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளிசிஸ் 61 ரன்னும், படிதார் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 53 ரன்னும் எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய மும்பை, 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. தொடர்ந்து இஷான் கிஷன் 69 ரன்னும், ரோகித் சர்மா 38 ரன்னும், சூர்ய குமார் யாதவ் 52 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    வெற்றி பெறுவது எப்போதும் அற்புதமானது. நாங்கள் வெற்றி பெற்ற விதம் சிறப்பாக இருந்தது. இம்பாக்ட் பிளேயர் விதியால் கூடுதல் பந்து வீச்சாளரைப் பயன்படுத்த முடிகிறது. இது எனக்கு கூடுதல் பயனை அளித்தது. ரன் சேசிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

    இந்த ஆடுகளத்தில் இலக்கு குறைவாக இருந்ததால், ரன் ரேட்டை உயர்த்த நினைத்தோம். மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார். அவருக்கு அனுபவமும் நம்பிக்கையும் அதிகம். பெங்களூரு கேப்டன் டு பிளிசிஸ் சில இடங்களில் பந்தை அடித்தார். அது போன்று வேறு வீரர்கள் அடித்து நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு கேப்டன் டு பிபெலிசிஸ் கூறும்போது, ஆட்டத்தில் பனி ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு 215-220 ரன்கள் தேவைப்பட்டது. 190 ரன் போதுமானதாக இல்லை. பனி படிந்தவுடன் மிகவும் கடினமாக இருந்தது. பந்தை பலமுறை மாற்றினோம். மும்பை அணி வீரர்கள் எங்கள் பந்துவீச்சாளர்களை நிறைய தவறுகளைச் செய்ய வைத்தார்கள். முக்கியமான கட்டங்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மலிங்கா போன்ற ஒருவர் 20 ஓவர் கிரிக்கெட டில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அதை தற்போது பும்ரா வைத்துள்ளார் என்றார்.

    மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு 5-வது தோல்வியை சந்தித்தது.

    Next Story
    ×